Sunday, May 19, 2013

அதீத அன்பு ( தொடர்ச்சி )



                          அதீத அன்பு ( தொடர்ச்சி.)
                          ----------------------------------




 சில ஆதங்கங்கள் என்னதான் சொல்லிப் போனாலும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து முழுதுமாகச் சொல்ல வில்லை என்று குறை கூறுகிறது
இந்தமுறை என் அவஸ்தைகள் முன்பே கூறியவைதான் என்றாலும் கூடிக்கொண்டே போகிறது. செய்யாத குற்றத்துக்காக அனுபவிக்கும் தண்டனை என்று சொன்ன நான் , முதுமையை வரமாக எண்ணி எழுதி என்னைத் தேற்றிக் கொண்டேன். நான் நினைத்ததைச் செய்ய யாரையும் கேட்க வேண்டாம் என்று சொன்னால், அது சரியில்லை என்று உடனே நிரூபணமாகிறது. நான் தனியே எங்கும் செல்ல அனுமதியில்லை. ஏனென்று கேட்டால் எதிர்பார்க்காமல் ஏதாவது நிகழ்ந்து விட்டால் ... என்று எதிர்க் கேள்வி. அப்படி என்னவோ எதிர்பார்க்காமல் நடந்து விட்டால் யாராலாவது அதைத் தடுக்க இயலுமா.? எதிர்பார்க்காதது நிகழுமோ ,நிகழுமோ என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்களா.? நான் என் சிறுகதை (வாழ்வின் விளிம்பில்) ஒன்றில் உடல் நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட ஒருவனை அவன் உற்றார் வந்து பார்க்கும் போது அவர்கள் , மன நிலையை ரயிலேற்றிவிட வந்தவர்களின் மனநிலையோடு ஒப்பிட்டு எழுதி இருந்தேன். “ ரயில் புறப்பட இன்னும் சில நிமிடங்கள் ....என்பதுபோல். எதிர்பார்க்காதது நிகழுமோ என்று அஞ்சி அஞ்சி இருப்பதைவிட அந்த நிகழ்வு நடந்து முடிவதே மேல் என்று தோன்றுகிறது.




எங்காவது பஸ்ஸில் பயணிக்க எனக்கும் என் மனைவிக்கும் ஒரே இடத்தில் இருக்கைகள் கிடைப்பது அரிது. அவள் முன்னால் மகளிர் இருக்கையில். நான் பின்னால் ஆடவர் இருக்கையில் . என்னை திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்தே அவள் கழுத்து சுளுக்கும். இருக்கையில் நான் சற்றே கண் அயர்ந்தால் அவள் மனம் இல்லாததை எல்லாம் நினைத்து அல்லல்படும். அதற்காகவே நான் மிகவும் முயன்று என் கண்களை அகலத் திற்ந்து வைத்திருப்பேன். என் மக்களோ பஸ் பயணத்தை அறவே தடுக்கச் சொல்கிறார்கள். எனக்கானால் என் உடலுக்கு நானே தலைவன் எனக்கு அதை என் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஆசை. In fact I like to flog my body. இதைப் பதிவிடுவதே இந்த அவஸ்தைகள் எனக்கு மட்டும்தானா இல்லை என் போன்றோர் அனைவருக்கும் உண்டா என்று அறியவே.




 அதீத அன்பால் நான் படும் அவஸ்தைகளை முன்பே ஒருமுறை எழுதி இருக்கிறேன். அதை இங்கே சொடுக்கினால் படிக்கலாம். 

 இந்த ஒரு பதிவைப் படிக்க மூன்று பதிவுகளின் தொடர்பும் தெரிவது நலம். 
-------------------------------------------------------------
 

 

11 comments:

  1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

    ReplyDelete
  2. அதீத அன்பே உயிர் மூச்சு ..!

    ReplyDelete
  3. என் அப்பா எனக்குத் திருமணம் ஆன பின்பும் பைக் ஒட்ட அனுமதி மறுத்தார். பின் என் மனைவி சண்டை போட்ட பின்னர் தான் நடந்தது. அதீத அன்பு ஒரு வகையில் தொந்தரவு தான்.

