Sunday, July 6, 2014

வாழ்வின் நிதரிசனங்கள்


    
                                   வாழ்வின் நிதரிசனங்கள்.
                                   ------------------------------------


ஒரு சிறு கதை

“ஹல்லோ
யாரை யார் கூப்பிடுகிறார்கள் என்று புரியாமல் விழித்தாள் பொன்னம்மாள்.
“ ஹல்லோ, உன்னைத்தான் கூப்பிடுகிறேன் பொன்னம்மா.

தன் மகனே தன்னைப் பெயர் சொல்லி ஹல்லோ என்று கூப்பிடுகிறானே. ஒன்றும் விளங்காமல் அவனைப் பார்த்தாள்.

“ உன்னால் என் வேலைக்கு உலை. அதை நீதான் சரிசெய்யணும்கடுப்பாகச் சொன்ன மகன் அங்கிருந்து போய்விட்டான்
பொன்னம்மாளுக்கு அழுகையாய் வந்தது நாலு இடங்களில் வேலை செய்து பிள்ளைகள் இருவரையும் படிக்க வைத்து வயதாகும் காலத்தில் உடம்புக்கு முடியாமல் தான் வேலைக்குப் போகும் இடங்களுக்கு இனி வர முடியாது என்று தன் மூத்தமகன் மூலம் தெரிவித்தாள். இவள் வேலைக்குப் போகும் இடத்தின் சிபாரிசால் இளைய மகனுக்கு வேலை கிடைத்திருந்தது. தான் வேலைக்குப் போக முடியாது என்று தெரிவித்தவுடன் சினமடைந்த சின்ன மகனின் கோபத்தின் வெளிப்பாடே மேலே சொன்ன ‘ஹல்லோவும் தொடர் பேச்சும்

பொன்னம்மாள் தான் கடந்து வந்த பாதையை அசை போட்டாள். எல்லோரைப் போலவும் அவளுக்கும் திருமணம் நடந்தபோது கனவுகள் பல இருந்தது இரண்டு ஆண்மக்களைப் பெற்றவள் எதிர்காலம் குறித்துகனவுகள் காணத் தொடங்கியபோது , முறையான விவாக ரத்து இல்லாமலேயே கணவன் இவளைத் துரத்திவிட்டு வேறொரு பெண் பின்னால் போனான் பொன்னம்மாள் படித்தவளல்ல இருந்த சொந்தபந்தங்களும் வசதி படைத்தவர்கள் அல்ல. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனம் ஒடிந்து போனாள். நல்ல வேளை . உலகில் நல்லவர்கள் சிலரும் இருக்கிறார்கள். இவளுக்கு அடைக்கலம் கொடுத்து தைரியமும் சொல்லி ஆதரவும் கொடுத்தார்கள்..தனி ஒருத்தியாக நாலு இடங்களில் வேலை செய்து குழந்தைகளுக்கும் கூழோ கஞ்சியோ கொடுத்து வளர்த்தாள். அரசு பள்ளியில் சேர்த்து படிக்கவும் வைத்தாள். பிள்ளைகளும் பொறுப்போடு வளர்ந்தார்கள். இரண்டு பிள்ளைகளும் இரு வேறு துருவங்கள். இருந்தாலும் அன்னையை ஆராதிப்பவர்கள்  தந்தையின் பெயர் சொன்னாலேயே  வெறுப்பவர்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஏதோ கைவேலையும் கற்றுக் கொண்டார்கள் ஏதாவது சிறு வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முதலில் சிறு மளிகைக் கடை வைத்து நொடித்துப் போனார்கள். கைபேசியின் வேலைப்பாடுகளைக் கற்றுக்கொண்டு ஒரு சிறு கடை வைத்தார்கள். அண்ணனும் தம்பியும் அணுகு முறையில் வேறுபாடு கொண்டவர்கள். அந்தக் கடையும் நஷ்டத்தில் இயங்கி சில ஆயிரம் ரூபாய்களுக்கு வேட்டு வைத்தது பொன்னம்மாள் காலையில் இருந்து இரவு பத்துமணிவரை வெவ்வேறு இடங்களில் பத்துப்பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கிக் கூட்டி, துணி துவைத்து  பிள்ளைகள் சிரமம் அனுபவிக்காமல் இருக்க வேலை செய்து ஓடாய்ப் போனாள்.

தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று பலரது தயவால் மூத்தவன் வளைகுடாப் பகுதிக்கு பணி செய்யச் சென்றான். இளையவன் பொன்னம்மாள் வேலை செய்யும் ஒருவர் சிபாரிசால் ஒரு இடத்தில் பணிக்கு அமர்ந்தான்.

உடம்புக்கு முடியாவிட்டாலும் பொன்னம்மாள் ஐந்தாறு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல வீடுகளுக்கும் நடந்தே போய் வேலை செய்து வருவாள்.வீட்டில் கஞ்சியோ கூழோ குடித்துப் புறப்பட்டால் வேலை செய்யும் வீடுகளில் கொடுப்பதைக் கொண்டு தன் வயிற்றுப்பாட்டை கவனித்துக் கொள்வாள். இப்படியெல்லாம் உழைத்து கிடைத்த சம்பாத்த்யத்தில் அரசு  மானியமாகக் கொடுத்த இடத்தில் ஒரு வீடும் கட்டினாள். மூத்தவனுக்குத் திருமணம் செய்ய ஆசைப் பட்டு அவனை வரவழைத்தாள். வந்தவன் தாய்படும் துயரத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டி அவளை வேலைக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்ளச் சொன்னான் இவளுக்கோ பயம் வேலை செய்து வரும் வருமானம் நின்றுவிட்டால் , ஒருவேளை பிள்ளைகள் உதாசீனப் படுத்திவிட்டால்....இளையவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தவர்கள்தான் இவளை சக்கையாய்ப் பிழிந்தார்கள் அந்த வீட்டு வேலையை இவளும் விட நிறையவே யோசனை செய்தாள். விடாப்பிடியாக அங்கு இவள் தொடர்ந்து வேலை செய்வதைக் கண்டவர்கள் இவள் அவர்களிடம் பெரிய கடன்பட்டு இருப்பதாகவும் அதனால்தான் வேலையை விட முடிவதில்லை என்றும் சொல்லக் கேட்டவளுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து  தான் யாரிடமும் கடன் பெறவில்லை என்று  நிரூபிக்க வேலையை விட்டாள். அப்போதுதான் கதையின் ஆரம்பத்தில் கூறப்பட்ட மகனின் உரையாடல் நிகழ்ந்தது நல்ல வேளை இளையவன் பயந்த்ததுபோல் அவனது வேலைக்கு பங்கம் வரவில்லை.கிடைப்பதை வைத்து குடும்பம் நடத்துகிறாள். பிள்ளைகளும் தாயை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். இதுவரை சரி. பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்னும் ஆசையுடன் கூடவே அதற்குப் பின் தன் வாழ்க்கை எப்படியாகுமோ என்னும் கவலையும் கூடவே இருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் நிதரிசன உண்மையா.?
 ( எந்த ஜோடனையும் இல்லாமல் ஒரு சிறுகதை எழுத நினைத்தேன் சிலரது வாழ்வில் காணும் நிகழ்வுகள் கதையாகிவிட்டது.).

  


                                       

24 comments:

 1. இதுதான் வாழ்க்கையின் உண்மை. ஜோடனை இல்லாமல் எனத் தாங்கள் கூறவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் வாசிப்பின்போது இருந்த வேகத்தை வைத்தே ஜோடனை இல்லை என உணர்ந்தேன்.நன்றி.

  ReplyDelete
 2. தனது வாழ்க்கை எப்படியாகுமோ என்று இருந்தாலும், அவர்கள் நன்றாக வாழ்ந்தால் போதும் எனும் நினைப்பே மேலோங்கி இருக்கும்...

  ReplyDelete
 3. //பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்னும் ஆசையுடன் கூடவே அதற்குப் பின் தன் வாழ்க்கை எப்படியாகுமோ என்னும் கவலையும் கூடவே இருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் நிதரிசன உண்மையா.?//

  ஆமாம். பொன்னம்மா இதுவரை பட்ட கஷ்டங்களெல்லாம் வெறும் தூசு என்பதுபோல அமைந்தாலும் அமையலாம் புது மருமகள்களின் வருகை.

  ஒருவேளை எதிர்பாராத விதமாக நல்லபடியாக அமைந்தாலும் அமையலாம்.

  மொத்தத்தில் பொன்னம்மா போன்ற உழைப்பாளியான பெண்கள் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்களே.

