Friday, November 30, 2012

சூரா அது உன் சதியா. ?


                                 சூரா அது உன் சதியா...?
                                 --------------------------------

( அதிகம் பறந்து பார்த்து  அறியாத  மயிலின் பறக்கும் படங்கள் பதிவிட்டிருந்தேன். அதையொட்டிக் கவிதை புனையவும்  வேண்டி இருந்தேன். என் துரதிர்ஷ்டம் வாசகர்களின் வலைத் தளங்களில் படங்கள் தெரிவதில்லை எனக் குறைபட்டு பின்னூட்டங்கள். . நானே என் கற்பனையைத் தட்டிவிட்டு ஒரு கவிதை (? ) எழுதியிருக்கிறேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம். இது  ஒரு கற்பனையே.) தோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன் 
உன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை  வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.

முருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும்  அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா  பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி  அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .           
.

20 comments:

 1. வித்தியாசமான கோணத்தில் கவிதை நன்றாக இருக்கிறது சார்.

  ReplyDelete
 2. படம் வரவில்லை என்றால் என்ன...? நியாயமான கேள்வியுடன் ஒரு கவிதை அல்லவா கிடைத்து விட்டது...

  நன்றி ஐயா...

  ReplyDelete
 3. படம் தெரியவில்லை.
  தங்கள் கவிதை. அருமை.
  எப்பபோதும் விழிப்போடு இருக்கணும் என்பதற்காக எங்கள் அம்மா சொல்வார்கள் - "கந்தனுக்கு புத்தி கவட்டையிலே " என்று. அதாவது அசுரன் தான் மயில் ஆனதால் அது எப்ப வேண்டுமானாலும் தன்னைக் கவிழ்த்து விடலாம் என்று கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருப்பானம் முருகன்.

  ReplyDelete
 4. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 5. ஜி. எம் பி சார் பாட்டினை இங்கே ராகத்தில் கேட்டு மகிழுங்கள்

  subbu thatha
  www.kandhanaithuthi.blogspot.in

  ReplyDelete
 6. கவிதை அழகாய் வந்து விட்டது.

  ReplyDelete
 7. வலைப் பூவில் மயில் பறக்காததும் நன்மைக்கே. அருமையான கவிதை கிடைத்திருக்கின்றதே. நன்றி அய்யா

  ReplyDelete
 8. கவித,கவித..எங்க மயில் பறக்கலையேன்னும்போது அழுக அழுகையா வருது, ஆனா இந்தக் கவிதையப் படிச்சதும் வர்ற அழுக நின்னுருது.....

  ReplyDelete

 9. @ கோமதி அரசு,
  @ திண்டுக்கல் தனபாலன்,
  @ டாக்டர் கந்தசாமி,
  @ சிவகுமாரன்,
  @ தொழிற்களம் குழு,
  @ சூரி சிவா
  @ கோவை@தில்லி,
  @ கரந்தை ஜெயக்குமார்,
  @ உமேஷ் ஸ்ரீனிவாசன்
  கவிதையைப் பாராட்டி பின்னூட்டம் எழுதிய உங்களுக்கு என் நன்றி.
  சூரி சிவா சார் ஒரு படி மேலே போய் பாட்டாகவே பாடிவிட்டார். அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. கந்தனுக்குப் புத்தி கவட்டையிலே என்று சிவ்குமாரன் மூலம் தெரிந்து கொண்டேன். !

  ReplyDelete
 10. பறந்தறியா மயில்தான்நீ யென்றாலும் சூரனே
  பறந்துன்னைப் பிடித்திழுத்துப் பூவுலகம் கொணர்ந்ததுவும்
  அதன்பின்னே மரமாகி நின்றவனை வேலாற்பிளந்து
  பாதியுயிர் தன்னுள்ளே தனதாக்கிக் கொண்டுவிட்டப்
  பறந்தறியா மயில்மீது பறந்துலகைச் சுற்றிவந்து
  கனியதனை அண்ணனுக்குத் தரச்செய்த சூராதிசூரன்
  கந்தனவன் செய்திட்ட மாயமன்றே நீயறிவாய்!

  ஆருக்கும் கிட்டாத மாங்கனியை அண்ணற்கீந்து
  பாருலகைக் காக்கவென்றோர் ஆண்டியாய்ப் பழநியிலே
  சீராக நின்றிடவே செய்ததுவும் கந்தலீலை!
  ஊரார் இதையறிவார்! நீயுந்தான் நன்கறிவாய்!
  பறக்கவொணாப் பறவையும் பறந்திடுமே திருவருளால்!
  அதைக்காட்ட வன்றோதான் வாகனமாய் நினைக்கொண்டான்
  கந்தனவன் பேர்சொன்னால் நடவாதும் நடந்திடுமே
  வானேறிப் பறப்பதென்ன விந்தையிங்கு சொல்மயிலே!

  முருகனருள் முன்னிற்கும்!

  ReplyDelete
 11. VSK Dr.Sir,!!
  அற்புதமான பாடலிது மயிலைப்பற்றியா , மயில் வாகனன் அந்த முருகனைப்பற்றியே
  இதனை ஆனந்த பைரவியில் பாட எனக்கு அனுமதி தருவீரா?
  பாடி மகிழ்வேன், எனது வலையிலே உங்கள் அனுமதியுடன் யூ ட்யூபில் போடுவேன்.
  சுப்பு தாத்தா.
  எனது ஈ மெயில்.
  meenasury@gmail.com

  ReplyDelete

 12. @ திரு,VSK,பதிவுக்கு வந்து பின்னூட்டமைக்கு மிக்க நன்றி. நாளும் போதும் என் நாவில் வந்தமரும் கந்தனைச் சீண்டிப் பார்க்க எனக்கு விருப்பம் அதிகம். அவனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று முன்பே நான் எழுதி இருக்கிறேன். ஏனோ அவன் புகழ்பாடும்போதே அவனைச் சீண்டவும் அவா எழுகிறது. அது என் வழி. தவறாக எண்ண வேண்டாம். அதனால்தானோ சூரி சிவாவுக்கு அவனைப் பற்றிப் பாட இதுவும் ஒரு வாய்ப்பு. முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும். சுட்டி அனுப்பட்டுமா.?

  ReplyDelete
 13. பாடலை இங்கேயும் கேட்கலாம்.

  subbu thatha.
  www.kandhanaithuthi.blogspot.in

  ReplyDelete
 14. என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க சூரி சார்! பலருடைய‌ பாடல்களையும் நீங்க பாடி, சுவை சேர்க்கும்போதெல்லாம், என்னோட ஒரு பாட்டையாவது உங்களோட அமுதக் குரல்ல கேட்கமாட்டேனான்னு நினைச்சுகிட்டிருக்கேன் நான்! தயவு செஞ்சு பாடுங்க சார்! மு.மு.

  ReplyDelete
 15. தெரியாத விவரம் சிவகுமாரன்..

  நான் ஸ்ரீதேவியப் பத்திக் கவிதை எழுதி அனுப்பலாம்னு இருந்தேன் ஜிஎம்பி சார்.

  ReplyDelete

 16. @ அப்பாதுரை-- இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. நான் வித்தியாச கோணத்தில் எழுதியதுபோல் உங்கள் கோணமும் இதைவிட ரசிக்கப் படும்.நன்றியுடன்.

  ReplyDelete
 17. அழகு மயில் வாகனன் -தங்கள் அழகான பாடல் வரிகளில் ஏறி
  எழிலாக காட்சி த்ருகிறான் குறும்பாக..

  ReplyDelete
 18. அன்புடையீர்..
  வித்தியாசமான சிந்தனை..

  ஆணவம் அகன்ற நிலையில்தான் அசுரன் அடங்கி நிற்க - அறுமுகன் அவனை வாகனமாக ஆக்கிக் கொண்டான்.

  இந்த நிலையில் தாங்கள் மயிலிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டதும் - அது திகைத்து நின்று விட்டது.

  அதிலும், பாட்டுக்குப் பாட்டு என - பதிவு மிக ரசனையாக இருக்கின்றது.

  இனிய பதிவினுக்கு நன்றி ஐயா..

  ReplyDelete

 19. @ துரை செல்வராஜு
  வித்தியாசமான சிந்தனையே பாட்டுக்குப் பாட்டு வரவழைத்தது.வந்து கருத்துப் பதித்தமைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete