Tuesday, July 12, 2011

ஆலய தரிசனப் பயணம்.

         
                         அடியவன்  கை வண்ணத்தில்  சமயபுரத்து அம்மன். 
                                      ================================.    

பதிவுலகில் பத்து நாட்கள் வரை தொடர்பில் இல்லாமல் இருந்தது
எதையோ இழந்த மாதிரித் தோன்றுகிறது. ஒவ்வொரு வருடமும்
ஜூன் மாதக் கடைசியிலோ, ஜூலை மாதத் துவக்கத்திலோ சமய
புரம், வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு
கடந்த சுமார் இருபது வருடங்களாகத் தொடர்ந்து சென்று வருவது,
வழக்கமாகி உள்ளது. சில நம்பிக்கைகள் நம்மை நகர்த்துகின்றன.
நாங்கள் விஜயவாடாவில் இருந்த சமயம், என் மனைவியின்
இடது கை கட்டைவிரல் பக்கம், ஓரிறு மருக்கள் ( பாலுண்ணி   என்பார்கள்.)தோன்ற ஆரம்பித்து, நாளடைவில் பார்ப்பவர்
எல்லோரும் கேட்கும் விதத்தில் வளர ஆரம்பித்திருந்தது.

    அங்கிருந்த டாக்டர். சமரம் என்பவர் (இவர் ஆந்திராவின் பெரியார்
என்று அறியப்பட்ட திரு. கோரா என்பவரின் மகன் ) அவற்றால்
பாதகமில்லை என்றும், தேவை என்றால் அறுவை சிகிச்சை
மூலம் அகற்றி விடலாம் என்றும் கூறின்ர்.பிற்கு பார்த்துக்                  கொள்ளலாம் என்று நாங்களும் விட்டு விட்டோம்.எனக்கு
மறுபடியும் திருச்சிக்கே மாற்றலாகி வந்தபோது, அந்த மருக்கள்
எண்ணிக்கை அதிகரிக்க, பி.எச்.இ.எல்  -ல்சருமநோய் டாக்டர்.
லால் என்பவரிடம் காண்பித்தோம். இதற்கெல்லாம் டாக்டரிடம்
வரத் தேவை இல்லை; சமயபுரத்திலும் ,வைத்தீஸ்வரன்
கோயிலிலும் வேண்டிக்கொண்டு, உப்பு ,மிளகு போடுதல்
போதும் என்றார். ஒரு சரும நோய் டாக்டர் இப்படிக் கூறியது
ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும்நாங்கள் அவர் சொன்னபடி,
கோயில் சென்று வேண்டிக்கொண்டோம். எங்களுக்கே தெரியா
மல் அந்த மருக்கள் இருந்த இடம் காணாமல் போய்விட்டன.
கிட்டத்தட்ட அந்த  சமயத்திலிருந்து எங்கள் வருடாந்திர பிரார்த்
தனை துவங்கியது எனலாம்

        நாங்கள் இந்த முறை, திருச்சியில் சமயபுரம், ஸ்ரீரங்கம், திரு
ஆனைக்கா, வெக்காளி அம்மன் கோயில், உத்தமபுரம் ,மலைக்
கோயில், போன்ற இடங்களுக்கும், வைத்தீஸ்வரன் கோயில் ,
சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லை காளி கோயில், திருவாரூர்,
திருநாகேஸ்வரம் ,ஒப்பிலியப்பன் கோயில், குடந்தையில் சாரங்க
பாணி கோயில், இராமநாதஸ்வாமி கோயில், கும்பேஸ்வரர்
கோயில் என்று ஆலய தரிசனம் செய்து வந்தோம். எங்கள்
தரிசனம் பற்றியோ, அங்குள்ள தெய்வங்களின் பெருமை மற்றும்
வரலாறு பற்றியோ நான் இங்கு எழுதப் போவதில்லை. இந்தப்
பயணத்தில் ஒரு சில விஷயங்களைப் பற்றி மட்டும் பகிர்ந்து
கொள்கிறேன். எல்லாக் கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழி
கிறது. இதைப் பார்க்கும்போது மக்களின் நம்பிக்கையே
அவர்களின் வாழ்வை நகர்த்துகிறது என்பது தெளி வாகிறது.

