வெள்ளி, 10 ஜூலை, 2015

திருடன்--போலீஸ்


                                    திருடன்--போலீஸ் (சிறு கதை)
                                   ---------------------------------------------



ஒரு கணவனும் மனைவியும் வீதியில் நடந்து செல்கிறார்கள் ஒரு செயின் ஸ்நாட்செர் மனைவியின் கழுத்தில் இருந்த செயினை மோட்டார் சைக்கிளில் வந்து உருவிக் கொண்டு போனான்  இருவரும் காவல் நிலையத்துக்குப் போனார்கள் . மனைவியிடம் காவல் அதிகாரி அந்த செயினை வாங்கிக் கொடுத்தது யார் என்று கேட்கிறார் கணவன் என்று பதில் சொன்னார் மனைவி. உங்கள் மேல் கணவனுக்கு அதிகப் பிரியமா என்று கேட்டார் காவல் அதிகாரி. ஆம் என்றாள் மனைவி. காவல் அதிகாரியையே பார்த்துக் கொண்டிருந்த கணவன்  புகாரைப் பதிவு செய்யும் நேரத்தில் புகார் வேண்டாம் என்றான். ஏன் என்றார் காவல் அதிகாரி. அது தங்கமல்ல கவரிங். போனால் போகட்டும் என்றான் கணவன். மனைவி கணவனிடம் சண்டை போடத் துவங்கி விட்டாள் மனைவி.கவரிங் நகை போய் விட்டதற்கா புகார் என்று கோபித்துக் கொண்டார் காவல் அதிகாரி.
சற்று நேரத்தில் இருவரும் வந்த வழியே திரும்பிக் கொண்டிருந்தனர். திடீரென்று  மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் கணவன் கன்னத்தில் அறைந்து கவரிங் நகை ஒரு கேடா என்று திட்டிவிட்டு அந்தக் கவரிங் நகையை வீசி விட்டுச் சென்றான் . கணவன் ஓடிப்போய் அதை எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்தான். கவரிங் நகை தேவை இல்லை என்று மனைவி கோபித்துக் கொண்டாள். இது கவரிங் அல்ல அசல் தங்கம் என்றான் கணவன். பிறகு ஏன் புகாரை வாபஸ்வாங்கி அது கவரிங் என்று சொன்னாய் என்று கேட்டாள் மனைவி. அப்படிச் செய்ததால்தான் நகை மீண்டும் கிடைத்தது என்றகணவன் , நான் புகாரை வாபஸ் பெறுகிறேன் என்று சொல்லி அதன் காரணத்தையும் சொன்னபோது காவல் அதிகாரியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கவரிங் என்று சொன்னதால் நகை மீண்டது என்றான் கணவன். திருடனுக்கும் காவல் அதிகாரிக்கும் இருந்த  nexus  கணவனுக்குப் புரிந்திருந்தது.

39 கருத்துகள்:

  1. உங்களை ஏன் கைது செய்து காவலில் வைக்கக் கூடாது?

    பதிலளிநீக்கு
  2. இப்படிக் கூட நடக்குமா என்று தோன்றினாலும், இந்த பயம் எனக்கும் உண்டு. வெளியூர் செல்லும் நேரங்களில் அருகிலுள்ள காவல் நிலையங்களில் சொல்லி விட்டுச் செல்லுங்கள் என்று முன்னால் அறிவித்தபோது, முக்கியமாக அவர்களுக்குத்தான் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் தனிமையான சாலையில் ரோந்து போலீசார் சாலையில் போகும் டூ வீலர் ஜோடிகளிடம் நடத்தும் பேரம், சாலை ஓரக் கடைகளில் செய்யும் வசூல் எல்லாம் பார்க்கிறேனே!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அய்யா,
    இது எல்லாம் தெரிந்தும் எப்படி அவர்கள் நம் நண்பர்கள்,,,,,,,,,,,,
    தங்கள் பதிவு அருமை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. வீட்டை பூட்டிவிட்டு, வெளியூர் செல்வதாகவும், வர இரண்டு நாள் ஆகும் என்றும் போலீஸ் ஸ்டேசனில் சொல்லி, பதிவேட்டில் பதிந்தும் சென்றார்கள் ஒரு குடும்பத்தினர். சரியாக அன்று இரவு அந்த வீட்டில்தான் திருட்டு நடந்தது. அன்றைக்கு என்று போலீஸ் ரோந்து இல்லை. இது எப்படி சார் இருக்கு?

