Saturday, September 27, 2014

கற்பிக்கும் காணொளிகள்


                                 கற்பிக்கும் காணொளிகள்
                                 ------------------------------------
அண்மையில் திருமதி கீதா சாம்பசிவம் ஒரு பதிவில் பறவைகளைப் பற்றி எழுதி இருந்தார் பறவைகள் என்றபோது எனக்கு வந்திருந்த ஒரு காணொளியைப் பகிர்கிறேன்

 விலங்குகளுக்கு  பகுத்தறியும் சக்தி உண்டா ? இந்த வீடியோவைப் பாருங்கள்.


கெஞ்சினால் மிஞ்சும் , மிஞ்சினால் கெஞ்சும் என்பது நினைவுக்கு வருகிறது.


இந்த வீடியோக்களைக் கண்டவுடன் உங்களுக்குத் தோன்றியதைப் பின்னூட்டத்தில் பகிரலாமே

நவராத்திரியை முன்னிட்டு


25 comments:

  1. மாலை வேளைகளில் மொட்டை மாடியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். காக்கைகள் பழக்கம் காரணமாக, மிக அருகில் வந்து சாப்பிடக் கேட்கும். கையில் இருக்கும் பிஸ்கட்டோ, சீடையோ, அதைப் போட்டவுடன் காக்கைகள் அவற்றை எடுத்து அங்கிருக்கும் தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிடும்!

    ஒரு காக்கை அதிகப் படியான ஒரு பிஸ்கட் துண்டை குப்பைகளுக்கு நடுவே ஒளித்து வைத்து மூடியதைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

    அதே போல உறவினர் வீட்டில் நாயை அதன் பெயர் சொல்லி அழைத்த உடன் தாள் போட்டிருக்கும் இரும்பு கேட்டை மேலே ஏறி மூக்கால் உரசித் திறந்து காலால் கதவைத் திறந்து உள்ளே ஓடும் ழகு!

    ReplyDelete
  2. ஸ்ரீராம் அவர்கள்சொல்லியிருப்பது போல் எங்கள் வீட்டுச் செல்லங்களும் (நாய்கள்) வெளியில் போக வேண்டும் என்றால் சரியாக அதே சமயத்திற்கு, வாயில் அருகே சென்று நாங்கள் யாராவது அவர்களின் செயினை எடுக்கின்றோமா என்று பார்க்கும். இல்லையென்றால் கதவைத் திறக்க அதி முயற்சிகள் நடக்கும். சிறிது இடைவெளி இருந்தால் போதும் அவ்வளவுதான்...காலால் கதவைத் திறந்துவிடும்...

    அதே போன்று ஏதாவது சாமான் கிடைத்தது என்றால் சாப்பிடவோ, போன் போன்றவையோ...அதை எடுத்து மறைத்து வைப்பது போல் ஒரு இடத்தில் சேர்த்து வைக்கும்!

    கழுகு காணொளி வாழ்வியல் தத்துவம்! பார்க்கப்போனால் மனிதன் விலங்குகளிடமிருந்து தானே எல்லாமே கற்றான்.

    மூன்றாவது காணொளி சத்தமாகச் சிரிக்க வைத்தது எனலாம். பசி என்றால் பத்தும் பறக்கும் போல...

    ReplyDelete
  3. கழுகின் பார்வையும், செயல்களும் அதனிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் மிக அருமையாக முதல் காணொளியில் காட்டப்பட்டுள்ளது.

    இரண்டாவதில் மாட்டின் தாகத்தையும், அதன் புத்திசாலித்தனத்தையும் நினைத்து மிகவும் வியந்து போனேன்.

    மூன்றாவதும் வேடிக்கையாகவே இருந்தது. இரு விலங்குகளின் பசிக்கான போராட்டம்.நாய்க்கு அதன் வாயிலும், கழுதைக்கு அதன் பின்னங்காலிலும் பவர் உள்ளதோ! :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.
    இரசிக்கவைக்கும் காணொளிகள் பகிர்வுக்குநன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. தினம் தினம் இது போல் காணொளீகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. கழுகு, நாய் ,கழுதை காணொளி பார்க்கவில்லை.

    நன்றாக இருக்கிறது காணொளி.
    நீங்கள் வரைந்த அன்னை காமாட்சி கண்ணாடி ஓவியம் அழகு.

