Tuesday, July 24, 2012

பொழுது போக்க -2.


படத்தில் இருப்பவரைத் தெரிகிறதா.? விடை கடைசியில்.


அதற்கு முன் மனதில் தோன்றும் சில எண்ணங்களை கொட்டி விடுகிறேன். கல்வி பற்றி இதற்கு முன்பே எழுதி இருக்கிறேன். ஆண்டை அடிமைக் காரணங்களால் பெருவாரியான மக்கள் கல்வி அறிவு கொடுக்கப் படாமலேயே, கிடைக்கப் பெறாமலேயே சீர் குலைக்கப் பட்டு வந்துள்ளனர். முன்னுரிமை, ஒதுக்கீடு என்று பல சீர்திருத்தங்கள் ( ? ) வரத்தலைப் பட்டாலும் அடிப்படைக் காரணங்களைக் களையாமல் ஏற்ற தாழ்வுகள் குறைக்க முடியாது. அண்மையில் அரசாங்கம் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்து அமல் படுத்த ஏகப் பட்ட எதிர்ப்புகள். இந்த எதிர்ப்பு இப்போது ஒரு புதிய சாதியினரிடமிருந்து. அவர்களே கல்வி வியாபாரிகள். சட்டத்தால் பள்ளியில் அனுமதி பெற்றவர்களை அவமானப் படுத்தும் வகையில், அவர்களை வேறுபடுத்திக் காட்ட சிறார்களின் முடி கத்தரிக்கப் பட்ட கொடுமை. பெங்களூரில் நடந்திருக்கிறது. எல்லோருக்கும் ஏற்ற தாழ்வு இல்லாத சமகல்வி வேற்பாடின்றிக் கிடைக்க கல்வியை , பள்ளியிறுதிப் படிப்புவரை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும். அதுவும் அக்கல்வி உயர்வு தாழ்வு எதுவும் இன்றி சமமாக எல்லோருக்கும் இலவசமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இள வயதிலிருந்தே வேற்றுமை பாராட்டாத இளைய சமுதாயம் உருவாகும். சில பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயம் அமைய வாய்ப்பு அதிகரிக்கும்
                           ------------

ஒருவருடைய வயதைக் கண்டு பிடிக்க, அவரிடம் அவர் வயதை பத்தால் பெருக்கச் சொல்லுங்கள். அத்துடன் பத்தை கூட்டச் சொல்லுங்கள். வந்த விடையை பத்தால் பெருக்கச் சொல்லுங்கள்வந்த விடையுடன் அவருடைய மனைவியின் வயதை கூட்டச் சொல்லுங்கள்.. கிடைதத விடையில் இருந்து நூறைக் கழிக்கச் சொல்லுங்கள். கடைசியாகக் கிடைத்த விடையை கேளுங்கள். அதில் முத்ல் இரண்டு எண்கள் அவருடைய வயது. அடுத்த இரண்டு எண்கள் அவருடைய மனைவியின் வயது.
குழந்தைகள் சுவாரசியமாகக் கேட்பார்கள்.
                           --------------   

குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஒரு BLACK MAJIC ஷோ..குறைந்தது மூன்று பேர் வேண்டும். ஒருவர் ஒரு அறையில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை நினைத்துக் கொள்ள வேண்டும். அதை அவர் மற்றவரிடம் மூன்றாம் நபருக்குத் தெரியாமல் கூற வேண்டும். இப்போது இரண்டாமவர் மூன்றாம் நபரை அந்தப் பொருளை அடையாளம் காண்பிக்க வைப்பார். அறையில் இருக்கும் பொருளின் பெயரைச் சொல்லி இதுவா இதா என்று கேட்டுக் கொண்டே வருவார். முதலாமவர் சொன்ன பொருளின் பெயரை குறிப்பிட்டுக் கேட்கும் முன் ஒரு கருப்பு நிறமுடைய பொருளைக் காட்டி இதுவா என்பார். இல்லை என்று பதில் வரும் அடுத்து முதலாம் நபர் குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி இதுவா என்று கேட்பார். ஆம் என்று பதில் வரும் பொருளை நினைத்துக் கொண்டவர் ஆச்சரியப் படுவார். இதில் முக்கியம் என்னவென்றால் ஒரு கருப்பு நிறப் பொருளுக்குப் பிறகு சரியான பொருள் காட்டப் படவேண்டும். இரண்டு குழந்தைகள் சேர்ந்து மற்றவரை வியப்பில் ஆழ்த்தலாம்.
                           ---------------   

சில எளிமையான கேள்விகள்.

