திங்கள், 12 நவம்பர், 2012

பிறந்தநாளும் மணநாளும்






நவம்பர் மாதம் ஸ்கார்ப்பியோ ராசியில் பிறந்த சில பிரபலங்களின் பெயரைக் கூறு. .
பண்டிட் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி , ஜீ.எம். பாலசுப்பிரமணியம். .!

கடைசிப் பெயர் அனைவரும் அறிந்ததே. இந்த 74 வயது இளைஞன் பிறந்தது
11- 11-1938 மணம் முடித்தது 11-11-1964.  AND GOING STRONG//! எப்போதும் போல் ஏதோ கிறுக்கத் தோன்றியது அடியில் காண்க.


ஆண்டொன்று போக அகவை ஒன்று கூட
இன்றுறங்கி நாளை எழுவேனா என்றறியாமலேயே
சேர்த்துவிட்டேன் ஏழு பத்துகளுடன் நாலாண்டுகளும்
ஆசை எனும் அரவமே அனைத்து வினைகளுக்கும்
ஆதி காரணம் என்றறிந்தும் பாசவலையில் கட்டுண்டு
காலம் கழிந்து விட்டது.. அன்பால் கட்டுவதும்
அன்பினால் கட்டப் படுவதும் இன்பம்தான்
மறுப்பதற்கில்லை, மறப்பதற்கில்லை. .புவியில்
வந்துதித்த நாளே இல்லத் துணையுடன் சேர
தேர்ந்தெடுத்த நாளும் எனும்போது கூடுகிறது
மகிழ்ச்சி குறையில்லாப் பொலிவுடன்.

அல்லல்கள் பலவற்றோடு அனுபவங்கள்
கற்றுத் தந்த பாடங்கள் அசைபோட்டு உணரும்போது
இன்னுமொரு வாழ்வு அமையுமானால் , கேள்வி எழுகிறது,
இதையே தேர்ந்தெடுப்பேனா என்று. .நிச்சயமாய் இதையே
தேர்ந்தெடுப்பேன், என்னில் இருந்த சில குறைகள் நீக்க
எனக்கொரு வாய்ப்பு அது நல்குமல்லவா.?


குறைவற்ற வாழ்வுதனை நிறைவாக வாழ்ந்து விட்டேன்.
இனி எனக்கொரு குறையிலை நான் தயார் யாரும்
அறியாத அண்டப் பேரண்ட வெளிக்குள் ஒளியிலோ இருளிலோ
நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..!  

சில நாட்களுக்குமுன்  உன்னை வணங்குகிறேன் என்னும் ஒரு பதிவு எழுதி உருவமில்லா சக்தியை வணங்கி சில வரிகள் எழுதி இருந்தேன். அதை அருமை வலையுலக நண்பர் சூரி சிவா  ( சுப்புத் தாத்தா ) பாடி எனக்கு அணுப்பி இருந்தார். அதை அனைவருடனும் பகிர விரும்பினேன் ஆனால் என்ன செய்தாலும்  ட்ராஃப்டில் வருவது ப்ரீவியூவில் வருவதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு என்  மதிப்பையும் நன்றியையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.  
பதிவுலக நண்பர்கள் 

அனைவருக்கும் என் மனக்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் 








21 கருத்துகள்:

  1. புவியில்
    வந்துதித்த நாளே இல்லத் துணையுடன் சேர
    தேர்ந்தெடுத்த நாளும் எனும்போது கூடுகிறது
    மகிழ்ச்சி குறையில்லாப் பொலிவுடன்.

    நிறைவான வாழ்வு இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறையருளைப் பிரார்த்திக்கிறேன்..

    இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. நிறைவான வாழ்வு பல்லாண்டு வாழ இறையருளை பிரார்த்திக்கிரேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. Happy wedding anniversary!
    And happy Deepavali.... :D :D

    Nice photograph! :)

    பதிலளிநீக்கு
  4. நிம்மதி நிலைத்திருக்க நீண்ட நாள் வாழ வேண்டுகிறேன்.

    இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    எங்களையும் ஆசிர்வதியுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் எழுதிய நான் பாடிய உங்கள் பதிகத்தை இங்கே கேளுங்கள்
    நிறைவான வாழ்வு இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறையருளைப் பிரார்த்திக்கிறேன்..

    இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்.

    subbu thatha..

    பதிலளிநீக்கு
  6. பிறந்த நாள்
    திருமண நாள்
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    ராணுவ மேஜர் போல இருக்கீங்க பாலு சார். மாமிக்குத்தான் முகமெல்லாம் வெட்கம்.இருவரும் நோய் நொடியின்றி இனிதே வாழ்க.

    (நவம்பர் 7ல் இன்னொரு பிரபலமும் பிறந்தது உங்களுக்கெப்படித் தெரியாமப் போச்சு)

    பதிலளிநீக்கு
  7. பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ஐயா...

    குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    பதிலளிநீக்கு
  9. பிற‌ந்த‌ நாள் / மண‌ நாள் வாழ்த்துக்க‌ள், பாலு சார்.
    அமெரிக்க‌ர்க‌ள் இந்த‌ 11/11 நாளில் ஜ‌னித்த‌வ‌ர்க‌ளை
    மிக‌ச்சிற‌ப்பாக‌க் கொண்டாடுவார்க‌ளாம்.
    அன்று த‌ன் (அமெரிக்காவில் பிற‌ந்த‌ / இருக்கும் பேத்தியை
    ப‌ற்றி சொல்லிக் அதைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்க‌ள்.
    அப்பாதுரைக்கு அது ப‌ற்றி தெரிந்திருக்க‌ளாம்.
    ம‌றுப‌டியும் ஒரு சான்ஸ் கிடைத்தால் திரும்ப‌வும்,
    இந்த‌ வாழ்வே வாழ‌ விரும்பும் நீங்க‌ள் நிச்ச‌ய‌ம் நீங்க‌ள் விரும்பிய‌,
    நிறைவான‌, நெகிழ்வான‌, சிற‌ந்த‌ வாழ்வே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்க‌ள்.
    தங்களின் த்னித்துவ‌மான பின்னோட்ட‌ங்க‌ள் உங்க‌ளின் ப‌றவைப் பார்வையாய் விளங்கும்.
    நீடூழி வாழ‌, நல்ல‌ ச‌க்திக‌ளை வ‌ண‌ங்குகிறேன், என் குடும்பத்தார்க‌ளுட‌ன்.

    பதிலளிநீக்கு
  10. புவியில் உதித்ததும்... மணம் முடித்ததும்... இதோ இனிய தீபாவளியும் சிறப்பாக ஒரே மாதத்தில் கிடைக்கும் அதிர்ஷ்டம்....

    மனம் நிறைகிறது சார்....

    அழகு......

    அன்பின் அழகு அடக்கத்தில் தெரிகிறது....
    பண்பின் அழகு புன்னகையில்
    தெரிகிறது.....
    பூரிக்கும் அழகு நிமிர்ந்த கம்பீரத்தில்
    தெரிகிறது....

    இறையாசியுடன் சௌக்கியமாய் பல்லாண்டு காலம் நலமுடன் இருக்க மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் சார்....

    பதிலளிநீக்கு
  11. அய்யா! உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்! வாழ்த்துக்கள்!

    அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
    பண்பும் பயனு மது. -- திருக்குறள் 45

    (டாக்டர் மு.வ உரை: இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!



    பதிலளிநீக்கு
  12. சந்தோஷமான பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    பிறந்த நாள்
    மணநாள் +

    இனிய தீபாவளி
    நல்வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  13. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகளும், வணக்கங்களும். பல்லாண்டு பல்லாண்டு இதே சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகள்.உங்கள் மனைவிக்கும் எங்கள் வாழ்த்துகளும், வணக்கங்களும்.

    பதிலளிநீக்கு
  14. இனிய தீபாவளி வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள், வணக்கங்கள். களையான படம்.

    (அண்டத்திலும் வலைப்பூ வேணுமா?!)

    பதிலளிநீக்கு
  16. பிறந்த நாள்
    திருமண நாள்
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  17. @ இராஜராஜேஸ்வரி,
    @ லக்ஷ்மி,
    @ மாதங்கி மாலி,
    @ சசிகலா,
    @ சூரிசிவா,
    @ எஸ்.சுரேஷ்,
    @ சுந்தர்ஜி,
    @ திண்டுக்கல் தனபாலன்,
    @ அவர்கள் உண்மைகள்,
    @ வாசன்,
    @ டாக்டர் கந்தசாமி,
    @ மஞ்சு பாஷிணி,
    @ தி. தமிழ் இளங்கோ.
    @ வை. கோபாலகிருஷ்ணன்,
    @ கீதா சாம்பசிவம்,
    @ அப்பாதுரை.
    @ சமுத்ரா
    அன்பு உள்ளங்களின் பாசத்தில் நெஞ்சு நெகிழ்ந்து விட்டது. எல்லோருக்கும் என் நன்றி.

    /நவம்பர் 7-ம் தேதி பிறந்த இன்னொரு பிரபலம் பற்றி எப்படித் தெரியாம போச்சு.?ஒரு வேளை எனக்கு முன்பே பிறந்ததால் இருக்கலாம். ,இப்போது தெரிந்து விட்டதாக எண்ணுகிறேன். நீங்களும் ஸ்கார்ப்பியோவா சுந்தர்ஜி.?

    அன்பு சூரி சார். நீங்கள் பாடியது மற்றவர் கேட்க இதுவொரு வாய்ப்பு. மகிழ்ச்சி.
    வாசன், அப்பாதுரையும் வந்துவிட்டார். நவம்பர் 11 பற்றி அவர் ஏது தெரிவிக்க வில்லையே.

    வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. பொதுவாகவே மாதம்/தேதி ஒன்றி வரும் நாட்களைக் கொண்டாடுவது மேற்கத்திய வழக்கம் - ஆனால் பிரமாதமான கொண்டாட்டமாக இராது, எனக்குத் தெரிந்தவரை.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு