Monday, October 21, 2013

மனம் போன போக்கில்......எழுத்து.


                         மனம் போன போக்கில் .........எழுத்து
                         -------------------------------------------------


நண்பர் ஒருவர் பதிவினில் “ வீசு தென்றல் காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவரோஎன்னும் சொற்றொடர் என்னைக் கவர்ந்தது. இதையே தலைப்பாக்கி ஒரு கவிதை எழுதலாமா என்ற எண்ணம் உதித்தது. வழக்கம்போல் எழுத ஆரம்பித்தேன் மூன்று நான்கு வரிகள் எழுதியதும் என் சிந்தனை என்னை வேறு பாதையில் இழுத்துச் சென்றது. அது போன போக்கிலேயே எழுதியதையும் பதிவிடுகிறேன்
வீசு தென்றல் காற்றிருக்க  வேறெதுவும் வேண்டுவரோ
பேசும் பொற்சித்திரம் அருகிருக்க அருகினிலே
ஓடும் ஓடையின் தண்ணீரும் சுவை தருமோ தென்றல் காற்று , தண்புனல் சித்திரம்போல் பாவை
போதுமா இப்புவியில் வேறெதுவும் வேண்டாமா
.
பசிக்கும் வேளை புசிக்க உணவு அது ஒன்றே
போதும் என்று சொல்ல வைக்கும். பாரீரே அறிவீரே.

கொடுப்பதன் இன்பம் அதை எடுக்கவிட்டுக்
கொடுப்பதில் கூடும் இன்பம் உணர்வோமே.
கொடுத்துத்தான் பார்ப்போமே
 ;
ஈசன் அருளைப் பெற ஈதல் ஒன்றே நல்வழி-அதைவிட்டு   
அவன் சொன்னான் இவன் சொன்னான் எனக் கூறி
பாலையும் பழத்தையும் தேனையும் தீஞ்சுவை இளநீரையும்
பூசனை என்ற பேரிலும் அபிஷேகம் எனும் பேரிலும்
கல் மீதும் மண் மீதும் பொழிந்தே வீணடித்தல் ஏனோ? முறையோ.?
ஈசன் அருளைப் பெறவே இத்தனையும் தேவை என்றால்
அறிவீரே அன்பர்காள், அத்தனையும் அறியாமையின் வழிமுறை

பக்தி செய்யவே பாசாங்கு வேண்டியதில்லை. எங்கும்
நிறைந்த ஈசன் என்னிலும் உள்ளான் எவரிலும் உளான்
இதுவன்றோ உண்மை நிலை.?ன்பே சிவம் எனச்
சொல்வதோடு நில்லாமல் நேசி ; உன்னை நேசி; இவனை நேசி
அவனை நேசி; உவனை நேசி. அனைவரையும் நேசி
.
பாரினில் பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்.
போகும்போது என்ன கொண்டு போவோம்.
இருப்பதனைத்தும் எனக்கென்றால் அது
என்னுள் உறையும் இறைவனுக்கும்தானே
என்னுள் இருப்பவன் அவனிலும் உளான் ஆக
எனதெல்லாம் அவனுக்கும் உரிமைதானே
கிடைத்ததெல்லாம் அவன் கொடுத்தது- அது
அனைவருக்கும் உரியது. .இருப்பவன் என்று
என்னையோ உன்னையோ தேர்ந்தெடுத்தான் என்றால்
உன் மூலம் என் மூலம் இல்லாதோர் பெற
வேண்டும் என்பதே அவன் சித்தமாயிருக்கலாம்

 
 


22 comments:

 1. சரட்டில் பூ கோர்க்கிறார்ப் போல
  சிந்தனை மிகச் சரியாக
  நேர்கோட்டில்தானே பயணிக்கிறது
  நீங்கள் மனம் போன போக்கில் எனச்
  சொல்லிப்போனாலும்....

  ReplyDelete
 2. /// கொடுப்பதன் இன்பம் அதை எடுக்கவிட்டுக்
  கொடுப்பதில் கூடும் இன்பம் உணர்வோமே... கொடுத்துத்தான் பார்ப்போமே... ///

  சிறப்பான வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. உன் மூலம் என் மூலம் இல்லாதோர் பெற
  வேண்டும் என்பதே அவன் சித்தமாயிருக்கலாம்

  மூலப்பரம்பொருளின் அழகான சித்திரம்..!

  ReplyDelete
 4. அன்பே சிவம் எனச் சொல்வதோடு நில்லாமல் அனைவரையும் நேசி!.. சிந்தனைக்கு உரிய சிறப்பான வரிகள்..

  ReplyDelete
 5. மனம் கவர்ந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு அதை தொடர்ந்து ஒரு கவியாக்கியது அருமை. நல்ல கருத்துக்களுடன் அமைந்தது தங்கள் திறமையை எடுத்துக் காட்டுகிறது.

  ReplyDelete
 6. ///பக்தி செய்யவே பாசாங்கு வேண்டியதில்லை. எங்கும்
  நிறைந்த ஈசன் என்னிலும் உள்ளான் எவரிலும் உளான்
  இதுவன்றோ உண்மை நிலை.?////
  நன்று சொன்னீர் ஐயா. நன்றி

  ReplyDelete
 7. very nicely conceptualised and brought to life!Sorry I cant write in Tamil( chentamizh) like you!