    ReplyDelete

  6. மூன்று காணொளிகளுமே அருமை. முதல் இரண்டு காணொளிகளை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். மூன்றாவதை இப்போதுதான் பார்க்கிறேன் என்றாலும் ‘அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்.’ என்ற பழமொழியை அது நினைவூட்டுகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    நவராத்திரியை முன்னிட்டு தாங்கள் வரைந்துள்ள ஓவியம் அழகோ அழகு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. முதல் இரண்டு காணொளிகளும் ஏற்கனவே பார்த்ததுதான்..
    மூன்றாவது புதியது.

    அம்பாள் சித்திரம் அழகு!..

    ReplyDelete
  8. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நிரூபிக்கும் காணொளி மனதைக் கவர்ந்தது. அம்பாள் படம் கொள்ளை அழகு !

    ReplyDelete
  9. அம்பாள் படம் அழகு. கழுகு நன்றாக இருந்தது. மாடுகள் இப்படிக் குடிப்பதைப்பார்த்திருக்கிறேன். கழுதை காலால் உதைக்கும் என்று கேள்வி தான். இதிலே தான் பார்த்தேன். நல்ல ரசனையான காணொளிகள்.

    ReplyDelete
  10. மிக அருமை. ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  11. மிக அருமை. ரசித்தேன். நன்றி.

    ReplyDelete

  12. @ கரந்தை ஜெயக்குமார்
    காணொளிகளை ரசித்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  13. @ ஸ்ரீராம்
    விலங்குகளை ஐந்தறிவு கொண்டவை என்கிறோம் . நம் கருத்தை மறுபரிசீலனைச் செய்ய வைக்கும் பதிவுகள்.அணைகட்டும் விலங்கு, கடினமான தின்பொருளை கல்லைப் போட்டு உடைக்கும் குரங்கு இப்படிஏராளமாகச் சொல்லிப் போகலாம். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete

  14. @ துளசிதரன்
    காணொளிகளை ரசித்ததற்கு நன்றி சார்.நாய்கள் போல மனிதனிடம் கற்கும் விலஙுகள் நிறையவே உள்ளன. எங்கள் வீட்டுச்செல்லம் செல்லி பற்றி ஒரு பதிவே எழுதி இருக்கிறேன். கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ கோபு சார்
    மூன்று காணொளிகளுக்கும் தனித்தனி பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி சார்.

    ReplyDelete

  16. @ ரூபன்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  17. @ கோமதி அரசு
    பல காணொளிகள் வலம் வருவது தெரிந்தாலும் நான் என் மகிழ்வைப் பகிரவே அவற்றில் சிலவற்றைப் பதிவாக்குகிறேன். அம்மன் படம் , மன்னிக்கவும் , கண்ணாடி ஓவியம் அல்ல. தஞ்சாவூர் பாணி ஓவியம் அது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete

  18. @ வே நடனசபாபதி.
    வருகைக்கும் காணொளிகளை ரசித்ததற்கும் நன்றி. ஓவியம் நவ ராத்திரியை முன்னிட்டுவரைந்ததல்ல. நவராட்திரியை முன்னிட்டுப் பதிவிட்டது அவ்வளவே,

    ReplyDelete

  19. @ துரை செல்வராஜு
    வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  20. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் ரசிப்பிற்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  21. @ கீதா சாம்பசிவம்
    பறவைகள் பற்றிய உங்கள் பதிவே கழுகு காணொளிக்கு காரணம் . ரசித்ததற்கு நன்றி மேடம்.

    ReplyDelete

  22. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகை தந்து ரசித்ததற்கு நன்றி சார்.

    ReplyDelete
  23. அருமையான காணொளிகள்.

    ஐந்தறிவு ஜீவன்கள் என நாம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம் - ஆனால் அவற்றிற்கு இருக்கும் அறிவுத் திறன் நம்மில் பலருக்கு இல்லை!

    கழுகார் சொல்லிக் கொடுத்த வாழ்க்கைப் பாடம் மிக நன்று.

    வேண்டாம் போயிடு, இல்லைன்னா உதைச்சுடுவேன் என்று சொல்லிய பின்னும் குலைத்தால் உதை வாங்க வேண்டியது தான்! :)

    ReplyDelete

  24. @ வெங்கட் நாகராஜ்
    நாட்பட்ட வருகை. இருந்தாலும் வந்து ரசித்ததற்கு நன்றி.

    ReplyDelete