செவ்வாய், 17 மே, 2011

பெண்கள் முன்னேற்றம்.....கதையல்ல...நிஜம்.

பெண்கள்  முன்னேற்றம்...கதையல்ல..நிஜம்.
--------------------------------------------------------------
இவனும் அவனும் பால்ய கால நண்பர்கள் 
பள்ளியில் ஒன்றாய் படித்து வந்தவர். 
சந்தித்துக் கொண்டனர் அயல்தேச அமெரிக்காவில்.
நலம் விசாரித்து நன்றாக அளவளாவினர். 
இவன் தகவல் நுட்பம் படித்துத் தேறி நல்லதொரு 
வேலையில் நாலு காசு நலமாக சம்பாதிக்கிறான். 
அவன் பொறியியல் பட்டதாரி, ஒரு தொழிற்கூடத்தில் 
பார்ப்பவர் பொறாமைப்படும் மேலாளர் பதவி. 

         பேச்சு வளர்ந்து, திசை மாறி குடும்பம் பற்றிய 
         தகவல்கள் அறிய அவன் ஆவல் கொண்டான்.

இவனுக்கோ  தன கதையை  சொல்ல முதலில் தயக்கம். 
சில பல உந்துதல் பிறகு எடுத்துரைத்தான். 
பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை இவன் 
பார்த்து வந்ததும், அவளுக்கும் விருப்பம் என அறிந்து 
மகிழ்ந்ததும் ,பின்னர் மணமுடிக்கப் போன நாளில் ,
நடந்த அவமானமும், அவலமும் நிறைந்த நிகழ்வை 
தட்டுத்  தடுமாறி , திக்கித் திணறி எடுத்துரைத்தான். 

         விடிந்தால் திருமணம் என்ற நிலையில் 
         மணமகள் எவனுடனோ ஓடிப்போய்விட்டாள்.

இவன் சொல்லி முடித்ததும் அவன் வாய் விட்டுச் 
சிரித்தான் .சிரித்து முடித்துப் பின்னர் கூறினான்.

          இவனுக்கு நேர்ந்தது அவமானமல்ல. அதில் 
         அகப்படாமல் தப்பித்த கதைதான் என்றான்.

அவன் கதையை அவன் கூறக் கேட்டான் இவன். 
அவன் மணமுடித்துக் கூட வந்தவள் உறவு, 
அமெரிக்க மண்ணில் கால் பாதிக்கும் வரைதான் .
கூட்டிச் சென்று அவளுடன் குடும்பம் நடத்த
விமான நிலையத்தில்  அவள் காதலன்  காத்திருந்தான்.

          பின் ஏன் அவள் மணமுடித்தாள்  என்றிவன் கேட்க
          அவன்  சொன்னான்; அவனை மணந்தது மூலம்
          கிடைத்த "விசா" தான் ,அமெரிக்க மண்ணில் கால்
          வைக்க அவளுக்குத் தேவை .புது வாழ்வு நடத்த
           பழைய காதலன் காத்திருந்தான்.

இருவர் கதைகளிலும் கண்ட பெண்கள் பற்றி
அறிந்த பின்னர் , யார் சொல்ல முடியும்  இந்தியப்
பெண்கள் முன்னேற வில்லை என்று .
---------------------------------------------------------------------









 

20 கருத்துகள்:

  1. போட்டுத் தாக்குவது என்ற முடிவில் இருக்கிறீர்கள் பாலு சார்.

    சொல்லித் தெரிவதில்லை இப்போதெல்லாம். பட்டுப் புரியக்கூடிய காலம் இது.

    பதிலளிநீக்கு
  2. அற்புதம்
    அமர்க்களம்
    புதுமை பெண்கள்
    ஆயினும் இவர்களின் மனம் அறியாமல்
    திருமணம் செய்வித்த பெற்றோர்களை
    என்ன சொல்வது ???

    பதிலளிநீக்கு
  3. இரண்டாவது நீங்கள் சொல்லி இருப்பது போல, எங்களுக்குத் தெரிந்தவர் ஒருவருக்கும் நடந்து இருக்கிறது. :-(

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு
    வளர்ச்சி வீக்கம் இரண்டுக்குமான வித்தியாசம்
    தெரியாமல் பல விஷங்களில் நாம்
    குழம்பிப் போகிறோம்
    வீக்கத்தின் பக்கத்தை மிக அழகாக
    பதிவு செய்துள்ளீர்கள்
    சிந்தனையை தூண்டிப்போகும்
    நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நான் எங்கோ கேட்ட ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது:

    அது ஒரு மனநோய் மருத்துவமனை.
    முற்றிய நிலையில் ஒரு சிலர் அனுபதிக்கப்பட்டிருந்தனர்.
    ஒரு VIP அன்று அங்கு வருகை புரிந்தார்.
    முதல் மனநோயாளி மனிதனைப்பார்த்தார். அவனது பிரச்சனையை டாக்டரிடம் விசாரித்தார்.
    ஒரு பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தான். காதல் தோல்வியால் மனம் நொந்து இங்கு வந்துள்ளான்.
    பிறகு அடுத்த மனநோயாளியை அந்த VIP பார்த்தார். அவனுக்கு என்ன பிரச்சனை என்றார்.
    முதல் நோயாளி காதலித்த அதே பெண்ணை இவன் கல்யாணம் செய்துகொண்டதால் மனம் நொந்துபோய் இங்கு வந்து அட்மிட் ஆகியுள்ளான் என்றார் அந்த மருத்துவர்.
    அந்த VIP உள்பட நாமும்
    “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்பதை உணர்ந்து கொள்ள உங்கள் பதிவும் இந்த சிறுகதையும் உதவக்கூடும்.

    பதிலளிநீக்கு
  6. "Truth is stranger than fiction"-என்பார்கள்; தங்களுடைய 'சிறுகதை'- நன்றாக இருக்கிறது... ஆனால் 'கதையல்ல-நிஜம்' என்கிறீர்கள்... அதுதான் மிகவும் கவலை அளிக்கிறது... Quo Vadis?

    - மாலி

    பதிலளிநீக்கு
  7. 'முன்னேற்றம்'- என்றால் என்ன? அதைப் பற்றி விளக்கும் தகுதியை யார் பெற்றிருப்பது? அந்த விவாதத்தினுள் இறங்க வேண்டாம் என்று நினைத்தேன். 'சிறப்பு பட்டி மன்றம்' நடத்த வேண்டிய தலைப்பு இது. 'முன்னேற்றம்' அடைந்த பெண்களால்- அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை அவர்களே கணித்து முடிவு செய்துகொள்ள இயலும். அவர்களால் தனித்து இயங்க இயலும். தங்களது இந்த பதிவிலும் இதையே தாங்கள் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். மிகவும் அழகாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    ஆனால் எனக்கு என்ன வருத்தம் தெரியுமா?

    ஓடிப்போகவும், பழைய காதலுடன் கூடி வாழப்போகவும் தெரிந்து கொண்ட 'பெண்கள் முன்னேற்றத்தினால்' - ஏன் இன்னும் பெற்றோர் மற்றும் உறவுகள் மத்தியில் பேசி-பழகக் கூடும்- முன்னேற்றம் அடைய முடியவில்லை?

    நம் நாட்டு பெண்கள் எத்தனையோ துறையில் முன்னேற்றம் அடைந்திருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் வீட்டில்- அவர்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. சமுதாய அளவிலும் அவர்கள் முன்னேறவில்லை. பரந்த உலகில், அவர்களது துறையில் அவர்களது கருத்தை தெரிவிக்க அவர்கள் பெற்ற சுதந்திரத்தை- அவர்கள் வீட்டில், அவர்களைப் பற்றிய, அவர்களின் விருப்பு-வெறுப்பைப் பற்றிய கருத்துக்களை தெரிவிக்க முயலுகையில் அவர்களது சுதந்திரம் பறிக்கப் பட்டு விடுகிறது. அத்தகைய கூண்டிலிருந்து அவர்கள் வெளிவர எதையும் செய்யத் துணிந்தவர் ஆகிறார்கள். அவர்களிடம் வேறு வழியில்லை. "இத்தகைய 'தப்பித்துப் போகும்' அவலத்தை- 'பெண்களின் முன்னேற்றம்' என்று கூறுவது சரியாகுமா"? இது எனக்கு விளங்கவில்லை...

    பதிலளிநீக்கு
  8. @சுந்தர்ஜி
    போட்டுத்தாக்கும் எண்ணத்தில் இதை எழுதவில்லை. சிலர் போகும் போக்கு கண்டு பொறுக்காமல் எழுதியது.

    பதிலளிநீக்கு
  9. @ஏ.ஆர். ராஜகோபாலன்.
    இதில் பெற்றோர் தவறு எங்கே இருக்கிறது.?முதல் கதையில் இவள் சம்மதம் அறிந்தே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரண்டாம் கதையில் மனம் திறந்த எண்ணப்பரிமாற்றங்கள் இல்லாததுதான் காரணம்.

    பதிலளிநீக்கு
  10. @சித்ரா
    உங்கள் கூற்றுப்படி நான் எழுதியதுபோல இன்னும் பல நிகழ்வுகள் நடந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  11. @ரமணி
    இளைய சமுதாயம் இப்படித்தான் சுதந்திரம் என்பதை தவறாகப் புரிந்துகொண்டு திசை மாறிப்போகிறார்களோ என்னும் எண்ணம் கவலை அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. @கோபு சார்
    நான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று சொல்ல வரவில்லை என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. @வி.மாலி.
    எனக்கும் கவலை அளித்ததால்தான் பதிவாக்கினேன்

    பதிலளிநீக்கு
  14. @மாதங்கி மாலி
    உங்கள் பின்னூட்டம் படித்தபிறகு நான் பெண்கள் முன்னேற்றம் என்று தலைப்பிட்டது தவறோ என்று தோன்றுகிறது. நிச்சயமாக இந்தமாதிரி செய்கைகளை முன்னேற்றம் என்று கூறவே மாட்டேன். அது ஒரு கேள்வியாக இருந்திருக்க வேண்டும். IT IS NOT LACK OF FREEDOM OF EXPRESSION BUT LACK OF CONFIDENCE IN THEIR PARENTS THAT MIGHT HAVE PROMPTED THEM TO (SHALL I CALL IT ) REBEL.?

    பதிலளிநீக்கு
  15. @ GMB...

    "IT IS NOT LACK OF FREEDOM OF EXPRESSION BUT LACK OF CONFIDENCE IN THEIR PARENTS THAT MIGHT HAVE PROMPTED THEM TO (SHALL I CALL IT ) REBEL.?" ...

    You would say this... and so would my dad... But 'Lack of confidence in parents'. Somewhere along the line- parents give a certain impression to the children that "there are certain things that are not allowed to be discussed in this house". "After a certain age- a child must be treated as a friend"- or so they say. But that's exactly the age- when parents tend to become "protective"! "Protective" tendency- I feel- that in some cases- are not 'expressed' properly by the parents. So the children mistake 'protectiveness' as 'control' or worse 'restriction'.
    You may not agree with me on certain aspects... I can understand... My dad would not agree with me either... He would call it- 'Generation-Gap'...

    பதிலளிநீக்கு
  16. @மாதங்கி மாலி.
    FOR ANY GENERATION VALUES IN LIFE REMAIN SAME.PARENTS TEND TO BE PROTECTIVE TOWARDS GIRL CHILDREN AS THEY ARE ADMITTEDLY WEAKER SEX, I MEAN IN PHYSICAL TERMS.I FEEL THAT YOU YOURSELF ARE NOT VERY CLEAR IN YOUR PERCEPTIONS. YOU CAN DISCUSS WITH YOUR DAD AND YOU NEED NOT COME TO ANY CONCLUSION ON GENERATION GAP.

    பதிலளிநீக்கு
  17. மாதங்கியின் கருத்து நியாயமானது... யோசிக்கவும் கவலைப்படவும் இதில் நிறைய இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. இந்த இரு நிகழ்வுகளும் விபத்தின் கணக்கில் சேர்த்துவிட்டு, பெண்களை கண்ணியமாகவே பார்க்க வேண்டும். எப்பவாவது திருடிகளிடம் மாட்டிக்கொள்வது தற்காலிக துரதிர்ஷ்டம். ஜுன் போனால் ஜுலைக் காற்றே....
    உளவியல் ரீதியில் இந்தத் திருடிகளின் போக்கை நியாப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    பதிலளிநீக்கு
  19. @மோகன் ஜி
    அதனால்தான் மாதங்கிக்கு விளக்கமே கொடுத்தேன்.
    @வெங்கட்
    நான் எங்குமே அவர்களை நியாயப்படுத்தவில்லையே.

    பதிலளிநீக்கு
  20. G.M Balasubramaniam said...
    @கோபு சார்
    //நான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று சொல்ல வரவில்லை என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

    ஐயா, வணக்கம். மீண்டும் ஒருமுறை படித்து பிரச்சனையை நன்றாகவே புரிந்து கொண்டேன்.
    இதுபோல ஆங்காங்கே நிகழும் ஒரு சில சம்பவங்களுக்கு நாம் வருத்தப்படுவதையும், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதையும் தவிர வேறெதுவும் செய்ய முடியாத நிலை தான் உள்ளது.

    இதில் அந்த காதல் ஜோடிகளைத் தவிர, மற்ற நெருங்கிய உறவினர் & இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே பலவித பாதிப்புகள் ஏற்படக்கூடும் தானே; கேட்கவே மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது.

    முன்கூட்டியே பெற்றோர்களுடன் மனம் விட்டுப்பேசி யாருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் ஏதாவது நல்லவிதமாக செய்திருக்கலாம் தான்.

    ஆனால் பெரும்பாலான கேஸ்களில் இளம் வயதும், காதல் வேகமும், நம்பிக்கையின்மையும் அவர்கள் கண்களை மறைத்து விடுகிறது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு