சில எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜனவரி, 2021

நெஞ்சு பொறுக்குதில்லையே

 


பாரதி மன்னிப்பாராக

       -------------------

 

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்

 

மந்திரம் வேதம் என்பார் சொன்ன

மாத்திரம் பலன் தரும் என்பார்-தீதில்லை

தாரீர் விளக்கமென்றால்  துச்சமெனவே

மதித்திடுவார் வீண்கேள்வி ஏனோ என்பார்  ( நெஞ்சு )

 

கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு

கோடியென்றால் அது பெரிதாமோ

காரணங் கேட்டே விளங்கியதிங்கு

யாவரும் உணர்ந்திட மறுத்திடுவார்   ( நெஞ்சு )

 

கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்

காரணங்கள் யாதெனும் அறிவுமிலார்

துடி துடித்து துஞ்சி மடிவோர் துயர்

தீர்க்கக் கிஞ்சித்தேனும் சிந்தையிலார்   ( நெஞ்சு )

 

 

சிற்றெறும்பு சேர்ந்தே கட்டிய புற்றதற்கு

வினை தீர்க்கும் பாம்புயிர்ப்பிடம் கூறியே

பால் வார்ப்பார்ஆறுதல் வேண்டி-மலர் தூவி

மணி அடித்துத் தீபம் காட்டுவார்             ( நெஞ்சு )

 

சாத்திரங்களொன்றுங் காணார்-பொய்ச்

சாத்திரப்பேய்கள் சொல்லும் வார்த்தையிலே

கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் ஒரு

கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்   ( நெஞ்சு )

 

தோத்திரங்கள் சொல்லியவர்தாம்-தமைச்

சூதுசெயும் நீசர்களைப் பணிந்திடுவார்

ஆத்திரங்கொண்டதை வினவினால் அது

முன் ஜென்மப் பாவ பலன் என்பார்             ( நெஞ்சு )  

 

 

எண்ணங்களில் எண்ணிலா நோயுடையார்

இவர் ஏது கூறினும் பொருளறியார்-இவர்

சிந்தையில் உரைக்க இவர் வணங்கும்

தெய்வமே வந்தால்தான் ஒருக்கால் சீர்படுமோ.?  ( நெஞ்சு )

 

 


திங்கள், 24 ஜூன், 2019

நான் க ற்றது பெற்றது etc


                             நான் கற்றது பெற்றது  etc/
                             ---------------------------------------

