கதம்பப் பகிர்வுகள்
-------------------------
சில முரண்பாடுகள்
அரசியல் வாதிகள் நம்மை பிரிக்கிறார்கள். தீவிரவாதிகள் சேர்க்கிறார்கள்
முன்பின் தெரியாதவருடன் பழகுவது தவறு என்று எச்சரிக்கப் படுகிறோம். ஆனால்
முன்பின் தெரியாதவரோடு வாழ தூண்டப் படுகிறோம்
.
.
போலிஸைக் கண்டால் நட்பு பாராட்டுவதற்குப் பதில் பயமே வருகிறது
.
.
ப்ரியங்கா சோப்ரா மேரி கோமாக நடித்து அதிகபணம் சம்பாதித்து விட்டார்.அசல்
மேரி கோமைவிட.
கீதை பெரிசா குரான் ப்ரிசா என்று சண்டையிடுபவர்கள் அவற்றைப் படித்திருக்காமல்
இருக்கும்வாய்ப்பு அதிகம்
பெண்களின் படிப்புக்கு செலவு செய்வதை விட அவர்கள் திருமணத்துக்கு அதிகம்
செலவு செய்கிறோம்
கால்களில் அணியும் காலணிகள் குளிர்சாதனம் செய்யப்பட்ட கடைகளில் விற்பனை
ஆகிறது. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகள் தெருவோரங்களில் விற்கப் படுகின்றன.
நம் சமூகத்தில் கற்பழிக்காதே என்பவரைவிட கற்பழிக்கப் படாதே என்று
கூறுபவர்களே அதிகம்
வரதட்சிணை வாங்குவது தவறு என்று பல நூறு வார்த்தைகளில் எழுதி பரீட்சை பாஸ் செய்து ஐஏஎஸ் பணியில் அமர்பவர்கள்
அந்த ஐஏஎஸ்-ஐக் காட்டியே வரதட்சிணை அதிகம் கேட்கிறார்கள்
.
.
மொபைல் ஃபோனுக்கு ஸ்க்ரீன் கார்ட் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். ஆனால்
தலைக்கு ஹெல்மெட் அணிய மாட்டார்கள்
.
.
படுமோசமான படங்கள் வசூலில் குவிக்கின்றன.
இளமையில் வேண்டாம்
என்று ஒதுக்க படும் ஆண்கள் பிற்காலத்தில் நல்ல கணவன்களாகத் தெரிகிறார்கள்
சிறிது நகைக்க
”சற்று விளக்கமாகக் கூறேன்”.
”என் மனைவி எப்போதும் என்னுடன்
இருக்கிறாள். மைத்துனி அவ்வப்போது வருகிறாள். போகிறாள்”
.
.
ஒருவனின் டி ஷர்டில் கண்ட வாசகம்
”என்னைத் தொந்தரவு
செய்யாதீர்கள். எனக்குத் திருமணம் ஆகி நான் ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கிறேன்”
ஒரு உணவகத்தில் உணவு பறிமாறப் பட்டது.
கணவன்:- உணவு டெலிஷியஸாகத் தெரிகிறது. சாப்பிட்லாம்
மனைவி:- உணவு உண்ணும் முன்பாக இறைவனை வேண்டுவாயே
கணவன்:- அது
வீட்டில்.அன்பே.... இங்கு சமைத்தவருக்கு நன்கு சமைக்கத் தெரியும்
.
.
ஒருவன் அவன் மனைவிக்கு ஒரு நெக்லேஸ் பரிசளித்தான். அவள்
அவனுடன் ஆறு மாதத்துக்குப் பேசவில்லை இதைப் பார்த்த நண்பன் ஒருவன் கேட்டான்
”ஏன் நெக்லேஸ் போலியா”
”இல்லை அது எங்களுக்குள்ளான
ஒப்பந்தம்”
சிந்திக்க சோதிக்க..:-( கீழே காணும் செய்திகளை நான் சோதித்துப்
பார்க்கவில்லை. எனக்கு வந்ததைப் பகிர்கிறேன் தவறுகள் இருந்தால் நான் பொறுப்பல்ல.உ-ம்
வெள்ளிக்கிழமைகள் என்பது சனிக்கிழமை என்றிருந்திருக்க வேண்டும் என்னிடம் 1997-ம்
வருடக் காலண்டர் இல்லை)
”ஐயா அலுவலகத்தில் நீங்கள் சிங்கம்....
வீட்டில் எப்படி.?”
”வீட்டிலும் நான் சிங்கம்தான்.
ஆனால் அங்கு என் மனைவி துர்காவாக சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பாள்”.
2015-ல் வெள்ளிக் கிழமைகள்
04-04-2015
வெள்ளிக்கிழமை
06-06-2015
வெள்ளிக்கிழமை
08-08-2015 வெள்ளிக்கிழமை
10-10-2015 வெள்ளிக்கிழமை
12-12-2015 வெள்ளிக்கிழமை
1997-ம் வருட காலண்டரும் 2015-ம் வருட காலண்டரும் ஒரே மாதிரியே.
விழாக்களும் நாட்களும் ஒரே நாளில்.. யார் சொன்னது கடந்த காலத்துக்குப் போக
முடியாது
2015-ல் 1997-ம் வருடத்தை அனுபவியுங்கள்
( எத்தனை முறை வேண்டியும் என் பதிவுகள் எனக்குத் தெரியாமலேயே தமிழ் மணத்தில் இணைக்கப் படுகின்றன. மீண்டும் வேண்டுகிறேன் என் மீது இந்தக் கரிசனம் வேண்டாமே)
கதம்ப பகிர்வு நறுமணம் கமழ்கின்றது..
பதிலளிநீக்குநகைச்சுவைத் துணுக்குகள் அருமை
Im coming after
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநகைச்சுவையை இரசித்தேன். நீங்கள் குறிப்பிட்ட நாட்கள் 1997 ஆம் ஆண்டில் வெள்ளிக்கிழமைகள் தான் ஆனால் இந்த ஆண்டு அவைகள் அனைத்தும் சனிக்கிழமைகள். மேலும் 1997 ஆம் ஆண்டு முதல் தேதி புதன் கிழமை. ஆனால் இந்த ஆண்டோ முதல் தேதி வியாழக்கிழமை.
எல்லாவற்றையும் ரசித்தேன். சில எனக்கும் எஸ் எம் எஸ் ஆக வந்திருக்கிறது.
பதிலளிநீக்குதமிழ்மணத்தில் நான் இணைக்கவில்லை.
குடும்பம் ஒரு கதம்பம் என்பது உண்மைதான் அய்யா!
பதிலளிநீக்குகணவன் மனைவி இருவரிடையேயான நிகழ்வுகள் குறித்த அலைகளை
சிரிப்பின் அலை அலைகளில் மாட்டிக் கொண்டேன் அய்யா!
குறிப்பாக நான் வீட்டில் சிங்கம் ஆனால்
துர்காதேவியாக .....? ஹீ! ஹீ! ஹீ:
சீக்கிராமாக பல் கட்ட வேண்டும்!
சிரித்தால்?........ மீண்டும் ஹீ! ஹீ! ஹீ!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஹீ! ஹீ! ஹீ:
( அய்யா! வலைப் பூ பக்கம் தங்களது அலை அடிக்கட்டுமே!)
அய்யா வணக்கம்,
பதிலளிநீக்குமுதலில் முரண்கள், பின் நகைச்சுவை, இறுதியாய், செய்தி..
உண்மையில் அருமையான கதம்பம்தான் அய்யா!
நன்றி
//( எத்தனை முறை வேண்டியும் என் பதிவுகள் எனக்குத் தெரியாமலேயே தமிழ் மணத்தில் இணைக்கப் படுகின்றன. மீண்டும் வேண்டுகிறேன் என் மீது இந்தக் கரிசனம் வேண்டாமே)//
பதிலளிநீக்குஇதற்கு ஒரே வழி அந்த தமிழ்மணம் பட்டையை நீக்குவதுதான். அது அங்கே இருக்கும் வரை யாராவது அதை சுட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்.
கதம்ப பகிர்வு நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமிகவும் இரசித்துச் சிரித்து மகிழ்ந்தோம்
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமொபைல் ஃபோனுக்கு ஸ்க்ரீன் கார்ட் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். ஆனால் தலைக்கு ஹெல்மெட் அணிய மாட்டார்கள்
அருமை ஐயா மிக மிகவும் ரசித்தேன்.
முரண்சுவையாக நீங்கள் சொன்ன குறுஞ்செய்திகளை ரசித்தேன். நகைச்சுவையும் அவ்வாறே.
பதிலளிநீக்குநீங்கள் முன்னுரை சொல்லியும், உங்கள் பதிவுகளைப் படிக்காமலேயே, யாரோ உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்கிறார்கள் என்றும், அல்லது தமிழ்மணத்தில் தானியங்கி திரட்டி அதுவாகவே இணைக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். பேசாமல் பதிவை வெளியிட்ட சில நிமிடங்களில் நீங்களே தமிழ்மணத்தில் உங்கள் பதிவுகளை இணைத்து விடுங்கள். இதனால் உங்களுக்கு வரும் இந்த டென்ஷனை தவிர்க்கலாம்.
அருமை அருமை ஐயா
பதிலளிநீக்குநகைச்சுவையை அதிகம் ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்கு/// சிங்கத்தின் மீது துர்காவாக /// ஹா.... ஹா....
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை...
தமிழ்மணத்தில் நானும் இணைக்கவில்லை...
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
கதம்பப் பகிர்வை நுகர்ந்து அனுபவித்ததற்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ வே நடன சபாபதி
தீபாவளி போன்ற விழாதினங்கள் அதே நாட்களிலா என்று பார்த்தீரா?வருகைக்கும் ஒப்புநோக்கலுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
இம்மாதிரிப் பகிர்வுகள் உலகம் மிகச்சிறியது என்று உணர்த்துகிறது/ வருகைக்கு நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ யாதவன் நம்பி
பெண்களைப் பற்றி ஜோக்காக எழுதுவதை பல பெண் வாசகர்கள் விரும்புவதில்லை. படித்துச் சிரித்ததற்கு நன்றி ஐயா. என் டாஷ் போர்டில் வரும் உங்கள் பதிவுகளுக்கு நான் வருகிறேனே.
பதிலளிநீக்கு@ ஊமைக் கனவுகள்
கதம்பப் பகிர்வை ரசித்ததற்கு நன்றி ஐயா.! (ஆசானே....!?)
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
தமிழ் மணத்தில் ஓட்டுப்பட்டையை நான் வைத்துக் கொள்ளவில்லையே. வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
பதிவினை ரசித்ததற்கு நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ ரமணி
பதிவை ரசித்து மகிழ்ந்ததற்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஜீ.
பதிலளிநீக்கு@ தமிழ் இளங்கோ
தமிழ்மணத்தில் தானியங்கி திரட்டி அதுவாக இணைத்துக் கொள்ளுமா..? தெரியாதே. வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
நகைச்சுவையை அதிகம் ரசித்ததற்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
பல வீடுகளில் அதுதானே இயற்கையாக இருக்கிறது வருகைக்கு நன்றி டிடி.
முரண்களின் தொகுப்பு அருமை
பதிலளிநீக்குநகைச்சுவை பதிவுகள் சூப்பர் . காலண்டரை சரிபார்த்து விட்டு சொல்கிறேன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஐயா தங்கள் பதிவுகளில் தமிழ்மண வாக்குப் பட்டை உள்ளது. அது வேலை செய்யவில்லாத நிலையில் உள்ளது போல் காட்சி அளிக்கிறது. பொதுவாக யாரேனும் பதிவை தமிழ்மணத்தில் submit to tamilmanam click செய்து user id password கொடுத்தால் பதிவு இணைக்கப் பட்டு விடும். பதிவு இணைக்கப் பட்டு விட்டால் வாக்குப் பட்டையில் submit to tamil manam என்று இருக்காது கட்டை விரல் உயரத்தப் பட்ட கையும் கட்டைவிரல் கவிழ்த்து வைவைக்கப் பட்ட கையும்தான் காட்சி அளிக்கும் .பின்னர் பதிவுக்கு வாக்களிப்பவர்கள் அளிப்பார்கள். ஆனால் உங்கள் பதிவைப் பார்த்தல் யாரும் இணைத்தது போல் தெரியவில்லை . பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை தெரியவில்லையே.உங்கள் பதிவின் தமிழ்மணப் பட்டை நிரலில் ஏதோ தவறு உள்ளது எனநினைக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களின் இந்தப் பதிவு இதுவரை தமிழ் மணத்தில் இணைக்கப் படவில்லை. இந்தில் உள்ள சிக்கலை அறிந்து கொள்ளும் பொருட்டு மற்றவர்க்கும் பயன்படுமே என்ற நோக்கத்துடன் இப்போதுதன் submit to tamilmanam செய்து பார்த்தேன். பதிவு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் இணைத்தேன். இதற்கு முந்தைய பதிவு இதுவரை இணைக்கப் பட்டதாக தெரியவில்லை. தமிழ் மணத்தில் நான்கு நாட்கள் முந்தைய பதிவுகள் அனைத்திலும் தேடிப் பார்த்தேன் தடம் மாறிய வாழ்க்கையா....? என்ற பதிவு இடம் பெறவில்லை. ஐயா எதை வைஹ்டு தங்கள் பதிவுகள் இணைக்கப் பட்டதாக அறிந்தீர்கள் என்றால் இதில் இல்ல சிக்கலுக்கு விடை காண உதவும் என்று நினைக்கிறேன். விவரம் தெரிவித்தால் இது தொடர்பான ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇதற்கு முன்னர் எந்தப் பதிவையும் நான் இணைக்கவில்லை
மிகவும் இரசித்து படித்து சிரித்து மகிழ்ந்தேன்
பதிலளிநீக்குகீதை பெரிதா குரான் பெரிதா என்று சண்டை போடுகிறார்களா? ஹ்ம்.
பதிலளிநீக்குமுரண்கள் சுவையானவை.
ஹாஹா..... அனைத்தையும் ரசித்தேன் என்றாலும் அமோகமாக இருப்பது இது.
பதிலளிநீக்கு//”ஐயா அலுவலகத்தில் நீங்கள் சிங்கம்.... வீட்டில் எப்படி.?”
”வீட்டிலும் நான் சிங்கம்தான். ஆனால் அங்கு என் மனைவி துர்காவாக சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பாள்”. //
சூப்பர்:-))))
பதிலளிநீக்கு@ டி.என் முரளிதரன்
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சார். என் பதிவுகளை நான் தமிழ் மணத்தில் இணைக்க முயலும் போது ‘புதிய இடுகைகள் ஏதும் இல்லை’ என்று வருகிறது. கூடவே இணைக்கப் பட்ட கடந்த ஐந்து இடுகைகளின் தலைப்பும் வருகிறது. அதைப் பார்த்துதான் என் இடுகை இணைக்கப் பட்டிருப்பது தெரிகிறது
எனக்கு ஒரு சந்தேகம் சில நேரங்களில் தமிழ்மணத்தில் இணைக்க செல்லும் போது password கேட்கும். பல நேரங்களில் வலைத்தளமுகவரியிலேயே இணைப்பு கொடுக்கப் பட்டுவிடும். நான் தமிழ் மணத்தில் வாக்குப் பட்டை பெற இதுவரை முயற்சி செய்யவில்லை.
என் இடுகையை இணைக்க என் id தெரியலாம் ஆனால் பாஸ்வேர்ட் எப்படித் தெரியும். என்னவோ சார் எதுவுமே விளங்குவதில்லை. அக்கறை எடுத்துக் கொண்டு தீர்வு காண விரும்புவதற்கு நன்றி சார்.என் கடந்த ஐந்து இடுகைகளும் இணைக்கப் பட்டதாகவே காட்டப் படுகிறது.
பதிலளிநீக்கு@ அவர்கள் உண்மைகள்
அத்தி பூத்திருக்கிறதா.?வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மதுரைத் தமிழன் அவர்களே.
பதிலளிநீக்கு@ A.Durai
மதச் சண்டைகளைக் குறிப்பிட்டேன் ரசித்ததற்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி மேட்ம்
தமிழ்மணம் பக்கமே போவதில்லை என்பதால் அது பற்றித் தெரியாது. சில வருடங்கள் ஆகின்றன தமிழ்மணத்தை விட்டு விலகி. :)
பதிலளிநீக்குகதம்பம் நன்றாகக் கட்டி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
தமிழ் மணம் திரட்டி நான்கு பேர் நம் பதிவை வாசிக்க வழிவகுக்கலாம்.வந்து கதம்பப் பகிர்வுகளைப் பாராட்டியதற்கு நன்றி மேடம்
தமிழ்மணத்தில் ஒருவரது பதிவை தமிழ்மண உறுப்பினராக உள்ள யார்வேண்டுமானாலும் இணைக்கமுடியும். யார் இணைக்கிறார்களோ அவர்களது தமிழ்மண ஐடி பாஸ் வோர்ட் கொடுத்தால் போதுமானது.
பதிலளிநீக்குவலைப்பதிவே இல்லாதவரும் தமிழ்மணத்தில் உறுப்பினராக இருக்கலாம். யாராக இருந்தாலும் தமிழ்மணப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வலப்பூக்களின் பதிவுகளை மட்டுமே இணைக்க முடியும்.
ஐயா! தமிழ்மண வாக்குப் பட்டை பெறவில்லை என்று கூறி இருக்கிறீர்கள் ஆனால் உங்கள் வலைப்பதிவில் வாக்குப் பட்டை உள்ளதே.
ஆனால் தமிழ்மணப் பட்டை சரியாக வேலை செய்யவில்லை. பொதுவாக blogspot.in என்று முடியும் வலைப் பூக்களில் தமிழ்மண இணைப்பு/வாக்குப் பட்டை சரியாக வேலை செய்வதில்லை
தங்கள் பதிவுகளுக்குத் தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும். சற்று நேரமின்மை காரணமாக...
பதிலளிநீக்குகதம்பப் பகிர்வுகள் நிஜமாகவே கதம்பம் தான். முதலில் சொல்லப்பட்டவை எல்லாமே உண்மை! வாழ்க்கையே முரண்தானே சார்!
நகைச்சுவையை மிகவும் ரசித்தோம்!
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
பரவாயில்லை ஐயா. வந்து ரசித்ததற்கு நன்றி.