ஒரு விளக்கம்.
-----------------------
அன்பு பதிவுலக நண்பர்களே, நான் இரண்டாண்டுகளுக்கும் மேலாக பதிவுலகில் எழுதி வருகிறேன். வித்தியாசமான விஷயங்களை கட்டுரைகளாகவும் ,கவிதைகளாகவும் கதைகளாகவும் எழுதி வருகிறேன். அண்மையில் எனக்கு வந்த மின் அஞ்சல்களில் கண்ட சில தகவலளையும் பகிரத் தொடங்கினேன். நல்ல விஷயங்கள் என்று எனக்குப் பட்டதை , சிலவற்றை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்தும் பகிர்ந்து கொண்டேன். அந்த விதத்தில் என் பதிவு ;சென்னையின் விற்பனைப் பிரிவுப் பெண் ,வாஷிங்டன் போஸ்டின் கண்மூலம் பதிவிட்டிருந்தேன். நல்ல விஷயம் எனப் பாராட்டியும், எனக்குத் தனிப்பட்ட மூறையில் இது முன்பே வந்த சமாச்சாரம் என்றும் அதில் கண்ட செய்தியின்உண்மை நிலை குறித்த சந்தேகத்து டனும் கடிதம் வந்தது. எனக்கு வந்த மின் அஞ்சலின் அடிப்படையில் எழுதி இருந்தேன். அதில் கண்ட செய்தி உண்மை என்று நம்பி எழுதினேன். அது இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்தது என்றோ அது தவறாக இருக்கலாம் என்றோ எண்ண வில்லை. ஆனால் நான் எழுதுவது உண்மைக்குப் புறம்பாக இருக்கலாம் எனும் செய்தியே எனக்கு வருத்தம் அளிக்கிறது. சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பால் பட்டவளாக இருக்க வேண்டும் எனும் மொழிக்கு ஒப்ப நான் எழுதுவதும் சந்தேகத்துக்கு உள்ளாகக் கூடாது என்றும் எண்ணுகிறேன். எனக்கு அனுப்பிய நண்பருக்கும் விளக்கம் கேட்டு எழுதி உள்ளேன். ஆனால் அவர் எனக்கு முகப் பரிச்சயம் கூட இல்லாதவர். பார்ப்போம் பதில் வருகிறதா என்று. இருந்தாலும் இனி மின் அஞ்சலில் வரும் செய்திகள் உண்மை என்று நம்பி பகிர்வதில்லை என்று முடிவு செய்துள்ளேன். அது சரியானதுதான் என்று நம்புகிறேன்
இடம் பெயர் போன்ற விவரங்களுடன் தவறான செய்தி கொடுக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது என்னும் என் நம்பிக்கை பொய் என்று எண்ணமனம் வரவில்லை. ஒரு வேளை காலங்கடந்த செய்தியாய் இருக்கலாம். காலங்கடந்த நிகழ்ச்சி என்பதால் சம்பந்தப் பட்ட வர்கள் நினைவில் இருந்து மறைந்து போயிருக்கலாம். இருந்தாலும் மின் அஞ்சல் செய்திகளை பதிவிட மாட்டேன் என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.
நல்லதொரு முடிவு ஐயா... தொடருங்கள்...
பதிலளிநீக்குகண்கள் சரியாகி விட்டதா...? கவனித்துக் கொள்ளவும்...
மிகவும் நல்ல முடிவு.......
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
வணக்கம்
பதிலளிநீக்குஎமது சேவைகளின் சிறப்பு அம்சங்கள் வாரம் இரு நட்சத்திரபதிவர்கள்.
தினபதிவு தளத்தின் முகப்பில் தெரியும் இது உங்களுக்கான வாசகர்களை அதிகரிக்கும்.
தினபதிவு திரட்டி
தங்கள் எண்ணம உயர்ந்தது அய்யா!
பதிலளிநீக்குஇதெல்லாம் சகஜம் பாலு சார்.
பதிலளிநீக்குஆனா ரெண்டு வருஷமா 72 வயசு இளைஞனாவே இருந்தா எப்புடி? பேரன் கிட்ட சொல்லி வயசைக் கூட்டுங்க.
எங்க வயசும் கூடிக்கிட்டு இருக்குல்ல.
வந்த மின்னஞ்சளை "முன் வைத்து' எழுதியதில் எந்த முரணும் இருப்பதாய் தெரியவில்லை ஐயா> இதே மின்னஞ்சளை நானும் முன்போ படித்திருக்கிறேன். அந்த புத்தக கடையையும் ஒக்விலுக்கு அருகில் பார்த்திருக்கிறேன். செய்தியும் நல்ல விஷயங்களைத்தானே சொல்கிறது. செய்தி தவறானது என்றாலும், இதனால் யாரும் பாதிக்கப்ப்டவில்லையே? பின் என்ன வருத்தம்?
பதிலளிநீக்கு(மின்னஞ்சல்களை முழுவதுமாய் நம்பி, சமுதாயத்திற்கு ஊறு விளைவிக்கும் செதிகளைத் தவிர்க்கலாம்) புரளிகளைப் பரப்பாமல் இருப்பதில் உறுதியாய் இருப்போம்.
கண்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் அய்யா
பதிலளிநீக்கு