Wednesday, April 16, 2014

பயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.


                             பயணம் அனுபவம் எண்ணங்கள் தொடர்ச்சி.
                            ------------------------------------------------------------------


மறுநாள்  என் மனைவியின் தகப்பனார் இடம் வெள்ளிநாழியில் நேர்த்திச் சடங்கு. அதிகாலையில் எழிந்து குளித்து புறப்பட்டோம். அங்கு சென்றுதான் காலை ஆகாரம் என்றார்கள். போகும் வழியில் மனைவியின் தந்தையாரின் குலக் கோவிலான மாங்கோட்டுக் காவுக்குச் சென்றோம் அந்தக் கோவிலில் பூரம் திருவிழாவுக்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. யானையை அலங்கரித்துப் பட்டம் கட்டி ஊரில் வலம் வருவார்கள். அப்போது பக்தர்கள் காணிக்கை பணமாகவோ பொருளாகவோ தருவார்கள், என் உறவினரும் பூரத் திருவிழாவுக்கு அவர்களால் முடிந்த காணிக்கை செலுத்தினார்கள்.
எங்களுக்கு வந்த அழைப்பில் அங்கு பானை எனும் வேண்டுதல் சடங்கு நடை பெறும் என்றார்கள். இந்தச் சடங்கில் முதலில் பானைப் பந்தல் என்று நிறுவுகிறார்கள். ஆறடிக்கு ஆறடி பந்தல் பெரும்பாலும் வாழை மட்டையில் தென்னை இள ஓலைகளைச் செருகி அலங்கரிக்கிறார்கள். அந்தப் பந்தலில் பகவதியைபிரதிஷ்டை செய்கிறார்கள்.மாஙோட்டுப் பகவதி க்ஷேத்திரத்தில் இருந்து வாள் ஒன்று கொண்டு வரப்பட்டு பகவதியுடன் ஆராதிக்கப் படுகிறது பந்தலைச் சுற்றிலும் வாழை இலையில் அரிசி மேல் தேங்காய் வைக்கப் பட்டிருக்கிறது. திசைக்கு நான்கு வீதம் பனிரெண்டு இலைகள். முதலில் கணபதி பூஜை. செய்விப்பவர் பூசாரியோ புரோகிதரோ அல்ல. இம்மாதிரி பூஜைகள் நடத்துவதில் பயிற்சி பெற்றவர் போலத் தெரிகிறதுஎந்த வித மந்திர உச்சாடனமும் இல்லை. எல்லாம் கையால் சைகைகள்தான் பஞ்ச வாத்தியங்களுடன் ஜெண்டை முழங்க பூஜை செய்கிறார். அருகே தோட்டத்தில் இருந்த பாலை மரக் கிளையை கொம்போடு வெட்டி எடுத்து வருகிறார்கள். இந்த சடங்குக்கு பெண்கள் கையில் தாலமேந்தி (தட்டில் விளக்கு ) செல்கிறார்கள் தாள வாத்தியத்துடன் அந்த மரக் கிளையை கொண்டு வந்து பந்த்லுக்குள் நடுகிறார்கள் அதன் பின் பூஜை செய்பவர் விஸ்தாரமாக திசைக்கு நான்கு இலைகளில் உள்ள தேங்காய் முன் நின்று தூப தீபம் காட்டுகிறார். ஒவ்வொரு இலையின் முன் நின்று செய்வது நிறையவே நேரம் எடுக்கிறது மொத்தம் 16 இலைகள் ஒவ்வொன்றின் முன்னும் மூன்று முறை அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியாமல் நமக்கு அவஸ்தை. ஒவ்வொரு முறையும் தூபமோ தீபமோ காட்டும் போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஏதோ நாட்டிய ஸ்டெப் போல இருக்கும் இது முடிந்து பந்தலைச் சுற்றி ஒன்பது முறை வலம் வருகிறார். ஒவ்வொரு திசை முன்பும் இந்த நாட்டிய ஸ்டெப்புடன்.... நிறையவே பொறுமை சோதிக்கப் படுகிறது. இது முடிந்தபின் குருதி பூஜை. ஒரு உருளியில் குங்குமம் மஞ்சள் கலந்த நீர் சிவப்பு நிறத்தில். இந்த நாட்டிய நடையுடன் மேள தாளங்கள் அதிரடி அடிக்க அவர் குருதியைக் குடிப்பதுபோல் பாவனை செய்கிறார். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் குருதியைக் கலைத்துக் குடிப்பது போல் பாவனை. ஒரு வேளையில் குருதி எல்லாம் கீழே சிந்தி ஜெண்டை முழக்கம் ஒரு crescendo  நிலையில் எல்லோரும் கட்டிப்போட்டு விட்டது போல் இருக்கிறார்கள். இவருடைய முறை முடிந்ததும் பந்தலைச் சுற்றி நாட்டிய பாவனையில் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தீப்பந்தங்களுடன் ஆடியாடி சுற்றி வருகிறார்கள். ஒரு சமயம் பந்தலைச் சுற்றி ஆடி வருபவர் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. சிறு பிள்ளைகளும் கலந்து கொள்கிறார்கள் , இந்த சடங்கு முடியும் தருவாயில் கேரளத்துக்கே உரிய “ வெளிச்சப்பாடு வருகிறார்  அவர் குளித்து முடித்து தலை விரி கோலமாய் சிவப்பு உடையில் கயில் ஒரு பெரிய வாளுடன் முதலில் பூஜௌ செய்ய வருகிறார். அவரது சடங்கு தொடங்கும் முன்னே இந்தப் பானை பந்தல் பிரிக்கப் பட்டு விடுகிறது அவரும் பந்தலைச் சுற்றி வருகிறார். அதே நாட்டிய ஸ்டெப்புடன் . பிறகு தாள வாத்தியங்களின் துரித கதிக்கேற்ப ஓடுகிறார். பிறகு இந்த சடங்குக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் முன் வந்து அருள் வாக்கு சொல்கிறார். பெரும்பாலும் பகவதிக்கு மகிழ்ச்சி என்றே கூறு கிறார்கள், இபடியாக ஒரு வழியாகப் பானை நடந்து முடிந்தது.
இணையத்தில் இந்த சடங்கு குறித்துத் தேடினேன். சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. அங்கு வந்திருந்த பலரிடம் கேட்டதில் இது ஒரு நேர்த்திச் சடங்கு என்றே தெரிகிறது.எனக்கு கிராம தேவதைகளுக்குப் படையல் செய்வது பற்றி எதுவும் தெரியாது. இந்த வழிபாடு பிரத்தியேகமாக நாயர் ஜாதியில் காணப் படுவதாகத் தெரிகிறது மந்திரங்கள் ஏதும் இல்லை இருந்தாலும் பகவதிக்குப் ப்ரீதி செய்ய ஒரு அணுகு முறை என்றே தோன்றுகிறது அன்னை என்பவளை உக்கிரம் கொண்டவளாகப் பாவித்து அவளது அனுக்கிரகம் பெற குருதி பூஜை செய்கிறார்களென்றே தோன்றுகிறது முன் காலத்தில் விலங்குகளை பலியாகக் கொடுக்கும் வழக்கம் மறைந்து குருதியை நிவேதனம் செய்வதாக ஒரு பாவனை பிற்காலத்தில் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது எது எப்படி இருந்தாலும் இந்தக் கலாச்சார வழிபாடுகள் மூலம் நம் பாரம்பரியக் கலைகள் முற்றிலும் அழிந்து விடாமல் இன்னும் இருக்கிறது என்று தோன்று கிறது. “ யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஎன்று எண்ணும் எனக்கு அன்னையைக் கொடூரமானவளாகவும் ரத்த வாடை கொண்டவளுமாக நினைக்க முடியவில்லை. இம்மாதிரி வழிபாடுகள் primitive ஆகத் தோன்றுகிறது.
இந்த வழிபாடுகள் ஊடே வயிற்றுப் பாடும் கவனிக்கப் பட்டது. இந்தச்சடங்குகளை நான் என் விடியோ காமிராவில் பதிவு செய்திருக்கிறேன் இது முடிந்து மஹாராஜாவின் கொட்டாரம் செல்லும் முன் செருப்புளச்சேரி என்னுமிடத்தில் ஒரு ஐயப்பன் கோவில் காண  விரும்பினார்கள். அந்தக் கோவிலின் விசேஷமே அங்கிருக்கும் ஐயப்பன் நின்ற கோலத்தில் இருப்பதுதான். ஆனால் பேண்ட் அணிந்திருந்த எனக்கு அனுமதி இல்லை என்றார்கள். தூரதிலிருந்தே சேவித்துக் கொண்டிருந்த என்னையும் என் மச்சினன் ஒருவனையும் பார்த்த அந்தக் கோவிலில் பொறுப்புள்ள ஒருவர் நாங்கள் உள்ளே சென்று தரிசிக்க அனுமதி கொடுத்தார்
ஒரு வழியாய் அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் என் மாமியார் வீட்டுக்குலக் கோவிலுக்கு மீண்டும் சென்றோம் . இம்முறை என் கடைசி மச்சினியின் பிரார்த்தனை நிறைவேற்ற. அவளுக்கு ஒரு சாலை விபத்தில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் என்னும் நிலையில் ஒரு காலில் சிதைவு ஏற்பட்டு நிறையவே காஸ்மெடிக் சர்ஜெரி செய்து ஓரளவு நடமாடுகிறாள். அவளுக்குக் காலில் “ஆணி“ என்னும் தொல்லை வந்து குணமாக பரியாம்பட்தக் காவில் நேர்த்திக்கடன் கோவிலில் எண்ணையும் அப்பளமும் வாங்கிக் கொடுக்க அவர்கள் அவற்றைப் பொரித்துத் தருகிறார்கள் அந்த பொரித்த அப்பளங்களை பகவதியின் சன்னதி முன்னால் ஒரு வாழை இலையில் வைக்கிறார்கள். இவள் “ஆணியுள்ள  காலாஇ அதை மிதித்து நொறுக்க வேண்டும்  பிறகு அங்கிருந்த ஒரு ஓட்டலில் காலை ஆகாரம் நாங்கள் பத்து பேர் ( ட்ரைவர் உட்பட ) காலை உணவு வயிறார உண்டதற்கு ரூ. நானூறுக்குள்தான் ஆயிற்று. இதையே நாங்கள் இருந்த கொட்டாரத்தில் உண்பதாயிருந்தால் ரூபாய் ஆயிரத்தைநூறுக்கு குறையாமல் ஆகி இருக்கும். காலை பதினொன்றரை மணிக்கு பாலக் காட்டில் ரயில் ஏறினோம். பகல் வேளைப் பயணம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே தெரிந்தது. இரவு எட்டு மணி அளவில் வீடு சேர்ந்தோம் 
 இனி சில புகைப் படங்கள்.
பானை பந்தல் தயாராகிறது

