Monday, July 13, 2015

பெங்களூருவில் ஒரு துபாய்....?


                    பெங்களூருவில் ஒரு துபாய்....?
                    ---------------------------------------------


வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குப் போகும் தொழிலாளிகள் பலரும் தங்கும் இடம் பரிதாபத்துக்குரியது ஷெல்டர்கள் என்று  ஊருக்கு வெளியே கட்டி விட்டு அதில் தொழிலாளிகள் தங்க வைக்கப் படுகின்றனர். அதிகாலையில் அவர்களைக் கூட்டிப் போக வண்டி வரும் அதில் ஏற்றி பணி நடக்கும் இடத்துக்குக் கூட்டிப் போவார்கள் வேலை முடிந்தபின் கொட்டடியில் மீண்டும் அடைக்கப் படுவார்கள் இந்த மாதிரி ஷெல்டர்களைத் தொலைவில் இருந்து பார்த்திருக்கிறேன் உள்ளே இருக்கும் வசதிகள் பற்றி அதிகம் தெரியாது. வளை குடா நண்பர்கள் இது பற்றிய செய்திகளைப் பகிரலாம்
இதை நான் பதிவிட முக்கியக் காரணம் பெங்களூரிலும் இது மாதிரி ஷெல்டர்கள் வந்து விட்டன போலும் வளைகுடா நாடுகளில் அயல் நாட்டினர் பணிக்குச் செல்கின்றனர்/ பெங்களூர் மாதிரியான இடங்களில் அயல் மாநிலத்தவர் பணிக்கு வருகின்றனர். ஏறத்தாழ அதே நிலை. பணிக்குக் கூட்டிப்போக வண்டிகள் வருவதில்லை இங்கே சாலை விஸ்தீரணப் பணிகள் மெட்ரோ ரயில்பாதைப் பணிகள்  அடுக்கு மாடிக்கட்டிடப் பணி போன்றவற்றில் இவர்கள் ஈடு படுகின்றனர்.  என் வீட்டின் முன் இது மாதிரியான ஷெல்டர்கள் பார்த்ததும் இதை எழுதத் தோன்றியது. பெங்களூரு இன்னொரு துபாயா.?


பெங்களூரில் துபாய்.  ?
புகைப் படத்தில் காணும் ஷெல்டெர்கள் என் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து எடுத்தது

பெங்களூருவில் துபாய் இன்னொரு காட்சி
(டாக்டர் கந்தசாமி ஐயா எடுத்தபடம்)

36 comments:

 1. சார்! இதே போன்று இப்போது சென்னையிலும். இந்த வடமாநிலத்தவர் ரயிலில் பிரயாணம் எப்படிச் செய்கின்றனர் என்று எங்கல் தளத்தில் கூட பதிவு போட்டிருந்தோம். (கீதா எழுதியது).

  அதே போல கேரளாவிலும் இவர்கள் இப்படித்தான் ஊருக்கு வெளியே போட்டுக் கொண்டு வாழ்கின்றார்கள். சில இடங்களில் கூடாரம் போல்.

  சிங்கப்பூரில் சாலைத் துப்புரவு, கட்டிடங்கள், டாய்லெட், கழிவறைகள் சுத்தம் செய்தல் போன்றவற்றிற்குச் செல்லும் வெளிநாட்டு மக்களை ஊருக்கு வெளியே தொலை தூரத்தில் ஷெல்டரில் (துபாய் போன்றுதான்.../வளைகுடா நாடுகளில் தான்) விட்டுவிடுகிறார்கள். இரவில் மட்டுமே இவர்கள் நகரத்திற்குள் வர முடியும். வண்டி அனுப்பப்ப்டும். பின்னர் அவர்கள் விடியும் முன் அந்த வண்டிகளில் மீண்டும் ஷெல்டருக்கு கொண்டுவிடப்படுகின்றார்கள். அவர்கள் அப்படி அந்த வண்டியில் செல்லாமல் நகரத்தில் தங்கிவிட்டால் தண்டிக்கப்படுவதாகவும் கேள்விப்பட்டதுண்டு. அது சரியா தவறா என்று தெரியவில்லை சார்.

  ReplyDelete
 2. நாளடைவில் இவை நிரந்தரமாகவும் ஆகிவிடலாம். திரு துளசிதரன் சிஙகப்பூர்த் துப்புரவுத்தொழிலாளிகள் குறித்துச் சொல்லி இருப்பது ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் தருகிறது! :(

  ReplyDelete
 3. இதுபோன்று சென்னையிலும் பல இடங்களில் வசிக்கிறார்கள்

  ReplyDelete
 4. இங்கே - குவைத்திலும் இதே மாதிரி ஒரு இடம் உள்ளது..

  ReplyDelete
 5. வெளி மாநிலத்தவர் வேலை தேடி பல இடங்களுக்கு செல்கின்றனர். அவர்களுக்காக இந்த மாதிரி ஷெல்டர்கள் அவர்களை அழைத்து வருபவர்களால் அமைக்கப் படுகின்றது. சென்னையில் கூட உண்டு. ஏன் எங்கள் ஊரிலும் ஓர் செங்கல் தொழிற்சாலையில் தங்கும் வட இந்திய வாலிபர்களுக்கு இதுமாதிரி கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 6. @ துளசிதரன் தில்லையகத்து
  வளைகுடா நாடுகளுக்குப்போய் சம்பாதிப்பவர் நிலை குறித்து பலரும் அறிவதில்லை. சம்பாதிப்பவர்கள் படும் துயரை ஓரளவு காட்டவே இப்பதிவை எழுதினேன் சிங்கப்பூரிலும் இப்படியா. தெரியாதது,

  ReplyDelete

 7. @ கீதா சாம்பசிவம்
  ஒரு எக்ஸ்ப்லாய்ட்டேஷனைக் காட்டவே எழுதியது. நிரந்தரமாக வாய்ப்பில்லை. வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 8. @ ஸ்ரீராம்
  ஆம் பரிதாபம்தான். ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை. வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 9. @ mnn
  அவர்களிடம் இருந்து கற்றதுதானோ. முதல் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 10. நிலத்தை கையகப் படுத்திக் கொள்ள
  துணிந்து விட்டார்களோ?
  இதுபோன்ற தற்காலிக இருப்பிடம்
  நிரந்தர இருப்பிடமாக மாறும்!
  வாக்குக்கு வலிமை இருந்தால்?
  மனித நேய பதிவினை
  வழங்கியமைக்கு நன்றி அய்யா!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete

 11. @ துரை செல்வராஜு
  நான் துபாய் சென்றிருந்தபோது பார்த்தது. பணிக்குச் செல்லும் தொழிலாளிகள் பற்றிய செய்திகளை கில்லர்ஜியிடம் எழுதக் கேட்டிருந்தேன் அங்கிருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்தானே. கல்ஃப் நாடுகளில் நம் தொழிலாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால் இங்கிருப்போருக்கு அது பற்றிய கவலை இல்லை. எனக்குத் தெரியாத பல செய்திகள் அங்கிருக்கும் உங்களைப் போலுள்ளோருக்குத் தெரிந்திருக்கலாம் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 12. @ தளிர் சுரேஷ்
  ஏறக்குறைய அடிமைகள் நிலை அவர்களுக்கு. கருத்துப்பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 13. @ யாதவன் நம்பி
  அடிமைகள் நிலத்தைக் கையகப் படுத்த முடியுமா ஐயா. பதிவினை மீண்டும் படிக்க வேண்டுகிறேன் நன்றி.

  ReplyDelete
 14. தில்லியிலும் ஒரு சமயம் இப்படிப் பார்த்திருக்கேன். அடுக்குமாடி வளாகங்கள் கட்டும் இடங்களுக்கு அருகில் இவர்களுக்கு ஷெல்ட்டர்கள் உண்டு.

  http://thulasidhalam.blogspot.co.nz/2010/07/blog-post_19.html

  இந்தப்பதிவில் தில்லி படம் ஒன்னு போட்டுருக்கேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள். அது அஞ்சு வருசத்துக்கு முன்பு.

  ReplyDelete
 15. இங்கு கூட உண்டு... என்ன செய்ய... ஒரு சான் வயிற்றுக்கு... வயிற்றுகளுக்கும்...

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete

 18. @ துளசி கோபால்
  அந்தமாதிரித் தங்கும் இடங்களுக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன் அடுக்கு மாடிக் கட்டிடத் தொழிலாளிகள் கட்டும் கட்டிடத்துக்கு அருகில் இருப்பது புரிந்து கொள்ளமுடிகிறது. நான் துபாயை ஒப்பிட்டு எழுதியதுஅங்கிருப்பவர்களின் நிலைபோல் இங்கும் வருகிறதோ என்னும் ஆதங்கத்தில்தான் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 19. @ திண்டுக்கல் தனபாலன்
  ஒரு சாண் வயிற்றுக்குப் பாடுபடும் குடும்பத் தலைவன் நிலை வீட்டில் இருப்போருக்குத் தெரிகிறதாய் இல்லையேவருகைக்கு நன்றி டிடி.

  ReplyDelete
 20. @ கில்லர்ஜி
  நான் சொல்ல நினைப்பது புரிகிறது என்றே எண்ணுகிறேன் உள்ளது உள்ளபடி சீக்கிரம் எழுதுங்கள் ஜி/ நன்றி.

  ReplyDelete
 21. சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன
  மூன்று வேளை உணவிற்கும் உடுக்கும் உடைக்கும்
  இப்படியெல்லாம் பாடுபட வேண்டியுள்ளதே
  வேதனைதான் மிஞ்சுகிறது ஐயா
  பணக்காரர்கள் மேலும் பணகாரர்களாகிக் கொண்டே இருக்கிறார்கள்
  ஏழைகள் மிகவும்ஏழைகளாகவே ஆகிக் கொண்டிருக்கிறார்கள்

  ReplyDelete
 22. நகர வாழ்க்கையா? நரக வாழ்க்கையா? வேதனையின் விளிம்பில் இருப்பவர்களைப் பற்றிய பதிவு மனதை நெகிழவைத்தது.

