செவ்வாய், 14 மே, 2013

நாராயணீய பாராயணம் - குருவாயூர் பயணம்.





நாராயணீயம் பாராயணம்குருவாயூர் பயணம்.
( சிலாட்காகப் பிவுலுக்கு வுடியில்லை. அில் ஒரு காரம் நான் ஊரில் இல்லு. மற்றொரு காரம் என் கினியில் ups  செயிழந்து விட்டு சிசெய்ு இோ மீண்டும்)


கண்டேன் நான் கண்ணனை
கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்
 
கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )

விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )

மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )

சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )


அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )

உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )

குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)


பாகவதசாரம்என்றும் அழைக்கப்படும் நாராயணீயம் எனும் நூல் 1560-ம் ஆண்டு மேலப்பத்தூர் எனும் ஊரில் பிறந்த நாராயண பட்டத்திரி என்பவரால் பாடப் பட்டது. வாத நோயால் உழன்றவர் நாராயணீயம் பாடி நலம் பெற்றார் என்றும் தெரிகிறது. நூறு தசகங்கள் கொண்ட நூல் நாராயணீயம் ஒவ்வொரு தசகத்திலும் பத்துக்குக் குறையாத பாட்டுக்கள், மொத்தம் 1034 கொண்டது.

பிரும்மம் உண்மையானது. முழுமையான ஆநந்தம் அளிப்பது.அறிவைத் தருவது.ஒப்பற்றது. காலங்கடந்தது. அறம், பொருள் இன்பம் வீடு அளிக்கவல்லது. மாயையின் செயல்களில் இருந்து விடுபட்டது. அதுவே குருவாயூரில் கண்களுக்குப் புலனாகும்படி விளங்குகிறது என்று

பகவானின் இயல்பிலும் பெருமையிலும் தொடங்கி கேசாதி பாதம் வரை போற்றி வணங்கி முடிக்கும் வண்ணம் அமைந்துள்ளன நாராயணீயம் பாடல்கள். நாராயணனின் பெருமைகளைப் பாடுவதாலும் நாராயண பட்டத்திரியால் இயற்றப்பட்டதாலும் நாராயணீயம் என்ற பெயரோ.?

இந்த நாராயணீயம் பாராயணம் செய்தால் நலமுண்டாகும் என்னும் நம்பிக்கை பக்தர்களிடையே காணப் படுகிறது. இந்த நாராயணீயம் பற்றிய எந்த விஷயமும் தெரியாமலேயே என் மனைவி 40 ஆண்டுகளுக்கு முன் இந்த நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். சம்ஸ்கிருதத்தில் உள்ள இதனை உச்சரிப்புப் பிறழாமல் படிக்க வடமொழி அறியாதவர்களுக்கு பயிற்சி மிகவும் தேவை.


இங்கு நாங்கள் இருக்கும் பகுதியில் “ அகில இந்திய விஷ்ணு சகஸ்ரநாம மண்டலியில்அங்கம் வகிக்கும் ஐயப்பன் விஷ்ணு சகஸ்ர நாம மண்டலியின் குழுவினர், வாரம் ஒரு முறை குழுவாக இதனைக் கோயிலில் பாராயணம் செய்கின்றனர். இதே பாராயணம் அந்த குருவாயூரப்பன் முன்னிலையிலும் செய்ய விழைந்தனர். பல நாட்கள் முன்பாகவே திட்டமிட்டு அதற்காகப் பாடுபட்டு பாராயணம் செய்தும் முடித்தனர்.

நாராயணீயம் பாராயணம் பற்றிக் கூறும்போது நான் இரண்டு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் மூத்த பேரனுக்கு பெயர் சூட்டலின் போது தேர்ந்தெடுத்த பெயர் “விபு”.என்பதாகும். நாராயணீயத்தில் ஆங்காங்கே ஆண்டவனைக் கூப்பிடும் முறையாக இது வருகிறது. இரண்டாவதாக அவதாரக் கதைகள் பற்றிப் பதிவிட்டுக் கொண்டிருந்த நான் கிருஷ்ணாவதாரக் கதையை “ கிருஷ்ணாயணம்என்று எழுதி இருந்தேன். கண்ணனின் அவதாரத்தில் நிகழ்ந்த  பல சம்பவங்களின் நிகழ்வுகளைக் கோர்வையாகக் கூற எனக்கு நாராயணீயமே வழிகாட்டியாக இருந்தது.