         எல்லாக் கோயில்களிலும் அலைமோதும் பக்தர்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள்  கூடுவதைக் காணும்போது, எத்தனை
பேருக்கு என்னென்ன தேவை ,முறையீடு, எல்லாவற்றையும்
கவனித்து ஆட்கொள்ளும் ஆண்டவனிடம் உள்ள நம்பிக்கையே
நம் மக்களை நகர்த்துகிறது என்பது கண்கூடு.

         இந்த வயதில் மலையேறி தரிசனம் செய்ய வேண்டுமா,
உடம்பு தாங்குமா என்றெல்லாம் கவலைப்பட்ட மனைவியையும்
கூட்டிக்கொண்டு மலையேறி தரிசனம் செய்தோம். திருச்சி மலைக்
கோயிலில் தாயுமானவர் சன்னதியிலிருந்து, உச்சிப் பிள்ளையார்
சன்னதிக்குப் போகும் வழியில் பல்லவனின் கல்லில் குடைந்த
கோயில் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுக்களில் இருக்கும் பாடல்
பற்றியும் திரு.ஹரணி அவர்கள் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பல முறை நான் அங்கு சென்றிருந்தும் என் கண்ணில் படாத அந்த
கல்வெட்டுப் பாட்டைக் காணவேண்டும் என்ற என் ஆவல் நிறை
வேறவில்லை. அங்கு வரும் மக்கள் அந்த இடத்தை அசிங்கப்
படுத்துகிறார்கள் என்பதால் அங்கு போக முடியாதபடி வழியை
அடைத்திருந்தார்கள் ( நாங்கள் போன சமயம். )

         ஒவ்வொரு முறை போகும்போதும் மாற்றங்கள் தெரிந்து
கொண்டே இருக்கின்றன. கூரையில்லாத வெக்காளி அம்மனுக்கு
மட்டும்தான் இப்போது கூரையில்லை. மற்றபடி எல்லா
விதத்திலும் மாற்றம் தெரிகிறது.

        அரங்கத்தானை தரிசிப்பது மிகவும் கடினமான காரியமாகத்
தெரிகிறது. நேரம் காலம் என்று திட்டமிட்டு பயணிப்பவர்க்குத்
தரிசனம் கிடைப்பது திண்டாட்டம்தான்.தலைக்கு ரூபாய் 250/-
கொடுத்தும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில்
நிற்க வேண்டி இருந்தது.

       சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாள் விழா நடந்து
கொண்டிருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் வீதி உலா துவங்கு
கிறது. தில்லை திருக்கோயிலில் இதுவரை பார்க்காத உண்டியல்
கள் ஆங்காங்கே காணப்படுகிறது. தில்லை அந்தணர்களுக்கும்
அரசாங்கத்துக்குமான உரிமைப் பிரச்சினை,கோர்ட் வாசல் வந்து
உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. பதினைந்து பதினாறு
வயசுப் பெண்கள், மடிசார்ப் புடவை கட்டி வருவதைப் பார்த்து,
குழந்தை திருமணம் சட்டப்படி செல்லாது என்று சொன்னால்
தீக்‌ஷிதர்கள் சொல்லும் காரணமே வேறு .கோயில்
கைங்கர்யங்களில் பங்கு கொள்ள அந்தணர்களுக்குத் திருமணம்
நடந்திருக்க வேண்டும். அதற்காகவே இந்த பால்ய விவாகங்கள்
என்று கூறுகின்றனர். இந்த முறை திருவிழாவின்போது மேலை 
நாட்டினர் பலரும், நம் நாட்டவரைப்போல் உடையணிந்து ( ஆண்
களும் பெண்களும் ) விழாவில் முன் நின்று பங்கு கொண்டதைக் 
காண முடிந்தது. நாம் அவர்கள் கலாச்சாரத்தைப் பின்பற்ற முயல, 
அவர்களோ நம் நடையுடை பாவனைகளில் மனம் லயிக்கிறார்கள். 

           கடந்த இருமுறையும்  திருவாரூர்  சென்றிருந்தும், எங்கள் 
கட்டுப்பாட்டில் இல்லாத ஏதோ சில காரணங்களால் ஆரூரானைத் 
தரிசிக்க முடியவில்லை. இந்த முறை எப்படியும்  தரிசித்தே தீருவது 
என்று சென்று கண்டு மகிழ்ந்தோம். என்ன..... மாலை ஆறு  மணிக்குத் 
தான் நடை திறக்கிறார்கள்.

          கும்பகோணத்தில் பலமுறை சென்றிருந்தும், கண்ணில் படாத,
பட்டும் மனசில் பதியாத ஒரு விஷ்யம், பதிவுலகிற்கு வந்த பிறகு 
கண்ணில் பட்டது. சாரங்கபாணி கோயிலிலும், கும்பேஸ்வரர் 

கோயிலிலும், சுவற்றில் ஒரு தேரின் படம் வரைந்து அதில் 
ஆண்டவனைப் பற்றிய பாடல்கள் எழுதப் பட்டிருக்கிறது. கட்டங்கள் 
 இட்டு, அதிலுள்ள எண்களின்  குறியீட்டைத் தொடர்ந்தால்  அழகான 
கவிதை தெரிகிறது. சாரங்கபாணி  கோயிலில், திருமங்கை  ஆழ்வார் 
அருளிச்செய்த  திருவெழுக் கூற்றிருக்கை  என்னும்  ரத பந்தனக் கவி
எழுதப் பட்டிருக்கிறது.  கும்பேஸ்வரர் கோயிலில்  திரு ஞான
சம்பந்தர்  அருளிய   திருவெழுக் கூற்றிருக்கை   ரத பந்தனக் கவயாக
காணப்படுகிறது. படித்துப் பார்த்தேன். எனக்குப் பொருள்  புரிவது 
கடினமா யிருந்தது. இரண்டு கவிதைகளையும்  எழுதி வந்திருக்கிறேன். 
பதிவர்களில் பலர்  தமிழறிஞர்கள்  என்று எனக்குத் தெரியும். இது 
பற்றி  திரு. ஹரணி, திரு. ஜிவி, திரு.எல்.கே. ,திரு.சுந்தர்ஜி, புலவர். இராமானுசம் யாராவது விளக்கம் கூறினால்  நன்றாயிருக்கும் என்று 
நினைக்கிறேன். அவை கவிதையின் ஒரு வரிவடிவம் என்று எண்ணு
கிறேன்.

          ஒவ்வொரு மாதமும்  குறிப்பிட்ட நட்சத்திர  நாட்களில் அர்ச்சனை 
செய்து  பிரசாதம்  அனுப்ப  வேண்டி  சில கோயில்களில்  பணம்  கட்டும் 
வழக்கம் உண்டு.  ஒரு நட்சத்திர  அர்ச்சனைக்கு  ஆண்டுக்கு ரூபாய் 200/- 
கட்டும்  காலம் கடந்து போய், இப்போது  ரூபாய் 600/- கொடுக்க வேண்டி 
உள்ளது. விலைவாசி உயர்வு அர்ச்சகர்களுக்கும்  உண்டுதானே.!

          ஒன்றை நிச்சயம் சொல்லியே தீர வேண்டும். ஒவ்வொரு  முறையும் 
கடவுள் சன்னதியில்  ஆண்டவன்  திரு உருவை சரியாகக் காண முடியாத
போதெல்லாம், ( விளக்கொளி  போதாமல் ) எனக்கு  மாதங்கி  மாலியின் 
நினைவே வந்தது. என் சந்தேகங்கள் என்ற பதிவுக்கு அவர் எழுதி இருந்த 
பின்னூட்டத்தில் , எந்த வடிவமானாலும் அது நாம் உருவகப் படுத்தியதே 
என்ற விதத்தில் இருந்தது. எவ்வளவு  உண்மை.! “நச்”  சென்ற பின்னூட்டம். 

          அடுத்த முறை ( அப்படி ஒரு நம்பிக்கை ) ஆலய தரிசனப்  பயணம் 
செய்யும்போது  இன்னும் என்னென்ன  நிகழ்வுகள்  நடந்திருக்குமோ.? 
--------------------------------------------------------------------------------------------


 

 
 
                                                                                                                                                                       
                                                                                             
.

11 comments:

  1. ஆலய தரிசனப் பயணத்தை கொஞ்சம்
    வித்தியாசமான பாணியில் கொடுத்திருக்கிறீர்கள்
    ரசித்துப் படித்தேன்
    எழுதி வந்துள்ள இர்ண்டு கவிதைகளையும்
    அடுத்த பதிவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  2. மனம் லயித்து படித்தேன் ஐயா
    உங்களின் கைவண்ணத்தில் அம்மன் அருமை. வித்தியாசமான நடையில் அமர்க்களமான பதிவு

    ReplyDelete
  3. உணர்வு பூர்வமாய் இருந்தது உங்கள் பகிர்வு..

    நன்றி

    ReplyDelete
  4. ரொம்ப நாட்களுக்கு அப்புறம் சந்திப்பதில் மகிழ்கிறேன் .
    ஆலய தரிசனம் அருமை .
    நன்றிகள் பல..

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    வித்தியாசமான ஆச்சரியமான செய்தி.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  6. நீங்கள் ஓவியமும் வரைவீர்களென்று தெரிந்ததும் மகிழ்ச்சி கூடியது. அம்மனின் வரைவு அற்புதம்.

    //எந்த வடிவமானாலும் அது நாம் உருவகப் படுத்தியதே
    என்ற விதத்தில் இருந்தது.//

    கரெக்ட்! இது 'கொடியசைந்ததும், காற்றுவந்ததா?.. காற்று வந்ததால் கொடியசைந்ததா?' மாதிரி..

    ஒன்றைப் பற்றி தெரிந்ததின் அடிப்படையில் உருவகம் இருக்கிறது.
    உருவகப்படுத்தப்படும் எதுவும் அறிந்த வடிவின் அடிப்படையிலேயே அமையும். உருவகப்படுத்தலுக்கோ, வடிவமைவதற்கோ அதைப் பற்றிய தெரிதல் அல்லது தெரியப்படுத்துதல் அவசியம்.

    உதாரணத்திற்கு கோயில்களில் நமக்குக் காணக்கிடைக்கும் யாளி ஒரு காலத்தில் இருந்து அதற்குப் பிறகான காலத்தில் இல்லாது நாம் அறியாத விலங்கு. அது இருந்த பொழுதான காலத்தில் இருந்தவர்களின் சிலை வடித்தலிருந்து யாளியைத் தெரிந்து கொள்கிறோம்.

    யாளி என்றதும், கோயில்களில் நாம் பார்த்துத் தெரிந்து கொண்டதின் அடிப்படையில் அதன் உருவகமும், வடிவமும் நம் சிந்தையில் படிகிறது.

    ReplyDelete
  7. அப்டியா இப்டியா-ன்னு இப்போ தான் ஒழிஞ்சுது., படிக்க! :)
    ஆஹா! எங்க ஊர் பக்கம் வந்திருக்கேளே, sir !
    வைதீஸ்வரன் கோவில்- ன ஒடனே- எனக்கு அங்க ஸ்தல வ்ருக்ஷம் பக்கத்ல இருக்கற நிறையா மந்திகள் ஞாபகம் தான் வருது. எனக்கு அது ரொம்ப பிடிக்கும். and - முன்னாடியெல்லாம்- அந்த உப்பு-மிளகு இன்னும் நிறையாவே கொடுப்பா- அங்க கொட்ட. இப்போலாம்- ஏதோ பேருக்கு தான்... சின்ன வயசில- எல்லாரோட packet யும் வாங்கி நானே கொட்டுவேன்...
    அந்த சமயபுரம் அம்மன் painting A1 .... !! ரொம்ப அழகா இருக்கு...அந்த ஊர் அம்மன் மாதிரியே...

    ரங்கன பாக்க 250 கொடுத்தேளா?? !!!

    :) என்னோட comment உங்களுக்கு நினைவுக்கு வந்ததில்- எனக்கு ரொம்ப சந்தோசம்... I 'm flattered !

    ReplyDelete
  8. Matangi Mawley,

    உங்களுடைய comment-க்கு என்னோட தொடர் எண்ணம் பார்த்தீங்களா?

    ReplyDelete
  9. கைவண்ணம் கண்டு கண்வண்னம் இனிய காட்சி அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ஆம். காரண்மில்லாத பாலுண்ணிகள் மருக்கள் ஆகியவை உப்பு மிளகு வெல்லம் பிரார்த்தனையாலேயே காணாமல் போய்விடுகின்றன்.

    குழந்தையின்மைக்கு புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைப்பது திருகருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை பிரார்த்தனைதான்.

    ReplyDelete