செவ்வாய், 19 ஜூலை, 2022

நான் யார் ,,,,,,3

 நினைவலைக்ள்

N

       அரக்கோணத்தில் இருந்தபோது பள்ளிக்குப் புத்தகம் இல்லாமல் போய் வகுப்புக்கு வெளியே நிறுத்தப் பட்டதும் அங்குள்ள ஆசிரிய ஆசிரியைகள் “ துரை வீட்டுப் பிள்ளைகளே இப்படியெல்லாம் செய்யலாமாஎன்று குறை கூறியதும் நினைவை விட்டு அகலவில்லை. அப்பா அலுவலகத்தில் படிப்படியாக முன்னேறி லோவர் டிவிஷன் க்ளார்க், அப்பர் டிவிஷன் க்ளார்க், ஹெட் க்ளார்க், ஸப் டிவிஷன் ஆஃபீசர் என்று பொறுப்பாக இருந்திருக்கிறார். அந்தக் காலத்தில் இருந்த நிலையில் அவருடைய பதவி அவரை துரைகளுக்குச் சமமாக மதிக்க வைத்தது. அப்படி இருந்தவர் SDO விலிருந்து LDC யாக பதவி இறக்கப்பட்டு, தண்டிக்கப் பட்டது அவரை மிகவுமே பாதிதுவிட்டது.

 

       அம்மாவின் ஒரு ஒன்றுவிட்ட மாமன், சேது என்று பெயர், அப்பாவின் சிபாரிசால் அப்பாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தவர். அவர் மேல் ஏதோ பழி ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு உதவியாக மனு எழுதுவதிலும் மேல்முறையீடு செய்வதிலும் அப்பா உதவி இருக்கிறார். அது அப்பாவின் மேலதிகாரிக்கு பாதகமாக முடியலாம் என்ற நிலையில்,அவர் சேதுவின் மேலிருந்த பழியில் அப்பாவுக்கும் பங்குண்டு என்று நடவடிக்கை எடுத்ததால், வேலையில் பதவியிறக்கம் அடைந்தார். தகாத நடவடிக்கைகளில் அவர் சம்பாதிக்கவில்லை என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால், அப்படி இருந்திருந்தால் எங்கள் வாழ்க்கையின் நிலைமை அவ்வளவு சரிந்திருக்கத் தேவையில்லை. ஒரு முறை நான் பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது, அவர் மேல் எந்தக் குறையும் இல்லை என்று கூறினார். எனக்கு நன்றாக விவரம் தெரிந்து நிலைமையை முழுதுமாகப் புரிந்து கொள்ளுமுன் அவர் போய்ச் சேர்ந்து விட்டார். அவர்மீது பழியில்லை என்றும் குற்றமற்றவர் என்றும் வாதாடி நிரூபிக்கப் போதிய பணமில்லாமையே அவர் குற்றமற்றவர் என்று எங்களுக்குப் புரிய வைத்தது. இருந்தாலும் ஆறாத மனப் புண்ணும் வீண்பழியும் சேர்ந்து அவருடைய வாழ்க்கைக்கே ஊறு விளைந்தது. அரக்கோண வாழ்க்கையில்தான்.

 

           அரக்கோணத்தில் இருந்தபோதுஅப்பவின் தம்பி ராமச்சந்திரன் வேலை தேடி அங்கு வந்தார். அவருக்குக் கண் பார்வை குறைவாக இருந்ததால் பெரிய தடிமனான கண்ணடி அணிந்திருப்பார். லிப்டன் டீ கம்பனியில் டீ போட்டுக் காண்பிக்கும் டெமாஸ்ட்ரேடராக தெருத்தெருவாய்ப் போய் வீடுகளில் டீ போடும் முறையை விளக்கிக் காண்பிக்க வேண்டும். ஒரு ஸ்டவ் கெட்டில் போன்ற சாதனங்களுடன் திரிய வேண்7lடும் பாவம் கண்பார்வை சரியாக இல்லாததால் ஒரு முறை கையில் சுடுநீர் பட்டு வெந்து வேதனைப் பட்டார். அத்துடன் அந்த வேலையும் விட்டார். பிறகு பழையபடி பாலக்காட்டுக்கே சென்று விட்டார். பிற்காலத்தில் ஒரு மருந்து கம்பனி ஏஜென்சி எடுத்து நிறைய சம்பாதித்து நல்ல நிலையில் வாழ்ந்தார். அவரை என் பேன் விபுவுடைய சோறூட்டுக்கு, குருவாயூர் சென்றபோது, அவர் வீட்டில் சந்தித்தோம். கண்பார்வை முழுவதுமாக இழந்திருந்தார். அவர் சொன்ன ஒரு வார்த்தை என் மனதை மிகவும் நெகிழச் செய்தது. கண்பார்வை போன பிறகு திருமகளின் பார்வை அவர் மீது பட்டதாகக் கூறினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு முறை அவரை பெங்களூரில் என் அத்தை மகளின் பெண் கல்யாணத்தில்தான் பார்த்தேன் உறவுக்காரர்களை அடிக்கடி சந்திக்கவோ பேசி மகிழவோ முடியாதஒரு வாழ்வின் சூழலில் வாழ்ந்து விட்டோம். அரக்கோண நினைவுகள் தடம் புரண்டு வேறெங்கோ கொண்டு வந்து விட்டது.

 

       அரக்கோணத்தில் இருந்தபோது மேமை, குஞ்சுகுட்டி அம்மாள் எங்களுடன் இருந்தார்/.கூடவே வேலைக்கு ஒரு பெண்ணும் ,தத்தை என்று பெயர், இருந்தாள். மேமைக்கு சோமாவின் மேல் பிரியம் அதிகம். அவனும் அவர்களை நேசித்தான். அவர்கள்தான் எங்களுக்கு நம்முடைய இதிகாசங்களை அறிமுகப் படுத்தியவர். அவர் சொல்லக் கேட்டுத்தான் ராமாயணம் மஹாபாரதம் போன்ற கதைகளின் சாரம் முதலில் புரிய ஆரம்பித்தது.

 

 

                 அந்த மேமையை, அம்மா எங்கள் வீட்டு வேலை செய்பவர் என்று எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியிருந்தார்.நாயராகப் பிறந்த அவர் ஒரு பிராமணனுக்கு வாழ்க்கைப்பட்டு பிராமணப் பெண்ணாகவேஅடையாளப்படுத்திக்கொண்டு, வாழ்ந்தார். அவர்கள் தாய் மொழி மலையாளம்.எங்கள் வீட்டில் தமிழில்தான் பேசுவோம். அம்மா ஊருலகத்துக்குத் தன்னை ஒரு பிராமணப்பெண்ணாகவே காட்டிக்கொண்டார். அப்பாவும் அவரை ராஜம் என்று பெயரிட்டேக் கூப்பிடுவார். என்ன இருந்தாலும் இப்போது நினைக்கும்போது அம்மா நடந்து கொண்ட முறை, தன் சொந்தச் சித்தியை வேலைக்காரி என்று அறிமுகப்படுத்தி வாழ்ந்தது நிரடுகிறது. அதன் அழுத்தம் அவர்களே என் அப்பாவின் வீட்டில் வேலைக்கு இருந்தவர் என்று உணரப்படும்போது அதிகரிக்கிறது. இடம் பொருள் அந்தஸ்து,மக்களை எந்த அளவுக்கு மாற்றும் என்பதை, பிற்காலத்தில் உணர வைத்த அனுபவங்கள்தான் அவை.அப்பா இறந்தபோது மறுபடியும் அதே சித்தியுடன் அவர்கள் நிழலில் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மேலும் அம்மாவுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ளவோ சென்று வரவோ வேறு போக்கிடமே இல்லை என்பதும் நிதர்சனம். அந்தக் கால சூழலில் அப்பாவின் மறுமணம் அவர்களை அப்படி வாழ வைத்ததோ என்னவோ.

 

 

         இந்த சம்பவங்கள் நினைவுக்கு வரும்போது, அப்பாவின் மறுமணம் பற்றிக் கேள்விப்பட்ட செய்திகளும் மனசில் நிழலாடுகிறது. கூடவே அவரைப் பற்றியும் அவர் குடும்பம் பற்றியும் அறிந்தவையும் நினைவலைகளாகத் தோன்றுகிறது.

 

 

         கோவிந்தராஜபுரத்தில் கண்மணி ஐயரென்ற பெயரில் இருந்த என் தாத்தா சுப்பிரமணியம்-சுப்புலட்சுமி தம்பதியினருக்குப் பிறந்த மூத்த மகன் எங்கள் அப்பா மஹாதேவன். அவருக்கு ஐந்து சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். இந்த உறவுகளில் என் நினைவுக்கு வருபவர்கள் பாட்டி மற்றும் என் எல்லா சித்தப்பாக்களும், ஒரு அத்தை ராசம்மா- மட்டும்தான். என் தாத்தா பற்றிய நினைவே இல்லை. அவர்கள் குடும்பத்தில் என் அப்பாதான் மெத்தப் படித்தவர். B.A.தேறியிருந்தார். ஹரிஹர ஐயர் அனந்த லட்சுமி தம்பதியினருக்குப் பிறந்த பார்வதியை என் அப்பா மணந்தார். என் தாயையே எனக்கு நினைவில் இல்லாதபோது அவர்கள் மண வாழ்க்கைப் பற்றி அறிந்தவை எல்லாமே கேள்விப்பட்டதுதான். என் தாய்க்குக் கூடப் பிறந்தவர்கள் ஆறு சகோதரர்கள்,இரண்டு தங்கைகள். இவர்கள் எல்லோரும் ஓரளவுக்கு நன்கு அறிமுகமானவர்கள்.பெரிய மாமா டாக்டர் சேஷன், மற்றவர்கள்விஸ்வனாதன், கிருஷ்ணன்,நாராயணன் ,ரங்கனாதன் சுப்பிரமணியம் எனும் அம்பி, சித்திகள் சுபத்ரா, மற்றும் சாவித்திரி.

 

 

                      அப்பா மணமாகி குடித்தனம் நடத்தத் துவங்கிய காலங்களில்மாமனார் மாமியார் உதவி நிறையவே தேவைப்பட்டதாம். அவருடைய வாழ்வில் அந்தக் காலத்திலேயே மிகவும் கஷ்டப்பட்ட வாழ்வு என்றும், என் தாத்தா பாட்டிக் குடும்ப உதவிகளாலேயே ஓரளவு வாழ்ந்தார்கள் என்றும் சொல்லக் கேள்வி. இந்த வாழ்க்கையில் புத்திர செல்வங்களாக ஐந்து பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பெற்றுக்கொண்டனர்.அதில் மூத்த பிள்ளை இளவயதிலேயே இறந்து விட்டது.வென்கடாசலம், ஹரிஹரன், ராஜலட்சுமி, பாலசுப்பிரமணியம், சோமனாதன்

என்ற குழந்தைகள்தான் செல்வங்கள்.செல்வங்களா என்ற கேள்விக்குறி இப்போது எழுகிறது.பெற்ற குழந்தைகள் வளர்ந்து ஆளாகி அவர்களை பேணிப் பாதுகாப்பது கொடுத்து வைக்காமல்மகராசி தன்னுடைய 2728-/வயசிலேயே இறந்து போனார்.

 

 

        இந்த நிலையில் என் தாய் மாமா விஸ்வனாதனுக்கும் என் அத்தை ராசம்மாவுக்குமொரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அம்மா இறந்தபோது உறவு விடாதிருக்க, என் தாத்தாவும் பாட்டியும் என் சித்தி சாவித்திரியை, என் அப்பாவுக்கு மறுதாரமாக மணமுடிக்க விரும்பினர். அப்பா ஏதோ சால்ஜாப்பு கூறி,அதனைத் தள்ளிப்போட்டு என் மாமா விஸ்வனாதனுக்கு,என் அத்தை ராசம்மாவை மண முடித்து வைத்தார். பிறகு சிறிது காலத்திலேயே என் மாற்றாந்தாயை ( அவர்கள் அப்போது என் தந்தைவழிப் பாட்டி வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கும் வேலையில் இருந்தார் )காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார். அப்பாவின் இந்த செய்கை என் தாய் வழித் தாத்தா பாட்டி வீட்டில் ஒரு பெரிய மனக் கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் விளைவுகள் எல்லாம் சில பல நிகழ்வுகளுக்கு வித்தாயிருந்திருக்கலாம் என்பதே என் கருத்து. காலத்தின் தேவைகளுக்கேற்ப சூழ்நிலைகளுக்கும் உளைச்சல்களுக்கும் உட்பட்டு அவரவர்கள் எடுத்த முடிவுகளில் எது சரி எது தவறு என்று கணிக்கும் செயலில் ஈடுபடுவது சரியல்ல. அவரவர்கள் எடுத்த முடிவுகளுக்கேற்ப ,அவரவர்கள் வாழ்க்கை அமைந்து, வாழ்ந்தும் இறந்தும் போய் விட்டார்கள்.ஆனால் அப்படிப்பட்ட முடிவுகள் மற்றவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும், மாற்றும் என்பதும் தவிர்க்க முடியாத உண்மை.

