திங்கள், 20 ஜூன், 2011

பதி சொல் தட்டா பத்தினி.

பதி  சொல்  தட்டா  பத்தினி
-------------------------------------

ஆண்டாண்டு  காலம்  பாடுபட்டு  உழைத்துச்
சேர்த்த  பணத்தை மரித்த பின்னும்  கூடவே 
எடுத்துச்  செல்ல விரும்பினான், உலோபி  ஒருவன்.

வாழ்நாளில் பெரும்பகுதி அவன் கூடவே
இருந்து குப்பை கொட்டிய மனைவியிடம் 
அவனை அடைக்கும் சவப் பெட்டியில் 
அவன் கூடவே அவன் சேர்த்த பணமும் 
அவனுடன் தொடரப்  புதைக்கப் பட 
வாக்களிக்க  வேண்டிக்  கேட்டுக் கொண்டான். 
பார  புகழும்  பத்தினியவள்  பதிக்கு 
நிச்சயம் செய்வதாய் சத்தியம் செய்தாள். 

அவன் மூச்சுப் பிரிந்த நாளில் 
சொன்ன சொல்லைக் காக்க சவப் பெட்டியில்
கூட  வைத்தாள் ஒரு பேழையை.

இதை கண்ட அவள் சகி,
இவளுக்கென்ன  புத்தி மட்டா, 
சவத்துடன் பணப்பேழை வைப்பது
சரியான செயலா - சந்தேகம்
தீர்க்கவே  சிநேகிதியைக் கேட்டாள்
புவியில் யாரும் செய்யும் செயலோ இது.. 
புத்தி மழுங்கி விட்டதா உனக்கு என்றாள். 

சத்தியம் அல்லவா செய்து விட்டேன். 
சவப் பெட்டியில் பணம் எடுத்துச் செல்லல் 
அவனுக்கு இடர்கள் பல அளிக்கும் --ஆகவே 
அவன் பணமனைத்தும் வங்கியில் இட்டு 
காசோலையாக்கி அவனுடன் அனுப்புகிறேன்
அவன் செல்லுமிடத்தில்  பணமாக்கிக் கொள்ளட்டும்
என்றே புன்னகை புரிந்தாள்  பதி சொல் தட்டா பத்தினி. 
--------------------------------------------------------------







8 கருத்துகள்:

  1. இது ஏற்கனவே கேள்விப்பட்ட கதையே ஆனாலும், தாங்கள் அருமையாகச்சொல்லி, நினைவு படுத்தினீர்கள் மீண்டும். நன்றி.

    அவள் “ப்தி சொல் தட்டா பத்தினி” மட்டுமல்ல, நன்கு தற்காலத்திற்குத் தகுந்தபடி, பிழைக்கத் தெரிந்தவளும் கூட.

    பாராட்டுக்கள் - பத்தினிக்கும், பத்தினையைப்பற்றி பதிவிட்ட தங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை
    பத்தினி என்பதற்கு அதிபுத்திசாலி என
    அர்த்தம் ஏதும் தமிழில் இருக்குதோ?
    பணத்தையும் காப்பாற்றியாச்சு
    சத்தியத்தையும் காப்பாத்தியாச்சு
    இவள் அல்லவோ பத்தினி
    சூப்பர் பதிவு

    பதிலளிநீக்கு
  3. கதையைப் படித்துவிட்டு கதை சொல்லும் நீதியை விட்டுவிடாதீர்கள். நாம் அனைவருமே ஏறக்குறைய கதை நாயகனின் நிலையில்தான் இருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். என்ன, நம் சவப்பெட்டியில் பணத்தை வைக்கச்சொல்லவில்லையே தவிர, நாம் சம்பாதித்த பணத்தை என்ன செய்கிறோம்? பேங்க் லாக்கரில் உறங்குகிறது. இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

    ஓரளவிற்காவது நாம் சம்பாதித்த பணத்தை நமக்காக செலவழியுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்துவைத்துக்
    கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்கு
    ஆவிதான் போயினபின்
    யாரே அனுபவிப்பார்
    பாவிகாள் அந்தப்பணம்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கருத்துள்ள கதையை உங்களின் உன்னத பாணியில் பதிவிட்டது அருமை அய்யா, சகலரும் உணரவேண்டிய செய்தி

    பதிலளிநீக்கு
  6. @ஸ்ரீராம்
    @கோபு சார்
    @ரமணி
    @குணசேகரன்
    @ திரு. கந்தசுவாமி
    @சுந்தர்ஜி
    @ஏ.ஆர். ராஜகோபாலன். வருகைக்கும் கருத்துக்கும் என் நெஞசார்ந்த நன்றி. தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு