தீபாவளி நன்று கொண்டாடுவோம்.
-------------------------------------------------
பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்
புராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே.
நரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின்
வனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின்
கேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர்
அர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன ?
தீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.
அகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட
தீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில்
கட்டத் துவங்கிய தினமென்றும், சமணர் மகாவீரர் நிர்வாணம்
அடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்
ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
தீப ஆவளியில் ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
வேண்டாதன விட்டொழிப்பதை ”தலை முழுகுதல்” எனக் கூறுவர்
கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்
“நான்”ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி
இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப்
பண்டிகை நன்று கொண்டாடுவோம்
வாண வேடிக்கை கண்டு மகிழுங்கள்
தீபாவளி இனிப்புகள் .போதுமா இன்னும் வேணுமா.?
( அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் )
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
பதிலளிநீக்குஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்//
அருமையாக சொன்னீர்கள்.
வருடா வருடம் மாமனார், மாமியாருடன் தீபாவளி கொண்டாடுவோம்.
இந்த முறை மகனுடன்.
நினைவுகள் எல்லாம் ஊரில்.
அவர்கள் ஆசிகள் என்றும் எங்களுக்கு உண்டு என்ற நினைவுடன். போனிலும், ஸ்கைப்பிலும் பேசி வாங்க வேண்டும் வாழ்த்துக்களை.
உங்கள் பகிர்வு அருமை.வாணவேடிக்கை
காணொளி, இனிப்புகள் , வாழ்த்துக்களுக்கு நன்றி.
/// “நான்”ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி ///
பதிலளிநீக்குசிறப்பு ஐயா...
இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
தீபாவளிய இப்பல்லாம் தீப ஒளி திருநாள்னு சொல்றாங்க. எந்த பேரானாலும் காதை செவிடாக்கற பட்டாசுகள் இல்லாமல் கொண்டாடுவார்களேயானால் உண்மையில் இது ஒளி நாளாகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குதீப ஒளி நாளின் நல்வாழ்த்துக்கள்.
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், ஐயா.
பதிலளிநீக்குகாணொளி - வான வேடிக்கை அருமையாக உள்ளது, ஐயா.
பதிலளிநீக்குபார்த்து ரஸித்தேன். நன்றிகள்.
இனிப்புகளும் கண்களால் சுவைத்து மகிழ்ந்தேன்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் )
பதிலளிநீக்குஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனதி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
@ திண்டுக்கல் தனபாலன்
@ டி.பி.ஆர்.ஜோசப்.
@ கரந்தை கெயக்குமார்.
@ கோபு சார்
@ இராஜராஜேஸ்வரி
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.
மகிழ்வுக்கும், மத நல்லிணக்கத்துக்கும் வழி வகுக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்களின் உண்மையான தாத்பர்யங்களை வெகு அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஐயா.
பதிலளிநீக்குஇனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநல்ல பதிவு!
பதிலளிநீக்குத.ம.+1
எங்கிருந்தாலும் கொண்டாடுவோம் தீபாவளியை. இருளை நீக்கி ஒளியைக் கொண்டுவருவோம் வாழ்வினிலே. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதமஞ்சரி
@ ராமலக்ஷ்மி
@ நம்பள்கி
@ செல்லப்பா யக்ஞஸ்வாமி
வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.நம்பள்கியின் முதல் வரவுக்கு நன்றி
வணக்கம்
பதிலளிநீக்குசிறப்பான பதிவு வாழ்த்துக்கள்..ஐயா
இனியதீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதிலளிநீக்கு@ 2008rupan
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன் அவர்களே.
// பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்
பதிலளிநீக்குபுராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே. //
பண்டிகைகள் கொண்டாட்டம் என்றாலே மகிழ்ச்சியை மட்டுமே நினையுங்கள் என்று சொன்ன வரிகள்.
எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
@ தி. தமிழ் இளங்கோ
பதிவை ரசித்துக் கருத்திட்டதற்கு நன்றி
தீபாவளி வாழ்த்துகள்.