 

 

         இவ்வளவு நிகழ்வுகளும் எண்ணங்களும் எந்த அளவுக்கு என் மாற்றாந்தாயைப் பாதிதிருக்கலாம்,அவர்களுடைய வாழ்க்கை முறைக்குக் காரணமாயிருந்திருக்கலாம் என்பதோடு, என் அப்பாவின் சிந்தனைகளும் செயல்களும் பாதிப்படைந்திருக்கக் கூடும் என்பதும் வெறும் யூகங்களாகவே இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எங்களுடைய வாழ்க்கையில்( என் சகோதர சகோதரி )அவரவ்ர்கள் அறிந்து கொண்ட முறையில் அவரவரது எண்ணங்களுக்கேற்ப ,நடவடிக்கைகளுக்கு கார்ண காரியங்கள் கற்பித்து, வாழ்க்கையை வாழ்வதற்கும், வாழ்ந்த முறையை நியாயப் படுத்துவதற்கும், எங்கள் பெற்றோரின் வாழ்வும் அணுகு முறைகளும் முக்கிய காரணங்களாகவே இருக்கும். எந்த ஒரு செயலையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய வேண்டும். விருப்பத்தால் குறையும், வெறுப்பால் குணமும் வெளிப்படாமல் போகும். பிறருடைய வாழ்விலிருந்தும் நாம் அனுபவம் பெற வேண்டியது அவசியம். (தொடரும்)







ஞாயிறு, 17 ஜூலை, 2022

நான்யார்... 2

 

      திருச்சிராப்பள்ளி மெட்ராஸ் நினைவுகள் ஒரு நிழலாகத்தான் தெரிகிறது. இவற்றை நினைவு கூர்வதில் முக்கியம் ஏதுமில்லை. அங்கும் பள்ளிக்குச் சென்றதாக நினைவில்லை. எது எப்படி நடந்திருந்தாலும் என் நினைவுக்கு வருபவை பொரி உருண்டை விரும்பி உண்டது, எப்போதோ வாணியம்பாடிக்குச் சென்றது, புகை வண்டியின் பெட்டிகள் பிரிக்கப்படும்போது, இரயில் உடைந்து விட்டது என்று ஏமாந்து போனது போன்றவைதான். அதன் பிறகு சிறிது காலம் நாங்கள் பெங்களூரில் என் பாட்டியுடன் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அது என் தாய் முதற்கருவுற்றிருந்த காலமாய் இருக்க வேண்டும். அதன் பிறகு என் தந்தைக்கு அரக்கோணத்துக்கு மாற்றலாய் நாங்கள் அங்கு வந்தோம்.

 

      அரக்கோணத்துக்கு நாங்கள் வந்தபோது எனக்கு வயது ஆறாக இருக்க வேண்டும். அரக்கோணத்தில் நாங்கள் நான்கு வருடங்கள் இருந்தோம். மொத்தமாக மூன்று வீடுகளில் இருந்திருக்கிறோம். தர்ம ராஜர் கோவில் அருகே ஒரு வீடு. எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு டூரிங் கொட்டகை இருந்தது. வீட்டில் இருந்து கொண்டே சினிமா வசனங்களையும் பாடல்களையும் கேட்கலாம். எங்கள் வீட்டருகிலேயே டௌன்ஹால் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீடு இருந்ததாக நினைவு. இரவு நேரங்களில் அவர் வீட்டிலிருந்து, அவர் குடித்துவிட்டு வந்து போடும் சப்தங்கள் கேட்கும். எங்கள் தந்தையிடம் அவருக்கு பயம் கலந்த மரியாதை உண்டு. டௌன்ஹால் பள்ளியில்தான் நான் முதன்முதலாக மூன்றாவது வகுப்பில் சேர்ந்திருக்க வேண்டும். எனக்கு முதல் இரண்டு வகுப்புகள் பள்ளிக்குச் சென்றதே நினைவில்லை. ஆறாம் வகுப்பு படிக்கும்போது எனக்கும் ராஜிக்கும், டைஃபாய்ட் வந்து சென்னை ராயப்பேட்டா ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தார்கள். ஏற்கனவே என் தாயாருக்கு டைஃபாய்ட் வந்து குணமாகிற நிலையில் எங்களுக்கும் வந்ததால், நாங்கள் அங்கேயே இருந்தால், அவர்களுக்கு மறுபடியும் வர வாய்ப்பிருந்ததால், அப்படி வந்தால் அது மிகவும் கவலைக்கிடம் தரும் என்பதால், எங்களை சென்னையில் சேர்த்தார்கள். குணமாகி வந்த நிலையில் எங்கள் தந்தைக்கு அலுவலகத்தில் அவர் பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டு,பதவியிறக்கம் செய்து பூனாவுக்கு மாற்றினார்கள். எங்கள் படிப்பு பாதிக்கப் பட்டு, நாங்கள் பாலக்காட்டிற்கு இட மாற்றம் செய்யப்பட்டோம். இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளின் என் பிள்ளைப் பிராய நினைவுகள் எல்லாம் நிழலாடுகின்றன.

 

      நான் ஏற்கனவே சொன்னபடி, வீட்டின் அருகே இருந்த டூரிங் கொட்டகையி பின்புறம் அமர்ந்து நிழலாகப் படங்களைப் பார்ப்போம். நன்றாகக் கேட்போம். அந்தக் கொட்டகையைச் சுற்றிக் காவலாட்கள் நடந்து கொண்டிருப்பார்கள். யாரும் அத்து மீறி டிக்கட் இல்லாமல் நுழையக்கூடாது என்பதற்காக. ஒரு நாள் என் தம்பி சோமா, காவலாட்களுக்கு டிமிக்கி கொடுத்து உள்ளே நுழைந்து விட்டான். இரவு வீட்டில் அவனைத் தேட, அவன் டூரிங் கொட்டகைக்குள் நுழைந்து இருக்கலாம் என்று தோன்றியது. படம் முடியாமல் வெளியே வர முடியாது. அவன் அங்குதான் இருக்கிறான் என்று நிச்சயமுமில்லை. அப்போது ஆச்சு அண்ணா, உள்ளே போய்ப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிக் கிம்பினான். அவனும் கொட்டகைக்குள் புகுந்து படம் பார்க்க முயற்சி செய்வதாகக் கூறி, அவனை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். அப்போது அவனும் சிறிய பையன் தானே. ஆச்சு அண்ணா தன் தம்பியைத்தேடித்தான் போவதாகவும் படம் பார்க்க அல்ல என்றும் வாதாடினான். அவர்கள் அப்போதும் விடவில்லை. அப்போது ஆச்சு அண்ணா தன் சட்டையைக் கழற்றிக் கொடுத்து பணயமாக வைத்துக் கொள்ளக் கூறி உள்ளே சென்று, சோமாவுடன் திரும்பி வந்து தன் சட்டையைத் திரும்ப வாங்கிக் கொண்டார். அது அப்போது எனக்கு பெரிய வீரச் செயலாகப் பட்டது.

