இப்பூவுலகே எனக்கன்றோ
------------------------------------
பேரூந்து ஒன்றில் பயணம் செய்தேன்.
பேரழகி ஒருத்தியைப் பக்கத்தில் பார்த்தேன்.
என்ன அழகு இவள்,நானேன் இல்லை அவள் போல்,
எண்ணி மருகிய என் கவனம் சிதறியது.
நிறுத்தத்தில் அவள் இறங்க எழுந்தவள்
தடுமாறி கீழே விழப் போனவளைக்
கை தூக்கிப்பிடித்து நிறுத்தினேன்.
புன்னகைத்து நன்றி சொன்னவள் செல்கையில்
கவனித்தேன் அவளுக்குக் கால் ஒன்று கட்டை என்று.
ஆண்டவனே, நான் குறைப் படுகையில்
என்னை மன்னித்து விடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கால்கள்.
மென்று சுவைக்க மிட்டாய் வாங்க
பெட்டிக்கடைப் பக்கம் சென்றேன்.
மலர்ந்து சிரித்த சிறுவனுடன் சிறிது நேரம்,
பேசிச்செல்ல மனம் மிக விழைந்தது.
தாமதமானாலும் பாதகமில்லை, பேச்சுக்கொடுத்தேன்.
காசு கொடுத்துப் போகையிலே, அதனைத்
தடவிப் பார்த்த பையன் நன்றி சொன்னான்;
கண்ணில்லா அவனிடம் அன்பாய்ப் பேசியதற்கு.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்து விடு.
எனக்கிருக்கிறது காண நல்ல இரு கண்கள்.
தெரு ஓரத்தில் ஆடிக்கொண்டிருந்த
சிறுவர்கள் மத்தியில் ,பார்த்துப் பரவசமாகி
நிற்கும் நானறிந்த சிறுவனிடம் அவன் ஏன்
ஆடப் போகவில்லை என்றே கேட்டேன்
மலங்க விழித்த அவனுக்கு, காதிரண்டும்
கேளாது என்பதனை மறந்து விட்ட நான்.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்துவிடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கேட்கும் காதுகள்.
எ ங்கும் என்னை நடத்திச் செல்ல நல்ல
இரு கால்களும்,
அழகான அஸ்தமனத்தில் ஆதவனை ரசிக்க
இரு கண்களும்,
என்னைச் சுற்றி நடப்பதைக் கிரகிக்க நல்ல
இரு காதுகளும்
இருக்கையிலே குறைப்படுதல் தவறன்றோ...
இந்த உலகையே ரசிக்க வைக்க,
எல்லாப் புலன்களும் எனக்கிருக்க
இந்தப் பூவுலகே எனக்கன்றோ.!
============================================
------------------------------------
பேரூந்து ஒன்றில் பயணம் செய்தேன்.
பேரழகி ஒருத்தியைப் பக்கத்தில் பார்த்தேன்.
என்ன அழகு இவள்,நானேன் இல்லை அவள் போல்,
எண்ணி மருகிய என் கவனம் சிதறியது.
நிறுத்தத்தில் அவள் இறங்க எழுந்தவள்
தடுமாறி கீழே விழப் போனவளைக்
கை தூக்கிப்பிடித்து நிறுத்தினேன்.
புன்னகைத்து நன்றி சொன்னவள் செல்கையில்
கவனித்தேன் அவளுக்குக் கால் ஒன்று கட்டை என்று.
ஆண்டவனே, நான் குறைப் படுகையில்
என்னை மன்னித்து விடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கால்கள்.
மென்று சுவைக்க மிட்டாய் வாங்க
பெட்டிக்கடைப் பக்கம் சென்றேன்.
மலர்ந்து சிரித்த சிறுவனுடன் சிறிது நேரம்,
பேசிச்செல்ல மனம் மிக விழைந்தது.
தாமதமானாலும் பாதகமில்லை, பேச்சுக்கொடுத்தேன்.
காசு கொடுத்துப் போகையிலே, அதனைத்
தடவிப் பார்த்த பையன் நன்றி சொன்னான்;
கண்ணில்லா அவனிடம் அன்பாய்ப் பேசியதற்கு.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்து விடு.
எனக்கிருக்கிறது காண நல்ல இரு கண்கள்.
தெரு ஓரத்தில் ஆடிக்கொண்டிருந்த
சிறுவர்கள் மத்தியில் ,பார்த்துப் பரவசமாகி
நிற்கும் நானறிந்த சிறுவனிடம் அவன் ஏன்
ஆடப் போகவில்லை என்றே கேட்டேன்
மலங்க விழித்த அவனுக்கு, காதிரண்டும்
கேளாது என்பதனை மறந்து விட்ட நான்.
ஆண்டவனே நான் குறைப்படுகையிலே
என்னை மன்னித்துவிடு.
எனக்கிருக்கிறது நல்ல இரு கேட்கும் காதுகள்.
எ ங்கும் என்னை நடத்திச் செல்ல நல்ல
இரு கால்களும்,
அழகான அஸ்தமனத்தில் ஆதவனை ரசிக்க
இரு கண்களும்,
என்னைச் சுற்றி நடப்பதைக் கிரகிக்க நல்ல
இரு காதுகளும்
இருக்கையிலே குறைப்படுதல் தவறன்றோ...
இந்த உலகையே ரசிக்க வைக்க,
எல்லாப் புலன்களும் எனக்கிருக்க
இந்தப் பூவுலகே எனக்கன்றோ.!
============================================
நன்றி, கோபு சார். உங்கள் மூலம் திரு எல்.கே. அவர்களூக்ம் நன்றி. நீங்கள் குறிப்பிட்டபடி செய்ததில் கமெண்ட் பெட்டி வேலை செய்கிறது. இது சோதனை முயற்சி.
பதிலளிநீக்குஇரண்டு நாட்களாக கருத்துரை எழுத முடியாமல் சிரமப்பட்டேன். நன்றி. உங்களின் அனுபவம் எல்லோருக்கும் பழகியது என்றாலும் பார்க்கிற பார்வை வேறுபட்டிருக்கிறது. அதில் பரிவு தெரிகிறது. தொடர்க ஐயா.
பதிலளிநீக்குஇருப்பதை விட்டு பறப்பதை நினையாதே
பதிலளிநீக்குஎன்ற முதுமொழியை
நிருபனமாக்கிய கவிதை
அசத்தல் கவிதைப்பதிவு