ஆண்டவன் முன்...
----------------------------------
அபிஷேக அலங்கார ஆராதனைகள் ஆண்டவனுக்கு
பூ,பழம், காயுடன் படைப்பாகப்பின் நிவேதனங்கள் முடிந்து,
தீப ஒளியில் திவ்ய தரிசனம் காணக் கண் கோடி வேண்டும்.
இருப்பினும் இருப்பதோ இரண்டுதானே.
அடுத்து சென்றால் அழகாக தரிசிக்கலாம்.
அதற்கும் ஏற்பாடு செய்யலாம் காசிருந்தால். !
தட்டேந்தி வரும் அர்ச்சகர் முகத்தில் அலாதி பூரிப்பு.
காணிக்கையாய்க் கொட்டும் காசு கண்டு
பணம் கொடுத்து ஆண்டவன் அருகே சென்றவர்
தட்டினில் இட்டனர் ரூபாய் நோட்டுக்கள்.
வரிசையில் வந்தோரும் தவறாது தட்டில் இடும்
காசின் சப்தம் அர்ச்சகர் காதுக்கு சங்கீதம்.
யார் சொன்னது ஆண்டவன் சந்நதியில்
அனைவரும் சமம் என்று.?
தூரத்தே நின்று கண்கள் மூடி
ஆண்டவனைக் காண்போர் அறிவர்
தட்டிலிடக் காசில்லை என்றால் சபிக்கப்படலாம்.
அன்றொரு நாள் சிறான் ஒருவன்
தீபம் ஒற்றியெடுக்க ,கையில்
காசில்லாமல் தயங்கியது கண்டு -சிந்தையில்
தோன்றியது எழுத்தில் விழுந்தது.
( என்னிடம் பதிவொன்று கேட்டார். நானும் அனுப்பினேன். பிரசுரம் குறித்து
எந்த தகவலும் இல்லாத நிலையில் நானே பதிவாக இடுகிறேன்.)
( என்னிடம் பதிவொன்று கேட்டார். நானும் அனுப்பினேன். பிரசுரம் குறித்து
எந்த தகவலும் இல்லாத நிலையில் நானே பதிவாக இடுகிறேன்.)
மிக மிக அருமையான பதிவு. வேதனையான விஷயம் இறைத் தத்துவமே வியாபாரம் ஆகிவிட்டது தான். குருவை நாடி போவதற்குக் கூட உதறல் எடுக்கிறது. ஆண்டவனை பேதமே இல்லாமல் அவரவருள் ஆராய்வதே சரி என்றாகிறதோ.
பதிலளிநீக்குசில கோவில்களில் நடக்கின்ற உண்மை இது.பிரசுரிக்க தயக்கம் ஏற்பட்டிருக்கலாம். நல்ல பகிர்வு. நன்றி ஐயா.
பதிலளிநீக்குகாசேதான் கடவுளப்பா-அந்தக்
பதிலளிநீக்குகடவுளுக்கும் இது தெரியுமப்பா!
ஆலயவழிபாட்டில் பலருக்கு முன்போல ஈடுபாடு இல்லாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம் ஐயா!
நல்ல பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
எங்கும் எப்பொழுதும் யாரும் சமமில்லை. இதுதான் இன்றைய உலகம்.
பதிலளிநீக்குஉண்மை நிலையை எடுத்துரைக்கும் நல்லதொரு அலசல். நன்றி ஐயா.vgk
பதிலளிநீக்குகோயில்களுக்குச் செல்லும்போது எனக்கு அடிக்கடி தோன்றும் உறுத்தலான விஷயம் இது. இருப்பவர்கள் காணிக்கையிடும்போது இல்லாதவர்களுக்குக் குற்ற உணர்வு தோன்றும் வகையில் மாறிவிட்டன வழிபாட்டுத் தலங்களும் அர்ச்சகர்களின் மன்நிலையும்.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
காசில்லாமல் வருபவர்களை சீண்டாத கோவில்களும் உண்டு.. தேடிப் பிடித்து ஐம்பது காசைப் போடும் மக்களும் உண்டு.
பதிலளிநீக்குசாகம்பரி சொன்னது போல சில கோவிலகளில் இப்படி நடக்கத்தான் செய்கிறது.. என்ன செய்ய.. அந்த ஆண்டவன் தான் இதற்கும் வழி சொல்ல வேண்டும்.
பல முறை நான் வேதனைப்பட்ட விஷயம்.
பதிலளிநீக்குவருகை தந்து கருத்துக் கூறிய 1.ஷக்திப்ரபா,2.சாகம்பரி,3.சேட்டைக்காரன்,4. ரத்னவேல்,5டாக்டர் ஐயா, 6.கோபு சார், 7. சுந்தர்ஜி, 8.லக்ஷ்மி,9.சிவகுமாரன்,மற்றும் முதல் வருகைதரும் 10. ரிஷபன் எல்லோருக்கும் என் நன்றி.
பதிலளிநீக்கு