Wednesday, July 22, 2015

ஒரு குதூகலப் பயணம்


                                ஒரு பயணமும் பேருவகையும்
                                -----------------------------------------------

நான் அடிக்கடி கூறுவது “திட்டமிட்டுச் செய், திட்டமிட்டதைச் செய்என்பதாகும். ஆனால் சிலவற்றை திட்டமிட்டுச் செய்ய முடிவதில்லை. திட்டங்களுக்குப் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பல நாட்களாகத் திட்டமிட்டு வந்தேன். முதலில் என் பயணம் சென்னைக்கு என்றிருந்தது. ஆனால் அங்கு வெயிலின் தாக்கம் கூடுதல் என்பதால் அது நிறைவேற்றப் படாமல் போய் விட்டது. நான்தான் விடாக்கண்டனாயிற்றே. காலம் கனியக் காத்திருந்தேன் என் மனைவிக்கு என்னுடன் தனியே பயணிக்க மிகவும் பயம். கடந்தமுறை பயணத்தின்போது வைத்தீஸ்வரன் கோவிலில் நான் விழுந்ததே முக்கிய காரணம். யாராவது கூட இருந்தால் அவளுக்கு பயம் சற்றுக் குறையும் சில நாட்களுக்கு முன் என் மச்சினனிடம்( எனக்கு அவன் மூத்தமகன் போல ) என்னை எங்காவது அழைத்துப் போகக் கேட்டேன். அவனும் சரி என்றான். நடுவில் அவனும் அவன் மனைவியும் மலேசியா பயணம் மேற்கொள்ள இருப்பதால் அது முடிந்து வந்து போகலாம் என்றான் இதனிடையே சற்றும் எதிர்பாராமல் என் பழைய நண்பன் ஒருவன் தொலை பேசியில் அழைத்துப் பேசினான்  இன்னொரு அறுபது வருட நட்புக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. என் தம்பி ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறான் வீட்டு கிரகப் பிரவேசத்துடன் நண்பர்களையும் சந்திக்கலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அவன் வீடு கட்டி முடிக்க இன்னும் காலதாமதம் ஆகும் என்று தோன்றியதால் என் பயண திட்டத்தை அதற்கு முன்பே நிறைவேற்ற எண்ணினேன். என் மனைவியை இதற்கு உடன் படச் செய்ய என்னிடம் இருந்த துருப்புச்சீட்டை போட்டேன் அவள் விரும்பும் குருவாயூர் பயணத்தையும் செய்து விடலாம் என்றேன். என் மச்சினனும் மலேசியப் பயணம் முடித்து வந்து விட்டான் ஜூலை 15 தேதிக்குப் பின் எப்பொழுது வேண்டுமானாலும் போகலாம் என்றான் ரயில் டிக்கெட் எடுப்பதோ முன் பதிவு செய்வதோ ஏற்புடையதாய் இல்லை. விரும்பும் இடத்துக்கு விரும்பும் நேரத்தில் செல்ல மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட வேண்டும் சுபஸ்ய சீக்கிரம் என்பார்கள். பாலக்காட்டில் பதிவுலக நண்பர் துளசிதரனையும் சந்திப்பது என்பது தீர்மானமாயிற்று. 16-ம் தேதி காலை பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டால் மாலை நான்கு மணிக்குள் பாலக் காடு சென்று விடலாம் பால்க் காட்டில் மத்திய கேரள பேரூந்து நிலையம் அருகில் ஹோட்டல் கபில வாஸ்துவில் அறைகள் முன் பதிவு செய்தோம் என் பழைய நண்பன் மனைவியுடன் மாலை ஐந்து மணிக்கு வருகிறென் என்று கூறினான் நண்பர் துளைதரனின் இருப்பிடம் பற்றி விசாரித்தால் அவரும் என்னை ஹோட்டலில் வந்து சந்திப்பதாகக் கூறினார். இங்கிருந்து பாலக் காட்டுக்குக் சாலை வழியே சென்றால் 430 கி.மீ. தூரம் என்று தெரிந்தது.எந்த சிக்கலும் இல்லாமல் மதியம் ஒன்றரை மணி அளவில் நேராக ஓட்டலுக்குச் சென்று உணவருந்தி சற்றே ஓய்வாக இருந்தோம் மாலை நான்கு மணியிலிருந்தேமனம் எதிர்பார்ப்பில் நிலை கொள்ளாமல் இருந்தது,  சரியாக ஐந்து மணிக்கு என் நண்பன் சுந்தரேஸ்வரன் மனைவியுடன் வந்தான் அவனுக்கு இதய அறுவைச் சிகிச்சை முடிந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது என்றான் இவனும் நானும் அறுபது ஆண்டுகளாக நண்பர்கள். ஒரே நாளில் எச்.ஏ எல் -லில்  பயிற்சியில் சேர்ந்தோம் ஊர்ப்பட்ட விஷயங்கள் இருந்தது பேசுவதற்கு. எந்நேரமும் நண்பர் துளசிதரன் வரலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே ரிசெப்ஷன் இலிருந்து துளசிதரன் கூப்பிட்டார், அவர் வரும் போதே எதிர் கொண்டு வரவேற்றேன் பரஸ்பர அறிமுகப் படலம் முடிந்தது, ஏதோ காலம் காலமாகப் பரிச்சயப்பட்டநட்புபோல் இருந்தது, நண்பர் துளசிதரனை இதுவே முதன் முறையாகப் பார்க்கிறேன் ஏதோ சற்று வித்தியாசமாகத் தெரிந்தார். சில நொடிகள் மண்டைக் குடைச்சலுக்குப் பின் தெரிந்தது. அவரது குறும் படம் போயட் தெ கிரேட் இல் மொட்டை அடித்துப் பார்த்தது. இப்போது வலது பக்கம் வகிடு எடுத்த தோற்றம் . வந்தவர் என் பதிவுகள் சிலவற்றிலிருந்த விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் ,என் பதிவுகள் சிலவற்றை நினைவில் கொண்டு வந்து பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதில் என் பதிவுகள் எல்லாவற்றையும் என் மனைவி படிப்பதில்லை. அண்மையில் எழுதி இருந்த எண்ணச் சிறகாட்டம் என்னும் பதிவில் இருந்த விஷயங்களைப் பற்றி அவளுக்கு ஏதும் தெரியாது. எனக்கோ துளசிதரன் அது பற்றிப் பேசிவிடுவாரோ என்னும் பயம் இருந்தது. எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிய வேண்டாம் இல்லையா.?என் நண்பன் சுந்தரேஸ்வரனின் அண்ணா மதுசூதன் துளசிதரன் பணிசெய்யும் பள்ளிக்கு வேண்டப் பட்டவர் என்று தெரிந்தது. ஏறதாழ இரண்டு மணி நேரத்தில் துளசிதரனுடன் பேசிக் கொண்டிருந்தபோது நான் கவனித்தது , ஆங்கில ஆசிரியரான அவர் பேச்சில் ஆங்கில வார்த்தைகளே வரவில்லை....!சற்றே பின் தங்கிய இடத்தில் இருக்கும் பள்ளியில் படிக்கும் சற்றே பின் தங்கிய மாணவர்கள் துளசிதரன் மாதிரியான ஆசிரியர் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என் சிறுகதைத் தொகுப்பான வாழ்வின் விளிம்பில் புத்தகத்தை அவருக்குக் கொடுத்தேன் உடன் இருந்த நேரத்தில் அவரது பணிவும் அடக்கமும் என்னைக் கவர்ந்தது. பல காலம் பழகியவர்கள் பிரியும் போது ஏற்படும் pangs of parting  எனக்கிருந்தது. பிரியா விடை பெற்றவர் இன்னும் மூன்று மணிநேரம் மோட்டார் சைக்கிளில் பயணப் பட்டு அவர் இல்லத்துக்கு நீலாம்பூர் செல்ல வேண்டும் என்றார் வழியில் மழையில் அகப்படக் கூடாதே என்று என் மனைவி வருத்தப்பட்டாள்


நண்பர் துளசிதரனுடன்

 ( என் காமிராவில் எடுத்தது, வெகு சுமார் ரகம் .என் மச்சினன் அவனது டிஜிடல் காமிராவில் எடுத்த படங்கள்  கீழே)

துளசிதரனுடன் நான்
என் சிறுகதைத் தொகுப்பு  துளசிதரனுக்குசுந்தரேஸ்வரன் நான் துளசிதரன் 
 அறுபது ஆண்டுகால நண்பன் சுந்தரேஸ்வரனின்  அண்ணாதான் காருண்யா இல்லம் நடத்தும் மதுசூதனன். அந்த இல்லத்துக்கு நண்பர் துளசிதரனைக் கூட்டிக் கொண்டு போக விரும்பினேன்.  உலகம் மிகவும் சிறியது.பாருங்கள் துளசிதரன் பணிசெய்யும் பள்ளியின் ஆதரவாளர்களுள் ஒருவர்தான் மதுசூதனன் என்பது தெரிந்ததாலும் , ஏற்கனவே அவரைப் பற்றி துளசிதரனுக்குத் தெரியும் என்பதாலும் நேரம் காலம் லாஜிஸ்டிக்ஸ் சரிப்பட்டு வராததாலும் அங்கு அவரைக் கூட்டிப் போகும் எண்ணத்தைக் கைவிட்டேன்