குருவாயூரில் அண்மையில் ‘சம்பூர்ண நாராயணீய நித்ய பாராயண மண்டபம்என்று நிறுவி இருக்கிறார்கள். கிழக்கு நடையின் எதிரே சற்று வலப் பக்கத்தில் அமைந்திருக்கிறது. அங்குதான் இந்தப் பாராயணம் நடைபெற்றது.

பெங்களூரில் இருந்து சுமார் 40 பெண்கள் ( அனைவரும் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் ) ட்னமிழ் மலையாள கன்னட மொழியினர் சேர்ந்து ஒருங்கிணைந்து பாராயணம் செய்தனர். மேடையில் கிருஷ்ணனின் உருவப் பொம்மைகள் சுமார் 20 க்கு மேல் வரிசையாக வைக்கப் பட்டிருந்தன. கன்னட வழக்கப்படி பஞ்சு மாலைகளும் சார்த்தப் பட்டன. கண்ணனுக்குப் படைக்க என்று பலவகை இனிப்பு வகைகளுடன், சீடை முறுக்கு போன்ற பல்வேறு உணவு வகைகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. பூவையர்கள் பாராயணம் செய்பவர்கள் என்று ( வாயனக் காரர்கள் என்று மலையாளத்தில் கூறுகின்றனர் )அடையாளப் படுத்திக் கொள்ளப் ப்ரௌன் நீற சேலை உடுத்தி இருந்தனர். காலை சுமார் 6 மணிக்குத் துவங்கி இடைவிடாப் பாராயணம் முடிய மதியம் 12 மணி ஆகிவிட்டது. 


குருவாயூருக்குப் பல முறைப் பயணம் செய்துள்ள நாங்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது மாற்றத்தைக் காண்கிறோம். முன்பு போல் கோயிலுக்குச் சென்று மனம் ஒன்றி தரிசனம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. தரிசனத்துக்கு வருபவர் எண்ணிக்கை எண்ணிலடங்காமல் போகிறது. அதுவும் உதயாஸ்தமனப் பூசை என்று இருந்து விட்டால் கோயிலின் நடையை அடிக்கடி மூடி விடுகிறார்கள். மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. 


குருவாயூரில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இந்த வெயில் காலத்தில் ஆண்கள் மேலாடையின்றி ஒருவரை ஒருவர் நெருக்கி . அப்பப்ப்ப்பா  ஒவ்வொரு முறையும் சலிப்பே அதிகம் உண்டாகிறது. கூட்ட நெரிசலில் பெண்கள் மேல் இடிக்கக் கூடாது என்று எண்ணினால் , அவர்களுக்கோ அந்தக் கவலை ஏதுமின்றி நம்மையே நெருக்கி யடித்து முன்னேறுகிறார்கள். அண்மைக் காலமாக வயதில் மூத்தவர்களுக்கென்று மாலையில் 4.30 முதல் 5.30 வரை தனி வரிசை இருக்கிறது. அதனால் கண்ணனின் தரிசனம் கிடைத்தது. குருவாயூரப்பனின் விக்கிரகம் சிறியது. சுமார் 30 அடி முன்னால் இருந்துதான் ஓரிரண்டு வினாடிகள் தரிசனம் செய்யலாம். இந்த முறை தரிசனம் செய்யும்போது எங்கும் நிறைந்த உருவம் இல்லாதவனை படங்களில் காணும் உருவத்தை நினைத்து வழிபட்டேன்.

கோயிலுக்கு கிழக்கு மேற்கு என்று இரண்டு வாசல்கள் உள்ளன. இந்த முறை என் மாமியார் கூறி இருந்தபடி மேற்கு வாயிலில் இருந்து ஸ்ரீகோயிலின் கர்ப்பக்கிருக விதானத்தையும் கொடி மரத்தின் உச்சியையும் ஒரே இடத்தில் காண முடிந்தது. இது இதுவரை நான் அறியாதது.