    ReplyDelete
  4. If one leaves everything to His wish, I believe he or she may not worry so much.Just be happy.

    ReplyDelete
  5. அதனால் என்ன?? அன்பின் மிகுதியால் தானே சொல்கின்றனர்! நேற்றைய தினசரியில் 60 வயதுக்குட்பட்ட ஒருவர் தெருவில் மயங்கிக்கிடக்கவே அனைவரும் குடிபோதைனு நினைத்து ஒதுங்கிப் போக, ஒருவருக்கு மட்டும் ஏதோ சந்தேகம் வந்து அவரை மயக்கத்தில் இருந்து எழுப்பி பழச்சாறு வாங்கிக் கொடுத்து உபசரித்து விசாரிக்க, சர்க்கரை குறைந்ததால் மயக்கம் போட்டிருப்பதைச் சொல்லி இருக்கிறார். ஆகவே என்னதான் சர்க்கரை நோயெல்லாம் இல்லை என்றாலும் தனியாகச் செல்லாமல் இருப்பது நன்மையே தரும். நானும் கூடியவரை என் கணவரைத் தனியே வெளியே செல்ல அனுமதிப்பதில்லை.

    ReplyDelete
  6. பேருந்துகள் ஏறும்போதே கிளம்பிவிடுகின்றன. கிளம்பும் வேகத்தில் படிக்கட்டிலிருந்து மேலே ஏறுவது சாதாரணமாக உள்ளவர்களுக்கே சிரமமாக இருக்கிறது. வயதானவர்களுக்குக் கேட்கவே வேண்டாம்.

    மற்றப் பதிவுகளை மத்தியானமா படிக்கிறேன்.

    ReplyDelete
  7. வயது ஆகிவிட்டால் , மனைவி, குழந்தைகள் நமக்கு தாய் ஆகி விடுவார்கள். என் மாமனாரை, என் மாமியார் அவர்கள் குழந்தை போல் தான் பாதுகாக்கிறார்கள்.
    வயாதன பின் கீழே விழுந்து விட்டால் மறுபடி அவர்கள் நடக்க பயப்படுகிறார்கள்.
    உங்கள் மனைவி, குழந்தைகள் காட்டும் அன்பு மகிழ்ச்சியை தருகிறது.

    ReplyDelete
  8. இதைப்போல நம் குழந்தைகளும் நம் கட்டுப்பாட்டில்
    இருந்தனர்.நாமும் நம் தாய் தந்தையர் கட்டுப்பாட்டில்தான்
    இருந்தோம்.அதை நினைத்துப்பார்த்தால் இது சிறைவாசமாக்த்
    தோன்றாது என நினைக்கிறேன்.ஒருவேளை நமது
    வயதுக்கு மீறிய வேகமும் செயல்களும்
    அக்கறையுள்ளவர்களை பயமுறுத்துகிறதோ என்னவோ ?
    அதன் காரணமாக அவர்கள் கொள்கிற கூடுதல் அக்கறை
    நம்மை வித்தியாசமாக நினைக்கத் தோன்றுகிறதோ என்னவோ ?

    ReplyDelete
  9. நானும் என் கணவர் சலித்துக் கொள்ளும் அளவிற்கு அன்புத் தொல்லை கொடுக்கிறேன். நானும் அவரை எங்கும் தனியாக செல்ல விடுவதில்லை.
    மணி விழாவிற்குப் பிறகு கணவருக்கு தாரமே தாயாகி விடுவது கண்கூடு.

    உங்கள் மனைவியின் அன்பான காவலை புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete

  10. @ கரந்தை ஜெயக்குமார்.
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ இராஜராஜேஸ்வரி
    @ சிவகுமாரன்
    @ பக்கிரிசாமி
    @ கீதா சாம்பசிவம்
    @ கோமதி அரசு
    @ ரமணி.
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    என் பதிவில் நான் கூறவந்தது சலிப்பினால் அல்ல. அதீத அன்பில் சில நேரங்களில் நான் என் தனித்துவத்தை இழக்கிறேனோ எனும் சந்தேகம் வருவதாலும் எனக்கே என் மீது நம்பிக்கை போய் விடுமோ என்னும் அச்சத்தாலும்தான். வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete