ஒரு பயணமும் பேருவகையும்
-----------------------------------------------
நான் அடிக்கடி கூறுவது “திட்டமிட்டுச் செய், திட்டமிட்டதைச் செய்” என்பதாகும். ஆனால் சிலவற்றை திட்டமிட்டுச் செய்ய முடிவதில்லை. திட்டங்களுக்குப் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பல நாட்களாகத் திட்டமிட்டு வந்தேன். முதலில் என் பயணம் சென்னைக்கு என்றிருந்தது. ஆனால் அங்கு வெயிலின் தாக்கம் கூடுதல் என்பதால் அது நிறைவேற்றப் படாமல் போய் விட்டது. நான்தான் விடாக்கண்டனாயிற்றே. காலம் கனியக் காத்திருந்தேன் என் மனைவிக்கு என்னுடன் தனியே பயணிக்க மிகவும் பயம். கடந்தமுறை பயணத்தின்போது வைத்தீஸ்வரன் கோவிலில் நான் விழுந்ததே முக்கிய காரணம். யாராவது கூட இருந்தால் அவளுக்கு பயம் சற்றுக் குறையும் சில நாட்களுக்கு முன் என் மச்சினனிடம்( எனக்கு அவன் மூத்தமகன் போல ) என்னை எங்காவது அழைத்துப் போகக் கேட்டேன். அவனும் சரி என்றான். நடுவில் அவனும் அவன் மனைவியும் மலேசியா பயணம் மேற்கொள்ள இருப்பதால் அது முடிந்து வந்து போகலாம் என்றான் இதனிடையே சற்றும் எதிர்பாராமல் என் பழைய நண்பன் ஒருவன் தொலை பேசியில் அழைத்துப் பேசினான் இன்னொரு அறுபது வருட நட்புக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. என் தம்பி ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறான் வீட்டு கிரகப் பிரவேசத்துடன் நண்பர்களையும் சந்திக்கலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அவன் வீடு கட்டி முடிக்க இன்னும் காலதாமதம் ஆகும் என்று தோன்றியதால் என் பயண திட்டத்தை அதற்கு முன்பே நிறைவேற்ற எண்ணினேன். என் மனைவியை இதற்கு உடன் படச் செய்ய என்னிடம் இருந்த துருப்புச்சீட்டை போட்டேன் அவள் விரும்பும் குருவாயூர் பயணத்தையும் செய்து விடலாம் என்றேன். என் மச்சினனும் மலேசியப் பயணம் முடித்து வந்து விட்டான் ஜூலை 15 தேதிக்குப் பின் எப்பொழுது வேண்டுமானாலும் போகலாம் என்றான் ரயில் டிக்கெட் எடுப்பதோ முன் பதிவு செய்வதோ ஏற்புடையதாய் இல்லை. விரும்பும் இடத்துக்கு விரும்பும் நேரத்தில் செல்ல மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட வேண்டும் சுபஸ்ய சீக்கிரம் என்பார்கள். பாலக்காட்டில் பதிவுலக நண்பர் துளசிதரனையும் சந்திப்பது என்பது தீர்மானமாயிற்று. 16-ம் தேதி காலை பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டால் மாலை நான்கு மணிக்குள் பாலக் காடு சென்று விடலாம் பால்க் காட்டில் மத்திய கேரள பேரூந்து நிலையம் அருகில் ஹோட்டல் கபில வாஸ்துவில் அறைகள் முன் பதிவு செய்தோம் என் பழைய நண்பன் மனைவியுடன் மாலை ஐந்து மணிக்கு வருகிறென் என்று கூறினான் நண்பர் துளைதரனின் இருப்பிடம் பற்றி விசாரித்தால் அவரும் என்னை ஹோட்டலில் வந்து சந்திப்பதாகக் கூறினார். இங்கிருந்து பாலக் காட்டுக்குக் சாலை வழியே சென்றால் 430 கி.மீ. தூரம் என்று தெரிந்தது.எந்த சிக்கலும் இல்லாமல் மதியம் ஒன்றரை மணி அளவில் நேராக ஓட்டலுக்குச் சென்று உணவருந்தி சற்றே ஓய்வாக இருந்தோம் மாலை நான்கு மணியிலிருந்தேமனம் எதிர்பார்ப்பில் நிலை கொள்ளாமல் இருந்தது, சரியாக ஐந்து மணிக்கு என் நண்பன் சுந்தரேஸ்வரன் மனைவியுடன் வந்தான் அவனுக்கு இதய அறுவைச் சிகிச்சை முடிந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது என்றான் இவனும் நானும் அறுபது ஆண்டுகளாக நண்பர்கள். ஒரே நாளில் எச்.ஏ எல் -லில் பயிற்சியில் சேர்ந்தோம் ஊர்ப்பட்ட விஷயங்கள் இருந்தது பேசுவதற்கு. எந்நேரமும் நண்பர் துளசிதரன் வரலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே ரிசெப்ஷன் இலிருந்து துளசிதரன் கூப்பிட்டார், அவர் வரும் போதே எதிர் கொண்டு வரவேற்றேன் பரஸ்பர அறிமுகப் படலம் முடிந்தது, ஏதோ காலம் காலமாகப் பரிச்சயப்பட்டநட்புபோல் இருந்தது, நண்பர் துளசிதரனை இதுவே முதன் முறையாகப் பார்க்கிறேன் ஏதோ சற்று வித்தியாசமாகத் தெரிந்தார். சில நொடிகள் மண்டைக் குடைச்சலுக்குப் பின் தெரிந்தது. அவரது குறும் படம் போயட் தெ கிரேட் –இல் மொட்டை அடித்துப் பார்த்தது. இப்போது வலது பக்கம் வகிடு எடுத்த தோற்றம் . வந்தவர் என் பதிவுகள் சிலவற்றிலிருந்த விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் ,என் பதிவுகள் சிலவற்றை நினைவில் கொண்டு வந்து பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதில் என் பதிவுகள் எல்லாவற்றையும் என் மனைவி படிப்பதில்லை. அண்மையில் எழுதி இருந்த எண்ணச் சிறகாட்டம் என்னும் பதிவில் இருந்த விஷயங்களைப் பற்றி அவளுக்கு ஏதும் தெரியாது. எனக்கோ துளசிதரன் அது பற்றிப் பேசிவிடுவாரோ என்னும் பயம் இருந்தது. எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிய வேண்டாம் இல்லையா.?என் நண்பன் சுந்தரேஸ்வரனின் அண்ணா மதுசூதன் துளசிதரன் பணிசெய்யும் பள்ளிக்கு வேண்டப் பட்டவர் என்று தெரிந்தது. ஏறதாழ இரண்டு மணி நேரத்தில் துளசிதரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது நான் கவனித்தது , ஆங்கில ஆசிரியரான அவர் பேச்சில் ஆங்கில வார்த்தைகளே வரவில்லை....!சற்றே பின் தங்கிய இடத்தில் இருக்கும் பள்ளியில் படிக்கும் சற்றே பின் தங்கிய மாணவர்கள் துளசிதரன் மாதிரியான ஆசிரியர் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என் சிறுகதைத் தொகுப்பான வாழ்வின் விளிம்பில் புத்தகத்தை அவருக்குக் கொடுத்தேன் உடன் இருந்த நேரத்தில் அவரது பணிவும் அடக்கமும் என்னைக் கவர்ந்தது. பல காலம் பழகியவர்கள் பிரியும் போது ஏற்படும் pangs of parting எனக்கிருந்தது. பிரியா விடை பெற்றவர் இன்னும் மூன்று மணிநேரம் மோட்டார் சைக்கிளில் பயணப் பட்டு அவர் இல்லத்துக்கு நீலாம்பூர் செல்ல வேண்டும் என்றார் வழியில் மழையில் அகப்படக் கூடாதே என்று என் மனைவி வருத்தப்பட்டாள்
![]() |
| நண்பர் துளசிதரனுடன் |
( என் காமிராவில் எடுத்தது, வெகு சுமார் ரகம் .என் மச்சினன் அவனது டிஜிடல் காமிராவில் எடுத்த படங்கள் கீழே)
| துளசிதரனுடன் நான் |
| என் சிறுகதைத் தொகுப்பு துளசிதரனுக்கு |
| சுந்தரேஸ்வரன் நான் துளசிதரன் |
இன்று 22-ம் தேதி பதிவர் கில்லர்ஜி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் துளசிதரனைப் பாலக்காட்டில் சந்திக்கப் போவதை முன் கூட்டியே தெரிவித்திருந்தால் அவரும் வந்து துளசிதரனை சந்தித்து இருக்கலாம் என்று கூறினார். துளசியை சந்திக்கும் ஆர்வம் தெரிந்தது.
(குதூகலப் பயணம் தொடரும்)