பெங்களூரில் இருந்து திருச்சூர் வந்தோம். அங்கிருந்து குருவாயூருக்கு பஸ் பயணம் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம். ரயில் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் குருவாயூர் செல்லும் பஸ் ஸ்டாப். பஸ் கண்டக்டர் ‘ கெயறூ, கெயறூஎன்று கூவியபடி பயணிகளை ஏற்றுகிறார். பஸ் கட்டணம் வாங்கிக் கொள்கிறார். டிக்கட் ஏதும் தரவில்லை. முன்பெல்லாம் ஒரு ஸ்டாம்ப் சைசில் டிக்கட் பெற்றது நினைவு. பயணிகள் ஏறியதும் “ப்ப்ப்ப்போஎன்று சப்தமிடுகிறார். சுமார் ஒரு மணி நேரப் பயணம். குருவாயூரில் எல்லாத் தங்கு மிடங்களிலும் செக் இன் டைம் மதியம்தான். தேவஸ்தான தங்குமிடங்களில் மதியம் மூன்று மணிக்கு செக் இன் டைம். இது ஒரு வியாபார உத்தியோ என்னவோ.!குருவாயூரில் மம்மியூர் சிவன் கோயில் , திருப்பதி வேங்கடாசலபதிகோயில்  பார்த்தசாரதி கோயில் என்று அருகே இருக்கின்றன, மம்மியூர் சிவ தரிசனம் செய்தால்தான் குருவாயூர் பயணம் முடிவடைவதாக ஒரு ஐதீகம். மம்மியூரில் சிவா விஷ்ணு சன்னிதானங்கள் உள்ளன. பார்த்த சாரதிக் கோயில் ஒரு தேரின் வடிவில் இருக்கிறது. தேரை குதிரைகள் இழுத்துச் செல்வதுபோல் இருக்கிறது..பெங்களூரில் இருந்து சென்றவர்கள் பலரும் சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள ‘திருப்ரையார் ராமர் கோயிலுக்கும் மூன்று நான்கு கி.மீ. தொலைவில் உள்ள யானைக் கொட்டடிக்கும் சென்று வந்தனர். 


பிருகஸ்பதியும்( குரு ) வாயுவும் சேர்ந்து கட்டியதால் குருவாயூர் என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள். 1970-ம் ஆண்டு குருவாயூர் கோயிலில் பயங்கரத் தீ விபத்து நடந்தது ஸ்ரீ கோயிலை சுற்றி இருந்த விளக்கு மாடம் முழுவதும் தீயால் சேதப் பட்ட போதும் ஸ்ரீகோயிலும் ஐயப்பன் வினாயகர் சன்னதிகளுக்கு எந்த சேதமும் நிகழவில்லையாம்.

கர்மயோகம் பக்தியோகம் ஞான யோகம் என்று ஆண்டவனை அடைய மூன்று மார்க்கங்களில் சாதாரணமானவர் அவரவர் கடமைகளைச் செய்து பலனை அவனிடம் விட வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஞான யோகம் சாதாரணர்களுக்குப் புரிவது கடினம். எது நடந்தாலும் அவனே சரணாகதி என்று அவன் தாள் பற்றுவதும் எளிது போல் தோன்றுகிறது. இருந்தாலும் ஒரு பதிவின் பின்னூட்டமாக நான் எழுதி இருந்தது இங்கும் தெரிவிக்கலாம் என்று தோன்றுகிறது. 


When trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though.
-----------------------------------------------------------
 


 


 


 





















.  

செவ்வாய், 7 மே, 2013

IGNORANCE IS BLISS.


                                     அறியாமை எனும் வரம்.
                                       --------------------------------  


இன்று மே மாதம் ஏழாம் நாள். சில நாட்கள் மறக்க முடியாதவை.அந்த நாளின் நினைவுகள் மனதில் மோதி ஒரு introspection-க்கு வழி வகுக்கிறது.என் இரண்டாம் மகன் பிறந்த நாள். நாங்கள் அப்போது BHEL  குடியிருப்பில் இருந்தோம்.அன்று விடியற்காலை சுமார் நான்கு மணி இருக்கும். என் மனைவி எழுந்து குளித்து அறையில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள். நான் விழித்துக் கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிரசவ நேரம் நெருங்கி விட்டது போல் தெரிகிறது என்றாள். நானும் என் நண்பனும் ( அவன் அப்போது என்னுடன் தங்கிக் கொண்டிருந்தான்)தயாராகி BHEL மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றோம். அது எங்கள் வீட்டில்

இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். நான் ஒரு புறமும் அவன் மறுபுறமும் நடந்து வர அவளைக் காலையில் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றோம். அவளது நிலையைப் பரிசோதித்த டாக்டர் அவளை நேராக லேபர் வார்டில் அட்மிட் செய்தார். அவ்வளவு தூரம் நடந்து வந்தீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அட்மிட் செய்த ஒரு மணி நேரத்தில் என் இரண்டாம் மகனைப் பிரசவித்தாள்.


இப்பொழுதும் ஏதாவது பேச்சின் ஊடே “ என்னைப் பிரசவத்துக்கு நடத்திச் சென்றீர்களே . ஏதாவது ஏடாகூடமாய் நடந்திருந்தால் “ என்று சொல்லிக் காட்டுவாள். என்ன செய்வது. ? சில நேரங்களில் IGNORANCE IS BLISS என்று நினைத்துக் கொள்வேன். அவளை அன்று லேபர் வார்டில் பார்த்தபோது அவள் முகத்தில் தெரிந்த வலியின் வேதனையைக் கண்டு  தீர்மானம் செய்தேன்..இதற்கு மேல் குழந்தைகள் வேண்டாம். இவள் இந்த அவஸ்தைக்கு இனி உள்ளாகக் கூடாதுஎன்று. இரண்டாவது குழந்தை பெண்ணாக இருக்க விரும்பினாலும் ஆணாகப் பிறந்தாலும் மூன்றாவது குழந்தை என்னும் பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை.

என்னவாயிருந்தாலும் அவளுக்கு என் அறியாமையை ( அலட்சியம் என்பாள் அவள் ) சுட்டிக்காட்ட அது ஒரு வாய்ப்பாக இருக்கிறது (இன்றும்)


ஞாயிறு, 5 மே, 2013

எனக்கொரு GIRL FRIEND வேண்டாம்....!



                      எனக்கொரு GIRLFRIEND வேண்டாம்.
                    --------------------------------------------------
(ிவில் கி என்று வுமிடத்ில் GIRLFRIEND  என்றினத்ுக் கொள்ளும் )



பாவையரைப் பார்க்கக் குற்ற உணர்ச்சி
ஏதும் வேண்டாம். எனக்கொரு காதலி வேண்டாம்

பாங்குடனே பரிசுப் பொருள் வாங்கவே செலவேதும்
செய்ய வேண்டாம்- எனக்கொரு காதலி வேண்டாம்

பரீட்சையில் தோல்வி தரும் சிந்தனையை
தேங்கச் செய்யும் எனக்கொரு காதலி வேண்டாம்

அவளது அன்பு என்றும் உளதோ எனவே
தவிக்க வைக்கும் எனக்கொரு காதலி வேண்டாம்.

அலைபேசியின் ஓசைக்காக ஏங்கி ஏமாந்து
நிற்க வைக்கும் எனக்கொரு காதலி வேண்டாம் 


செய்வனவற்றில் சரியெது குறையெது எனக்
குத்திக்காட்டும் எனக்கொரு காதலி வேண்டாம்.

உறவுகள் யாருக்கும் பரிசுகள் தந்து மகிழ்ந்தால்
இதம் தர மறுக்கும் எனக்கொரு காதலி வேண்டாம்.

நட்புகளின் எண்ணிக்கை கூட்டலாம் நேரம்
கழிக்கலாம் தடையாய் எனக்கொரு காதலி வேண்டாம்.