1.) ஒரு பொருளை 16 அடி உயரத்தில் இருந்து போட்டால் அது தரையைத் தொட ஒரு செகண்ட் ஆகும். அதே பொருளை 64 அடி உயரத்தில் இருந்து போட்டால் தரையைத் தொட நான்கு செகண்டுகள் ஆகும். சரியா தவறா.,ஏன்.?

2) ஒரு பேக்கர்ஸ் டஜன் என்பது எவ்வளவு.?

3) ரெயில்வே தண்ட வாளங்களில் நேரோ கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி 0.76 மீட்டர். ப்ராட் கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி 1.67 மீட்டர்.  மீட்டர் கேஜ் தண்டவாளங்களின் இடைவெளி என்ன.?

4 ) எட்டு பேர் பதினாறு குழிகளை வெட்ட 32 தினங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.  நான்கு பேர் எட்டு குழிகளை வெட்ட எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்வார்கள்.?

5 ) இதில் எந்த எண்ணில் ஒரு சதுரத்தின் சுற்றளவும் பரப் பள்வும் சமமாக இருக்கிறது. ?
   a) 25   b)16    c)64    d)121

6 ) ஒரு பெரிய மரத்தை 12 அடி நீளங்களாக அறுக்கிறார்கள். ஒரு துண்டு அறுக்க ஒரு நிமிஷமாகிறது. 12 துண்டுகள் அறுக்க எவ்வளவு நேரமாகும்.?

7 ) எந்த எண்கள் தலை கீழாக நிறுத்தினாலும் ஒரு எண்ணாக இருக்கும். ?

8 ) ஒரு மைல் தூரத்தை நான்கு வினாடிக்குள் ஓடிய முதல் வீரர் யார்.?

9 ) முதல் இதய மாற்று சிகிச்சை செய்த டாக்டர் யார்.?
                     ------------------------

ஒரு கணவன் மனைவியின் ஊடல் காரணமாக அவளிடம் பேசாமல் இருந்தான். ஒரு முக்கிய வேலையை கவனிக்க வேண்டி இருந்ததால் அவன் மனைவியின் பார்வையில் படும்படி “ என்னைக் காலையில் 7-/ மணிக்கு எழுப்பவும் “என்று ஒரு கடிதம் வைத்தான். அடுத்த நாள் அவன் மனைவி அவன் படுக்கை அறையில் அவன் பார்வையில் படும்படி ஒரு குறிப்பு எழுதி வைத்தாள்.அதில் “ 7-/மணியாகிவிட்டது. எழுந்திருக்கவும்.என்று எழுதி இருந்தது.
                    -----------------------------
( இவரை அடையாளம் தெரியவில்லையா. ? இவர்தான் உலகப் புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர். சச்சின் டெண்டுல்கர்.! மற்ற கேள்விகளுக்கான பதில் பின்னூட்டங்கள்  பார்த்த பிறகு. )
                   ----------------------------------
( பின்னூட்டங்கள் பார்த்தபின் பதில் என்று எழுதி இருந்தேன். அதன்படி இதோ. )

பெண்வேடமிட்ட சச்சின் தெண்டுல்கர் கல்லூரியில் மாறுவேடப் போட்டியில் பங்கெடுத்தபோது எடுத்த படம் என்று சொல்லப்படுகிறது.

இனி கேள்விகளுக்கான பதில்கள்.

கே. 1.  பதில் .. தவறு. ஒரு பொருள் பூமியை நெருங்கும்போது அதன் வேகம் அதிகரிக்கும். ( A falling body naturally accelerates its velocity.)

கே. 2.  பதில். --13--ஒரு காலத்தில் ஒரு டஜன் ரொட்டிகள் வாங்கினால் ஒரு ரொட்டி இனாமாகக் கொடுக்கப்பட்டதாம் அதுவே நாளடைவில் மருவி பேக்கர்ஸ் டஜன் என்று கூறப்பட்டது. எண் 13 பற்றிய பயம் வந்தபோது அதுவே டெவில்ஸ் டஜன் என்றும் கூறப்பட்டது..

கே.3  பதில்.   ஒரு மீட்டர். 

கே.4.  பதில்.. 32 நாட்கள்.

கே.5 . பதில்..   16.

கே.6  பதில்    11  நிமிடங்கள். 12- வது துண்டை அறுக்கத் தேவையில்லை.

கே.7  பதில்.   0, 1, 6, 8, 9.

