Saturday, June 1, 2013

தங்கமான நேரங்கள்.


                                                தங்கமான நேரங்கள்.
                                                ------------------------------





தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம். எனக்கு விளங்க வில்லை.நிறைய விலங்குகள் ஓடி வருகின்றன. ஒருவன் தன் கையைஇடவலமாக அசைக்கிறான். ஓடி வரும் விலங்குகள் பாதை மாற்றிப் போகின்றன. அடுத்து  டைனோசரஸ் போன்ற மிருகம் வாயைப் பிளக்கிறது/ ஒருவன் அதன் வாய் அருகே கை வைத்து மூடச் செய்கிறான். இன்னும் இதே போல் விளங்காத விஷயங்கள். புரியவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். என் பேரன் அருகில் இருந்தான் எனக்கு விளக்கினான். அது ஒரு டிவி விளம்பரம். சைகைகளின் மூலமும் சொல்வதன் மூலமும் சானலை மாற்ற முடியும் அதன் விலை என்ன தெரியுமா. ? ஒரு கோடி ரூபாய் “ அவன் அதை ஆங்கிலத்தில் சொன்ன விதமே அலாதி. நான் அவனிடம் ஒரு கோடிக்கு எவ்வளவு பூஜ்யம் என்று தெரியுமா என்று கேட்டேன். அவன் I don’t know . But it is an awesome big  money”  என்றான். எட்டு வயது சிறுவனுக்கு விளங்கும் விளம்பரம் எனக்கு புரியவில்லையே. ! அவன் எங்களுடன் நான்கு நாட்கள் தங்கி இருந்தான். மகிழ்ச்சியான தருணங்கள்.
என் இடது கை மோதிர விரலில் நான் ஓட்டுப் போட்டதன் அடையாளமான  மைப் புள்ளியைப் பார்த்து என்ன என்றுகேட்டான். ஓட்டுப்போட்டதன் அடையாளம் என்றேன். ஏன் ஓட்டுப் போட வேண்டும் என்றான். நான் அவனுக்கு எளிய முறையில் விளக்கினேன்.
“ அரசாங்கத்தில் நமக்கு வேண்டியதைச் செய்து தர நாம் அனுப்பும் பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப ஓட்டு போடுகிறோம்.



“ யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.?
நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புபவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும்
“ அதை எப்படித் தெரிந்து கொள்வது.?
பொதுவாக மக்களுக்கு சேவை செய்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நம் குறைகளை கேட்டு வருபவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்
அவனுக்குப் புரிந்தது போலும் புரியாதது போலும் இருந்தது. அவனுக்கு இன்னும் விளங்க வைக்க சேவை  செய்பவர்களை அடையாளம் காண்பது சிறிது கடினம்தான். தேர்தல் சமயத்தில் நமக்கு பொன்னோ பொருளோ கொடுத்து  அவர்கள் நல்லவர்கள் என்று நம்மை நம்ப வைப்பவர்களும் இருக்கிறார்கள் “ என்றேன். அதற்கு அவனது ரியாக்‌ஷன் நான் சற்றும் எதிர் பார்க்காதது.
Is that not cheating , appa.?”  என்று கேட்டானே பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வமும் பழக்கமும் வர வேண்டும் என்று நினைப் பவன். “புத்தகங்கள் படிப்பாயா “ என்று கேட்டேன். பெரிய எழுத்து ராமாயணம் மஹாபாரதம் போன்ற புத்தகங்கள் வண்ணப் படங்களுடன் பிறந்த நாள் பரிசாக அவனுக்கு வந்தது எனக்குத் தெரியும்.



அவன் என்னிடம் “  Have you read  GERONIMO  STILTON”S books ? Awesome  books. I have read many books .You are an author, no..? You must read them.” என்று கூறினான் நான் வலையில் பதிவுகள் எழுதுவது அவனுக்குத் தெரியும். அவனிடம் “Who is GERONIMO.” என்று கேட்டேன்.
He writes stories  about mouses , and he assumes himself as a mouse. Oh.! He is awesome.”
அவனுடன் கழித்த நேரங்கள் இனிமையானவை இவனை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை சென்னையில் இவன் பிறந்த நாளுக்கு வந்திருந்த நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்ய வந்தான். அவன் அறிமுகம் செய்ய வந்த சிறுவன் மலையாளம் பேசுபவன். அவனிடம் இவன் “ You know , he is Tamil..Speak to him in Tamil or English “ என்றான். என் மகன் வீட்டில் அவன் தமிழ் பேச , அவன் மனைவி மலையாளம் பேச குழந்தைகள் தமிழ் மலையாளம் ஆங்கிலம் என்று பேசுவார்கள்.
இவனுக்கு நிறையக் கதைகள் கூறி இருக்கிறேன். இப்போதும் அவன் கதை கூறக் கேட்டதும் நான் சொல்ல ஆரம்பித்தால் “ ஓ... இது நீ ஏற்கனவே சொல்லியிருக்கிறாய். எனக்குத் தெரியும் “ என்றுசொல்லி கதையை அவன் சொல்லுவான். பிரகலாதன் கதையில் நான் ”இரண்ய கசிபு” என்று என்று சொல்லியிருந்த பெயரை அவனது வேறு ஒரு நண்பன் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தபடி அந்தப் பெயரை “இரண்ய காஷ்யப்” என்று சொல்ல இவன் என் தாத்தா சொல்லியிருந்ததுதான் சரி என்று சண்டைக்குப் போக.......





ஏற்கனவே இவனைப் பற்றி இரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறேன் ஐந்து வயதில் .இவனது செய்கையைக் கண்டு வியந்து மகிழ்ந்து காக்கக் காக்க என்று எழுதியது இங்கே பார்க்கவும்.இன்னொரு முறை இவன் பேசியது கேட்டு கேள்விக்கென்ன பதில் என்று எழுதி இருந்தேன்
பிறிதொரு முறை அவன் என்னிடம் பொறாமைப் பட்டுப் பேசியதும் எழுதினேன் (அவனைப் போல் பள்ளி இல்லை படிப்பு இல்லை கேள்வி கேட்க ஆளில்லை டிவி பார்க்கத் தடையில்லை, உன்னைப்போல் நான் ஆவது எப்போ) இதை சொடுக்கவும்
மூத்த பேரன் பேத்தியுடன் கழிதத நேரங்கள் போல் இவனிடம் கழித்ததில்லை.இவனும் பத்து வருடங்களுக்கு முன் பிறந்திருந்தால்....Wish ful thinking.!  ( பேத்திக்கும் இவனுக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம்.!) 

  .
  
 



 

19 comments:

  1. என்னவொரு புத்திசாலித்தனம் (புரிதல்)...! படிக்கும் எங்களுக்கே அப்படியொரு சந்தோசமென்றால்.... தங்களுக்கு... படத்தில் கண்டு மகிழ்ந்தோம்...

    பேரனுக்கு வாழ்த்துக்கள் பல... என்றும் தங்கமான நேரங்கள் தொடரட்டும் ஐயா...

    ReplyDelete
  2. இன்ற்ய குழந்தைகள் மகா புத்திசாலிகள்.
    தோளில் ஏறி, மனத்தில் இடம் பிடித்த பெயரனுடன் , செலவிடும் ஒவ்வொரு நொடியும் இன்பமயம் தான். இப்பொன்னான நேரம் தொடரட்டும் அய்யா.

    ReplyDelete
  3. ஆமாம் ஒரு சின்ன சந்தேகம்... பதிவில் இந்த இணைப்புகளும் பேரன் சொல்லிக் கொடுத்ததா...? ஹிஹி... பாராட்டுகளை சொல்லிடுங்க... நன்றி... இணைப்பில் பார்க்கிறேன்...

    ReplyDelete
  4. /// என் மகன் வீட்டில் அவன் தமிழ் பேச, அவன் மனைவி மலையாளம் பேச, குழந்தைகள் தமிழ் மலையாளம் ஆங்கிலம் என்று பேசுவார்கள்... ///

    சமீபத்தில்-இணையத்தில் தமிழ் வழிக் கல்வியா...? ஆங்கில வழிக் கல்வியா...? பகிர்வுகள் ஞாபகம் வந்தது...

    பெற்றோர் ஆனவர்கள்... பெற்றோர் ஆகப் போகிறவர்கள்... கற்றுக்கொள்ள வேண்டியது / உணர வேண்டியது நிறையவே உள்ளன...

    Be Careful...! என்னை (யும்) சொன்னேன்...! ஹா... ஹா...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  5. . எட்டு வயது சிறுவனுக்கு விளங்கும் விளம்பரம் எனக்கு புரியவில்லையே. !

    நிறைய விஷயங்கள் நாம் குழந்தைகளிடம்
    கற்கவேண்டியிருக்கிறது ...

    ஆச்சரியம்தான் ..

    ReplyDelete
  6. தலைப்புக்கு ஏற்ற மாதிரியான தருணங்கள் தான் அவை. இக்கால குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும், உள்வாங்கும் தன்மையும், கிடைக்கும் எக்ஸ்போஷரும் அதிகம். அதுவே புத்திசாலித்தனமாக நம்மை பிரமிக்க வைக்கிறது. மனதை லயிக்க வைக்கும் நேரங்கள் தான் குழந்தைகளுடன் செலவிடும் நேரங்கள். வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete

  7. @ திண்டுக்கல் தனபாலன்
    Multiple கருத்துரைகளுக்கு நன்றி.பேரன் அவன் வீட்டுக்குப் போய் இரண்டு நாளாகிவிட்டது. அவன் நினைவில் எழுதியது. அவனைப் பற்றி எழுதி இருக்கிறேன் என்று இனிதான் சொல்லவேண்டும்.வேறு வேறு மொழி பேசுபவர்கள் திருமணத்தில் இது தவிர்க்கமுடியாது. தவிர்க்க முனந்தால் ஈகோ பிரச்சனை. இருந்தாலும் சிறு வயதிலேயே பல மொழிகள் கற்கும் வாய்ப்பு.!தாய்மொழிக்கல்வி என்றாலே எந்த மொழி என்று கேள்வி எழுகிறது.அகராதியில் தாய்மொழிக்கு என்ன அர்த்தம் பாருங்கள். ஆங்கில மொழி அகராதி யும் தமிழ் மொழி அகராதியும் பாருங்கள். கேள்விக்கென்ன பதில் சுட்டியை பார்க்க வில்லையா.? நன்றி மீண்டும்.

    ReplyDelete

  8. @ கரந்தைஜெயக்குமார்
    உற்சாகமூட்டும் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

  9. @ இராஜராஜேஸ்வரி
    / எட்டு வயது சிறுவனுக்கு விளங்கும்
    விளம்பரங்கள் எனக்குப் புரிய வில்லையே/ அவனது பேச்சும் செயல்களும் என்னை வியக்க வைத்திருக்கிறது. இணைப்புகளில் கொடுத்திருக்கிறேன் . பார்க்கவில்லையா.? வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  10. @ ராபெர்ட்
    நீங்கள் சொல்வது உண்மைதான்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. பேரன், பேத்திகளுடன் கழிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தங்கமான நேரம் தான்.
    பேரன் புத்திசாலிதனத்திற்கு வாழ்த்துக்கள்.
    பேரன் படங்கள், பேரன் தோளில் அமர்ந்து இருக்கும் படம் மிக அருமை.

    ReplyDelete
  12. இந்தக் காலத்துக் குழந்தைகளே சமர்த்தாகவே இருக்கின்றன. அதி புத்திசாலியான உங்கள் பேரனுக்கு வாழ்த்துகளும் ஆசிகளும். இணைப்புக்களையும் பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  13. அருமையான பதிவு ஐயா, அபியும் நானும் - part 2 என்ற தலைப்பும் சாலப்பொருந்தும்.

    ReplyDelete
  14. பேரப்பிள்ளைகளுடனான நேரங்கள் தங்கமானவைதாம். சந்தேகமென்ன? அதிலும் பேரப்பிள்ளைகளிடம் பாசமும் புத்திசாலித்தனமும் இணைந்தே இருந்தால் இனிய தருணங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ... பாராட்டுகள் பிள்ளைச்செல்லத்துக்கும்... தலையின் வைத்துக் கொண்டாடும் தாத்தாவுக்கும்.


    எங்கள் மாமனாருக்கு பத்து பேரப்பிள்ளைகள். முதல் பேரனுக்கும் கடைசிப் பேரனுக்கும் வயது வித்தியாசம் இருபது வருடங்கள். ஆனாலும் ஈடுகொடுத்து ஒவ்வொரு பேரப்பிள்ளைகளுடனும் விளையாடுவார். பார்க்கவே ஆனந்தம் அது... என் பிள்ளைகள் அவருடன் விளையாடும் விளையாட்டுகளைப் பற்றி ஒரு பதிவே இடலாம். அத்தனை சுவாரசியம்.

    ReplyDelete
  15. இந்தக்காலக் குழந்தைகள் நல்ல புத்திசாலிகள். பேரனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. தாங்கள் கொடுத்து வைத்தவர்கள் அய்யா .

    ReplyDelete
  17. மிக அருமையான தருணங்கள்.. கூடவே இருப்பதை விட இப்படி இடையிடை காணும்போது இன்னும் பாசம் அதிகமாகும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைதந்து வாசித்துக் கருத்து பதிவு செய்ததற்கு நன்றி அதிரா

      Delete