பகவதி பிரதிஷ்டை வாளுடன் 
தூப தீப வழிபாடு 

பால மரக் கிளை பந்தலில் .
கேரளா ஸ்டைல்....!
      .  
 .
பரியாம் பத்தக் காவு முன் நாங்கள்,
.        

வெளிச்சப் பாடு வந்தாயிற்று .......!


   

 
15 comments:

 1. நல்ல தரிசனம். நேர்முக வர்ணனை அருமை..
  பகவதி அனைவருக்கும் அருள்வாளாக!..
  வாழ்க நலம்..

  ReplyDelete
 2. நல்ல வர்ணனை. கற்பனையில் அப்படியே நேரில் காண்பது போல் உணர்ந்தேன்.

  ReplyDelete
 3. கேரள வழிபாட்டு முறைகளே வித்தியாசம்தான்! நேரில் பார்த்தது போல இருந்தது வர்ணனை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. நல்ல வர்ணனை. நாட்டிய ஸ்டெப் நடை எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை படத்தைப் பார்த்ததும் அதிகமாகிறது. சுவாரஸ்யம். நான் கூட அங்கு ஒரு பகவதி அம்மன் கோவில் சென்றிருக்கிறேன். ஆட்டுக்கல் பகவதி அம்மன் ஆலயம்.

  ReplyDelete
 5. வர்ணனை அற்புதம். நான் கேரளாவில் இருந்தபோது சில சடங்குகளைப் பார்த்திருக்கிறேன். இது எனக்கு புதிது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 6. இவையெல்லாம் அறியாதவை ஐயா... நன்றி...

  ReplyDelete
 7. “ யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம” என்று எண்ணும் எனக்கு அன்னையைக் கொடூரமானவளாகவும் ரத்த வாடை கொண்டவளுமாக நினைக்க முடியவில்லை

  உண்மைதான் ..

  குருதி பூஜை பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது..!