  ReplyDelete
 8. நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 9. மனம்போன போக்கில் நீங்கள் எழுதினாலும், உங்கள் மனது பண்பட்ட மனது என்பதால் பாதை தவறிவிடவில்லை. மனதிற்கு பிடித்தமானதாகவே இருக்கின்றது.

  ReplyDelete
 10. கொடுத்துத்தான் பார்ப்போமே..//

  இத செஞ்சி பாத்தவங்களுக்குத்தான் தெரியும் இதில் இருக்கும் மனநிறைவு. அதுவும் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவு செய்து கொடுக்கும் போது கொடுப்பவருக்கு மனநிறைவு பெறுபவருக்கு மகிழ்வு.

  ReplyDelete

 11. @ ரமணி
  மகிழ்வூட்டும் பாராட்டுக்கு நன்றி ரமணி சார்
  @ திண்டுக்கல் தனபாலன்
  வரிகளைப் பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி தனபாலன்.
  @ இராஜராஜேஸ்வரி
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜீனியஸ் மேடம்.
  @ துரை செல்வராஜு
  வருகைக்கும் வரிகைகளைப் பாராட்டிக் கருத்திட்டமைக்கும் நன்றி ஐயா
  @ T.N.MURALIDHARAN
  திறமை என்று ஒன்றும் இல்லை. சில நேரங்களில் எண்ணமும் வார்த்தையும் இணைந்து சரியாய் விழுவதுண்டு. பாராட்டுக்கு நன்றி.
  @ கரந்தை ஜெயக்குமார்
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
  @ hariharan mani
  thanks for the compliment mani. wish you visit more often.!
  @ டாக்டர் கந்தசாமி
  வந்து ரசித்தமைக்கு நன்றி ஐயா.
  @ தி. தமிழ் இளங்கோ
  படித்தது பிடித்தது என்று அறிந்து மகிழ்ச்சி ஐயா.
  @ டி.பி.ஆர். ஜோசப்
  புரிந்து எழுதிய பின்னூட்டத்துக்கு நன்றி சார்.

  ReplyDelete
 12. மிகச் சிறந்த கவிதை . கருதானெ முக்கியம் ? யாப்பு எல்லாம் அப்புறந்தான் . பெரும்பாலோர் சொல்ல அஞ்சும் முற்போக்கான கருத்துகள் நிறைந்துள்ளன . பாராட்டுகிறேன் .

  ReplyDelete

 13. @ சொ.ஞானசம்பந்தன்
  ஐயா உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தருகிறது.யாப்புடன் எழுத முயலும்போது எண்ணங்களுக்கு எழுத்துக்கள் வேகத்தடை போடுகின்றோர்போல் உணர்கிறேன்.பொதுவாகவே நான் எழுதும் பதிவுகள் வெகுஜனக் கருத்துக்கு ஒத்துப்போவதில்லை. இந்நிலையில் உங்கள் பாராட்டு என் எண்ணங்களுக்கும் எழுத்துக்கும் கிடைத்த பரிசாக நினைக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 14. நல்லதொரு பகிர்வு

  ReplyDelete
 15. அன்பே சிவம் எனச்
  சொல்வதோடு நில்லாமல் நேசி ; உன்னை நேசி; இவனை நேசி
  அவனை நேசி; உவனை நேசி. அனைவரையும் நேசி//
  நன்றாக சொன்னீர்கள்.

  உன் மூலம் என் மூலம் இல்லாதோர் பெற
  வேண்டும் என்பதே அவன் சித்தமாயிருக்கலாம் //
  உண்மை. எல்லாம் அவன் செயல்.
  கவிதை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 16. நல்லதொரு பகிர்வு ஐயா!

  ReplyDelete

 17. @ ராஜி
  அத்தி பூத்தாற்போலான வருகைக்கு நன்றி
  @ கோமதி அரசு
  வரிகளை எடுத்துக்காட்டிப் பாராட்டியதற்கு நன்றி
  @ தனிமரம்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 18. 'இவனை நேசி, அவனை நேசி, உவனை நேசி". அற்புதம் ஐயா.

  ReplyDelete
 19. அட நம்ம கேசு.. எதையோ எழுதத் தொடங்கி எங்கேயோ போய் கடைசியில் கல்லையும் மண்ணையும் ரெண்டு தட்டு தட்டி.. வெரி குட். வெரி குட்.

  ReplyDelete

 20. @ expatguru
  வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றி
  @ அப்பாதுரை
  பெரும்பாலும் இப்போதெல்லாம் எழுத்துக்கள் அப்படித்தான் வந்து விழுகின்றன. பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 21. //பாரினில் பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்.
  போகும்போது என்ன கொண்டு போவோம்.//

  ;)

  "மனம் போன போக்கில்......எழுத்து."

  மனதைத்தொடுவதாக உள்ளது.

  ReplyDelete

 22. @ கோபு சார்
  நன்றி கோபு சார்.

  ReplyDelete