 

            அருகே இருக்கும் தருமராஜர் கோவிலில், ஒவ்வொரு வருஷமும் திருவிழா நடக்கும். பத்து நாட்கள் மஹாபாரதக் கதை தெருக்கூத்து முறையில் நடத்தப்படும். கடைசி நாளன்று துரியோதனனை பீமன் கொல்வது நடத்திக் காட்டப்படும். துரியோதனின் உருவம் தரையில் மண்ணால் சிலைபோல் வடிவமைக்கப் பட்டிருக்கும். அதன் தொடையின் உள்ளே, ஒரு மண் குடத்தில் செந்நீர் வைத்து மூடப் பட்டிருக்கும். பீமன் வேடமணிந்தவன் வசனம் பேசி (பாடிக்)கொண்டே வந்து கிருஷ்ணனின் சைகைக்குப் பிறகு,தன்னுடைய கதையால் துரியோதனன் தொடையில் அடிக்க,ரத்தம் பீரிடுவது போலவும் , திரௌபதி அதனை எடுத்துத் தன் கூந்தலில் தடவி தன் தலை முடியைக் கட்டுவது கண்டும் பிரமிப்பாக இருக்கும். நம்முடைய பாரம்பரியத் தெருக்கூத்துகளைக் கண்டு களித்த அனுபவம் நினைவுகளை அசை போடும்போது நிறைவைத் தருகிறது.

 

      அதன் பிறகு தீ மிதி நடைபெறும். நிறைய விறகுகள் கரி முதலியவற்றால் சுமார் நாற்பது ஐம்பது அடி நீளமும், இருபது முப்பதடி அகலமும் கொண்ட பெரிய நெருப்புப் படுக்கை உருவாக்கப் படும். அதைச் சுற்றி சவுக்குக் கட்டைகளைக் கொண்டு வேலி அமைக்கப்படும். தீ மிதி நேரத்தில் எல்லோரும் சுற்றியிருந்து பார்ப்பதற்காகவும், விபத்து நெராமல் இருக்கவும் இந்த ஏற்பாடு. ஒரு சிறிய பையனாக இதைக் காணும் ஆர்வத்தில் அந்த சவுக்கு வேலிக்கு அருகிலேயே இடம் பிடித்துக் காத்திருப்பொம். ஒரு முறைக் கூட்டம் நெருக்கியடித்து முன் தள்ளி சவுக்குக் கட்டையின் ஒரு கூறான பகுதி என் தொடையின் பின் புறத்தில் நன்றாகக் குத்திவிட, காயம் அதிகமாகி ரத்தம் பீரிட்டது. வீட்டில் சொன்னால் திட்டுவார்கள், அடியும் கிடைக்கலாம். ஆழமான  காயத்துக்குள் தெருவில் கிடந்த சில காகிதங்களை கிழித்து எச்சிலால் ஈரப்படுத்தி அதற்குள் அமுக்கி விட்டேன். வலி அதிகமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் யாருக்கும் தெரிவிக்காமல் இரண்டு நாள் கழித்து விட்டேன். மூன்றாம் நாள் என்னைக் குளிப்பாட்ட வந்த என் தாய்க்குத் தெரிந்து திட்டு வாங்கினது எல்லாம் பசுமையான நினைவுகள். அந்தக் காயத்தின் வடுதான் என் பள்ளி இறுதி சான்றிதழில் என்னுடைய அடையாளங்களில் ஒன்றாகக் குறீப்பிடப்பட்டுள்ளது.

 

      இப்போதைய என் சம வயதுக்காரர்களில் மஹாத்மா காந்தியடிகளை நேரில் பார்த்தவர்கள். நான் அறிந்த வரையில் மிகவும் சொற்பமே.எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது.மெட்ராஸுக்கு மஹாத்மா காந்தி வருகை தருவது தெரிந்ததும், அப்பாவுக்கு அவரைப் பார்க்க ஆவல். அதற்காகவே அரக்கோணத்திலிருந்து மெட்ராஸ் சென்றார். அப்போது என்னையும் கூட்டிக்கொண்டு செல்ல, வாழ்க்கையின் ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மஹாத்மாவைசுமார் இருபதடி, முப்பதடி தூரத்தில் இருந்து தரிசித்தோம். அவரிடத்தில் கூட்டத்தில் இருந்து யாரோ என்னவோ கேட்க “ சும்மா உக்காருப்பாஎன்று தமிழில் காந்திஜி கூறியது நன்றாக நினைவில் உள்ளது. இப்போதும் அந்த நிகழ்ச்சியை விபு, டாலியிடம் கூறிப் பெருமைப் படுவதுண்டு.

 

      மஹாத்மா காந்தியின் நினைவு வரும்போது, அவர் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் நன்றாக நினைவுக்கு வருகிறது. நாங்கள் மாலையில் தெருவில் “பேந்தாஎன்ற விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தோம். அப்போது சுவால்பேட்டை தாசில்தார் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தோம். இரண்டு வீடுகள் தள்ளியிருந்த வீடு,சினிமாக் கொட்டகைக் காரரின் வீடு. அவர் வீட்டில் இருந்த ரேடியோவில் இருந்து வந்த செய்தி சிறு பிள்ளைகளான எங்களுக்கு திடுக்கிடலாகக் கேட்டது. காந்தி இற்ந்த செய்தியை தெரு முழுக்கக் கூவித் தெரியப் படுத்தினோம். அன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாவு விழுந்த மாதிரியான ஒரு சூழ் நிலை நிலவியது. அப்பா அழுததும், வீட்டில் அம்மாவின் சித்தி “ மேமை(விட்டில் உதவியாக இருந்தவர்),மாடியில் சென்று தேம்பித் தேம்பி அழுததும் இப்போது நினைக்கும்போது, காந்தியின் செல்வாக்கும் பேரும் புகழும் எப்படி மிகச் சாதாரண மக்களையும் வெகுவாகப் பாதித்தது என்பது புரிகிறது. காந்திஜியின் பாதிப்பு வாழ்க்கையில் இல்லாதவர்கள் அந்தக் காலத்தில் இருப்பதே நினைக்க முடியாதது.

 

       அடுத்த வீட்டு டூரிங் டாக்கீஸ்காரர் ஒருமுறை எங்களைப் படம் பார்க்கக் கூப்பிட்டு(சிறுவர்களை)அனுப்பினர். எங்களுக்கு சேரில் இருக்க அனுமதி இருந்தாலும் நாங்கள் தரையில் அமர்ந்து பார்த்ததாகத்தான் நினைவு. அப்போதே எது நமக்கு நிலையாகக் கிடைக்குமோ அதுவே போதும் என்ற எண்ணம் வந்திருக்குமோ என்னவோ.!அவர் வீட்டுக்குக் காந்திக்குல்லாய் அணிந்தவர்கள் நிறையபேர் வருவார்கள். அவர்களில் பிற்பாடு பிரபலமாக அறியப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஒருவர் என்று என்மனதில் எங்கோ சொல்கிறது( தொட்ரும்)

வெள்ளி, 15 ஜூலை, 2022

நான் யார்

 


                        நினைவலைகள்........அனுபவங்கள்.

                 ----------------------------------

      .வயது ஏற ஏற, வேலையற்ற நேரங்கள் அதிகமாக அதிகமாக, வாழ்ந்து வந்த பாதைகளை நினைத்தும் கிடைத்த அனுபவங்களை அசை போட்டுப் பார்ப்பதிலும் நேரம் செலவாகிறது. அத்தகைய அனுபவங்களைப் பதிவு செய்து வைத்தால் அது ஒரு நல்ல கதைபோல ( என் பார்வையில் )இருக்கும். மேலும் ஒரு சாதாரணமானவன் வாழ்க்கையின் மேடு பள்ளங்களைக் கடந்து வந்ததைத் தன் சந்ததையினருக்கு (அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் )தெரியப்படுத்தி வைப்பதால் குறை ஒன்றும் இருக்கப் போவதில்லை. தெரியப் படுத்தாவிட்டாலும் குறை ஒன்றும் உணரப் படப் போவதில்லை. பின் ஏன் இந்த முயற்சி.?என் நேரத்தை நான் இப்படி செலவிட்டுக் கொள்ளப் போகிறேன். அவ்வளவுதான்

 

      நினைவுகள் எப்போதும் கோர்வையாக வருவதில்லை. ஒவ்வொரு சம்பவமும் அனுபவுமுமே எண்ணங்களாகத் தோன்றும். அப்படித் தோன்றும் எண்ணங்களையும் அனுபவங்களையும் கோர்வையாகக் கொண்டு வருவதே இந்த முயற்சி. இதை எங்கிருந்து தொடங்குவது.? எப்படித் தொடங்குவது.?

      இதை எழுதத் துவங்குகையில் மிக முக்கியமாக ஒரு கேள்வி எழுகிறது. நான் யார்.?நான் யாரென்று தேடி சரியான விடை கிடைத்து விட்டால் ஆன்மீக வழிப்படி சரியான பாதையில்தான் நான் சென்று கொண்டிருக்கவேண்டும். ஆனால் நான் கடந்து வந்த வாழ்க்கையும் பாதையும் வாழ்ந்த முறையும் அந்தத் தேடலின் விளைவா.?இன்னொரு முறைஇந்த வாழ்க்கையை மறுபடியும் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் இதே முறையில்தான் மறுபடியும் வாழ்வேனா.?இல்லை, நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வேறு ஒரு வாழ்க்கையை வாழ்வேனா.?கடினமான கேள்வி. நிச்சயமாக சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். ஆனால் பெரிய மாற்றங்கள் நிச்சயம் இருக்காது. வாழ்வின் அனுபவங்கள் கற்றுத்தந்த பாடம் சில இடங்களில் சில செய்கைகளை மெருகேற்ற உதவியிருக்கலாம். ஆனால் வாழ்ந்த வாழ்க்கையிலும் கொண்ட கொள்கைகளிலும் பெரிய மாற்றங்கள் இருக்காது. என் சுபாவங்களைக் கொஞ்சம் மாற்றியிருக்கலாம். என் கோப தாபங்களையும் உணர்ச்சிகளையும் சற்றே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி இருந்திருக்கலாம். நான் நானாக இருப்பதற்கும் இருந்ததற்கும் நானேதான் காரணம். இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையில் அதிகமாகக் குறைபட்டுக் கொண்டதில்லை. இன்னும் உயர்வாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில சமயம் தோன்றக்கூடும். இன்னும் உயர்வாக என்றால் என்ன அர்த்தம். ?பணவசதி ,வாழ்க்கை முறை இவற்றிலா.?இவற்றைப் பற்றி எப்போதுமே நான் அதிகக் கவலைப் பட்டதில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியுடனும் ,சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இதுவரை வாழ்ந்தாகி விட்டது. இன்னும் உயர்வாக இருந்திருக்கலாம் என்றால் பிறருக்கும் சமூகத்துக்கும் இன்னும் உபயோகமாக வாழ்ந்திருக்கலாம் ஆனால் சூழ்நிலைகளும் நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறையும் என்னை இப்படித்தான் இருக்கச் செய்திருக்கிறது. குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா.!காதலித்துக் கைபிடித்த அருமையான மனைவி அன்பான இரு புதல்வர்கள், பண்பான மருமகள்களென் பேர்சொல்ல வந்தப் பேரக் குழந்தைகள் மூவர். வேறென்ன வேண்டும்.?இனி இருக்கப் போகும் நாட்களைநோயின்றி நிறைவாக வாழ்ந்து யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என் வாழ்வு முடியுமானால் அதுவே என் பேறு. இனி இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைச் சற்றே அசை போடுவேன்.

 

    

     கோவிந்தராஜபுரம் சுப்பிரமணியம் மஹாதேவன் பார்வதி தம்பதியினருக்குப் பிறந்த என் பெயர் பாலசுப்பிரமணியம். தாத்தாவின் பெயரில் என் தந்தைக்குப் பிறந்த முதல் குழந்தை குறை வயதில் இறந்து விட்டதால் நான்காவது பிள்ளையான எனக்கு பாலசுப்பிர மணியம் என்று பெயர் வைக்கப் பட்டது. நான் பெங்களூர் அலசூரில் 11-11-1938-ல் பிறந்ததாகச் சொல்வார்கள். மிருக சீருஷ நட்சத்திரத்தில் பிறந்ததாகவும் சொல்வார்கள். என் பிறந்த நாள் சான்றிதழோ, ஜாதகமோ என் கைவசம் இல்லை. என் தாய் பற்றிய என் நினைவுகள் மிகவும் குறைவு. எனக்கு அவர்கள் முகம் கூட நினைவில்லை. அவர்களுக்கு என் மேல் தனிப் பாசம் என்று சொல்லக் கேள்வி. அவர்கள் இறக்கும் தருவாயில் ஒவ்வொரு குழந்தையையும் அருகில் அழைத்துக் காண்பித்த போது என்னைக் கண்டதும் “ பாலாவா,என்று கூறி அணைத்தார்களாம். பெற்ற தாயின் அரவணைப்பை அறியாமல் போனேன் என்ற ஆதங்கம் வாழ்வின் மலைப் பொழுதில் இருக்கும்போது தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. என்னைப் பெற்ற தாய் இறந்த சில மாதங்களிலேயே என் தந்தை மறுமணம் செய்து கொண்டார். பிறப்பால் பிராமணனான என் தந்தை மறுமணம் செய்தது ஒரு நாயர் சாதிப் பெண்ணை. பெயர் தாட்சாயணி. அவர்கள் மணம் செய்து கொண்ட ஐந்தாறு மாதங்களில் நானும் என் அண்ணா ஹரிஹரனும் (ஆச்சு அண்ணா )என் தாய் தந்தையுடன் திருச்சிராப்பள்ளியில் வாழ வந்தோம். பெரிய அண்ணா வெங்கிடாசலம் என் தந்தையின் தாயாருடன் பாலக் காட்டில் வளர்ந்தான். என் ஒரே சகோதரி (மூத்தவள்) ராஜியும் என் தம்பி சோமனாதனும் பெங்களூரில் என் தாய் வழிப்பாட்டி  தாத்தாவுடன் இருந்தார்கள்.