இன்று 22-ம் தேதி பதிவர் கில்லர்ஜி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் துளசிதரனைப் பாலக்காட்டில் சந்திக்கப் போவதை முன் கூட்டியே தெரிவித்திருந்தால் அவரும் வந்து துளசிதரனை சந்தித்து இருக்கலாம் என்று கூறினார். துளசியை சந்திக்கும் ஆர்வம் தெரிந்தது. 

(குதூகலப் பயணம் தொடரும்)

45 comments:

 1. இனிய சந்திப்புகளின் சுவாரஸ்ய விவரங்கள். துளசிஜி மிக இளமையாகத் தெரிகிறார்! பதிவை பாரா பிரித்துப் போட்டால் படிக்க வசதியாக இருக்கும். சந்திப்புப் பற்றி துளசிஜி பதிவிலும் படித்தேன்.

  ReplyDelete
 2. சந்திப்பைப் பற்றி துளசிதரனும் எழுதி இருக்கார். அருமையான சந்திப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவரையும் நேரில் சந்தித்தது போல் இருக்கிறது.

  ReplyDelete
 3. வணக்கம்
  ஐயா
  நிகழ்வை மிக அழகாக விவரித்துள்ளீர்கள் உண்மையில் நல்ல நட்பு கூடும் இடம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பார்கள். அடுத்த தொடரை தொடருங்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. ஸ்ரீராம், துளசி ஜிஎம்பி சாரின் பக்கத்தில் நின்றால் இளமையாகத்தான் தெரிவார்...அதுவும் முடிக்கு டை அடித்திருப்பதால் ஹஹஹஹஹ்...எனக்கு அவரைக் கலாய்க்காமல் இருக்க முடியாது....ஜிஎம்பி சார் இந்த வயதிலும் இளமையாகத்தான் இருக்கின்றார்...

  யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல் துளசி வருவார் பின்னே...நான் தானே அவருக்கு வாசித்து அவர் பதில் சொல்ல நான் அதை இங்கு அடித்து வெளியிட வேண்டும்...இரவு வருவார்...
  கீதா

  ReplyDelete
 5. ஜிஎம்பி சார் துளசி உங்களுடனான சந்திப்பை மிகவும் சிலாகித்துச் சொன்னார். பலநாட்கள் எங்கள் இருவருக்கும் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் இருவருமாக வந்து...அதில் அவர் உங்களைச் சந்தித்துவிட்டார். இனிய தருணங்கள்...

  கீதா

  ReplyDelete
 6. கீதா! இந்த பதிலை நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவரிடமிருந்து!

  ReplyDelete
 7. ஸ்ரீராம் பெரும்பாலும் நான் தான் பல்பு வாங்குவேன்...கலாய்த்தாலும்...இந்தத் தடவை நான் அப்படி வாங்கின பல்புகள்ல ஏதோ ஒண்ணு நல்லா எரிஞ்சுருக்கு! ம்மஹஹஹ்

  ReplyDelete
 8. தங்களுடனான சந்திப்பினை திரு. துளசிதரன் அவர்களும் தனது பதிவில் எழுதியிருந்தார்..

  மகிழ்ச்சியான தருணங்கள்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 9. அருமையான சந்திப்பை அழகாக பகிர்ந்தீர்கள்! நேற்று துளசிதரனும் பதிவிட்டிருந்தார். இன்னும் படிக்கவில்லை! இன்று படிப்பேன்! சென்னையில் கில்லர்ஜியை சந்தித்து மகிழ்ந்தேன்! அது பற்றியும் ஓர் பதிவிட உள்ளேன். நன்றி!

  ReplyDelete
 10. நல்ல பயணம். ஆனால் களைப்புத் தட்டவில்லையோ?

  ReplyDelete
 11. துளசிதரன் பதிவிலும் பார்த்தோம். உங்கள் எழுத்து மூலமாகப் படிக்கும்போது அதிகம் விறுவிறுப்பு.

  ReplyDelete
 12. இனிமையான சந்திப்பு....

  அவரது தளத்திலும் படித்தேன்....

  தொடரட்டும் சந்திப்புகள்..... பெங்களூர் வர வாய்ப்பிருக்கிறது. திட்டமிட்ட பிறகு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.

  ReplyDelete
 13. அன்பாக பேசுவதிலும் கவனிப்பதிலும் துளசிதரன் ஐயாவை மிஞ்ச யாரும் கிடையாது...

  இனிய சந்திப்புக்கு வாழ்த்துகள் ஐயா...

  ReplyDelete
 14. சார் மிக்க நன்றி! என்னைப் பற்றி இப்படி மிக உயர்வான எண்ணம் வைத்திருப்பது எனது பொறுப்பை இன்னும் அதிகமாக்குகின்றது. நீங்கள் இங்கு சொல்லியிருப்பது சற்று மிகையோ என்ற எண்ணமும் கூடவே எழுகின்றது. கூச்சமாகவும் இருக்கின்றது. மிக்க நன்றி சார். தங்களையும், அம்மாவையும், தங்கள் தோழர், மதுசூதனன் அவர்களின் தம்பியுமான சுந்தரேஸ்வரன் அவர்களையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்தேன்..பொன்னான தருணங்கள்! வாழ்வில் மறக்க முடியாத தருணமும்கூட..

  மிக்க நன்றி சார்!

  ReplyDelete
 15. ஸ்ரீராம்! நான் 53 வயது இளைஞனாக்கும்!! ஹஹஹ. (நான் மென்ஸ் அழகு நிலையம் எல்லாம் போவது இல்லையாக்கும்!! ஹஹஹஹஹ்)ஜிஎம்பி சார் அவர் வயதிற்கு இன்னும் இளமையாகத்தான் இருக்கின்றார்.நேரில் பார்த்த போது அது நன்றாகவே தெரிந்தது...
  எனக்கு முந்தி நான் கொடுக்க நினைத்த பதிலை கீதா கொடுத்துவிட்டு என்னிடம் சொல்லவும் செய்தார்...அதனால அதையும் வழி மொழிகின்றேன்...

  ReplyDelete
 16. இனிமையான பயணம். அனுபவித்ததை அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் ஐயா. உடன் வந்த உணர்வு நன்றி

  ReplyDelete
 17. எழுத்துலக நண்பர்களின் நட்பு
  எழுத்தினும் இனிமையானது அல்லவா
  இது போன்ற சந்திப்புகள் தொடர வேண்டும் ஐயா
  இச்சந்திப்புகள் நமக்குள் ஓர் உற்சாகத்தை
  ஊற்றெடுக்க வைக்கும் வல்லமை வாய்ந்தவை
  நன்றி ஐயா

  ReplyDelete
 18. பழைய நண்பர்களை சந்தித்தால் உற்சாகம் கூடும் என்பார்கள். உங்கள் நண்பர் திரு சுந்தரேஸ்வரன் அவர்களுடன் நீங்கள் இருக்கும் படமே அதை பறைசாற்றுகிறது. காத்திருக்கிறேன் உங்களின் குதூகலப் பயணம் பற்றி மேலும் அறிய.

  ReplyDelete

 19. @ ஸ்ரீ ராம்
  முகமறியாப் பதிவுலக நண்பர்களை நேரில் சந்திக்க எனக்கு விருப்பம் அதிகம் ஒரு முறை சந்தித்துப் பேசினால் நிறைய விஷயஙகள் புரியும் ஒரு அன்னியோன்னியம் தானாக வரும் வருகைக்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 20. @ கீதா சாம்பசிவம்
  திருச்சியில் சந்திக்காத பதிவர்களுள் நீங்களும் ஒருவர். வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன் .வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 21. @ ரூபன்
  வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 22. @ கில்லர்ஜி
  எதற்காகக் காத்திருக்கிறீர்கள். ? வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 23. @ துளசிதரன்
  ஸ்ரீராமின் கேள்விக்கு எனக்கு முன்னே பதில் கொடுத்து விட்டீர்கள். உள்ளம் உற்சாகமாயிருந்தால் முதுமையும் இளமையாகி விடும் அதேபோல் வைஸ் வெர்சா. நன்றி.

  ReplyDelete

 24. @ ஸ்ரீராம்
  நான் வேறு மாதிரியான பதிலைக் கொடுத்து விட்டேன் போல் இருக்கிறது. நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 25. @ துளசிதரன்/ கீதாஎந்த பல்ப் நல்லா எரிஞ்சிருக்கு.?

  ReplyDelete

 26. @ துரை செல்வராஜு
  ஒரே சந்திப்புதான் இருவரின் எண்ணங்கள் அவரவர் பதிவில் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 27. @ தளிர் சுரேஷ்
  கில்லர்ஜியை மதுரைப் பதிவர் விழாவில் பார்த்தேன் சுவாரசியமான மனிதர். வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 28. @ டாக்டர் கந்தசாமி
  ஒரு உண்மையைச் சொல்லட்டுமா.?இந்தப் பயணத்தை என்னால் எப்படி எதிர் கொள்ள முடிகிறது என்று சோதித்துப் பார்க்க விரும்பினேன் ஃபர்ஸ்ட் க்லாசில் பாசாகிவிட்டேன் சார். கரிசனத்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 29. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  ஒரே சந்திப்பு இருவரது எழுத்துக்களில் நன்றி ஐயா.

  ReplyDelete

 30. @ வெங்கட் நாகராஜ்
  இப்படிக் கூறி விட்டீர்கள் உங்களிடம் இருந்து செய்தியை தினம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் சந்திக்க விருப்பம் என்பதை அறியவே மனம் மகிழ்கிறது. நன்றி சார்.

  ReplyDelete

 31. @ திண்டுக்கல் தனபாலன்
  துளசிதரன் எல்லோருக்கும் பிடித்தவர். ஆனால் நான் அப்படி இல்லை என்று தோன்றுகிறது. வருகைக்கு நன்றி டிடி.

  ReplyDelete

 32. @ துளசிதரன் தில்லையகத்து.
  மனதில் பட்டதைக் கூறுபவன் நான் இந்த சந்திப்பில் அது தெரிந்திருக்கும் இல்லையா. ?கருத்துப் பகிர்வுக்கு நன்றி சார்.

  ReplyDelete

 33. @ துளசிதரன் தில்லையகத்து.
  மனம் மகிழ்ச்சியில் இருந்தால் இளமை கூடுமோ. ? வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார். அகத்தின் அழகு முகத்தில் இல்லையா சார்.?

  ReplyDelete

 34. @ துளசிதரன்
  உங்களை இளைஞன் என்று கூறியதற்கா ஸ்ரீராமுக்கு நன்றி.? ஸ்ரீ உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார்.

  ReplyDelete

 35. @ உமையாள் காயத்ரி
  பதிவுலகில் சந்திக்க வேண்டியவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள் வாய்ப்புதான் அரிதாகி வருகிறது. வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 36. @ கரந்தை ஜெயக் குமார்
  எழுத்தில் சந்திப்பதை விட நேரில் சந்திப்பதில் அநேக நன்மைகளுண்டு. பொதுவாக எழுத்தில் உண்மை சொரூபம் தெரிவதில்லை. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 37. @ வே. நடனசபாபதி
  சுந்தரேஸ்வரன் என் அறுபது ஆண்டு நட்பு ஐயா. அவனுக்கு இதய அறுவைச்சிகிச்சை முடிந்தபின் இப்போதுதான் சந்திக்கிறேன் நிஜமாகவே மகிழ்ச்சியாக இருந்தது. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 38. @ துளசிதரன் / கீதா
  நான் சென்னைக்கு வரும்போது அவசியம் சந்திக்கலாம் கூடவே துளசிதரனும் இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி.

  ReplyDelete
 39. உங்கள் பயணத்தின் குதூகலம் படங்களில் தெரிகிறது ஐயா...

  ReplyDelete

 40. @ பரிவை.சே. குமார்
  வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 41. தங்களின் மகிழ்ச்சியான இத்தருணம் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நானே உங்களை எல்லாம் நேரில் பார்த்தது போன்று. இது போன்ற சந்திப்புகள் மேலும்
  தொடர வாழ்த்துக்கள் ஐயா ...! தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete

 42. @ இனியா,
  முகமறியாப் பதிவர்களை சந்திப்பதே அலாதி மகிழ்ச்சி தருகிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்

  ReplyDelete
 43. நல்ல பயணம். நல்லவர்களின் சந்திப்பு. வலைப்பதிவர் துளசிதரன் அவர்களின் தெளிவான புகைப் படத்தை இப்போதுதான் பார்க்கிறேன். சாதாரணமாக பத்தி பிரித்துதான் எழுதுவீர்கள். இந்த பதிவை ஒரே நீட்டோலையாக வாசித்து விட்டீர்கள். படித்து முடிக்க கொஞ்சம் (இணையம் என்பதால்) சிரமப் பட்டேன்.

  ReplyDelete