ஞாயிறு, 5 மே, 2013

எனக்கொரு GIRL FRIEND வேண்டாம்....!



                      எனக்கொரு GIRLFRIEND வேண்டாம்.
                    --------------------------------------------------
(ிவில் கி என்று வுமிடத்ில் GIRLFRIEND  என்றினத்ுக் கொள்ளும் )



பாவையரைப் பார்க்கக் குற்ற உணர்ச்சி
ஏதும் வேண்டாம். எனக்கொரு காதலி வேண்டாம்

பாங்குடனே பரிசுப் பொருள் வாங்கவே செலவேதும்
செய்ய வேண்டாம்- எனக்கொரு காதலி வேண்டாம்

பரீட்சையில் தோல்வி தரும் சிந்தனையை
தேங்கச் செய்யும் எனக்கொரு காதலி வேண்டாம்

அவளது அன்பு என்றும் உளதோ எனவே
தவிக்க வைக்கும் எனக்கொரு காதலி வேண்டாம்.

அலைபேசியின் ஓசைக்காக ஏங்கி ஏமாந்து
நிற்க வைக்கும் எனக்கொரு காதலி வேண்டாம் 


செய்வனவற்றில் சரியெது குறையெது எனக்
குத்திக்காட்டும் எனக்கொரு காதலி வேண்டாம்.

உறவுகள் யாருக்கும் பரிசுகள் தந்து மகிழ்ந்தால்
இதம் தர மறுக்கும் எனக்கொரு காதலி வேண்டாம்.

நட்புகளின் எண்ணிக்கை கூட்டலாம் நேரம்
கழிக்கலாம் தடையாய் எனக்கொரு காதலி வேண்டாம்.

ஊக்கத்துடன் உடலம் பேணலாம் காதல் திரைப்படம்
காணக் கட்டாயப் படுத்த எனக்கொரு காதலி வேண்டாம்.

பொய் பேசிப் பாவம் கூட்டவேண்டாம் உள்ளதைக்
கூறத் தயங்க வைக்கும் எனக்கொரு காதலி வேண்டாம்.

இதந்தரும் இனிய கனவுகள் காணலாம் வீணே
பகல் கனவில் மூழ்கடிக்கஎனக்கொரு காதலி வேண்டாம்

நான் நானாக இருக்கலாம் நினைக்கு முன்னே
கண்ணீர் சிந்த எனக்கொரு காதலி வேண்டாம். 
 



17 கருத்துகள்:

  1. ஏன் இப்படி ஒரு வெறுப்பு காதல் மேல்.!!
    ஆனால் இக்கால இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதை சுட்டிக் காட்டும் கவிதை.

    பதிலளிநீக்கு
  2. (பதிவில் காதலி என்று வருமிடத்தில் GIRLFRIEND என்று நினைத்துக் கொள்ளவும்)

    இப்படி ஒரு காதலி இல்லையென்பதால்...
    கண்டிப்பாக இப்படி ஒரு காதலி வேண்டாம் தான்...

    பதிலளிநீக்கு

  3. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்.
    காதல் மேல் எனக்கு வெறுப்பு என்று யார் சொன்னது. காதலிக்க ஒரு maturity வேண்டும். அதை சற்றே வித்தியாசமாகச் சொன்னேன்.

    @ திண்டுக்கல் தனபாலன். இல்லையென்பதால் வேண்டாமா.? சரிதான்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான வேண்டாம் கவிதை. இதையே வேண்டும்னு மாத்தி எழுதினாலும் நன்றாக இருக்கிறது. (பாவையரைப் பார்க்கையில் குற்ற உணர்ச்சி வேண்டும் - எனக்கொரு காதலி வேண்டும்)

    பதிலளிநீக்கு
  5. காதலில் பக்குவம் வேண்டும். # வெற்றி பெற போராடுவதிலும், நிலைமை கை மீறி பிரியும் நிலையிலும்.

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு கவிச்சிந்தனை. இப்படியே எல்லா இளைஞர்களும் காதலி பற்றிய கருத்தினை ஒதுக்கி, படிப்பிலும் வாழ்க்கையில் நிலைபெறுதலிலும் கவனம் வைத்தால் வாழ்க்கை நலமாய் அமையும். பெண்களும் அமிலவீச்சுப் பற்றிய பயமில்லாமல் ஆனந்தமாய் வாழலாம்.