ஊக்கத்துடன் உடலம் பேணலாம் காதல் திரைப்படம்
காணக் கட்டாயப் படுத்த எனக்கொரு காதலி வேண்டாம்.

பொய் பேசிப் பாவம் கூட்டவேண்டாம் உள்ளதைக்
கூறத் தயங்க வைக்கும் எனக்கொரு காதலி வேண்டாம்.

இதந்தரும் இனிய கனவுகள் காணலாம் வீணே
பகல் கனவில் மூழ்கடிக்கஎனக்கொரு காதலி வேண்டாம்

நான் நானாக இருக்கலாம் நினைக்கு முன்னே
கண்ணீர் சிந்த எனக்கொரு காதலி வேண்டாம். 
 



வெள்ளி, 3 மே, 2013

திருமணங்கள் பலவிதம்.


                                    திருமணங்கள் பல விதம்.
                                    -----------------------------------



 நேற்று ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தோம். திருமணங்களில்தான் இப்போதெல்லாம் உறவுகளைப் பார்க்க முடிகிறது. பார்க்க முடிகிறது என்று சொல்வதைவிட அறிமுகப் படுத்திக் கொள்ள முடிகிறது என்பதே நிஜம்.மாமாக்களும் அத்தைகளும், சித்தப்பா சித்திகளில் ஓரிருவரைத்தவிர பலரும் பரகதி அடைந்து விட்டதால் அவர்களின் அடுத்த தலைமுறையினர், இன்று சீனியர்களாகி கூடியவரையில் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு அழைக்கிறார்கள் .அப்படி அழைக்கப் பட்ட ஒரு திருமணம் ஆரிய சமாஜ் முறைப்படி நடந்தது. மணமகன் வெள்ளையினத்தவன். வரனும் வதுவும் காதலித்து முறைப்படி பெற்றோர் அனுமதியுடன் ( கொடுக்காவிட்டால் நிற்கவா போகிறது.?) திருமணம் நடக்க அது காணச் சென்றிருந்தோம். மந்திரங்கள் சமுஸ்கிருதத்தில் கூறப் பட . உடனே அதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து விளக்கப் பட்டது. சடங்குகளின் காரணங்களும் விளக்கப் பட்டது.(வெள்ளைக்காரர்களுக்காக ஆங்கில மொழிமாற்றம்.!மற்றவர்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அனுமானம்.!) ஆனால் அந்த நிகழ்ச்சி அதன் solemnity இழந்து தமாஷாகவே அணுகப் பட்டது,போல் தோன்றியது. அங்கு மட்டுமல்ல, பெரும்பாலான திருமணங்களில் சடங்குகள் ஏதோ செய்ய வேண்டுமே என்பதுபோல் செய்யப் படுகின்றன.

முன் காலத்தில் இளவயதுகளில் திருமணம் செய்வித்தபோது, மணப்பெண்ணும் பையனும் ஒருவரை ஒருவர் நன்றாக விளையாட்டாக அறிந்துகொள்ள ஏற்படுத்தப் பட்ட நிகழ்ச்சிகளே, மாமன் தோளில் அமர்ந்து மாலை மாற்றுவதும், நலங்குக்கு தேங்காய் உருட்டி விளையாடுவதும், குடத்தில்கைவிட்டு மோதிரம் எடுப்பது போன்றவை இருந்திருக்க வேண்டும். அவற்றை ( just imagine the plight of those who shoukder the bride and groom  with their sixty kg weight.!) இன்று பார்க்கும்போது தமாஷல்லாமல் வேறென்ன.?