  // ( எந்த ஜோடனையும் இல்லாமல் ஒரு சிறுகதை எழுத நினைத்தேன் சிலரது வாழ்வில் காணும் நிகழ்வுகள் கதையாகிவிட்டது.). //

  அருமையான முயற்சி. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. நல்ல சிறுகதை. நம்மைச் சுற்றி நிறைய பொன்னம்மாக்கள்.... அவர்கள் கதையை சிறுகதையாக எழுதியது நன்று....

  ReplyDelete
 5. வாழவில் இது போன்று நிறைய பொன்னம்மாக்கள் இருக்கிறார்கள்.
  கணவன் சரியில்லை, அல்லது மகன் சரியில்லை அதனால் குடும்பத்தை கவனித்துக் கொள்ள தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பெண்கள்
  நிறைய இருக்கிறார்கள்.
  கதை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 6. வாழ்வின் நிதர்சனம் இதுதானே!..
  பிள்ளைகளுக்குத் திருமணம் ஆனதும் பொன்னம்மாவின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும். மிகவும் கஷ்டப்பட்ட அவள் - மனம் கலங்காமல் பார்த்துக் கொள்வது பிள்ளைகள் கடமை!.. ஆனாலும் எதிர்காலம் கேள்விக்குறி!..

  ReplyDelete
 7. கதை இல்லை என்பது சம்பவங்களின் இயல்பான போக்கிலேயே தெரிகிறதே...

  ReplyDelete
 8. வணக்கம்
  ஐயா

  மனிதனின் வாழ்வியல் நிதர்சனம் இதுதான் என்பதை புரியவைத்து விட்டீர்கள்..ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. தங்களின் கதை இன்றைய வாழ்வியல் யதார்த்தம் ஐயா
  நன்றி

  ReplyDelete
 10. கதை என்பதே நம் வாழ்வில் காணும் நிகழ்வுதானே! வாழ்க்கையின் நிதரிசன உண்மையைச் சொல்லி கதையை முடித்திருக்கும் விதம் அருமை.

  ReplyDelete
 11. கற்பனையாய் தெரிந்தாலும் கதை உண்மை வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தான். அப்படி இல்லாத கதையில் சுவை இருக்காது.

  ReplyDelete

 12. @ டாக்டர் ஜம்புலிங்கம்.
  கதையைப் படித்துணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 13. @ திண்டுக்கல் தனபாலன்
  /தனது வாழ்க்கை எப்படியாகுமோ என்று இருந்தாலும், அவர்கள் நன்றாக வாழ்ந்தால் போதும் எனும் நினைப்பே மேலோங்கி இருக்கும்.../கூடவே தன் வாழ்க்கை பற்றிய கவலையும் இருக்கும்.

  ReplyDelete

 14. @ வை.கோபாலகிருஷ்ணன்
  /மொத்தத்தில் பொன்னம்மா போன்ற உழைப்பாளியான பெண்கள் பரிதாபத்துக்கு உரியவர்களே/ சரியாகச் சொன்னீர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

  ReplyDelete

 15. @ வெங்கட் நாகராஜ்
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 16. @ கோமதி அரசு
  வௌகைக்கும் பாராட்டுகும் நன்றி மேடம்

  ReplyDelete

 17. @ துரை செல்வராஜு
  பிள்ளைகளுக்குத் திருமணம் என்பது நடக்க வேண்டிய ஒன்று. பின் அவளது எதிர்காலம்..? கதையானதால் எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகலாம் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 18. @ ஸ்ரீராம்
  கதையாகவே இருக்கவும் வாய்ப்புகள் உண்டு ஸ்ரீ.

  ReplyDelete

 19. @ ரூபன்
  சிலரது வாழ்க்கையின் நிதரிசனம் என்பதே கதை.வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 20. @ கரந்தை ஜெயக்குமார்
  வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா

  ReplyDelete

 21. @ வே.நடனசபாபதி
  வருகைதந்து பாராட்டியதற்கு நன்றி சார்.

  ReplyDelete

 22. @ டி.பி.ஆர் ஜோசப்
  சில நேரங்களில் உண்மை கற்பனையை விட சுவையாய் இருக்கும் .கதை இரண்டும் கலந்து கட்டி எழுதுவதுதானே. வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete
 23. கதையாக இருந்தாலும் பொன்னம்மாவின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என மனம்ஏங்குகிறது.

  ReplyDelete

 24. @ மாதேவி
  பொன்னம்மா மாதிரி இருப்பவர் வாழ்க்கை என்று எடுத்துக் கொள்கிறேன் வருகைக்கு நன்றி மேடம்

  ReplyDelete