  ReplyDelete
 8. எத்தனை சடங்குகள், சம்பிரதாயங்கள்!! மிகவும் சுவாரஸ்யமாக கூறியுள்ளீர்கள்.

  ReplyDelete
 9. அருமையான வழிபாடுகள். இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் தமிழகத்திலும் சில இடங்களில் இந்தக் குருதி வழிபாடு நடைபெறுகிறது என எண்ணுகிறேன். விசாரிக்கணும். :)))

  ReplyDelete
 10. மந்திர உச்சாடனம் இல்லாமல் கைகளால் செய்யும் வழிபாட்டை தாந்திரிக வழிபாடு என்று சொல்வார்களோ? இது சாக்தத்தில் மட்டுமே உண்டு என்றும் நினைக்கிறேன்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

 11. @ துரை செல்வராஜு
  @ டாக்டர் கந்தசாமி
  @ தளிர் சுரேஷ்
  @ ஸ்ரீராம்
  @ வே.நடனசபாபதி
  @ திண்டுக்கல் தனபாலன்
  @ இராஜராஜேஸ்வரி
  @ டி.பி.ஆர். ஜோசப்
  @ கீதா சாம்பசிவம்
  அனைவரது வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. பல இடங்களில் பலவிதமான வழிபாடுகள். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவேதான் வித்தியாசமான நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன் கூடவே என் எண்ணங்களையும் பதிவிடுகிறேன் மீண்டும் நன்றி.

  ReplyDelete
 12. கேரளத்தில் பெரும்பாலும் தாந்த்ரீக வழிபாடு தான். தில்லியில் ஒரு முறை வெளிச்சப்பாடு என்று ஒரு நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன்.....

  ReplyDelete
 13. எனக்கு அன்னையைக் கொடூரமானவளாகவும் ரத்த வாடை கொண்டவளுமாக நினைக்க முடியவில்லை. இம்மாதிரி வழிபாடுகள் primitive ஆகத் தோன்றுகிறது.//

  மிகவும் சரியே! இறைவன் என்பவர் கருணை மிக்கவரே! தாய்க்கு இணையானவர்! நம் மக்கள்தான் இப்படிப்பட்ட முறைகளையும், மூட நம்பிக்கைகலையும் ஏற்படுத்திஉள்ளனர் என்பதே எங்கள் நம்பிக்கை!

  குலதெய்வம், குலக் கோவில் என்பதுஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொன்று, தாங்கள் கூறியுள்ளது போல....பொதுவாகத் தந்தை வழி வரும் குலதெய்வம்தான் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றபடுகின்றது! ஆனால், எங்கள் நம்பிக்கை இறைவன் என்ற ஒரு சொல் அம்ட்டுமே! அது எந்த இறைவன் என்பது மக்களால் பிரிக்கப்பட்டு, அந்தந்த நிலப் பகுதிக்கு ஏற்படுத்தப்பட்ட தெய்வங்களாகத்தான் இருக்குமே அல்லாது, குலதெய்வம் என்பது எந்த சாஸ்திரங்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை! எனவே குழம்பத் தேவையில்லை என்பது எங்கள் கருத்து! தங்களுக்கு எந்தத் தெய்வத்துடன் நட்புரிமை கொண்டாடி, அன்புடன் பேச முடிகின்றதோ அவரே தங்கள் தெய்வம்.! அவரவர் தனிப்பட்ட கருத்து!

  தங்கள் பதிவு நன்றாக உள்ளது. கேரளத்து பாரம்பரிய வழிபாட்டு முறைகளை நன்றாக வருணித்துள்ளீர்கள்! இந்தப் பாரம்பரியத்திலும் தலைமுறைகள் மாற மாற எத்தனை இடைச்செருகல்களோ? யாருக்குத் தெரியும் ஐயா!?

  ReplyDelete

 14. @ வெங்கட் நாகராஜ்
  தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

  ReplyDelete

 15. @ துளசிதரன் .வி. தில்லையகத்து
  /பொதுவாக தந்தை வழி குலதெய்வம் வழி வழியாகப் பின் பற்றப் படுகிறது/ ஆனால் கேரளத்தில் அவ்வாறு இல்லை என்று தோன்றுகிறது வருகைக்கும் கருத்துப் ப்சதிவுக்கும் நன்றி

  ReplyDelete