தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.
உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மா, நீயின்றி நானில்லை என்று ?.
என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மா, என் அன்பு என்றும் மாறாதது.
விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.
இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா
உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!
-----------------------------------------------------
அம்மா அப்பாவின் நினைவு எப்போதுமே தனித்துவம் வாய்ந்தது
பதிலளிநீக்குபின்னர் நீங்கள் கொடுத்த ஆங்கில மூலத்தையும் படித்திருக்கிறேன். அம்மா என்றால் அன்பு.
பதிலளிநீக்குசிறப்பு...
பதிலளிநீக்குசிறப்பான அன்னையின் கவிதை.
பதிலளிநீக்குஅம்மாவின் அன்பு அளவிட முடியாது, கவிதை அருமை.
பதிலளிநீக்குகவிதை ரொம்ப நல்லாருக்கு சார்.
பதிலளிநீக்குகீதா