கற்றதும்பெற்றதும்  என்றாலேயே பலருக்கும்  எழுத்தாளர் சுஜாதாதான் நினைவுக்கு வருவார் மற்றவர்கள் எல்லாம் கற்றுப் பெற்றுக் கொண்டது இல்லையா
   ஒரு பதிவின் பின்னூட்டத்தில்  திரு. அப்பாதுரை நானே கேள்விகேட்டு பதிலும் சொல்கிறேன் என்று எழுதி இருந்தார். இப்போதெல்லாம் அவரது பின்னூட்டத்திலிருந்து பதிவிடக் கரு கிடைத்து விடுகிறது. அவருக்கு நன்றி. உனக்கு என்ன தெரியும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். இப்பதிவு எனக்கு என்ன தெரியும் என்பதை கேள்வி பதிலாக எழுதி நான் கற்றதும் பெற்றதும் என்ன என்று தெரிவிக்கிறேன் இந்தக் கேள்விகளும் பதில்களும் சிலருக்குக் குதர்க்கமாய்த் தெரியலாம்..ஆனால் என்ன செய்ய. ? இது என் வழி... தனி வழி...!
மறுபடியும் முதலில் இருந்து
கேள்வி:- உனக்கு எந்தக் கடவுளைப் பிடிக்கும். ?
பதில்:-   எனக்கு எல்லாக் கடவுளையும் பிடிக்கும். ஏனென்றால் கடவுள் என நம்பப் படுகிறவர் நல்ல குணங்களின் சேர்க்கை.அந்த நல்ல குணங்களின் சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால் நானும்கடவுள். என்னுள்ளும் அவர் இருக்கிறார்.
கேள்வி:- அப்போது கடவுள் என்பவருக்கு ஒரு வடிவம் இல்லையா.?
பதில்:-   கடவுள் என்பதே ஒரு concept.வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் குறிப்பிடப் படும்  பிரம்மன் ஆத்மன் புருஷன் போன்றவை எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மூல ஆதார சக்தியைக் குறிப்பிடும் குறியீடுகளே தவிர கடவுள் என்பவரைப் பற்றிக் கூறுவதல்ல. அப்படிப்பட்ட சக்தியை நம்மால் ஒருமுகப் படுத்தி நினைக்க முடியாது என்பதால்தான், நம்மைப் போன்ற உருவங்களுடன் ஆன கடவுளைப் படைத்து அவர்களுக்கு ஆயு, தங்களும் கொடுத்து அருளுபவர் என்றும் தண்டிப்பவர் என்றும் நம்பவைத்து நாம் நற்செயல்கள் புரியவும்  நம்மைக் கட்டுப் படுத்தவும் பயத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வழி வகுத்துள்ளனர்.
கேள்வி:- இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா.?
பதில்:- பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் முறையே ஆக்கல், காத்தல் அழித்தல் எனும் செயல் புரிபவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள். இதையே சக்தியின் வெளிப்பாடாகவும் இருத்தலாகவும் மறைதலாகவும் கொள்ளலாம் இதையேmanifestation, establishment and withdrawal  ஆக எண்ணலாம் ஒரு சக்தியிடம் இருந்து வெளிப்பட்டு இருப்பதுபோல் இருந்து மறைவதைக் குறிக்கும்
கேள்வி: -இந்த விளக்கத்துக்கு முந்தையதே தேவலாம் போலிருக்கிறதே .உதாரணமாக ஏதும் கூற முடியுமா. ?
பதில்:- நான் ஓரிடத்தில் படித்ததைக் கூறுகிறேன் இதை விளக்க பிரதானமாக இரண்டு உதாரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தூக்கம். மற்றொன்று மண்பாண்டம். ஆழ்ந்த தூக்கத்தில் நம் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றன. ஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் தோன்ற” ஆரம்பித்து விடுகின்றனஉருவாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் தோன்றி எண்ணங்கள் நம் மனதில்நிலையாக’ இருப்பது போல இருக்கின்றன. ஏன் போல”? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்துwithdraw) விடுகின்றன. அதே போல மண்ணாய் இருந்ததுஒரு பானையாக மாறி பின் உடைந்தாலோ நீரில் கரைந்தாலோ மறுபடி மண்ணோடு மண்ணாய் ஒடுங்கி விடுகிறது

கேள்வி:- நாம் கேள்விப்படும் ஆண்டவனின் அவதாரங்கள் எல்லாம் பொய்யா.?

பதில் :- பொய் என்று ஏன் எண்ண வேண்டும்.?இந்தமாதிரி அவதாரக் கதைகள் மூலம் மக்கள் நல் வழிப்படுவார்களானால் அந்த நம்பிக்கைகள். இருந்து விட்டுப் போகட்டுமே. நான் கற்றதும் பெற்றதும் இதனால் என்னவென்றால் வாழ்க்கை முறை என்று எண்ணப்படும் நமது சனாதன மதத்தின் அடி நாதமாக இருக்கும் வேதங்களிலோ, உபநிஷத்துக்களிலோ இறைவனுக்குப் பெயர் கொடுத்து வழி பாடு இருந்ததாகத் தெரியவில்லை.

கேள்வி:- வேதங்களையும் உபநிஷத்துக்களையும் படித்திருக்கிறாயா.?

பதில்:- அவை படித்தறிந்து கொள்ளக் கூடியதல்ல. கேட்டறிந்து வருவதே ஆகும். படித்தும் கேட்டும் அறிந்தவரை நான் புரிந்து கொண்டதைத்தான் சொல்ல முடியும்

கேள்வி. :- வேதங்களில் இந்திரன் ,சூரியன் வருணன் என்னும் பல இறை வடிவங்களுக்கு செய்ய வேண்டிய வேள்வி முறைகளும் , கிரியைகளும் மந்திரங்களாகச் சொல்லப் பட்டிருக்கிறதாமே. உண்மையா.?

பதில்.:- நான் வேதம் படித்ததில்லை. மேலும் இந்த மாதிரியான விஷயங்கள் பற்றிக் கூற வேண்டுமானால். இவை ஆதி காலத்தில் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த நடை முறைகள் இந்த காலத்துக்கு ஒத்துவருமா என்ற என் கேள்வியே பதிலாக இருக்கும். ஏன் என்றால் வேதங்களும் உபநிஷத்துக்களும் வாய்வழியே வந்தவை. காலத்துக்கு ஏற்றபடி இடைச் செருகல்கள் இருக்கலாம். வேதங்களைத் தொகுத்தவர் வேத வியாசர் என்று கூறப் படுகிறது. அவர் கூற அவரது சீடர்கள் மனதில் வாங்கி அவற்றை பலருக்கும் பரப்பி இருக்க வேண்டும். ஒரு விஷயம் வாய்வழியே பரப்பப்படும்போது நிறையவே மாற்ற்ங்களுக்கு உள்ளாகலாம். ஏன் ,அண்மைக்கால பாரதியின் பாடல்களிலேயே பாடபேதம் இருப்பது புரிகிறது. எந்தவிதமான பராமரிப்புகளும் இல்லாத வாய் வழிவந்த வேதங்கள் அவற்றின் ஒரிஜினல் ஃபார்மில் இருக்குமா.? நான் இவை எல்லாம் சரியில்லை என்று சொல்லவில்லை. ஆனால் சரியாக இல்லாமலிருக்க நிறையவே சாத்தியக் கூறுகள் இருக்கின்றன
.
கேள்வி:- பட்டும் படாமலும் பதில் சொல்லிவிடக் கூடாது. எதையாவது சொல்லி மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையா.?

பதில்:-  நான் தப்பித்துக் கொள்ள பதில் சொல்லவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் நிறைய விஷயங்கள் ஆதியில் சொன்னதுபோல் இல்லையோ எனத் தோன்றுகிறது. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி நிறையவே மாற்றங்கள் இருக்கிறது. உதாரணத்துக்கு வியாசரால் இயற்றப்பட்ட பாரதக் கதை 8000- அடிகளைக் கொண்ட தாக பாரதத்தின் ஆதிபர்வம் கூறுவதாகவும் அது வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது 24000 அடிகளிக் கொண்டிருந்ததாகவும் அதன் பிறகு உக்கிராசராவ சௌதி ஓதியபோது 90000 அடிகளைக் கொண்டிருந்ததாகவும் விக்கிப் பீடியாவில் படித்தேன். இந்த 8000 அடிக் கதை 90000 அடிகளாகும் போது அந்தந்த காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் இருக்கத்தானே வேண்டும். அதேபோல் கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்ப்பட்டதாக ( ஓதப்பட்டதாகக் ) கருதப் படும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அவற்றில் முதலில் சொல்லப்பட்டது மாதிரியே இருக்கும் என்று எண்ண முடியவில்லை. . செய்யும் தொழில்முறைக்கேற்ப  பிரிக்கப்பட்ட நான்கு பிரிவினரும் இந்த இடைச் செறுகல்களால் மனுநீதி என்றும் , தர்ம சாஸ்திரம் என்றும் பெயர்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்க சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன. எல்லோரும் வேதங்களும் உபநிஷத்துக்களும் அத்தியயனம் செய்ய அனுமதிக்கப் படவில்லை என்பது பலராலும் கூறப்பட்ட கருத்து.
எந்தவிதமான செய்தியும் ஆராயப்பட்டால் உயர்வு தாழ்வு என்று பாதிப்பின் காரணம் புரியும். புரிந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வது நான் அவர்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறேனோ என்ற எண்ணத்தாலா.?
கேள்வி:- உறங்குபவரை எழுப்பலாம். உறங்குவதுபோல் பாசாங்கு செய்வோரை எழுப்ப முடியுமா.?
பதில்:- தனிமரம் தோப்பாகாது. என்னைப் போல் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன். நடப்பவை எல்லாம் காலத்தின் கோலம் என்பது தெரிகிறது. தவறுகள் திருத்தப் படவேண்டும் charity begins at home  என்பார்கள். நாம் நமது எண்ணங்களை சீராக்கிச் செதுக்குவோம் . உண்மை நிலையை அறிவோம். நம்மை நாமே மாற்றிக்கொள்ள முயலலாமே என்பதுதான் என் ஆதங்கம். நான் கற்றதும் பெற்றதும் சரியோ தவறோ தெரியவில்லை. கற்றுப் பெற்றதை பதிவிடுகிறேன்.அவ்வளவுதான். .

இந்த சேவல் சண்டையைப் பாருங்களேன் கொசுராக