Thursday, May 23, 2013

கேசாதி பாதம் - கண்ணன் - காதலி


                            வர்ணனைகள் --ஒரு ஒப்பீடு
                           -----------------------------------------அண்மையில் குருவாயூர்க் கண்ணனைக் கேசாதி பாதம் வரை வர்ணித்து எழுதினேன். அப்படியே என் காதலியை வர்ணித்து எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்ற எழுதியது கீழே.என் இருபதுகளில் எழுதியதும் அடியில் . எழுத்தில் நடையில் வித்தியாசங்கள் தெரிகிறது அல்லவா.?ஏன்.?  
வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில்
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில்
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாடஎனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென்
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும்
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும்
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில்
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.
( என்னுடைய இருபதுகளில் அன்று நான் காதலில் எழுதியது இதோ)

வெண்ணிற மேனியாள் எனக்குமிளிரும் நீலவானம் சரிதுகில்
பன்னிறம் தெரியப் பதித்த மணிகள்
மின்னும் தாரகை நல்லணிகலன்
எனக்கு நிகர் யாரே இப்புவிமீதே எனவே
உன்னாது இயம்பும் மதியும்--கிளியே
கறை துடைத்த மதிவதனம் அவள்
மேனிக்கணியும் பட்டோ மற்றோ பொலிவுறும்
பேருண்மை- ஆங்கு
இதழிலோடும் புன்னகையும் நன்னகையாம்
வண்டென விரைந்தாடும் மலர் விழிகளும்
கண்டதும் கவி பாடத் தூண்டும்என்
காதல் ஜோதி.!கன்னல் மொழியினள்அவள்
காண்பார் கண் கூசும் பேரெழில்கண்டும்
செறுக்கொழிந்தாளில்லைஏன்.?
சிந்தை கவர்ந்த என் பூங்கொடியாள் தன்
நடை,குரல், அதரம் கண்டும்-ஈண்டு
தோகை மயிலின் களிநடம் குறைந்திலை
கானக் குயிலின் இன்னிசைக் குறைந்திலை
கொவ்வைக் கனியதன் செம்மையும் குறைந்திலை-ஏன்?
கட்டழகன் எந்தன் கொட்டமடக்க
வட்டமிடும் கழுகன்ன சுற்றிவரும்
நான்முகன் திட்டமெலாம் தரைமட்டம்
இயற்கையின் படைப்பினில் எனதவள் சிறந்தவள்
கண்கூடு .தேவையில்லை அத்தாட்சி இதற்கு
யாரும் செறுக்கொழியற்க.! யானும் ஒழிகிலேனே.!
19 comments:

 1. அய்யா உங்களுக்கு வயது குறைந்து கொண்டே வருகிறது என்று எண்ணுகின்றேன். மேலும் வயது குறையட்டும்

  ReplyDelete

 2. புதுமலர் அல்ல; காய்ந்த
  புற்கட்டே அவள் உடம்பு!
  சதிராடும் நடையாள் அல்லள்
  தள்ளாடி விழும் மூதாட்டி
  மதியல்ல முகம் அவட்கு
  வறள்நிலம்! குழிகள் கண்கள்!
  எது எனக்கின்பம் நல்கும்?
  ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!

  (குடும்ப விளக்கு - ‘முதியோர்காதல்’)

  பாரதிதாசன்

  ReplyDelete
 3. பாதம் நோகுமோ
  அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ//அப்பவே அசத்த தொடங்கிட்டீங்க ?

  ReplyDelete

 4. @ இராஜராஜேஸ்வரி
  /ஏனோ ரசிக்கவில்லை/
  ஒருவர் பற்றிய எண்ணங்கள் இவர் இப்படி என்று இருக்கும்போது மாறாகத் தெரிய்வ்ந்த்தால் இருக்குமோ.?நேர்மையாகக் கருத்திட்டமைக்கு நன்றி.

  ReplyDelete

 5. @ கரந்தை ஜெயக்குமார்
  / உங்களுக்கு வயது குறைந்து கொண்டே வருகிறது/

  மனசுக்கு வயதேதைய்யா? கருத்துக்கு நன்றி.

  ReplyDelete

 6. @ திண்டுக்கல் தனபாலன்
  / செம வித்தியாசம் /
  எதில் என்று சொல்லவில்லையே. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

 7. @ பக்கிரிசாமி
  74 வயது இளைஞன் 70 வயதுக் கிழவியைத்தான் வர்ணிக்க வேண்டுமா.?இன்னார் இன்னபடிதான் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏனோ தெரியவில்லை. வரவுக்கு நன்றி.

  ReplyDelete

 8. @ கவியாழி கண்ணதாசன்
  / பாதம் நோகுமோ அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ/
  இது இன்று எழுதியது அல்லவா.?வண்ண எழுத்துக்களில் தெரிவது அன்று எழுதியது. பத்தி அமைந்ததில் அப்படி நினைக்க வைத்ததுபோலும்.வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 9. மனதில் பதிந்து போன உருவம்
  எத்தனை ஆண்டு காலம் ஆனாலும்
  மாறிப்போகுமா என்ன?
  வார்த்தைகளில் அப்போதைக்கிப்போது
  மெருகு கூடி வருவது இயல்புதானே
  மனம் கவர்ந்தது உணர்வு பூர்வமான கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. இரண்டிற்கு வித்தியாசம் இருந்தாலும் முதலில் எழுதினது எது?? கீழே இருப்பதா? அதை விட மேலே இருப்பது தான் உங்கள் இருபதுகளில் எழுதினதோனு நினைச்சேன். சுமாரா இருக்கு. :))))

  ReplyDelete
 11. எனக்கும் திருமதி கீதா சாம்பசிவம் மாதிரி ஒரு சந்தேகம் வந்தது. மீண்டும் படித்துப் பார்த்தில் தோன்றுவது உங்கள் இருபதுகளில் மரபுக் கவிதை எழுதியிருக்கிறிர்கள் என்பதே !

  ReplyDelete

 12. @ ரமணி.
  / அப்போதைக்கிப்போது மெருகு கூடி வருவது / உங்களுக்கு எது அப்போதையது, எது இப்போதையது என்று சந்தேகமில்லையே. பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete

 13. @ கீதா சாம்பசிவம்
  / சுமாரா இருக்கு /
  செறுக்கொழியாமல் எழுதினேன் அன்று
  கேசாதிபாதம் இன்று. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete

 14. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
  /உங்கள் இருபதுகளில் மரபுக் கவிதை எழுதியிருக்கிறீர்கள் என்பதே!/
  அந்தக் கவிதைக்கு முன்பே ஒரு பாராட்டு இருந்தது.! மரபுக் கவிதையாக எதுகை மோனையுடன் எழுதி இருந்தால் சங்க காலக் கவிதைக்கு ஈடாகும் என்று.!!! பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 15. இருபதுகளில் எழுதிய கவிதையில் கவிநயம் சொக்கவைக்கிறது. இப்போதைய கவிதையில் காதல்நயம் சொட்டுகிறது. தனித்தனியே பார்த்தால் ரசிக்கவைக்கும் கவிதைகள் என்றாலும் இரண்டையும் ஒப்புநோக்க முந்தையது திராட்சை ரசம் (ஒயின்)... இப்போதையது திராட்சை பழச்சாறு...

  இரண்டையுமே ரசித்தேன். பாராட்டுகள் ஐயா.

  ReplyDelete
 16. அன்றைக்கு இன்று இன்னும் மேல்!
  செறுக்கழிவது அந்த வயதில் முதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 17. கேசாதி பாதம் - practical தலைப்பு.

  ReplyDelete