    ஆனால் என்ன செய்வது? இப்படிப்பட எண்ணமெல்லாம் காலந்தாழ்த்தியே வருகிறதே. :(

    ரசிக்கவைத்தக் கருவும் கவிதையும். எழுதிய விதத்தை இன்னும் ரசித்தேன். பாராட்டுகள் ஐயா.

    பதிலளிநீக்கு

  7. @ அப்பாதுரை.
    வேண்டும் என்று எழுதினால் எல்லா இடங்களிலும் பொருந்துகிறதா சார்.

    @ நாகசுப்பிரமணியம்.
    நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.காதல் பற்றி எழுதியதாலா.? உங்கள் பின்னூட்டமும் உங்கள் குட்டிக் கவிதை போல் இருக்கிறது.

    @ கீதமஞ்சரி.
    காதல் என்பது மிகவும் இயல்பான ஒரு விஷயம். ஆனால் மனமுதிர்ச்சி இல்லாமல் அல்லாடும் இளைஞர்களைக் குறி வைத்தே இது எழுதப் பட்டது.
    அனைவரது வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கட்டிய மனைவியைக் காதலிக்கலாமே!:))) பெண் நண்பி தான் வேணுமா என்ன? மனைவியையும் நண்பியாகக் கருதலாமே. ஆகவே காதலி வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. காதலுக்கு மெசூரிடி வேணும்னு சொல்றீங்க. ஆனால் காதலிக்கும் பெரும்பாலோரிடம் இல்லாதது அதுவே. :(((

    பதிலளிநீக்கு
  10. உண்மையச் சொல்லுங்க, இது உங்க கருத்தா இல்ல உங்க பேராண்டியோடதா?

    பதிலளிநீக்கு

  11. @ கீதா சாம்பசிவம்
    சொன்னதெல்லாம் மனைவி வருவதற்கு முன்.....!

    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    அவனுக்கு இன்னும் அனுபவம் இல்லை என்றே நினைக்கிறேன்.
    @ பாலசுப்பிரமணியம்
    என் பதிவுக்குப் பின்னூட்டமோ என்று பார்த்தால்.....பரவாயில்லை. நான் இருப்பது பெங்களூர் , கர்நாடகாவில். இங்கு வசூலிக்கப் படும் மின் கட்டண விபரம் உங்களுக்கு. தேவைப்பட்டால்.
    முதல் 30 யூனிட்டுகளுக்கு 2.50/யூனிட் 30--100 யூனிட்டுகளுக்கு
    3.70/ யூனிட் 101 ----200 யூனிட்டுகளுக்கு 4.85/ யூனிட்.
    200க்கு மேல் 5.60/ யூனிட். இது மே மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இது நகர்ப் புறத்தில் இருக்கும் வீட்டு உபயோகத்துக்கு... தமிழ் நாட்டில் எப்படி..?

    பதிலளிநீக்கு
  12. //(பாவையரைப் பார்க்கையில் குற்ற உணர்ச்சி வேண்டும் - எனக்கொரு காதலி வேண்டும்)//

    அருமை அப்பாஜி! ஆழ்ந்த ரசனை. ரசனை சூட்டுக்கோலாகவும் சுட்டது.

    பதிலளிநீக்கு
  13. நிச்சயமா காதலி வேண்டவே வேண்டாம்..

    அருமை உண்மையாய் உண்மையை ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    ஐயா

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. அன்பின் ஜி எம் பி ஐயா - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் . காதல் காதலி பற்றிய பதிவு - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

  17. @ சீனா ஐயாவுக்கு வணக்கம் . வலைச்சர ஆசிரியர் நீங்கள் வலைச்சர அறிமுகம் மூலம் வந்ததற்கு நன்றி. வலைச்சர அறிமுகம் மூலம் வருவதென்றால் நீங்கள் பலமுறை வந்திருக்க வேண்டுமே.

    பதிலளிநீக்கு