ஒரு திருமண விழாவுக்குச் சென்றபோது , முதலில் எனக்கு ஏதுமே விளங்கவில்லை. திருமணம் நடத்திவைக்கும் புரோகிதர் கழுத்தில் மாலையுடன் நின்றிருந்தார். கூட்டத்தில் நாங்கள் பின்னால் நின்றிருந்தோம். பிறகு பார்த்தால் புரோகிதரே பெண்ணுக்குத் தாலியும் கட்டினார். அப்புறம்தான் தெரிந்தது. அவர் புரோகிதர் அல்ல. அவர்தான் மாப்பிள்ளை என்று. .அந்த மாப்பிள்ளை இன்றைய ( அல்ல நாளைய ) சமுதாயத்தின் பிரதிநிதி என்று, குடுமி வைத்து, தாடியுடன் கடுக்கன் எல்லா அணிந்திருந்த அவர் ஒரு MNC-ல் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்று. Appearances can be deceptive  என்று விளங்குகிறது.நேற்றைய வழக்கங்கள் இன்றைய ஃபாஷனோ.?

இப்போதெல்லாம் திருமணத்துக்குச் சென்றால் உறவுகளுக்கு தேங்காய் வெற்றிலைப் பாக்குடன் வேறு பொருளும் அன்பளிப்பாகத் தருகிறார்கள். நாங்கள் நேற்று சென்ற திருமணத்தில் எங்களுக்கு ஒரு Bed spread-ம் இரு தலையணை உறைகளும் அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டது. Can you beat it.?

புதன், 1 மே, 2013

சிந்திக்க ஒதுக்குங்கள் சில நொடிகள்.


                               சிந்திக்க ஒதுக்குங்கள் சில நொடிகள்.
                               ---------------------------------------------------
கேள்விகள்.
-----------------


1) ஜானியின் தாயாருக்கு மூன்று குழந்தைகள்.மூத்தவன் பெயர் ஏப்ரல், இரண்டாமவன் பெயர் மே. மூன்றாவது குழந்தையின் பெயர் என்ன.?

2) எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிப்பதற்கு முன் உலகின் உயர்ந்த சிகரம் எது.?

3) இரண்டடிக்கு மூன்றடிக்கு நான்கடிக் குழியில் எவ்வளவு மண் இருக்கும்.

4) 1975-ல் ஜனாதிபதியின் பெயர் என்ன. ?

5) ஒரு ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வருபவனை நீ முந்தினால் நீ எந்த இடத்தில் இருப்பாய்?

6) ஒரு குடியானவனுக்கு ஒரு தளத்தில் மூன்று வைக்கோல் போற்களும் இன்னொரு தளத்தில் ஐந்து வைக்கோல் போற்களும் இருக்கின்றன. அவன் அவற்றை இன்னொரு தளத்தில் சேர்த்துவைத்தால் எத்தனை வைக்கோல் போற்கள் இருக்கும்.? 



7) ஒரு லாரி நிறைய பொருட்களுடன் ஒரு அண்டர்பிரிட்ஜ் அடியே செல்லவேண்டும். லாரியின் பொருட்களுடனான உயரம் பிரிட்ஜின் அடிபாகத்தை உரசும். அதே வழியில்தான் செல்ல வேண்டும். அன்லோட் செய்து போகக் கூடாது. என்ன செய்வீர்கள்.?


   பதில்கள் 
   --------


1)      ஜூன் அல்ல. ஜானிதான்.
2)      எவெரெஸ்ட்தான்.  அதை யாரும் கண்டு பிடிக்கவில்லை. அது ஏற்கனவே இருந்தது.
3)      குழியில் மண் ஏதும் இருக்காது. இருந்த மண் எடுத்ததால் குழியானது.
4)      இன்றுள்ள அதே பெயர்தான்.
5)      இரண்டாவது இடத்தில். இரண்டாமவனை முந்தித்தான் அந்த இடத்துக்கு வந்தாய்
6) ஒரே வைக்கோல் போற்தான் இருக்கும். முதலாவது, இரண்டாவது தளத்தில் இருந்த வைக்கோலை மூன்றாவது தளத்தில் சேர்த்து வைக்கிறான்.

7)  என்பேரக் குழந்தைகள் சொன்ன தீர்வு. லாரியின் நான்கு சக்கரங்களிலும் இருந்து கொஞ்சம் காற்றை இறக்கினால் லாரியின் உயரம் குறையும்.இடிக்காமல் போகலாம்.......! 
( சில சீரியசான பதிவுகளுக்குப் பிறகு ஒரு லைட்டான பதிவு...!)