பூரம் திருவிழா காணச் சென்றோமே
----------------------------------------------------
உடலில் ரத்தம் இளவயதில்
சூடாக இருக்கும் என்பார்கள். அப்போது என் ஆளுமையின் கீழ்தான் எல்லாம் நடந்தது வயது
ஏற ஏற தெம்பு குறைகிறது இரத்தமும் சூட்டை
குறைக்கிறதோ தெரியவில்லை. இப்போதெல்லாம் என்னைப் பொறுத்தவரை என் மனைவியின்
ஆளுமைக்குக் கீழ் வந்து விட்டேன்
அவளும் என்னை ஒரு குழந்தையைக்
கட்டுப்படுத்துவதுபோல் எல்லாம் செய்கிறாள்
இருந்தாலும் உண்மையை ஒப்புக் கொள்ள மனம் வருவதில்லை. இப்போதும் ஓரோர் சமயம்
நான் தாட் பூட் தஞ்சாவூர் என்று செயல் படுகிறேன் அவளும் எனக்குக் கட்டுப் படுவதுபோல்
காட்டுகிறாள். இந்நிலையில் அவர்கள் குலக் கோவிலில் பூரம் திருவிழா என்னும் செய்தி கிடைத்தது அவளுக்குப்
போக ஆசை நான் முதலில் கொஞ்சம் ஜபர்தஸ்து காட்டிப் போகலாம்
என்றேன் எனக்கும் ஒரு மாற்றம் தேவையாய் இருந்தது. சிறு வயதில் கோவில்
திருவிழா என்று அரக்கோணத்தில் இருந்தபோது கண்டதுண்டு மேலும் எனக்கு சில விஷயங்களில்
தெளிவு போதவில்லை என்றும் தோன்றியது
மனைவியின் குலதெய்வக்
கோவிலுக்குப் பல முறை சென்றிருக்கிறேன்
ஆனால் கோவில் திருவிழா என்று பார்த்ததில்லை ஆனால் ஒன்று சொல்லியே ஆகவேண்டும் எனக்குக்
கேள்விகள் பல எழுந்தாலும் திருப்தி கிடைக்கும்
வகையில் பதில்கள் கிடைக்கவில்லை இந்தக் கோவில் பற்றிய தல புராணம்
பலரிடம் கேட்டேன் கடைசியாகக் கோவிலில் கேட்டபோது அவர்கள் ஒரு
பாம்ப்லெட் கொடுத்தார்கள் திருவிழா நிகழ்ச்சி நிரல் இருந்தது கூடவே ஆங்கிலத்தில்
கொஞ்சூண்டு தலபுராணமும் இருந்தது கதைகள் இல்லாக் கோவில் இருக்கமுடியுமா
பரியானம்பத்த பகவதி
கோவிலின் கதை 1500 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்கிறது பரியானம்பத்த மனையிலிருந்து
ஒரு பிராம்மணன் மூகாம்பிகா கோவிலுக்கு க்ஷேத்ராடனம் சென்றாராம்திரும்பிவந்தபின்
ஆத்ம விசாரத்தில் ஈடுபட நினைத்தாராம் அவரது பையில் ஒரு திடம்பு ( என்றால் என்ன
தெரியவில்லை ) இருந்ததாம் அதை அங்கிருந்த ஆற்றின்
கரையோரம் பிரதிஷ்டை செய்தாராம் (அங்கு ஆறு இருந்த சுவடே இல்லை. ஆனால்
அதுதான் இப்போதிருக்கும் குளமாயிற்று
என்றும் சொல்கிறார்கள் ) மேலும் கதைக்கு
படம்பார்க்கவும் எல்லோரும் கதை கேட்கிறார்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை. எல்லாமே
நம்பிக்கைதான்
பூரம் திருவிழா பாம்ப்லெட் |
கோவில் புராணம் |
வடக்கு நோக்கி
இருக்கும் கோவிலுக்கு புதியதாய்
படிக்கட்டு கட்ட திட்டம் என்றும் அதற்கு நன்கொடை வேண்டுமென்றும் ஊரில் இருந்து
சிலர் வந்திருந்தனர் அவர்களை அந்த ஊரைச்
சேர்ந்tத இங்கிருக்கும் சிலர் எங்கள் வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள் கோவில் கைங்கர்யம் என்றால் என்
மனைவி தடை ஏதும் சொல்ல மாட்டாள் என்னிடம்
அனுமதி கேட்டாள நானும் மனைவி சொல்லைத் தட்டாதவன் அல்லவா கொடுத்தோம்
அப்போதுதான் இந்த திருவிழாபற்றித் தெரிந்தது இவளது குடும்பத்தில் இருந்து பலரும்
விழாவுக்குச் செல்ல இருந்தனர் என் தீர்மானமான முடிவு தெரியும் முன்னால் அவர்கள் டிக்கட் பதிவு செய்து
விட்டார்கள் நாங்கள் பதிவு செய்தபோது போகும் ரயிலில் வெயிட் லிஸ்டிலும் வரும்
போது கன்ஃபர்ம் டிக்கட்டும் கிடைத்தது
எனக்கு என் மகனுடன் காரில் பயணம்
செய்ய விருப்பம் ஆனால் அவனது ப்ரோகிராம்
முன் கூட்டியே சொல்ல முடியாததால் ரயிலில் புக் செய்தோம்
17-ம் தேதி மாலை
கன்னியாகுமரி எக்ஸ்ப்ரெசில் பெங்களூரில்
இருந்து ஒத்தப்பாலம் வரை ரயில் பயணம்
அங்கிருந்து சுமார் 17 கி. மீ தூரம் வாடகைக் காரில் என்றும் திட்டம் ஒரு நாள் முன்பாகவே சிலர் போய்விட்டனர் நான் மனைவி அவள் தம்பி மனைவியுடன் அவளது
சகோதரி மாமியார் என ஆறு பேர் ஒன்றாகச்
சென்றோம் அங்கு போனால் தங்குவதற்கு ஏ சி
அறைகள் கோவிலுக்கு அருகிலேயே பதிவு
செய்யப்பட்டிருந்தன. 18-ம்தேதி விடியற்காலை ஐந்து மணிக்குப் போய்ச் சேர்ந்தோம்
தங்கிய விடுதி |
ஒரு நாள் முன்பாகவே
சென்றவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்
இருந்தது அதுபற்றி அடுத்த பதிவில்
,