 

       இப்போதும் நானும் ஆச்சு அண்ணாவும் அந்தக் கால நினைவுகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம். எனக்கு என் தாய் தந்தையுடன்( சிறிய தாயாரானாலும் அம்மா என்றே அழைத்தோம்.) மலைக்கோட்டைக்கும் கடைவீதிக்கும் சென்ற நினைவுகள் புகை மண்டலம் போல் காட்சி தரும். என்னை யானை மீதேற்றியது, கடைவீதியில் ட்ரன்க் பெட்டி வாங்கியது போன்ற நினைவுகள். ஆச்சு அண்ணா என்னைவிட ஐந்தாறு வயது மூத்தவன். அப்போது புழக்கத்தில் இருந்த ஓட்டை காலணாக்களால் மாலை செய்வோம். ஒரு சிறிய வெண்கல யானை வைத்து விளையாடுவோம். அவன் என்னிடம் இருந்து காசு வாங்கி எனக்குத் தெரியாமல் மறைத்து குட்டிச்சாத்தான் கொண்டு போய் விட்டது என்று ஏமாற்றுவான். அப்போது பள்ளிக்குச் சென்ற நினைவில்லை.

 

       அதற்கு முந்தைய கால நினைவுகளில் முக்கியமாக இருப்பது, நான் அலசூரில் இருந்தபோது என்னை என் விருப்பத்துக்கு மாறாக பள்ளிக்கு தர தர வென்று இழுத்துச் சென்றதும் அங்கே தலைப்பாகை அணிந்த ஒருவர் என்னை நைய்யப்புடைத்ததும் ஒன்றாகும். மேலும் ஒரு நாள் நான் என் தாய்வழித் தாத்தா மடியில் அமர்ந்து என் மாமா ஓட்டிய காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வளைவில் நான் கார்க் கதவை நோண்டிக் கொண்டிருக்க, கார் கதவு திறந்து நான் வெளியில் விழ, என்னைத் தொடர்ந்து என் தாத்தாவும் விழ காயங்களுடன் வீடு சேர்ந்த எங்களைக் கண்ட பாட்டியும் மற்றவர்களும் அழுதது நினைவுக்கு வருகிறது. வீட்டில் சில நேரங்களில்   இரவு முழுவதும் பஜனை நடக்கும். அகண்டதார பஜனை என்று பிறகு தெரிந்து கொண்டேன். அது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம்.இரவில் திடீரென ஸைரென் ஒலி கேட்கும்.இரவில் எல்லா விளக்குகளையும் அணைத்து விடுவார்கள். தெருவில் இருப்பவர்கள் ஓடி ஒளிவார்கள். என்ன ஏது என்று தெரியாமல் முழித்த காலம் அது.

 

              என் தந்தைக்கு திருச்சியிலிருந்து சென்னைக்கு (அப்போது மெட்ராஸ்)மாற்றல் ஆயிற்று.பைக்ராஃப்ட்ஸ் க்ராஸ் ரோட் என்று நினைவு. அங்கு எங்கள் சித்தப்பா கிருஷ்ணமூர்த்தியின் வீட்டருகே எங்களுக்கும் வீடு கிடைத்தது. அங்கே என் தம்பி சோமாவும் சேர்ந்து கொண்டான். அவனைப் பற்றி எண்ணும்போது யாரோ ஒரு செக்கச் செவேலென்று ஒரு புதுப் பையனைப் பார்ப்பது போல் இருந்தது. சித்தப்பா சித்தி அவர்களுடைய குழந்தைகள் பொன்னம்மா பாலா ஜெயமணி மற்றும் நாங்கள்சம வயது விளையாட்டுக்காரர்கள். ஆச்சு அண்ணா ஜெயமணியை ,அவள் நிற்கும்போது, கால்களை இடர விட்டுக் கீழே வீழ்த்தி,அழவிட்டு விளையாடுவான். காலையில் வீட்டு முன்பாக மாடு கொண்டு வந்து கட்டி, பால் கறந்து ஊற்றுவார்கள். காலையில் தயிர்க் காரி தயிர் விற்க “ கூவென்று ஒரு வினோதமான ஒலி எழுப்பி வருவார்கள் . தெருவோரத்தில் ஒரு சேரி போல் இருந்ததாக0நிச்சயமற்ற நினைவு(தொடரும்)

செவ்வாய், 5 ஜூலை, 2022

vவயதும் பரிணாமும்

 


வயதாவதின் பரிணாமம் பற்றி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதை நாம் விரும்புவது நாம் குழந்தைகளாக இருந்தபோது தான்  பத்து வயதுக்குட்பட்டவரிடம் வயதைக் கேளுங்கள். பளிச்சென்று பதில் வரும்  நாலரை. ஆறரை ஏழரை என்றெல்லாம் வரும் அடுத்தவயதுக்குத் தாவும் அவசரம் அந்தப் பிராயத்தில்தான் இருக்கும் பதினம வயதுகளில் வயதைக் கூட்டித்தான் சொல்வோம் குறைக்கமாட்டொம் பதினாறு பதினேழு வயதிலேயே  நாம் முதிர்ந்தவர்களாக உணர்வோம் (நான் வளர்ந்து விட்டேன் என்னையும் கணக்கில் சேர்க்க வேண்டும்) 21 வயது ஆகிவிட்டால் எனக்கும் எல்லாம் தெரியும்  என்னும் நினைப்பும் கூடவே வரும் முப்பதுகளில் ஏதோ கனவு காண்பது போல்  உணர்வோம்  நாற்பதுக்கு நாட்களைத் தள்ளுவோம் சந்தேகங்கள் கூடவே வரும்  அப்படி இப்படி என்று ஐம்பதை அடைகிறோம் அறுப்துக்கு வந்து சேருகிறோம்  வந்தவேகம் எழுபதில் புலப்படும்  எண்பதுகளில் எல்லாவற்றிலும் ஒரு சுழற்சி இருக்கும்  தொண்ணூறுகளில்  எல்லாமே இப்போது நடந்தது போல் இருக்கும் வந்து போன 1980 ல் இது அப்படி அது இப்படி என்றே எண்ணம் தோன்றும் .  நூறு ஆயிற்றென்றால்  மீண்டும் வயது என்ன என்று  சொல்லும்போது நூறரை  நூற்றி ஒன்றரை என்று ஆகும்
என்றும் இளமையாய் இருப்பது எப்படி.? இந்த எண்களைத் தூக்கிக் கடாசுங்கள்.நல்ல நட்புகளை நாடுங்கள். எதையும் கற்றுக்கொள்ளும் முனைப்போடு இருங்கள் சோம்பிப் போகாதீர்கள் எதையாவது செய்துகொண்டிருங்கள் ஆங்கிலத்தில் An idle mind is a devil’s den என்பார்கள் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவியுங்கள் கண்ணிர்தரும் நேரங்களையும் எதிர் நோக்குங்கள்  இதம் தரும் சூழ்நிலையை உருவாக்குங்கள் உடல் நலம் பேணுங்கள், மனம் விரும்பும் இடங்களுக்குச்சென்று வாருங்கள் எந்தக் குற்ற உணர்வும் வேண்டாம் அன்பைப் பகிருங்கள். நினைவிருக்கட்டும்  வாழ்வு என்பது நாம் விடும் மூச்சுக்காற்றில் இல்லை நாம் அனுபவிப்பதில்தான் இருக்கிறது.
அவ்வப்போது நான் எழுதிய முதுமை என்பது ஒரு வரம் என்னும் பதிவைப்படியுங்கள்.தெளிவும் கிடைக்கும்

 

திங்கள், 4 ஜூலை, 2022

பொழுது போக்க

 ஒரு பதிவின் தாக்கம் நான் எழுதியதுதான் ஒரு பதிவும்சில பின்னூட்டங்களும் 


              என்னை நானே உணர வை.
                                     -------------------------------------

ஆண்டொன்று கூட அகவை ஒன்று கூடுகிறது.
அதோடு சில வேண்டாத குணங்களும் கூடுகிறது..
ஆண்டவனே, நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்கு
 எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு.

மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொடு.

நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிடு.

அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
 நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை.

நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை
நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.


பின்னூட்டஙள்


  1. //எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
    என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு//

    சூப்பர் வரிகள் சார். vgk

    ReplyDelete
  2. முத்தாய்ப்பான நிதர்சன பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  3. நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
    படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.//

    அனுபவங்கள் என்பன நிகழ்வுகள் என்றால், அவற்றின் பயன் படிப்பினைகள் அல்லவா?.. செயல்களின் விளைவு அவற்றின் விளைச்சலான படிப்பினைகளே. ஓர்ந்து பார்த்தால் ஒவ்வொரு புதிய அனுபவமும் இதுவரைத் தெரிந்திராத
    ஒரு புதிய பாடத்தைச் சுமந்து கொண்டிருப்பது தெரியும்.
    தனிநபர்களுக்கு அவை கிடைப்பதும் கிடைக்காததும் அவற்றை அவரவர் உணரும் பாங்கு பொருத்து இருக்கிறது.

    //அவரவர் வாழ்க்கை அவரவரே வாழவேண்டும்.//

    இத்தனைக்கும் நடுவே முத்தான இரத்தின வரி.


  4. //மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
    நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.

    எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
    நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு//

    மேலே கேட்டது நடந்தால்;
    கீழே கேட்டது நடக்காது!!!

    //அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே

    இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை
    நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.//



  5. ஐயா...

    படிக்கும்போதே மன வேதனையாக உணர்கிறேன். வயது தளரும்போது நம்மின் சிந்தனைகளும் மாறுபட்ட திசையில் பயணிக்கத்தொடங்கிவிடுகின்றன. நம்முடைய பேச்சைக் கேட்பவர்கள் கேட்காத சூழலில்..அறிவுரைகள் அலுக்கும் சூழலில்.. வலிய உதவப் போய் அவமானப்படுகையில்..ஏதேனும் நன்மை கருதிய சொற்களைப் பேசினால் அதைக் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்துவது இவையெல்லாம் வயதின் தளர்வில் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது. ஆனால் இளையபருவம் இவற்றைத் தாங்களம் அனுபவிக்க நேரும் என்று உணர்வதில்லை.

    நான் சிலசமயம் பலருக்கு நானே வலியப் போய் உதவிசெய்து அதனால் பெருத்த அவமானத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்(உறவுகளிடம்).

    காரியத்திற்காக நம்மைப் பயன்படுத்தி பின் காரியம் முடிந்ததும் கறிவேப்பிலை உதறிய கூட்டத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன்.

    ஒரு மனிதன் சாதாரண பணியில் இருக்கும்போது அலட்சியப்படுத்தும் சூழலும் அவனே உயர்பதவிக்கு வந்து பணம் நிறைந்திருக்கையில் அவனிடம் நடிக்கும் கூட்டத்தையும் நான் கண்டு அனுபவித்திருக்கிறேன்.

    வயது ஏறஏற மௌனத்தை அதிகம் கடைப்பிடிப்பது வாழ்வின் இறுதிவரை நம்முடைய மரியாதையை மீட்டெடுக்கும் என்பது என்னுடைய பணிவான கருத்துரை.

    நீண்ட மனப்பகிர்விற்கு உள்ளாக்கிய உங்கள் பதிவிற்கு நன்றிகள்

    e

                                                                                                                                                                                                                                                                                                                                    
    1.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

      வயது ஏறஏற மௌனத்தை அதிகம் கடைப்பிடிப்பது வாழ்வின் இறுதிவரை நம்முடைய மரியாதையை மீட்டெடுக்கும் என்பது என்னுடைய பணிவான கருத்துரை.

      இது தான் நம் மதிப்பை காப்பாற்ற உதவும். சரியான வார்த்தைகள்.






  6.  

