சனி, 5 பிப்ரவரி, 2011

வழி காட்டுவோம், வாரீர்....வழி காட்டல்கள் பாரீர்....

வழி காட்டுவோம்  வாரீர். ...வழி காட்டல்கள்   பாரீர். ....
..................................................................................................
அவலங்களையே   எழுதி  அலுத்து விட்டது.
இளமை  வேகத்தில்  துள்ளல்  இருந்த  காலத்தில்,
கவிதைகள்  காதலில்  கனிந்திருந்தன
உலகம்  சொர்க்க  பூமியாய் காட்சியளித்தது.

        நாட்கள்  சென்ற  கோலத்தில்
        நானிலம்  நாம்  காணும்  கோணத்தில்
        காலம்  போட்ட  பாட்டையில்
        கடந்து  வந்த  பாதைகளில்
        நடந்ததெல்லாம்  நன்றுதானா...

ஒன்பதில்  ஒன்றாய்ப் பிறந்து,
பட்ட பாட்டில்  நன்றாய்க்  கனிந்து,
பெற்றோர்  தவறும்  வழி காட்ட,
கற்றது  கொண்டு  பெற்றதோ  இரண்டு
இருப்பதைப்  பகிர  சேர்ந்ததும்  இரண்டு
இருப்பிடம்  உணவு  உடையுடன்
கல்வியும்  தானே  சேர்ந்தூட்ட
என்னால்  முடிந்தது  என்றால்,
எவர்க்கும் கை  கூடும்தானே. ... 

           வாழ்வின்  வளைவும்  சுளிவும்
           நாம்  காணும்  கோணத்தின்  விளைவே
           என்றே  கூறிய  எனக்கும்  கூட
           அவலங்கள்  மட்டும்  தெரிவானேன்..
           அதுவும்  என் நோக்கின்  பிழைதானோ..

அரசியலில்  அவலங்கள் அளவிலடங்க்காது
நம்  செயல் எதுவும் மாற்றாததை  இன்று...
அரசியல்  நேர்வுகள்  மட்டும்தான்  வாழ்வா..
எதிர்மறை  சிந்தனை  சீரழிக்காதா  நம்மை

           நம்மை  நாமே   தட்டிக்கொள்ள
           படித்தது   பகிர்வேன்   புவியோரே
           எழுத்தில்   சொல்லில்   குறையிருந்தாலும்
           எண்ணத்தில்   பிழையில்லை   அறிவீரே.
           இந்தியர்   நம்முடைய  பெருமை சிலதை
           ஈண்டிங்குரைப்பேன்   இங்கிதமாக.

சூரிய  ஒளி  கொண்டியங்கும்
தொடு   திரை   கணினியை,
(TOUCH  SCREEN  COMPUTER)
வடிவமைத்ததோர்  இந்திய   விஞ்ஞானி
அதன்  விலையோ  மலிவு
ஒப்பிட்டால்  I-PAD -டோடு

           பெருந்தனத்தார்   பெயர்  பட்டியலிட்டால்
           பத்தில்  நால்வர்  இந்தியரே

உலகில்   இயங்கும்   கணினிகளை
இயக்கும்   பொருளை   சிப்ஸ்   என்பர்.
அங்ஙனம்  இயங்கும்   பத்தில்   ஒன்பதும்
இந்தியன்   வடிவமைத்த   ஒன்றேயாம்.

          பெப்சிகோ   அடோபே   சிடி  பேங்க்
          (PEPSICO , ADOBE, CITY BANK )
          உலகின்  பெரிய  நிறுவனங்கள்
          பெயர் பெற்றியங்குவது  இந்தியரால்
          அதை  இயக்கி  ஆள்வதும்  இந்தியரே.

உலகின்   உயர்ந்த பாலம்
என்றே அறியப்படுவது   இமயத்தில்
ஓடும்  நதிகள் திராசும்   சுருவும் (DRAS , SURU )
இணைக்கக் கட்டியதொன்றாகும்,
கட்டிய   பெருமை கிட்டியதும்
இந்தியப்  பொறியியல்   சாதனையே

            ஆடுகளத்திலும்   சோடையில்லை
            பேரும்   புகழும்   பெற்றோரில்
            சச்சின்  ஆனந்த்  போன்றோரின்
            பெயருடன்  நீளும்   பட்டியலே.

உலகின்   பெரிய   முதலாளி
இந்தியன்   ரெயில்வே   என்றறிவோம்
பணியில்   இருப்போர்   எண்ணிக்கை
பத்து   லட்சம்   மேலாகும்.

           நோபல்   பரிசு  பெற்றோரில்
           ஒன்பது  பேர்  இந்தியராம்.

விரிந்து   பறந்து கிளைகள்   பரப்பும்
கால்குலஸ்   திரிகோணமிதி  அல்ஜீப்ரா
(CALCULAS, TRIGNOMETRY, ALGEBRA)
பிறந்து  வளர்ந்ததும்  இந்நாடே.

         அண்டவெளிக்கு   ராக்கெட்  அனுப்பும்
          திறன்  படைத்த  நாடுகளோ   நான்கு.
         அதில்  நமதும்  ஒன்றே  என்றே
          பூரிப்படைவோம்   நன்றே.

இதுவும்  கூறலாம்   இன்னும்   கூறலாம்
கூறிக்கொண்டே தலை  நிமிர்ந்து   நிற்கலாம்.
தடம் காட்ட   யாருமில்லை  என்று
இருக்கக்கூடாது   அந்த குறை
தடம்   படைத்தோர்  சாதனைகள்  சில
காட்டிவிட்டேன்   அடையாளம்.

           எண்ணில்  அடங்கா  வாய்ப்புகள்
           கண்  முன்னே  நிற்பதறியாமல்
           முடங்கிக்  கிடத்தல்  சரிதானோ. ..

அரசியல்  நடத்தும்  அநியாயம்
ஊழல்   சாக்கடை   என்றெல்லாம்
எதிர் மறை  எண்ணங்கள்
கோஷம்  இட்டே  வந்தாலும்
உழைப்பும்  ஊக்கமும்   ஒன்றானால்
அடைவோம்   இலக்கை   நிச்சயமாய் .

            காணும்   கனவுகள்  நனவாக,
            வேணும்   உறுதி   உள்ளத்தில்
            இருப்போம்  நாமும்  நல்லவராய்
            அதுவே  வழி  காட்டும்  இளையோரை.
========================================









 

















































.    .  

17 கருத்துகள்:

  1. இதை எழுதுவதற்கு நீங்கள் பண்ண study நிறைய இருந்திருக்கும்.
    அருமை சார்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  3. வழிகாட்டும் சிந்தனைகளுக்கென் வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  4. இந்திய‌ர் ப‌ற்றி இய‌ற்றிய‌ க‌விதையில்,
    அங்கு, இங்கு, எங்கு தேடினிம்
    காணவில்லை, ஒரு அர‌சிய‌ல் த‌லைவ‌ரையும்.
    சுவிஸ் வ‌ங்கியில் அதிக‌மிருப்ப‌து ந‌ம் ப‌ண‌மாம்,
    ஆப்பிரிக்க‌ர்க‌ளை விட‌ அதிக‌ம் ஏழ்மையிலும் நாம் தான்.
    இந்த‌ முற‌னை, இந்த‌ அறிஞ‌ர்க‌ள் ஏன் தீர்க்க‌வில்லை.
    கோக், இன்சூர‌ன்ஸ், கார், அழகு கிரீம் விற்க‌
    ஏன் போகிறார்க‌ள் இந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ள்?
    திருடிய‌ ப‌ண‌த்தில் தொட‌ங்கிய‌ தொலைகாட்சியில்
    "ஊழ‌ல் எனக்கு நெருப்பு" என எப்ப‌டி பேச‌ முடிகிற‌து, இவ‌ர்க‌ளால் ஐயா?

    பதிலளிநீக்கு
  5. இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
    தலைவர்களை நினைத்து தலைகுனிந்து கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  6. தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
    http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

    பதிலளிநீக்கு
  7. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. Incidentally, my blog posts have some practical answers for your questions Sir,
    Please visit and comment.
    www.usssvenkat.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. என் பதிவுக்கு வருகை தந்து படித்து வாழ்துத் தெரிவிக்கும் கலாநேசன், வாசன், சிவகுமாரன், டாக்டரையா, பாரத்பாரதி,ஆயிஷா,வெங்கட்,அனைவருக்கும் என் நன்றி. என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த அன்புடன் மலிக்கா வுக்கும் என் ஸ்பெஷல் நன்றி

    பதிலளிநீக்கு
  10. திரு. நாகசுப்பிரமணியத்துக்கு நான் இதை எழுதுவதா வேண்டாமா என்று எண்ணுவதில்தான் அதிக நேரம் செலவு செய்தேன். மற்றபடி ஸ்டடி எதுவும் அதிகமில்லை. படித்ததைப் பகிர்ந்தேன். அவ்வளவுதான்.பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. தங்க தமிழ் எழுத்துக்கும்
    தங்களுக்கும் முதல் வணக்கம்

    மிக நன்றாக இருக்கிறது
    தங்கள் வளமான வரிகள்.

    மீண்டும் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  12. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி, சிவா அவர்களே.

    பதிலளிநீக்கு
  13. எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது பாலு சார்.ஆனா நம்ம ஜனத் தொகைக்கும் நம்ம வரலாறின் நீளத்துக்கும் இது போதாதோன்னு தோணுது.

    பதிலளிநீக்கு
  14. இது மட்டும்தான் என்றால் இது போதாதுதான், சுந்தர்ஜி.
    இன்ஸ்பிரேஷனுக்காக இவை சில எடுத்துக்காட்டுகளே.
    எனக்கும் எல்லாம் எடுத்துக்காட்ட ஞானமும் இல்லை,நேரமும் இல்லை,மெனக்கெடவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை அரசியல் நீங்கலாக நாம் எதிலும் சோடை போகவில்லை. இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  15. தன்னம்பிக்கை ஊட்டும் மிகச் சிறந்த பதிவு
    இந்த பதிவில் சொல்லப்பட்ட விஷயங்களும்
    சொல்லிப்போன விதமும் மிக அருமை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு