Friday, November 8, 2013

சந்திக்க வேண்டுகிறேன்.


                                          சந்திக்க வேண்டுகிறேன்
                                          -----------------------------------நான் இப்பதிவின் மூலம் இரண்டு செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை நல்ல செய்திகளா கெட்ட செய்திகளா என்று படிப்பவர்களே தீர்மானிக்கட்டும். இந்தப் பதிவுக்குப் பிறகு என் வலைப்பூ பதிவில் ஒரு நீண்ட இடைவெளி இருக்கும். நீண்ண்ண்ட என்றால் ஒரு பத்து நாள் இடைவெளி. ( நல்ல செய்தியா கெட்ட செய்தியா.?) நானும் என் மனைவியும் சென்னை செல்கிறோம். அங்கே 13-ம் தேதி முதல் 16-ம் தேதிவரை இருக்க திட்டம். நடுவில் ஒரு நாள் காஞ்சீபுரம் போக உத்தேசம். இதை நான் சொல்வதன் நோக்கமே  நாங்கள் அங்கு இருக்கும் போது பதிவுலக நண்பர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாகுமே என்பதால்தன். ( இது நல்ல செய்தியா கெட்ட செய்தியா.?)நாங்கள் அங்கு இருக்கும்போது  கணினியின் துணை இல்லாமல் இருப்போம். இருந்தால் என்ன.? இரண்டு அலை பேசி எண்கள் தருகிறேன். என்னை சந்திக்க வரும் பதிவர்கள் இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்( அட,,, சந்திக்க வேண்டுமானால் இவரல்லவா தொடர்பு கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக்கலாம்) அது சரிதான். ஆனால்  ஒரு மூத்த பதிவரை அங்கும் இங்கும் அலைக்கழிக்காமல் அவரை அவர் இடத்துக்கே சென்று சந்திப்பதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் வேளச்சேரியில் ( பஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டருக்குள் இருக்கும் , 80 அடி சாலையில் REAL VALUE  கட்டிட நிபுணர்களால்கட்டப்பட்ட SAI  SAROVAR  எனும் பத்து மாடி அடுக்குக் கட்டிடத்தில் ஏழாவது மாடியில் என் மகன் B.M. MANOHAR  வீட்டிலிருப்போம்.எங்களைத் தொடர்பு கொள்ள கீழே காணும் எண்களில் கூப்பிடலாம்.
அலைபேசி எண், 1) 096865 95097    அலைபேசி எண்.2) 077605 93289   நானே தொடர்பு கொள்ளலாம் என்றால் பலரது அஞ்சல் முகவரியோ தொலை பேசி எண்களோ கிடைக்கவில்லை.
இதை சிரமம் என்று எண்ணாமல் என்னை சந்திக்க வரும் பதிவுலக நண்பர்களுக்கு முன் கூட்டியே நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சந்திக்க வரும் நண்பர்களுடன் நேரில் இன்னுமொரு செய்தியைப் பகிர்ந்து கொள்வேன்.        


.......
            

    
 
   

14 comments:

 1. ஒரு மூத்த பதிவரை அங்கும் இங்கும் அலைக்கழிக்காமல் அவரை அவர் இடத்துக்கே சென்று சந்திப்பதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்வார்கள்//

  உண்மை, புரிந்து கொள்வார்கள்.
  நண்பர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. தங்களை நேரில் வந்து நான் சந்திக்கத் தயார். என் வீடு மகாபலிபுரம் போகும்வழியில் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தங்கள் வசதியைப் பொறுத்து என் வீட்டில் ஒருவேளையாவது உணவருந்த முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன். எனது அலைபேசி 9600141229
  ஆகும். அன்புடன்: இராய செல்லப்பா (இமயத்தலைவன்).

  ReplyDelete
 3. அது மட்டுமன்றி, பிற பதிவர்களையும் நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்ய முயலுகிறேன். தகவல் விடிவில் தெரிவிக்கிறேன். அன்புடன்: இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

  ReplyDelete
 4. நாற்பது கிலோமீட்டர் என்றது, வேளச்சேரியில் உங்கள் வீட்டிலிருந்து என் வீட்டிற்கு உள்ள தொலைவு ஆகும்.

  ReplyDelete
 5. முந்தைய பதிலில் 'விரைவில்' என்றிருக்க வேண்டும். 'விடிவில்' என்று வந்துவிட்டது. யுனிகோடில் இதெல்லாம் சகஜம் தானே!

  ReplyDelete
 6. பொது மக்களை இப்படி பயமுறுத்துவதை கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 7. சந்திப்புக்கள் எல்லோருக்கும் இனிமையானதாக அமையட்டும்.

  அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. வாருங்கள் ஐயா... சிங்காரச் சென்னைக்கு நல்வரவு! தொலைபேசி விட்டு தங்களை அவசியம் சந்திக்கிறேன் நான். அதென்ன... இனனொரு செய்தியை நேரில் பகிர்கிறேன் என்று கடைசியில் பன்ச் வைத்து எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டீர்களே...!

  ReplyDelete
 9. அன்புள்ள ஐயா,

  வணக்கம்.

  இன்று தங்கள் பெயர் வலைச்சரத்தில் இடம்பெற்று பாராட்டிப்பேசப்பட்டுள்ளது.

  இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_9.html

  தங்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  பிரியமுள்ள
  கோபு [VGK]

  ReplyDelete
 10. இனிமையான பயணமாக அமையட்டும். முடிந்தால் நானும் வரப்பார்க்கிறேன்.

  ஹா ஹா கந்தசாமி ஐயா!

  ReplyDelete
 11. பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் ஐயா. ஒரு பதிவர் சந்திப்பையும் நடத்திவிட்டு வாருங்கள்

  ReplyDelete
 12. பயணம் இனியதாகவே அமையட்டும்......

  ReplyDelete
 13. நல்ல செய்திதான்! சென்னை வலைப் பதிவர்கள் மகிழ்விற்கு சொல்ல வேண்டியதில்லை!
  கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. தங்களது சென்னை வருகைக்கு வாழ்த்துகள் அய்யா.
  உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.

  ReplyDelete