Friday, May 17, 2013

நீ எங்கே இருக்கிறாய் அம்மா.?


                             நீ எங்கே இருக்கிறாய் அம்மா. ?
                             ----------------------------------------(அண்மையில் பத்திரிக்கையில் படித்தேன்.இன்றைய அம்மாக்களைப் பற்றியோ இது? பகிர்ந்து கொள்கிறேன் )
இங்கிருந்து நான் உன்னைக் கேட்கிறேன்
எங்கோ இருந்ததனைக் கேட்கிறாயா அம்மா.! 
நானோ உடல் நலிவுற்று
நாதியின்றி இருக்கிறேன்-ஆனால் நீ
மருத்துவ மனையில் நாடி பார்த்து
நாக்கு நீட்டச் சொல்லி சோதிக்கிறாய்.
நான் உடல் சோர்வுடன் தவிக்கிறேன்.
நீயோ ஊக்க பானங்களுக்கு பரிந்துரைக்கிறாய்.

நான் பசியால் வாடுகிறேன் நீ
நட்சத்திர ஓட்டலில் பரிமாறுகிறாய்.

கடினமான கணக்குப் புரியாமல் முழிக்கிறேன்.
நீயோ பள்ளியில் மாணவர்க்குப் பாடம் நடத்துகிறாய்.
நான் மணலில் கோட்டை கட்ட முயல்கிறேன்.
நீயோ அடுக்குமாடி பற்றி விவாதிக்கிறாய்.

நான் மனம் வாடி என்னுள் ஒடுங்குகையில்
நீயோ எங்கோ மனநலப் பாடம் எடுக்கிறாய்.

என் கணினி என் மூளையைக் கசக்குகையில்
நீ யாருக்கோ கணினி மூலம் ஆலோசனை கூறுகிறாய்.

காயப்பட்ட எனக்கு உன் அணைப்பு தேவை
நீ கூட்டத்தில் அனைவரையும் அரவணைக்கிறாய்.

தனிமையில் நான் வாடும்போது-நீ
கூட்ட ஆரவாரக் கைதட்டல் பெறுகிறாய்.

நான் எங்கே எப்படித் துவங்குவது என்று எண்ணுகையில்
நீ வாழ்க்கை ஏணியின் உச்சத்தில் இருக்கிறாய்.

என் அம்மாவாக  நீ எங்கே இருக்கிறாய் அம்மா.?  
-------------------------------------------- 

  ..
 

 

 

 

28 comments:

 1. வாழ்க்கை தேடுவதற்கே.

  ReplyDelete
 2. அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. நான் எங்கே எப்படித் துவங்குவது என்று எண்ணுகையில்
  நீ வாழ்க்கை ஏணியின் உச்சத்தில் இருக்கிறாய்.


  அம்மா எங்கே..!

  ReplyDelete
 4. அருமையாக சொன்னீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. எப்போ வருவாயோ?

  அம்மாவின் வருகை
  இருமணிகள் தாமதிக்க
  அப்பாவுக்கோ இன்னும்
  வரும்நேரம் தெரியவில்லை.
  பூட்டிய கதவுகளைத்
  திறந்து வைக்க யாருமில்லை.
  சாப்பிட்டாயா கேட்டிடவும்
  என்னெதிரில் யாருமில்லை.
  இருண்டிருக்கும் வீட்டிற்குள்ளே
  என்னையன்றி யாருமில்லை.
  காஸ் சிலிண்டர் மாற்றிடவோ
  இன்னும் நான் கற்கவில்லை.
  சூடாய்ச் சாப்பிடவும்
  என்றுமே வாய்த்ததில்லை.
  ஹோம்ஒர்க் குழப்பங்களோ
  தீர்த்துவைக்க வழியுமில்லை.
  வகுப்பில் நடந்த சாகசங்கள்
  கேட்க இங்கே யாருமில்லை.
  பள்ளி விட்டுத் திரும்பிடவே
  ஒருநாளும் பிடிக்கவில்லை.
  ஞாயிறன்றி வேறொருநாள்
  வாரத்திலே விருப்பமில்லை.
  அப்பாவோ அம்மாவோ
  எப்போது வருவாயோ?
  எங்கும் இனிப் போகாமல்
  என்னோடே இருப்பாயோ?

  இப்படி ஒரு கவிதை 2010ல் எழுதினேன்.
  http://sundargprakash.blogspot.in/2010/12/blog-post_30.html

  மீண்டும் அது கிளர்ந்தெழுகிறது. என் நெஞ்சை அடைக்கிறது.

  ReplyDelete
 6. உங்கள் பதிவை நானும் எங்கோ படித்தது நினைவில் உள்ளது.
  இந்தக் கவிதையின்"அம்மா" வும்,
  திரு. சுந்தர்ஜி கவிதை "அம்மா" மன
  நிலையும் கொடுமையாய் இருக்கும்.

  ஆனால் நல்ல கவிதை பகிர்தலுக்கு நன்றி சார்.
  ReplyDelete

 7. @ டாக்டர் கந்தசாமி
  @ கவியாழி கண்ணதாசன்
  @ இராஜராஜேஸ்வரி
  @ திண்டுக்கல் தனபாலன்
  @ சுந்தர்ஜி
  @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
  வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி
  உங்கள் பின்னூட்டம் கண்டு நீங்கள் எழுதி இருந்த “ எப்போ வருவாயோ “ பார்த்துப் படித்தேன். அதன் பின்னூட்டமாக நான் எழுதி இருந்ததும் படித்தேன். பிரிவின் துயரை வெளிப்படுத்தும் அந்தக் கவிதை நான் எழுதி இருந்த பிரிவின் வாட்டம் என்னும் பதிவினை நினைவூட்டியதும் எழுதி இருந்தேன். நான் எழுதி இருக்கும் இந்தப் பதிவு ஆங்கிலப் பத்திரிக்கையில் படித்ததன் சாராம்சன். பகிர எழுதினேன், மேலும் அன்னையர் தினத்தை ஒட்டி பலரும் எழுதினார்கள். இது சற்றே வித்தியாசமாய் இருக்கட்டுமே என்றும்தான். எழுத்துக்கள் நினைவுகளையும் எண்ணங்களையும் கிளர்ந்தெழச் செய்யும். நன்றி சுந்தர்ஜி.
  ராஜலக்ஷ்மி பரமசிவம் லேசாக நினைவில் உள்ளதை மீண்டும் புதுப்பிக்கலாமே. 2010-ல் நான் பிரிவின் வாட்டம் எழுதி இருந்தேன்.சுட்டி இதோ
  gmbat1649.blogspot.in/2010/10/pirivin-vaattam.html

  ReplyDelete

 8. சுட்டி தவறாக எழுதி விட்டேன்
  gmbat1649.blogspot.in/2010/08/pirivin-vaattam.html இதுதான் சரி.

  ReplyDelete
 9. அருமையாகச் சொன்னீர்கள் அய்யா. நன்றி.

  ReplyDelete
 10. உறுத்திய கவிதை.
  சுந்தர்ஜியின் கவிதையும்.

  ReplyDelete
 11. எங்கள் அருகிலுள்ள வீடுகளிலேயே கண்கூடாய்ப் பார்க்கும் காட்சி இது. பள்ளியில் கற்பிக்கும் அன்னையிடம் மாணவ, மாணவியர் தங்கள் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வதாகவும், ஆனால் வீட்டில் உள்ள குழந்தைகளால் அது இயலவில்லை என்றும் கேள்விப் படுகிறேன். இப்போதெல்லாம் பெண்களுக்கு சுயநலம் அதிகம் ஆகிவிட்டதோ என்றும் தோன்றுகிறது. :(((((

  ReplyDelete
 12. நான் எங்கே எப்படித் துவங்குவது என்று எண்ணுகையில்
  நீ வாழ்க்கை ஏணியின் உச்சத்தில் இருக்கிறாய்.//
  தன் பணியில் மேலும் மேலும் புகழ்சேர்க்க உழைத்து நல்ல பேர் வாங்கி விட்டதால் வேலையையும் விடமுடியாமல் தன் குழந்தையின் உயர்வுக்கும், துணை நிற்கமுடியாமல்’தவிக்கும் தாய் இப்போது அதிகமாகி விட்டார்கள்.
  நீங்கள் பகிர்ந்த கவிதையும், சுந்தர்ஜியின் கவிதையும் மனதை கஷ்டப்படுத்துகிறது.


  ReplyDelete
 13. அருமையான கவிதை
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete

 14. @ கரந்தை ஜெயக்குமார்
  @ அப்பாதுரை
  @ கீதா சாம்பசிவம்
  @ கோமதி அரசு
  @ ரமணி
  ஏதோ சம்பவங்களும் நிகழ்வுகளும் மனசை உறுத்தும்போது பகிர்கிறோம். சுந்தர்ஜிக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். பெண்களைப் புரிந்து கொள்வதே எனக்குக் கடினம். குழப்பங்களின் மறு உருவே நீதான் பெண்ணோ என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. எல்லோராலும் கவனிக்கப் பட்டு , அதுவே வாழ்க்கை நிலையையும் உயர்த்துகிறதென்றால் அந்தப் போதையில் இருந்து பெண்கள் மீள்வது கடினம். ஆமாம். அவர்கள் ஏன் மீள வேண்டும்.? ஆனால் பாழாய்ப்போன இந்த ரத்தத்தில் ஊறிய பெண்களைப் பற்றிய பல கருத்துக்களை WE HAVE TO LEARN TO UNLEARN.!

  ReplyDelete
 15. அன்புள்ள ஐயா..

  வலிக்க வைக்கிறது கவிதை வரிகள். அம்மா என்பது எத்தகைய சொல்.. கவிஞர் அறிவுமதி ஒரு கவிதையில் எழுதினார்..

  மலரும் பூக்களிலிருந்து
  கேட்கிறது
  அம்மா...அம்மா...

  போய்விட்டது எல்லாம் நாகரிப் புதைமணலுக்குள். வலிகளும் வலிகள் நிமித்தமும் என வாழ்க்கை. அவலம்.

  ReplyDelete
 16. Painful... So is the poetry by Sundarji... Good one!

  I was brought up by a working mother- I have experienced the feeling discussed here. But now, thinking about it, I feel so proud of her. It cannot be explained. It is futile to try it...

  On another note- a similar but not so similar kind of a poetry- whenever I read it- it makes me so sad-- yet it is a masterpiece! A poetry titled "I won't let you go" by Tagore... http://www.guernicamag.com/poetry/tagore_poem_4_15_11/ It's brilliant! Do read it when you find time...

  ReplyDelete

 17. @ ஹரணி
  உங்கள் பின்னூட்டம் பார்க்கும்போது , இழந்த எதையோ பெற்றுவிட்டது போல் இருக்கிறது.நன்றிகள் ஐயா.

  @ மாதங்கி மாலி
  நலமா.? யாரையும் குறை சொல்லும் வகையில் இதை எழுதவில்லை.இது நடக்கும் நிகழ்வுகளின் எடுத்த்க்காட்டு. உறுத்தியது. பகிர்ந்தேன். அப்பா படித்தாரா.?

  ReplyDelete
 18. யதார்த்தம், அருமையான பதிவு.

  ReplyDelete
 19. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வருகையில் இதெல்லாம் நடக்கவே செய்யும்.ஆனால் அடிப்படையான தாயன்பு இல்லமல் போகுமா ஐயா!ஆனால் இதி விலக்குகளும் இருக்கத்தானே செய்யும்!

  ReplyDelete
 20. ஹ்ம்ம் பாவம்தான் இப்படிப்பட்ட அன்னையரும் அதைவிட பாவம் அவர்களின் பிள்ளைங்களும் .
  முன்பு நான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு நாடகம் டிவியில் போட்டார்கள் அது நினைவு வந்தது .நித்யா என்பவர் வேலைக்குப்போகும் அம்மா அவர் மகன் பின்னாளில் அம்மாவை ஓல்ட் ஏஜ் ஹோமில் விடும்போது சொல்வார் ..எனக்காகத்தான் வேலைக்கு போனீங்க சொல்றீங்களே ..நான் கேட்டேனா எனக்கு வசதி வேணும்னு ..என் கூட ஸ்கூல் விட்டு வரும்போது எக்ஸாம் படிக்கும்போது விளையாடும்போது நீங்க இல்லை இப்போ எதுக்கு நீங்க என்னோட இருக்கணும்னு .இக்கதை ஒரு கனவு மாதிரி வந்து நித்யா வேலையை விடுவது போல வரும் .