  ReplyDelete
 23. நாளடைவில் இது நிரந்தரமாக்கப்படுவதோடு, தொழிலாளர்களின் குடும்பங்களும் குடியேறி மிகச் சிறிய இடத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அளவுக்கதிகமான குடும்பங்கள் வசிக்கத் தொடங்கும் போது, அவை சேரிகளாக பரிணமிக்கும். இதுவே தலைமுறை தலைமுறையாக தொடரும் போது அதுவே சாதிகளாக, தீண்டத்தகாதோராக மாற்றப்படும். மிகப் பழங்காலங்களில் வசதியானவர்கள் வசதியற்றவர்களையும், தொழிலாளர்களையும், ஆதிவாசிகளையும், மாற்று மதத்தினரையும் ஒதுக்கி வைத்துத் தான் இன்று சாதிகள் பரிணமித்து நம்மை அரிக்கின்றன, நவீனக் காலத்தில் சாதியத்தை விழுங்கிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றன பெருநகரங்களில் புதிய சாதியத்தையும், ஒதுக்குதல்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

  ReplyDelete

 24. @ கரந்தை ஜெயக் குமார்,
  பாடுபட்டு உழைப்பது வீட்டில் இருப்போர்க்குத் தெரிவதில்லை. அயலூரில் அயல் நாட்டில் நிறையப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றே எண்ணுகின்றனர். உழைப்பவர் உண்மை நிலை புரிவதில்லை. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 25. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  அவர்கள் வேதனை பலருக்கும் புரிவதில்லை. அயல் நாட்டில் வேலை என்றால் அதிகப் பணம் என்றே நினைக்கிறார்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 26. @ இம்ரான் நவ்தீப், அயல் நாடுகளில் நிகழ்வதை ஒப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறேன் இந்தியாவில் நீங்கள் சொல்லும் சாத்தியக் கூறுகள் அதிகம் முதல் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 27. இதுபோன்ற கொட்டடிகள் சென்னையிலும் உண்டு. புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறதா என்று அரசு தான் ஆய்வு செய்து அபப்டி செய்து தரப்படாத நிறுவனங்கள் பேரில் மேல் அந்தவடிக்கை எடுக்கவேண்டும். செய்வார்களா என்பது கேள்விக்குறிதான்.

  ReplyDelete
 28. பரிதாபத்துக்கு உரிய வாழ்க்கை.

  ReplyDelete

 29. @ வே.நடனசபாபதி
  நான் இந்தப்பதிவை எழுதக் காரணமே துபாய் போன்ற இடங்களில் இங்கிருந்து வேலைக்குப் போகும் தொழிலாளிகள் படும் அவஸ்தையைக் கண்டுதான் அங்கு வேலைக்குப் போனால் முதலில் உங்கள் பாஸ்போர்ட் வாங்கி வைத்துக் கொள்ளப் படும். பின்னர் ஏறத்தாழ அடிமை நிலைதான் பணத்துக்காக வேலைக்குப்போவோர் பற்றிய நம் அபிப்பிராயங்கள் தவறோ என்று தோன்றுகிறது. நம் நாட்டில் என்றால் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு விடலாம். வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 30. @ பரிவை சே.குமார்
  உங்கள் ஊரில் நிலைமையை தெளிவித்து எழுதலாமே. வளைகுடா நாடுகள் பற்றி என்னைவிட உங்களுக்கு அதிகம் தெரியலாம் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 31. இது போன்ற நிகழ்வுகள் ஆங்கிலேயர் காலத்திலேயே இருந்தது. தேயிலைத் தோட்டத்திற்கும் கரும்புத் தோட்டத்திற்கும் கொத்தடிமைகளாகச் சென்ற தமிழ் கூலிகள் இவ்வாறு தான் லயன் வீடுகளில் தங்க வைக்கப்பட்டார்கள். அன்று வெள்ளை சாயபு செய்ததை இன்று பழுப்பு சாயபுகள் செய்கிறார்கள்.

  --
  Jayakumar

  ReplyDelete
 32. இந்தப் பதிவை முதலிலேயே படித்து விட்டேன். வேலை மும்முரத்தில் (ரிடைர்டு ஆனபிறகு அப்படி என்ன வேலை என்கிறீர்களா? வெட்டி ஆபீசர் வேலைதான்.) பின்னூட்டம் போட மறந்து விட்டேன். ஜிஎம்பி கழுத்தைப் பிடித்து விட்டார்.

  என் போட்டோக்களுக்கு விளம்பரமும் கொடுத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி.

  ReplyDelete

 33. @ jk22384
  முதல்(?) வருகைக்கு நன்றி. இவை புரிந்து கொள்ளப்படாமலேயே அயல் நாட்டில் வேலை என்று பூரிப்படைபவர்கள் எத்தனையோ பேர்.

  ReplyDelete

 34. @ டாக்டர் கந்தசாமி
  நான் எங்கே ஐயா கழுத்தைப் பிடித்துவிட்டேன். நீங்கள் பார்த்தீர்களோ என்ற சந்தேகம். இப்போது தீர்ந்து விட்டது.

  ReplyDelete