             

ஞாயிறு, 3 ஜூலை, 2022

நம்மில் சிலர்

நம்மில் சிலர்


ருவன் ஒரு புதிய ரெஃப்ரிஜெரேடர் வாங்கினான். அவனுடைய பழைய ஃப்ரிட்ஜை வீட்டின் முன்னால் இருந்த காலி இடத்தில் வைத்து, “நல்ல நிலையில் உள்ளது.தேவை உள்ளவர் இனாமாக எடுத்துப் போகலாம் என்று ஒரு அட்டையில் அட்டையிஎழுதி அருகே தொங்க விட்டிருந்தான். இரண்டு மூன்று நாட்களாகியும் யாரும் அதை யாரும் எடுத்துப் போகவில்லை. அடுத்த நாள்” ஃப்ரிட்ஜ் விற்பனை நல்ல நல்ல ககண்டிஷன். விலை ரூ.200-/
என்று அஅட்டையை மாற்றி எழுதினான். அதற்கு மறுநாள் ஃப்ரிட்ஜ் திருட்டுப் போய் இருந்த போயிருந்தது.!
                             --------------------

ஒரு நாள்நான் நண்பர்களுடன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒருவன் “அதோ ,அந்த செத்த பறவையைப் பார் “ என்று ஒருவன் கத்தினான். அநேகமாஅனைவரும் வானத்தை நோக்கி “ எங்கே “ என்று கேட்டனர்.!
                                                        --------------------------
     டுவிஉவீடு வாடகைக்குத் தேடிக் கொண்டிருந்தான் நண்பன் ஒருவன். வீட்டுபுபுபுரோக்கரிடம்  வடக்கு திசை எது ?காலையில் எழுந்திருக்கும்போது சூரிய கது சூரியகதிர் முகத்தில் அடிக்காமல் இருக்க வேண்டும் “ என்றான்.சற்று நேரம்கழித் கழிந்து அவன் மனைவி “ சூரியன் வடக்கில் உதிக்கிறதா “ என்று கேட்டாள். சூரியன் கிழக்கில்கிழக்கில்தான் உதித்துக் கொண்டிருக்கிறது “என்று பதில் சொன்னான் நண்பன். இப்போதெல்லாம் நடக்கும் நிகழ்வுகளை நான் கண்டு கொள்வதில்லை “ என்று கூஎன்று கூறினாள் நண்பனின் மனைவி.!
                           ---------------------------

இக்கட்டாஇக்கட்டான நிலையில் காரில் அகப்பட்டுக் கொண்டால் இருக்கை பெல்டை அறுத்து விடுவிக்கும் கருவி ஒன்று என் சகோதரியின் காரில் உள்ளது. அவள் அதைதன் பத்திரமா காரில் பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறாள்,!
                                                                         --------------------------------------------------------
         
விமானம் இறங்கி வெளியே வரும்போது என் லக்கெஜ் கன்வேயரில் வரவில்லை. LOST LUGGAGE ஆஃபிஸுக்குச் சென்று புகார் கொடுத்தேன். அங்கிருந்த பெண்மணி ஆறுதலாக ‘சரின சைசரியானஇடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். சொல்லுங்கள். நீங்கள் வரவேண்வரவேண்டிய விமானம் வந்துவிட்டதா?”  என்று கேட்டாளே பார்க்கலாம்.!
                                                       ---------------------

ஒரு PIZA பார்லரில் பணியில் இருந்தபோது ஒருவர் தனியாக வந்துபிஜ்ஜா ஒரு PIZZ  ஆர்டர்கொடுத்தார் செய்தார்.கடை சிப்பந்தி அதை நான்கு துண்டுகளாக நறுக்கவா இல்லை ஆறு துண்டுகளாக நறுக்கவா என்று கேட்டார். வந்தவர் சற்று யோசித்து ” நான்குதுண்டு களாகவே நறுக்குங்கள். ஆறு துண்டுகளும் சாப்பிடும் அளவுக்கு எனக்குப் பசி இல்லை” என்றார்.!
                                                                         --------------------------------------

இது நாஆநான்சிபெலோசி என்னும் பிரபலம் பற்றிய உண்மைக் கதை என்றுசொல்லப் சொல்லப படுகிறது. ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேச ஒரு பிரபல மனநிலைநிபுண்ர் மருத்துவவந்திருந்தார். அவரிடம் நான்சி “ சாதாரணமாய்த் தெரியும் ஒருவர் மன நிலைபா பாதிக்கப் பட்டவரா என்று எப்படிக் கண்டு பிடிப்பீர்கள் ?” என்று கேட்டாராம். ” ஒரு சுலபமாகேள்விகேட்போம். அவர் கூறும் பதிலில் அவரைப் பற்றித் தெரிந்துவிடும் “என்றார்.
“ என்ன எஎந்தமாதிரியான கேள்வி.?
“ காப்டன் குக் மூன்று முறை உலகை சுற்றி வலம் வந்தார். அதில் ஒரு முறை அவர் உயிர் உயிர்விட்விட்டார் எந்த முறை.?” எளிதானகேள்வி
” வேறு  கேள்வி கேட்க மாட்டீர்களா. நான் சரித்திரத்தில் கொஞ்சம் வீக் “என்று
என்று கூ நான்சி பலோசி.!
                                              -------------------------------

ஒருவன் காரில் ட்ரைவ் செய்து கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ட்ராஃப்ஃபிக் கேமரா மிலைட்மின்னியது. அதிக வேகத்துக்காக இருக்கும் என்று எண்ணிய அவன் சற்று குறை சகுறைந்த  வேக த்துடன் அதே இடத்தை மறுபடியும் கடந்தான். இப்போதும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. இன்னும் குறைந்த வேகத்தில் மூன்றாம் முறை யும் சென்றான். அப்போதுஇம்முறையும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. குழப்பமாகி நத்தை வேகத்தில் நான்காம் நான்காம்முறை அந்த இடத்தைக் கடந்தான். இப்போதும் கேமரா மின்னிப் படம் எடுத்தது. ஐந்தாம் முறை சிரித்துக் கொண்டே மெதுவாக அவன் அந்த இடத்தைக் கடந்து சென்ன் சென்றான். இரண்டு வாரம் கழிந்து அவனுக்கு சீட் பெல்ட் போடாமல்  ஐந்து முறை வண்டி ஓட்டியதற்காக அபராதம் கட்ட நோட்டீஸ் வந்திருந்தது.!

( எனக்கு வந்த மின் அஞ்சலில் இருந்து தமிழாக்கம் செய்தது. )              





13 comments:

  1. சுவாரஸ்யமான துணுக்குகள்...

    ReplyDelete

வெள்ளி, 1 ஜூலை, 2022

மயில் ஒரு கற்பனை

 


தோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன் 
உன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை  வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.
முருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும்  அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா  பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி  அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .           
.