Monday, February 27, 2023

பரிணாமத்தில் நான்

        
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே






இப்படி இருந்த நான் 











                      ஒரு இன்ட்ராஸ்பெக்‌ஷன் என்னுள் எழுந்தது நான் வாழ்ந்த வாழ்வு என்ன எதை நோக்கி என் சிந்தனைகள் எழுகின்றன இதுவே பதிவாகிறது  என் வாழ்வு பற்றி நிறையவே பகிர்ந்து விட்டேன்  அவை என்  அனுபவங்களைச்
சார்ந்தது. அந்த அனுபவங்கள் என்னைச் செதுக்கி இருக்கின்றன, இன்னொரு முறை இதே வாழ்வு வாய்க்குமானால் அதையே அப்படியே ஏற்றுக் கொள்வேன் அந்த அளவு நான் என்னுடைய குணங்களிலும்  கொள்கைகளிலும் பிடிப்பாய் இருந்திருக்கிறேன் ஆனால் என்னைப் பற்றி நான்  நினைக்கும் போது பிறரும் என்ன்  நினைப்பார்கள் என்றும் தோன்றுகிறது
 அப்போது
    வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
        
விட்டாய்,வென்றுவிட்டாய்வாழ்க்கை நிறைவேயன்றோ
        
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
என்று தோன்றுகிறது மேலும்

 ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?

கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?

பொல்லான் என்பரோ,புனிதன் என்பரோ,
கல்லான் என்பரோ,கலைஞன் என்பரோ,
சொல்லா வசைகள் சொல்வரோ,
சூழ்ந்து நின்று புகழ்வரோ

யாரும் சிறியர்நானே பெரியோன்,எதிலும் சிறந்தது
என் செயலே,பாரினில் யாரும் எனக்கீடில்லை எனப்
பயனிலா சொற்கள் பகர்ந்தேனா.?

காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..

எல்லாம் சொல்லித் தூற்றிடினும்,
ஏதும் சொல்லாது வாழ்த்திடினும்,
மண்ணில் நீயோர்  ஒளிவட்டம்.
மற்றவ் வட்டம் நோக்கிடுவோர்,
கண்ணிற் காண்பது அவரவர்தம்
காட்சி அன்றி வேறாமோ.?
இப்படியாகி..........


என்னும் எண்ணங்களே மேல் நோக்கி வரும்   வாழ்ந்து முடித்தாய்விட்டது எனக்கு யயாதிபோல் ஆசை வருவதில்லை என்னேரமும்  என்  முடிவை நோக்கித் தயாராய் இருக்கிறேன்  என்ன, யாருக்கும்  எந்த தொந்தரவும்  தராமல் போய்ச் சேரவேண்டும்முன்பொரு முறை வீழ்ந்த போது காலா என்  அருகில் வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்  என் காலால் என்று எழுதி இருந்தேன் எனக்குத் தெரியும் சண்டைகளில் நான் வெல்லலாம் இறுதிப் போரில் அவனே வெல்வான் அவ்வப்போது அவன்  என்  தோள் மேலேறி காதில் உன் நாட்களை எண்ணிக் கொள் என்பது போல் சொல்வது கேட்கும்

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி

என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் இனி எனக்குள்ள ஆசையெல்லாம் இதுதான்

  
          என்னுயிர்ப் பறவையே,
          
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
          
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
          
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
          
அழகாக வெளியேறிவிடுயாரும் அறியாமல்.
          
மூடிய கண்கள் விழித்து விட்டால்
          
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே.

 பதிவில் யாரோ அனாயாச மரணம்நேர அதிஷ்டம் செய்து இருக்க வேண்டும் என்பது போல் எழுதி இருந்தார்கள் நான் அம்மாதிரி அதிர்ஷ்டம் செய்திருக்கிறேனா எனக்கு எப்படி தெரியும்  நான் இறந்து விட்டால் நான் நானாக இல்லாமல் நினைவாகவேதானே இருப்பேன் இது இப்போதைய சிந்தனை மட்டுமல்ல பலவும்  என்  சிந்தனைகளின்  தொகுப்பே

இப்போது இப்படியாகி விட்டேன் ....!

13 comments:

  1. கந்தசாமி சார் சொன்னது போல வயதாகும்போதுதான் அனுபவங்கள் கூடுகின்றன. அவையே சிந்தனைகளாகவும் வெளிப்படுகின்றன. சிந்தனைதான் வாழ்வாகிறது.

    ReplyDelete
  2. நம் வாழ்க்கை நமக்குத் திருப்தியா என்றே பார்க்கணும். பிறரின் விமர்சனங்களுக்கு அங்கு இடமேது?

    ReplyDelete
  3. மனதில் எதையும் மறைக்காமல் சொல்லும் தங்களைப் பற்றி, பல நேரங்களில் வீட்டில் பேசுவேன்...

    பல கருத்துகளில் உங்கள் புரிதல் வித்தியாசமாக இருந்தாலும் உண்மையாக இருக்கும்...

    ReplyDelete
  4. ஆனால் என்னைப் பற்றி நான் நினைக்கும் போது பிறரும் என்ன் நினைப்பார்கள் என்றும் தோன்றுகிறது
    அப்போது//

    இது பொதுவாக பலருக்கும் ஏற்படுவதுதான்....ஆனால் இது தேவையில்லாதது இல்லையா? பிறருக்காக நாம் வாழ்வதில்லை. அவர்கள் நம்மைப் பற்றி நலல்து சொல்ல வேண்டும் என்று நினைத்தும் வாழ்வது சரியல்லதானே...

    நம் சிந்தனைகள் நம் எண்ணங்கள் ..நம்மை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நட்புகளும் உறவுகளும் போதுமே.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நம் எண்ணப்டி நடக்கிற் தா

      Delete
  5. 'நம்வாழ்க்கை நம் கையில்'
    மகிழ்சியுடன் நிறைவுடன் வாழ்ந்தாலே நமக்கு திருப்திதான் அதுவே போதும்.

    ReplyDelete
  6. போதுமென்ற ஆமனமே பொன் செய்யும்மருந்து

    ReplyDelete
  7. போது மென்றமனமே பொன் ச்ய்யும் மருந்து

    ReplyDelete
  8. மூன்று பரிணாமங்களிலும் முத்தாய்ப்பாய் இருக்கின்றீர்கள்... வாழ்த்துக்களுடன் உங்கள் .... நாஞ்சில் சிவா

    ReplyDelete