  வேலைக்கு செல்வது அவரவர் விருப்பம் .நான் இதற்காகவே வெறும் வாலீண்டியரிங் மட்டும் செய்றேன் கொஞ்சம் நேரம் மகள் .. வீட்டுக்குள் வரும்போது நான் அவளை வரவேற்க்கணும்னு கணவர் ஆர்டர் :)
  அவள் மேற்படிப்புக்கு போகும்வரை தொடரும் இதே

  ReplyDelete
 21. ஒரு வேலைக்குப் போகும் பெண்ணின் மகனது உணர்வுகள்தான் இப்பதிவில் பல இடங்களிலும் வேலைக்குப் போகும் தாய்கள் இருக்கும் இடத்தில் இதே கதைதான் அது சரி கடைசியில் ஏதோ குற்ற உணர்ச்சி தோன்றி எழுதியதுபோல் இருக்கிறதே அதிரா படிக்க வேண்டி சுட்டி கொடுத்திருந்தேன் ஏன் என்றால் அவரது பதிவுக்கே என் பின்னூட்டம் அவரை இன்னும் காணோமே

  ReplyDelete
  Replies
  1. அவர்தான் எனக்கு நேற்றே சுட்டிஅனுப்பினார் ..ஸன்டேஸ்ல மட்டும் நான் கொஞ்சம் கூட பிசி என்பதால் இன்று நிதானமாக பின்னூட்டமளித்தேன்

   Delete
  2. நான்ன்ன்ன்ன் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்.. நான் வரத் தாமதமாகிடும் எனத்தான் அஞ்சுவை மிரட்டி அனுப்பி வச்சேன்ன்ன்ன்:) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்ோ:)

   Delete
  3. நீங்கள் இருவரும் வந்தால்தான் பதிவே கலகலக்கிறது படித்ததும் கிழிக்க இது என்ன காகிதத்தாளா

   Delete
  4. ஹா ஹா ஹா.. அப்போ கிழிச்சிடாமல் கங்கை ஆத்தில் போட்டிடுங்கோ:)

   Delete
 22. ம்ம்ம்ம் மனம் கனக்கும் கவிதை.. உண்மைதான் அளவுக்கு மீறி ஆசைப்படும் குடும்பங்களில் இப்படி நடக்கிறது, செலவுக்கேற்ற வருமானம் இருப்பின், தாய் வீட்டிலிருந்தே குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளலாம், இது ஆசை அதிகமாவதாலும், இன்றைய பெண்கள் ஓவரா படித்தாயிற்று இனி எப்படி வீட்டில் இருப்பது என நினைப்பதாலுமே இப்படி ஆகுது.

  மூத்த மகன் கிடைத்ததும், நான் பார்த்த கொம்பியூட்டர் டெஸ்க்ரொப் பப்ளைசிங் வேலையை விட்டு விட்டேன். பின்னர் இருவரும் முழுநேரப் பள்ளிக்கு ஆரம்பித்த பின்னரே .. ஆசியர் வேலையை ஏற்றுக்கொண்டு, பிள்ளைகளோடு போய் அவர்கள் வரமுன்னரே வந்திடுவேன்..

  அம்மா வீட்டிலிருக்கும்போது தப்பு செய்வதும் குறையும்.

  ReplyDelete
  Replies
  1. இது உங்களைமாதிரி இருப்பவர்களை நினைத்து எழுதியதல்ல. 2013 ம் ஆண்டே எழுதியது பெற்றோர்களி ந் கவனமில்லாவிட்டால் குழந்தைகள் மனம் வேதனைப்படும் என்பதைக்காட்டவே எழுதியது. இம்மாதிரிப் பெற்றோரும் இருக்கிறார்கள்வீட்டில் குழந்தைகளைக் கவனிக்காமல் ட்யூஷனுக்கு அனுப்பி விடுவார்கள் பொறுப்பை பிறரிடம் தள்ளி விடுகிறார்கள்வந்து கருத்திட்டதற்கு நன்றிம்மா

   Delete
  2. உண்மை, குழந்தை வேண்டும் என தவமிருந்து பெறுவது பின்னர், குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும் எத்தனையோ தாய்மாரையும் நான் பார்த்திருக்கிறேன்.

   Delete