பிறந்த நாள்
---------------------
இன்று என் பிறந்த நாள் எண்பது ஆண்டுகள் பூர்த்தியாகிறது இது நம் வழக்கத்தில்
இருக்கும் ஆங்கில வருடக் கணக்கு
இம்மாதிரி நவம்பர் மாதம்
பதினொன்றாம்நாள் பிறந்த நாள் என்பது (11-11- 11-) என்பது நூறாண்டுகளுக்கு ஒரு
முறைதான் வரும் நான் விளக்கப் போவதில்லை
இந்த நாளை நான் என் வாழ்வை இன்ட்ராஸ்பெக்ட் செய்து பார்க்கப்
போகிறேன் நம் சமூகத்தில் எண்பது ஆண்டு
என்பது சற்றே விசேஷம் வாய்ந்தது ஆயிரம் பிறை கண்டவர் எனப் பேசப்படுபவர்கள் ஆனால் அதிலும் வித்தியாசமான கணக்குகள் எப்படி யானால் என்ன எண்பது ஒருநீண்ட காலம்தான்வலைதளத்தில்
எழுதவந்தபின் என் எண்ணங்களை
பதிவு செய்து வந்திருக்கிறேன்
என்
வாழ்வின் நாட்களை எட்டெட்டாகப் பிரித்து நான் அதிகம்ரசித்தகாலம் பற்றியும்எழுதி இருக்கிறேன் தொடரும் எட்டெடையும் பார்க்க
காணும் பொருளை எல்லாம் நன்றாய்த் தெரிய நோக்கி
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..என்றெல்லாம் எழுதி இருக்கிறேன் திரு ரமணி அவர்கள் கவிதையை ஒட்டக் காய்ச்சிய உரை நடை என்பார் திரு விஜு ஊமைக்கனவுகள் கவிதை அனாவசியஎழுதுக்களை ஒடுக்க வேண்டும் என்பார் அம்மாதிரி எழுதிய காலமும் உண்டு
தன்னையே நோக்கா சீரின் அமைந்த கண்மணி
போன்றே வாழ்ந்த வாழ்வும் நிஜமன்றோ..என்றெல்லாம் எழுதி இருக்கிறேன் திரு ரமணி அவர்கள் கவிதையை ஒட்டக் காய்ச்சிய உரை நடை என்பார் திரு விஜு ஊமைக்கனவுகள் கவிதை அனாவசியஎழுதுக்களை ஒடுக்க வேண்டும் என்பார் அம்மாதிரி எழுதிய காலமும் உண்டு
பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை
செத்தும் காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?
ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
செத்தும் காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,
நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?
ஏன் இங்கு வந்தேன்.? நான் இருந்த இடமும் ஏது.?
கானாறோடும் கதியே போல் கண்டபடி வாழ்ந்தேனா.?
வானோக்கிய பாழ் நிலமீது வழங்கும் வாடைக் காற்றெனவே
நானோர்க்கால் வெளியேறில் எங்குதான் ஏகுவேனோ.?
கண்ணிற் காணா சொர்க்கமும் ஒரு கனவேயன்றி,
மண்ணிற் காணாத தொன்றாமோ.?
வாழ்வியலை ஒட்டக் காய்ச்சி எழுதியதாக நான் நினைக்கும்
வரிகள் இவை
ஆனால் இதெல்லாம் பழம்பெருமைபேசுவது போல் இருக்கும்
சில நெரங்களில் நான் எழுதியதை நானே ரசித்துப்பார்ப்பதும்
சரிதானே என்றும் தோன்றும் ஆனால் இப்போதெல்லாம் அம்மாதிரி எழுத முடியும் என்று தோன்றவில்லை வயது
ஏற ஏற கற்பனை வளம் குறைகிறதோ என்னவோ
என்னைப் பற்றி நான் அதிகமாகவே பதிவிட்டு வந்திருக்கிறேன்
எது வரை என்றால் பதிவுலக வாசகர்களுக்கு என்னை விட என்னைப்பற்றி அதிகம் தெரியும் அளவுக்கு என்று சொல்லலாமா
இதில் ஒரு குறையும் இருக்கிறது பலருக்கும் என்னைப் பற்றி
தப்பு தப்பாகப் புரியும் அளவுக்கு யார்
குறை இது?
நிறை வாழ்வு வாழ்ந்தாகி விட்டது வாழ்ந்த வாழ்க்கை
வாழ்ந்தது தான் அதை இனி மாற்றி அமைக்கமுடியாது
ஆனால் இன்னொரு வாழ்க்கை அமையுமனால் நான் இதையே தேர்ந்தெடுப்பேன் நோ ரிக்ரெட்ஸ் என் குணம் நல்லது தான் என்று நம்புகிறேன் அனாவசிய மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எழுதி இருக்கிறேன் நம்பெற்றோர் கடை பிடித்து
வந்ததால் அவை சரியாகத்தான் இருக்கும் என்று
நம்புகிறவர்கள் நடுவே நான் வித்தியாசமானவன்தான் எதையும் கேள்வி கேட்டுப்பழகியவன் சரியான பதில்வந்தால் ஏற்றுக் கொள்பவன்
எனக்கு ஒரு
ஆசை நான் இறந்தபின் என் உறுப்புகளை தானம் செய்ய
விரும்புகிறேன் ஆனால் நான் இறந்தபின் அது
கடைபிடிக்கப்படுகிறதா எப்படித் தெரியும்?
சில நேரங்களில் நான் எழுத்தில் தொடாத சங்கதிகளே இல்லையோ என்றும் தோன்றும்கதை கட்டுரை நாவல் நாடகம் கவிதை இலக்கியம் இன்னபிற சங்கதிகள் சிலவற்றைப் படிக்கும்போதுநான்
எழுதியதா என்றுகூடத் தோன்றும் எழுதத் தொடங்கி விட்டால் எழுதிக் கொண்டே இருப்பேன் முக்கியமாகஒரு பதிவு நினைவுக்கு வருகிறது என்னை நானே உணர வை https://gmbat1649.blogspot.com/2011/11/blog-post_27.html
பலருக்கும்
தெரிந்திருக்கலாம் என்மண நாளும் இன்றுதான் என்னை சகித்துக் கொண்டு 54 ஆண்டுகளாக என்னுடன் வாழும் என்மனவிக்கு வந்தனம் பாவைக்கு ஒருபாமாலையேசூட்டி எழுதி இருக்கிறேன்