கே.8. பதில்......ரோஜர் பானிஸ்டர் என்ற ப்ரிடிஷ் டாக்டர் கேள்வியில் நான்கு வினாடிக்குள்
             என்று தவறு நேர்ந்துவிட்டது. அது நான்கு நிமிடங்களுக்குள் என்று 
             இருந்திருக்கவேண்டும். ( மன்னிக்க வேண்டுகிறேன் )

கே.9 பதில்.  டாக்டர் க்ரிஸ்டியன் பார்னார்ட் ( Dr,Christian Barnard ) என்ற தென் ஆஃப்ரிக்க 
            மருத்துவர். 


           (பின்னூட்டங்களில் ஒருவரே பதில் கூறி இருந்தார். பாராட்டுக்கள் )
                    --------------------------------------    
.
.

12 comments:

  1. இள வயதிலிருந்தே வேற்றுமை பாராட்டாத இளைய சமுதாயம் உருவாகும். சில பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயம் அமைய வாய்ப்பு அதிகரிக்கும்

    சிறப்பு மிகுந்த சிந்தனைப் பகிர்வுகள்..

    ReplyDelete
  2. அருமையான பதிவு!

    ReplyDelete
  3. இதை எல்லாம் படித்தால் நன்றாகத்தான் பொழுது போகிறது :)

    ReplyDelete
  4. நன்றாக பொழுது போச்சி சார் !
    குழந்தைகள் வியப்படுவதற்க்கும், யோசிப்பதற்கும் நல்ல தகவல்கள். நன்றி...

    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
  5. என் கண்களுக்கு என்னமோ ஆகிப்போச்சு. ஆம்பிளையைப் பார்த்தா பொம்பிளை மாதிரி தெரியுது.

    ReplyDelete
  6. படத்தில் இருப்பவரைத் தெரிகிறதா? என்று ஒரு பெண்மணியின் படத்தை பதிந்துள்ளீர்கள். விடை கடைசியில் என்று போட்டு விட்டு, பதிவின் இறுதியில் சச்சின் டெண்டுல்கர் என்று சொல்கிறீர்கள். பழைய எம்ஜிஆர் படத்தில் எம்.ஜி.சக்கரபாணி சொல்லும் ஒரு வசனம் “ பீம்சிங் இது என்ன புதுக் குழப்பம்”

    ReplyDelete
  7. Answers to Questions:
    2. 13
    3. 1 meter
    4. Same 32 Days
    6. 11 Minutes
    7. 1, 6, 9
    8. Roger Bannister (He completed a mile distance in 4 minutes). The question is wrong. It states 4 seconds.
    9. DR.Cheriyan

    ReplyDelete
  8. சுவாரஸ்யமான பொழுது போக்கு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. எல்லோருக்கும் ஏற்ற தாழ்வு இல்லாத சமகல்வி வேற்பாடின்றிக் கிடைக்க கல்வியை , பள்ளியிறுதிப் படிப்புவரை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும். அதுவும் அக்கல்வி உயர்வு தாழ்வு எதுவும் இன்றி சமமாக எல்லோருக்கும் இலவசமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இள வயதிலிருந்தே வேற்றுமை பாராட்டாத இளைய சமுதாயம் உருவாகும். சில பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயம் அமைய வாய்ப்பு அதிகரிக்கும்//

    நல்ல கருத்து. கடைபிடித்தால் எல்லா நன்மைகளும் பெறுவார்கள்
    இன்றைய, நாளைய தலை முறையினர்.

    நல்ல பொழுது போக்கு. குழந்தைகளுக்கு விளையாட்டுடன் அறிவுத்திறனையும் வளர்க்க பயன் படும்.
    நன்றி.

    ReplyDelete
  10. @ இராஜராஜேஸ்வரி,
    @ வரலாற்றுச் சுவடுகள்,
    @ வீரா,
    @ திண்டுக்கல் தனபாலன்,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ தி. தமிழ் இளங்கோ,
    @ இளமாறன் கிருஷ்ணமூர்த்தி,
    @ மணி பாரதி,
    @ ரமணி.
    @ கோமதி அரசு.
    வருகை தந்து , பின்னூட்டமிட்டு
    ஊக்கமளித்த அனைவருக்கும்
    நன்றி. கேள்விகளுக்கு பதில்
    அளித்த இளமாறனுக்கு ஸ்பெஷல்
    நன்றி.
    கேள்விக்கான சரியான பதில்களை
    பதிவில் இணைத்துள்ளேன்.

    ReplyDelete
  11. நல்ல பதிவு ஐயா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. ஐயா,சச்சின் டெண்டுல்கர் எந்தக் கல்லூரிக்குப் போனார்? இது photoshop மகிமை போல் தோன்றுகிறது.

    ReplyDelete