..கதை கட்டுரை (.இறுதி பாகம் )
-----------------------------------------
( முன் கதை . பழைய கடிதம் ஒன்றினைக் காண நேரிட்டு அந்தக்
கடிதம் எழுதியவன் இன்று எப்படி இருக்கிறான் என்று அறியும்
ஆவலால் உந்தப்பட்டு, வாசுவும் அவன் மனைவி தங்கமும் ,
கடிதத்தில் இருந்த முகவரி தேடி பயணிக்கிறார்கள் )
திருச்சூர் சென்று, அங்கு ஒரு ஓட்டலில் தங்கி, ஒரு நாள் இருந்து,
பிறகு பெருங்கோட்டுகா என்ற இடம் எங்கிருக்கிறது என்று விசாரித்து ,
தேடிக் கண்டுபிடித்து அங்கு சென்றால் வாசுவுக்கு முதலில் ஒன்றுமே
புரியவில்லை. அந்த இடம் ஒரு ஆசிரமமாம் .அதன் தலைவர் யாரோ
ஒரு பிரம்ம தேவ சுவாமிகளாம். வாசுவுக்கும் தங்கத்துக்கும் ஒரே
ஏமாற்றமாகப் போய்விட்டது. .சரி. வந்ததுதான் வந்தோம் அந்த சுவாமி
களையாவது தரிசித்துச் செல்லலாம் என்று உள்ளே சென்றால், வயதான
தேவன்தான் பிரம்ம தேவ சுவாமிகளா.?.. வாசுவுக்கு தலையே சுற்றும்
போலாகி விட்டது. .பிரம்மதேவசுவாமிகள் என்னும் வாசுவின் பழைய
நண்பன் தேவன் வாசுவைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போய்
பிறகு சுதாரித்துக் கொண்டார். அருகில் வர வாசுவை சைகை காட்டி
அழைத்தார். வாசு அருகில் சென்றதும் எதுவும் பேசு முன்பாக கண்களில்
இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. வாசுவுக்கு ஒன்றும்
விளங்கவில்லை.
"தேவா ....நீயா ...நீங்களா ..பிரம்மதேவ சுவாமிகள். ?"
"அதே... வாசு.. ஞான் தன்னே. .. அப்போள் ஞான் ஆடிய ஆட்டம் ..
இப்போள் அனுபவிக்குன்னு. "
" என்ன சுவாமி, அனுபவங்கள் சுவையாய் இருந்திருக்கும் போலத்
தோன்றுகிறது. உங்களுடைய மதிப்பும் உயர்ந்து விட்டது மாதிரியும்
தெரிகிறது. "
"வாசு சத்தியம் அதல்லா. ..தினை வெச்சவன் தினை அறுக்கும்,
வினை வெச்சவன் வினை அறுக்கும் கேட்டுட்டில்லே "
"புரியவில்லையே. ..சற்று விளக்கமாகக் கூறுங்களேன் "
" வாசு, கொறச்சு காலம் மும்பு நிங்கள் வன்னிருன்னு எங்கில்
என்னெக் காணான் காத்திரிக்கேண்டி இருக்கும். எப்பொழும் என்னே
சுத்தி ஒரு கூட்டமிரிக்கும் . பட்சே இப்போள் எனிக்கி தேகம் சுகமில்லா.
ஆரும் என்னேக் காணான் வருனில்லா"
வாசு சுவாமிகளே சொல்லட்டுமென்று பேசாமல் இருந்தார்.
இதற்குள் காப்பி கொண்டு வரப்பட்டது. வாசுவும் தங்கமும் காப்பி
அருந்தத் துவங்கும்போது ,......"வாசு, இப்போள் இவிடேயுள்ளோர்
ஞஙகளிடமிருன்னு வெள்ளம்போலும் வாங்கிக் குடிக்காரில்லா. .
எந்து கொண்டறியோ .....எனிக்கி எய்ட்ஸ் ஒண்ட. .. எல்லார்க்கும்
அறிஞ்சு போய்.. நம்மளே எல்லாரும் ஒதுக்கி வெச்சு."
வாசுவுக்கு புரையேறியது. "என்னது... உங்களுக்கு எய்ட்ஸ் நோயா.?
நம்பவே முடிய லியே "
" அதே வாசு.இன்னோ நாளையோ ஜீவன் எப்போலேங்கிலும்
போவாம். தேகம் வல்லாண்டு ஷீணிச்சு போய்., கோரே திவசமாய்க்
காணும். பழைய பாவங்களுக்கு இப்போள் அனுபவிக்கின்னு. " சற்று
நேரம் தாமதித்து மறுபடியும் சுவாமிகள் கூறினார். " வாசு, ஞான் செத்தை
தன்னே. ( கெட்டவன்தான் ) கூடாத காரியங்கள் பலதும் செய்துட்டுண்டே..
பட்சே ஞான் மாறி வாசு மாறி. நல்லவனாயிட்டு மாறி இருபது
கொல்லங்களின் மேலே ஆயி. ஈ தேவன் பிரம்மதேவ சுவாமிகளாயி..
ஈஸ்வர விசாரங்க்கொண்டு பிராயசித்தம் செய்யுன்னு. .. பட்சே பழைய
பாவங்களெல்லாம் அத்தர வேகம் மாறுவோ. ..ஹூம்.! பகவான் என்னே
சிட்சிக்குன்னு..!"
இதுவரை எதுவுமே பேசாமல் இருந்த தங்கம் இப்போது வாசுவிடம்
அர்த்தமாகுமா.? டைபாய்ட் மலேரியா, பெரியம்மை இதற்கெல்லாம்
காரணமான கிருமிகளை அடையாளம் கண்டு, அதற்கு மருந்தும்
கண்டு பிடித்திருக்கிறார்கள் . ஆனால் அதற்கு முன்பு அந்த வியாதிகள்
இருக்கவில்லை என்றாகுமா. ?அதுபோல் தான் இதுவும் " என்றார் வாசு
தேவன் எனும் பிரம்மதேவ சுவாமிகள் இவர்களுடைய பேச்சை
சற்று ஆர்வமுடன் கேட்கத் துவங்கினார்.
"பெரியம்மை டைபாய்ட், மலேரியா போன்ற வியாதிகளுக்கு
மருந்து கண்டு பிடிக்கும் முன்பே அந்த வியாதி இருப்பது அனைவர்க்கும்
தெரியும். ஆனால் எய்ட்ஸ் நோய் இருப்பதே இப்போதுதானே தெரிய
ஆரம்பித்திருக்கிறது. "
"தங்கம், நீ சொல்வதைப் பார்த்தால் சுவாமிகளுக்கு இந்த நோய்
வர வாய்ப்பே இல்லையே. அவர்தான் இருபது வருடங்களுக்கு மேலாக
நல்வாழ்க்கை ...அதுவும் ஆன்மீக வாழ்க்கை வாழ்வதாகக் கூறுகிறாரே..
நீ கூறுவது உண்மையானால் சுவாமிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருக்காது.
அப்படி இல்லை என்றால் அவருக்கு இந்த நோய் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே தாக்கி இருக்க வேண்டும். அதன் சுய ரூபம்
டாக்டர்கள் சொல்வது போல் பல வருடங்களுக்குப் பிறகு முற்றிப்போய்
தெரிய வந்திருக்கிறது.
இந்தக் கேசைப் பார்க்கும்போது எனக்கென்னவோ அடிப்படையே
எங்கோ நெருடுகிறது. பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்கிறோமோ என்று
தோன்றுகிறது. ஒன்றை நீ யோசித்துப்பார். ஆதிகாலத்திலேயே மனிதன்
பல தாரங்களை வைத்துக் கொண்டு இருந்திருக்கிறான் .தாசிகளை நாடிப்
பல பெரியவர்களே சென்றதாகக் கதைகள் இருக்கின்றன. செக்ஸ்தான்
இந்த நோய்க்கு மூல காரணம் என்றால் நாட்டில் பலருக்கும் பல
வருஷங்களுக்கு முன்பே இந்த நோய் இருந்திருக்க வேண்டும். அது
பரவுவது பற்றிய விழிப்புணர்ச்சி மூலம் ......அதாவது ரத்தத்தின் மூலம்
பரவுகிறது. அதனால் பரிசோதனை செய்த ரத்தம் செலுத்துவது; ஒருமுறை
உபயோகித்த ஊசியை மறுமுறை உபயோகிக்காமல் இருப்பது. ஆணுறை
உபயோகிப்பது, போன்றவை வேண்டுமானால் எந்தப் பாவமும் செய்யாத
அப்பாவி மக்கள் இந்த நோய் வந்து அவதிப்படுவதை தடுக்கலாம்.
உலகத்தில் சுமார் பத்து சதவிகித மக்களாவது இந்த நோயால்
தாக்கப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படியானால் இந்தியாவில்
மட்டும் சுமார் பத்து கோடி மக்களுக்குமேல் இந்நோய் இருக்க வேண்டும்.
நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. முன்பெல்லாம் இந்தியனின்
சராசரி வயது 35-/ லிருந்து 40-/ க்குள் இருந்தது. இப்போது சுமார்
அறுபதுக்கும் மேல் என்கிறார்கள். மருத்துவம் வளர வளர வியாதிகளும்
காரணமும் கண்டு பிடிக்கப்பட்டு, மருந்தும் கண்டு பிடிப்பதால்தான்
சராசரி வயது உயர்ந்திருக்க வேண்டும். எயட்சுக்கும் மருந்து கண்டு
பிடித்தால் நம்முடைய வாழ்க்கை நிலை மேலும் உயரும். "என்று கூறி
அந்த சம்பாஷணைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது.
வாசு பிரம்ம தேவ சுவாமிகளிடம் விடை பெற்றுக்கொள்ளும்போது.
"சுவாமி, இந்த நோய் ஒருவரை ஒருவர் தொடுவதாலோ ஒருவருடன்
பழகுவதாலோ பரவுவதில்லை. உடலுறவு மூலமும், வியாதி
இருப்பவரின் ரத்தம் மற்றவருடைய ரத்தத்தில் கலப்பதாலேயோதான்
பரவும். நீங்கள் எதற்கும் கவலைப் படாதீர்கள். தங்கம் நினைப்பதுபோல்
இந்த நோயே இருபது வருடங்களுக்குள் தான் தோன்றியது என்றால் ஒரு
சமயம் உங்களுக்கு இந்த வியாதியே இருக்காது. உங்களால் முடிந்த
அளவுக்கு மற்றவர்களுக்கு நல்லது செய்து உங்கள் ஆன்மீக வாழ்விலே
கவனம் செலுத்துங்கள். ஆண்டவன் அருளிருக்கும். நாங்கள் விடை
பெறுகிறோம். " என்று கூறி மிகவும் வருத்தத்துடன் தங்கத்துடன்
கிளம்பினான்.
இருவரும் ஆழ்ந்த சிந்தனையில் வந்து கொண்டிருந்தனர்.
மிகுந்த நேர மௌனத்துக்குப் பிறகு தங்கம் வாசுவிடம் கூறினாள்
"எது எப்படி இருந்தாலும் பெருங்கோட்டுக்கா போய் வந்ததில் பல
எண்ணங்களும் அடிப்படை சந்தேகங்களும் நமக்கு வந்துள்ளது. .
இதையே ஒரு கதை கட்டுரையாக விழிப் புணர்ச்சிப் பதிவாக
உங்கள் வலைப்பூவில் வெளியிட்டால் என்ன. ?"
--------------------------------------------------------------------------------- .

கேட்டாள்."எனக்குத் தெரிந்த வரையில எய்ட்ஸ் வியாதிக்கான HIV எனும்
வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டதே இருபது வருடங்களுககுள்ளாகத்தானே
அப்படிஎன்றால் அதற்கு முன் இந்த வைரசே இல்லை என்றுதானே
அர்த்தம்..?"
" HIV வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது இருபது வருடங்களுக்குள்தான்
என்றாலும் அந்தக் கிருமி அதற்கு முன்பே இருக்கவில்லை என்று

.
.
அருமையான கதைக்களத்தில் பல எதிர்பாராத திருப்பங்களுடன் பயணித்த கதை கருத்துக்களை மட்டுமில்லாமல் பல விழிப்புணர்வு செய்திகளையும் சொல்லிச் சென்ற விதம் அமர்க்களம் ஐயா
பதிலளிநீக்குநல்லா கொண்டுபோய் நல்லா முடிச்சிருக்கீங்க. எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால் சரி.
பதிலளிநீக்குஎதிர்பாராத அனுபவம்தான்.
பதிலளிநீக்குஅருமையான கதை பாலு சார்.
பதிலளிநீக்குநண்பன் சாமியாராய் மாறியிருந்த கதை சுவாரஸ்யமெனில் அவருக்கு வந்த வியாதி குறித்த அலசல் படு சுவாரஸ்யம்.
அருமையான சமூக விழிப்புணர்வுள்ள கதை.. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகதையென்பது வெறும் சுவாரஸ்யமான
பதிலளிநீக்குநிகழ்வுகளின் சாமர்த்தியமான வார்த்தை அடுக்குகள்
என இல்லாமல் கருத்துடன் சமூகப் பொறுப்புடன்
அனைவருக்கும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும்
எண்ணத்தோடு புனையப்பட்ட தங்கள் படைப்பு
அருமையிலும் அருமை தொடர வாழ்த்துக்கள்
respected sir,
பதிலளிநீக்குthis is my first visit to ur blog.i red this last episode just now .impressed by the way you conveyed a message.i will read all ur previous post and also da future ones .am following u from now with respect,love and and thanks ....
i found and liked dis quote from ur profile page
//When are we going to feel all are equal and love all?///
am also with u sir .
அன்புடையீர்
பதிலளிநீக்குஇலக்கியம் என்பது பிரித்தால்
இலக்கு+இயம் என்பதாகும்
இலக்கு என்றால் இலட்சியம் (அ)
குறிக்கோள், இயம் என்பது சொல்வது
அவ்வகையில் தங்கள் கதை
நல்ல இலக்கியமாக எய்ட்ஸ்
பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக
உள்ளது
வளர்க தங்கள் தொண்டு
புலவர் சா இராமாநுசம்
உயர்திரு.ஏ.ஆர்.ஆர்.-கோபு சார், -ஸ்ரீராம், சுந்தர்ஜி, குணசேகரன், ரமணி, ரியாஸ் அஹ்மத், --அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.நான் இதனை முதல் பாகத்தோடு ஒரு சிறு கதையாக தேவன் மஹாதேவன் என்ற தலைப்பில் என் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் வேறொரு முடிவோடு பதிவிட்டிருந்தேன்.அது அதிகம் படிக்கப் படாமல் போய்விடவே , மீள் பதிவுக்குப் பதிலாக ஒரு விழிப்புணர்ச்சி கட்டுரையும் சேர்த்து சற்றே வித்தியாசமாகப் பதிவிட்டேன். கதையுடன் ஒரு கட்டிரையையும் சேர்த்து ஒரு புது முயற்சி அனைவரின் ஆதரவுக்கும் மீண்டும் நன்றி.
பதிலளிநீக்குநாமும் எத்தனையோ பேர பாக்கறோம்... பழகறோம்... ஒரு கட்டத்துக்கு மேல அவங்களோட நமக்கு தொடர்பு விட்டு போறது... மீண்டும் ஒரு கட்டத்துல அவங்கள சந்திக்கும் பொது-- நம் இருவரின் உள்ளும்-- எத்தனை எத்தனை மாற்றங்கள்!
பதிலளிநீக்குரெண்டு பாகத்தையும் இப்போ தான் படிக்க சந்தர்பம் கிடைச்சது... ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க, sir!
என்னதான் நம்ம படிச்சு, நல்லாவே முன்னேறியிருந்தாலும்-- இந்த HIV பத்தின விழிப்புணர்வு நம்ம கிட்ட இல்ல தான். இந்த விஷயத்த நீங்க handle பண்ணினதுக்கு-- என்னோட தனி பாராட்டுக்கள்!
Hats off!
இதை இப்போது தான் படிக்கிறேன். அதான் பிரம்மதேவனுக்கு எய்ட்ஸானு துளசி கேட்டாங்களா? இவரும் மனிதர் தானே! சாதாரண மனிதனுக்கு வரும் எல்லா நோயும் இவருக்கும் வர வாய்ப்பிருக்கே.
பதிலளிநீக்கு\\நான் வளர்ந்த விதமும், குடும்ப
பதிலளிநீக்குபாரமான சூழ் நிலையும் எனக்கு வேலி மாதிரி இருந்திருக்க வேண்டும்.\\ இந்த வேலியால் பாதுகாக்கப்பட்டவர்கள்தான் பின்னாளில் நல்ல வாழ்க்கையைப் பரிசாகப் பெறுகிறார்கள். வசதியான வாழ்க்கை இல்லாவிடினும் நிம்மதியான வாழ்க்கை அமைகிறது.
\\பிறகு நான் எப்போதாவது அவனைப் பார்த்தால் , உலகத்தில் உள்ள
சந்தோஷங்களை அனுபவிக்கத் தெரியாதவன் என்று கேலி செய்வான்.\\ கேலிகளைக் கண்டு பயந்து வேலி தாண்டி செல்லாத திடமான மனம் அனைவருக்கும் அமைவதில்லை.
கதையின் போக்கு ஆரம்பம் முதல் இறுதிவரை தொய்வின்றி செல்கிறது. எய்ட்ஸ் குறித்த உரையாடல்கள் சிந்திக்கவைக்கின்றன. அருமை ஐயா.
பதிவு ஒரு விளிப்புணர்வை கொடுத்தது ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீத மஞ்சரி
தேர்ந்தெடுத்த சில வரிகள் தங்களை சிந்திக்க வைத்து கருத்திட வைக்கிறது அறிந்து மகிழ்ச்சி. எப்படியோ ஆரம்பித்த ஒரு சிறுகதையை ஒரு கட்டுரை வடிவில் இல்லாவிட்டாலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக எழுதியதே என் முயற்சி வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
இப்போதெல்லாம் எய்ட்ஸ் பற்றிய செய்திகளே அதிகம் காணோம் விழிப்புண்ர்வு ஏற்படுத்துவதுதான் நோக்கம் ஜி வருகைக்கு நன்றி.