ஞாயிறு, 3 நவம்பர், 2013

அலைகள் ஓய்ந்த பிறகு....


                                     அலைகள் ஓய்ந்த பிறகு.
                                      ----------------------------------



மூன்று நான்கு நாட்களாக வலைப் பதிவுகளில் எங்கு பார்த்தாலும் தீபாவளிப் பண்டிகை குறித்தே பதிவுகள் இருந்தன. நம் பதிவில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருப்போம். வாசிப்பவர்கள் பதிவின் செய்திகளைப் படிக்கிறார்களா இல்லையா என்று தெரியாது. ஆனால் அவர்களது தீபாவளி வாழ்த்துக்கள் இருக்கும் அதே போல் அவர்கள் பதிவினை நாம் படித்த பிறகு தீபாவளி வாழ்த்து சொல்லாமல் வருவது எப்படி. நாமும் வாழ்த்து தெரிவிக்க வேண்டி இருக்கும். இதல்லாமல் மின் அஞ்சலிலும் பரஸ்பரம் வாழ்த்துக்கள் . அப்பாடா .... ஓரளவுக்கு பரஸ்பர் தீபாவளி வாழ்த்துக்கள் ஓரளவு ஓயத் தொடங்கி விட்டது.
சரி. பதிவுக்கு matter  வேண்டுமே. அதுவும் என் பதிவுகள் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று நினைப்பவர்களை ஏமாற்றலாமா.? இந்தக் காணொளி என்னைக் கவர்ந்தது. ஒரு நண்பர் அனுப்பியது பகிர்கிறேன்.
                 
              


முன்பு ஒரு பதிவில் நானும் என் சங்கீதக் கனவுகளும் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்
பார்க்க பதிவ http://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_27.htmlு

அந்தக் காலத்தில் என் மனைவி கர்நாடக சங்கீதம் கற்கத் துவங்கி இருந்த போது பாடிய ஒரு பாடலை டேப்பில் பதிவு செய்திருந்தேன் 1970களின் ஆரம்பம். அந்தப் பாடலை இப்போது போட்டுக் கேட்டபோது இதைக் கணினியில் ஏற்ற வழி கேட்டேன் என் பேரனிடம் . அவன் என்னென்னவோ செய்து வலையில் ஏற்றத் தக்கதாக மாற்றிக் கொடுத்திருக்கிறான். டேப்பிலிருந்து மறுபடியும் ஒலிப்பதிவு செய்தபோது பாட்டின் மெருகு சற்றுக் குறைந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் பகிர்கிறேன்



              

...........

13 கருத்துகள்:

  1. வலையில் ஏற்றிய பேரனுக்கு முதலில் பாராட்டுக்கள்... நன்றி...

    நல்லா இருக்கு ஐயா... துணைவியாருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. காணொளிகள் கவர்ந்தன.
    பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. முதல் காணொளி பிரமிக்க வைத்தது. கம்பிக்குக் கம்பி தாவும்போது கம்பி வளையாதிருப்பது ஆச்சர்யம்.

    ஹிந்தோளம் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  4. கானொளியும் சூப்பர் உங்களு மனைவியின் பாட்டும் சூப்பர். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. முதல் காணொளி மிகவும் அருமை. ரஸிக்க வைத்தது.

    பகிர்வுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும், ஐயா.

    பதிலளிநீக்கு
  6. முதல் காணொளி நிகழ்ச்சி பிரமிப்பாக இருந்தது.

    பதிவில் இருந்த பாடலும் அழகு!..

    பதிலளிநீக்கு
  7. காணொளிகள் அருமை.
    முதல் காணொளி வியப்பு.
    இரண்டாம் காணொளி இனிமை.
    வாழ்த்துக்களைக் கூறுங்கள். நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

  8. @ திண்டுக்கல் தனபாலன்
    @ இராஜராஜேஸ்வரி
    @ ஸ்ரீராம்
    @ டி.பி.ஆர்.ஜோசப்
    @ கோபு சார்
    @ துரை செல்வராஜு
    @ கரந்தை ஜெயக்குமார்
    அனைவருக்கும் வருகைக்கும் , கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  9. கணொளி மிக அருமை.
    உங்கள் மனைவியின் குரல் இனிமையாக உள்ளது.
    பேரனுக்கு வாழ்த்துக்கல்.

    பதிலளிநீக்கு

  10. @ கோமதி அரசு
    @ டாக்டர் கந்தசாமி
    வருகைக்கும் ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. பேரனுக்கு வாழ்த்துகள். ஊரில் இல்லாததோடு உடனடியாக விருந்தினர் வருகையாலும் பதிவுகளுக்குச் செல்லவும் முடியவில்லை. பதிவுகள் எழுதிப்போடவும் முடியவில்லை. அழைப்பிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. .நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்...
    வலைச்சர அறிமுகத்துக்கு வாழத்துக்கள்....

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
    www.99likes.blogspot.com

    பதிலளிநீக்கு