AAADD- என்றால் தெரியுமா. ?
---------------------------------------
பொழுது விடிகிறது, இன்னொரு
நாளைக் காண உயிர்க்கிறேன்.
இன்று நான் திட்டமிட்டுச்செய்ய
வேண்டிய பணிகளின் பட்டியல்
என் மனக்கண்முன் விரிகிறது.
என் சிறு தோட்டம் நீரின்றி காய்கிறது
பூவாளியில் நீரை ஏற்றி இரைக்கப்
போகும்போது அழுக்கடைந்த கார் காண
அதை முதலில் கழுவலாம் என்று தோன்ற
அருகில் செல்லும் போது தென் படுகிறது
வீட்டின் முன் மாட்டியிருக்கும் தபால் பெட்டி.
காரைக் கழுவும் முன் தபாலை எடுத்துப்
ஹாலில் மேசை மேல் கார் சாவியை வைத்து
ஃப்ரிட்ஜிலிருந்து ஃபான்டா பாட்டிலைத் திறந்து
ஒரு வாய் அருந்தி அதை அருகில் வைத்து
கடிதங்களைப் பிரித்துப் பார்க்க அவை
குப்பைத் கூடையில் போக வேண்டியது என்று
அதைப் பார்க்க அதுவும் நிரம்பி இருக்க –அதைக்
காலி செய்து குப்பைத் தொட்டியில் போட
வெளியே போக வேண்டும் போகிறபோதே
அருகில் இருக்கும் கியோஸ்கில் மின் கட்டண்ம்
செலுத்தினால் ஒரு வேலை முடியும். அதற்கு முன்
அட்டைப் படத்தில் கவர்ச்சியுடன் சிரிக்கும் அழகியைத்
தாங்கி வந்திருக்கும் வாராந்திரி கண்ணில் பட அதை
எடுத்துப் படிக்கக் கண்ணாடி தேவை அதை வைத்த
இடம் மறந்து தேட மேசை அறையில் கார் சாவி கண்டதும்
காரைக் கழுவ நினைத்ததும் நினைவுக்கு வர
அங்கே போனால் பூவாளி நீரும் குப்பைக் கூடையும்
என் முன்னே இளிக்க ஆயாசத்துடன் ஃபாண்டா பருக்
எண்ணி எடுத்தால் அதுவும் குளிர் விட்டுப் போய் –ச்சே!
எந்தவேலையும் திட்டமிட்டபடி நடப்பதில்லையே
என நான் சிந்திக்கும் போது மனசு குரல் கொடுக்கிறது
”டேய்.! உனக்கு இருப்பது AAADD யின் அறிகுறிகள்”
( AAADD என்றால் AGE ACTIVATED ATTENTION DEFICIT DISORDER.)
.
.
..
ஹாஹாஹா, இதை ஒரு தரம் தான் அனுப்பி இருக்கீங்க/ இது சகஜமாய் எல்லாருக்கும் நேர்வது தான். :))))
பதிலளிநீக்குAAADD யின் அறிகுறிகள் என்பது இதுதானா...? நன்றி ஐயா...
பதிலளிநீக்குஇனிமேல் எனக்கு மறந்துபோச்சு என்று சொல்ல மாட்டேன். ஸ்டைலாக AADD என்று சொல்ல வேண்டும் .
பதிலளிநீக்குAADD எனபதின் விரிவாக்கத்தை மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டுமே .
ஒரு A வை மறந்துவிட்டு கருத்து எழுதியிருக்கிறேன்.
பதிலளிநீக்குAAADD syndrome தான் காரணம் என்று நினைக்கிறேன்.
AAADD சிண்ட்ரோம் பற்றி இப்போதுதான் அறிகிறேன். எவ்வளவு பெரிய விஷயம்... எளிமையாய் விளக்கி விளங்கவைத்துவிட்டீர்கள். நன்றி ஐயா.
பதிலளிநீக்குஅனுபவப் பகிர்வுகள்..
பதிலளிநீக்குமறக்காமல் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்...
அருமையாக மறக்கமுடியாதபடி
பதிலளிநீக்குவிளக்கிச் சென்றது மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு@ Geetha Sambasivam
@ Dindugal Dhanapalan
@ Rajalakshmi Paramasivam
@ Geetha manjari
@ Rajarajesvari
Thank you all for visiting and the comments. This should not be mixed up with Alzeimar problems.
AAD தெரியும். நிஜமாகவே AA உண்டா? எனக்கு MAADD இருப்பதாக அடிக்கடி வசவு விழும். (marriage activated)
பதிலளிநீக்குஅப்பாதுரை, இன்றைய காலையை சிரிக்க வைத்து ஆரம்பித்து வைத்ததுக்கு நன்னி ஹை! (எங்கள் ப்ளாகிலும் உங்கள் பின்னூட்டம் சிரிக்க வைத்தது!) இங்கேயும். :)))))))
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ரமணி
மறதி பற்றி எழுதிய பதிவு மறக்க முடியாதபடி விளக்கிச் சென்றது என்று எழுதிப் பாராட்டியதற்கு நன்றி ரமணி சார்.
@ அப்பாதுரை
அது AAADD தான். உங்களை வைய்யவும் ஆள் இருக்கிறதா. ?
@ கீதா சாம்பசிவம். மீண்டும் வந்ததுக்கு நன்றி.
முதுமையின் தன்மையை எளிமையாய், பெரிய செய்தியை, புரிந்து கொள்ளக் கூடிய வகையில், விளக்கியமைக்கு நன்றிஅய்யா. இதன் பெயர்தான் அனுபவம்.
பதிலளிநீக்குஇது எல்லா வயசுலயும் நிகழ்கிற சங்கதி ஆச்சே
பதிலளிநீக்குமறதிக்கு வயது இல்லை என்று ஆகி விட்டது.
பதிலளிநீக்குபெரியவர்கள் இடதுகையில் வைத்துவிட்டாய் அது தான் மறந்து விட்டது என்பார்கள் எந்தகையில் வைத்தாலும் சில நேரங்களில் தேடும்படி ஆகிவிடுகிறது.
நன்றாக மறதிப்பற்றி சொல்லிவிட்டீர்கள்.
//This should not be mixed up with Alzeimar problems.//
பதிலளிநீக்குNot at all! Alzeimar is a serious problem. This is nothing! :)))))
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்.
“ முதுமையின் தன்மையை....../ “
இது முதுமை சம்பந்தப் பட்டது போல் தோன்றினாலும் 'attention deficient disorder" என்பதே சரியாகும். இன்றைய The Hindu தினசரியில் கிரேக் சாப்பல் கிரிக்கட்டிலும் இது எப்படி என்று விளக்கி இருக்கிறார்.
பதிலளிநீக்கு@ ரிஷபன்
சரியாகச் சொன்னீர்கள். ஆனால் வயது ஏற ஏற இது அதிகமாகத் தெரிகிறது.
@ கோமதி அரசு.
’/ பெரியவர்கள் இடது கையில் வைத்து விட்டாய் ....../ இது எனக்குப் புதிசு.
@ கீதா சாம்பசிவம்
வயது முதுமை மறதி என்றெல்லாம் கூறும்போது அல்ஜிமர் -உடன் தொடர்பு ஏற்படுத்தி கவலைப் படக்கூடாது என்பதற்கே எச்சரிக்கையாகக் கூறினேன். நான் பொதுவாக என் மக்களிடம் நாம் எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ அதை மறக்க வாய்ப்பு அதிகம் என்று சொல்லுவேன். நன்றி.
நாம் எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ அதை மறக்க வாய்ப்பு அதிகம்
பதிலளிநீக்குஇது தான் நூறு சதவிகித உண்மை.
உண்மைதான் ஆனால் வயதாகும்போது வரும்மறதிக்கு என்ன சொல்ல
பதிலளிநீக்குஆமாம். எல்லோர்க்கும் நேர்வதுதான் இது. படித்தேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குஒரு சிறு மாற்றம் வயதாகிறவர்களுக்கு அநேகமாக நேரலாம்
பதிலளிநீக்கு