    பதிலளிநீக்கு
  5. கதையோ நிஜமோ.. கணவனின் presence of mind பாராட்டத் தக்கது.

    ரொம்ப நாள் கழித்து பஞ்ச தந்திரக் கதைகளை படித்த feel வருகிறது. கதையின் சுருக்கமும் ஒரு காரணம்.It is so crisp and nice.

    God Bless You

    பதிலளிநீக்கு
  6. பாதி திருடனை நன்றாகவே கண்டுபிடித்து விட்டார்...!

    பதிலளிநீக்கு
  7. கதை அருமை ஐயா
    அனாலும் ஒரு சந்தேகம்
    திருடனுக்கு கவரிங் எது உண்மை நகை என்பது கூடவா தெரியாமல் இருக்கும்

    பதிலளிநீக்கு
  8. கதையை வாசிக்கும் போதே அதுவும் இறுதியில் கணவன் கவரிங்க் என்று போலீசிடம் சொல்லும் போதே அது கவரிங்க் அல்ல....தங்கம் தான்...போலீசும் உடந்தையாக இருக்கும் என்ற ச்ந்தேகத்தில்தான் கணவன் சொல்லுவது என்று தோன்றியது. சார், அது எங்கள் திறன் அல்ல...நம் போலீஸ் இப்படித்தான் என்று நன்றாகத் தெரிந்திருப்பதால். சில வருடங்களுக்கு முன் ஒரு 3, 4 வருடங்கள் இருக்கலாம். நீங்கள் ஊருக்குச் செல்லும் முன் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் அறிவிக்கவும். உங்கள் வீடு பத்திரமாக இருப்பதற்கு என்று சொல்லி ஒரு நோட்டீஸ் வந்தது...நாங்கள் சொல்லிச் சிரித்துக் கொண்டோம்....இதற்கு வேறு வினையே வேண்டாம் என்று. போலீசுக்கும், சில திருடன்களுக்கும் தொடர்பு உண்டு என்று கேள்விப்படுவதுண்டு...வேலியே பயிரை மேயும் காலம்...(ஸாரி..இது நேர்மையான போலீஸ் அதிகாரிகளைச் சுட்டிக் காட்டி அல்ல...அவர்கள் மிகவும் சொற்பமானவர்கள்)

    பதிலளிநீக்கு
  9. சார் நீங்கள் எங்கள் காக்கா முட்டை இடுகைக்கு இட்டிருந்த பின்னூட்டத்தில் சொல்லியதற்கு பதில் கொடுத்திருக்கிறோம் சார். அந்தப் படங்கள் இணைய்ம் தான்...மற்றவை எனது கேமரா...உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் கொடுத்திருக்க்றேன்...

    சார் நீங்கள் தூக்கணாங்குருவி கூடு பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள் இல்லையா..

    இதோ ஒரு லிங்க் இதைப் பாருங்கள் சார், ரொம்பவே வியப்பாக இருக்கிறது இதைப் பற்றி முன்பு ஹிந்துவில் சனிக்கிழமை வரும் வீடுகள் பற்றிய சப்ளிமென்டில் வாசித்த நினைவு. இதோ இணையத்தில் அந்தப் பறவை பற்றிய லிங்க்

    http://www.wired.com/2014/08/absurd-creature-of-the-week-the-bird-that-builds-nests-so-huge-they-pull-down-trees/

    பதிலளிநீக்கு
  10. இப்படியும் நடக்குமா என ஆச்சரியமாக இருக்கிறது. திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் சந்தேகம் எனக்கும் தோன்றியது.

    பதிலளிநீக்கு

  11. @ டாக்டர் கந்தசாமி
    நான் என்ன தப்பு செய்தேன் ஐயா காவலில் வைக்க.?

    பதிலளிநீக்கு
  12. இப்படியும் நடக்கலாம்!

    சில செயின் திருடர்கள், கவரிங் நகை எனத் தெரிந்து கொண்டு திரும்பி வந்து நகை இழந்தவர்களை அடித்ததுண்டு!

    பதிலளிநீக்கு

  13. @ ஸ்ரீராம்
    முன்பொரு நாள் பெங்களூர் த ஹிந்து பத்திரிக்கையில் படித்தது.ஒரு நேர்மையான பொலீஸ் அதிகாரி. இருந்தாலும் அவருக்கு மாமூலாக மாதம் ரூ.40000/- வரை வந்து விடுமாம் எனக்கு என்னவோ இந்த காவல் துறை பற்றிய நல்ல அபிப்பிராயமே வருவதில்லை. வருகைக்கு நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு

  14. @ மகேஸ்வரி பாலசந்திரன்
    அதெல்லாம் ஒரு விளம்பரம்தானே. வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  15. @ தி.தமிழ் இளங்கோ
    ஒவ்வொருவருக்கு காவல்துறை பற்றி ஒவ்வொரு கதை இருக்கும் வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  16. @ வெட்டிப் பேச்சு
    கதை புனைவுதான். பாராட்டுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  17. @ திண்டுக்கல் தனபாலன்
    ஒரு பாதி தெரிந்தால் மறுபாதி தெரிவது கடினமில்லையே, வருகைக்கு நன்றி டிடி.

    பதிலளிநீக்கு

  18. @ கரந்தை ஜெயக் குமார்
    திருடன் நகையைப் பறிக்கும் போது உரசிப் பார்க்க முடியுமா. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  19. @ துளசிதரன் தில்லையகத்து
    /கதையை வாசிக்கும் போதே அதுவும் இறுதியில் கணவன் கவரிங்க் என்று போலீசிடம் சொல்லும் போதே அது கவரிங்க் அல்ல....தங்கம் தான்...போலீசும் உடந்தையாக இருக்கும் என்ற ச்ந்தேகத்தில்தான் கணவன் சொல்லுவது என்று தோன்றியது. சார், அது எங்கள் திறன் அல்ல.../ யூகிக்க முடிந்திருந்தால் அது உங்கள் திறனே.ஒரு காவல் துறை வேலை கிடைக்க கையூட்டாக லட்சங்கள் கை மாறுவதாகக் கேள்விப்படுகிறேன் நேர்மையானவர் எண்ணிக்கை மிகக் குறைவே என்று தோன்றுகிறது. ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி சார்/மேடம்

    பதிலளிநீக்கு

  20. @ துளசிதரன் தில்லையகத்து
    பறவை கூடு கட்டும் ஒரு புகைப்படத்தொகுப்பு என்னிடம் இருந்தது யாருக்கோ அனுப்பி இருந்தேன் பார்க்கவேண்டும் நீங்கள் கொடுத்த லிங்க் பார்த்தேன் தெரியாத விஷயங்கள் நிறையவே இருக்கிறது. வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  21. @ கீதா சாம்பசிவம்
    திருடனுக்கு உரசிப் பார்க்க நேரம் ஏது.? வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  22. @ வெங்கட் நாகராஜ்
    நிஜம் போன்ற கற்பனை / பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  23. தான் மாட்டிக் கொள்வோம் என்பதில் அந்த இன்சு உஷாராய் இருந்திருக்க வேண்டாமா :)

    பதிலளிநீக்கு

  24. @ பகவான் ஜி
    அந்த இன்சு எங்கே மாட்டிக் கொண்டார் ? வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  25. இப்படியெல்லாம் கூட நடக்குமா? ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு

  26. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இந்தக் கதை புனைவுதான் என்றாலும் நடக்கக் கூடியதே( பின்னூட்டங்களைப் பார்க்கவும்) வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  27. கதை என்பதே கற்பனையாக ஒன்றையோ அல்லது ஒரு நிகழ்வையோ சுவைபட சொல்வதுதான். நீங்கள் நடப்பதை சுவைபட சொல்லியிருக்கிறீர்கள். பதிவை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  28. சாதுர்யங்கள் சமயத்தில் கை கொடுக்கும்..

    கதை தான் என்றாலும் - நகை கிடைத்த வரைக்கும் சந்தோஷம்..

    பதிலளிநீக்கு

  29. @ வே.நடனசபாபதி
    வருகைதந்து படித்துப் பாராட்டியதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  30. இதை நான் ஜோக்கா எழுதி இருந்தேன்! உண்மை சம்பவமா?

    பதிலளிநீக்கு

  31. @ துரைசெல்வராஜு
    நகை கிடைத்தது சந்தோஷமே. ஆனால் அடிவாங்கியது...... வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  32. @ தளிர் சுரேஷ்.
    நீங்கள் எழுதிய ஜோக் நான் படிக்கவில்லை. இதுஒரு கற்பனைக் கதை. உங்கள் ஜோக் சுட்டியைத் தாருங்களேன் நன்றி

    பதிலளிநீக்கு

  33. @ பரிவை சே.குமார்
    வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  34. @ அப்பாதுரை
    வந்து ரசித்ததற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு