உஷ்..........! தொந்தரவு செய்யாதீர்கள் இவனை.
----------------------------------------------------------------
ஓடியாடி, உழைத்துக் களைத்துஉறங்குகிறான் இவன்
உஷ்...........! தொந்தரவு செய்யாதீர்கள் .இவனை.
ஆலை சங்கின்
ஓலத்துக்குக் கட்டுப்பட்டவன்,
காலை முதல் மாலை வரை உழைத்து ஓய்ந்தவன் ,
கனவுத் தொழிற்சாலை கதாநாயகன் அல்ல இவன்,
ஒரே பாட்டில் உழைத்து முன்னேறி லட்சங்கள் சேர்க்க
உழைப்பதாக பாவனை காட்ட முடியாது..
கதாநாயகன் கன்னியின் கைப் பிடிக்க .
சுவை எல்லாம் கூடி விடும் திரைக் கதையில்,
சுமை எல்லாம் முடிந்து விடும் அவன் வாழ்வில்.-ஆனால்
அதற்குப்
பிறகுதான் வாழ்வே துவங்கும்
சாமானியன் வாழ்க்கைப் பயணத்தில்.
கனவுகளில் மகிழ்ந்து முறுவல் செய்கிறான்
உஷ்.......! தொந்தரவு
செய்யாதீர்கள்.இவனை.
கனவுலகில் நடத்தியும் கண்டும் களிக்கின்றான்
வானில் பறக்கின்றான், வெள்ளியினைத் தொடுகின்றான்,
கூடவே காதலியின் கண் பார்த்து மகிழ்கின்றான்.
எண்ணாமலேயே துணிய முடிந்த கனவுலகில்
நன்றாகவே இவன் மிதக்கின்றான் பாவம்.
உஷ் .........! தொந்தரவு செய்யாதீர்கள் இவனை.
தந்தையாகவும் தனயனாகவும் தான்படும் துயர் தீர்க்க
வாழ்க்கைத் தேரின் அச்சாணி இவன்- யாராரோ
ஏவியதெல்லாம் செய்தாக வேண்டும் வாழ்வில்.
அர்த்த மண்டபத்தில் அழகாகக் கொலுவிருக்கிறான்;
ஆரங்கே ,மாதம் மும்மாரி மழை பொழிகிறதா,
என்றே முழங்குகிறான். கைகட்டி, வாய் பொத்தி
வாழ்க்கைத் தேரின் அச்சாணி இவன்- யாராரோ
ஏவியதெல்லாம் செய்தாக வேண்டும் வாழ்வில்.
அர்த்த மண்டபத்தில் அழகாகக் கொலுவிருக்கிறான்;
ஆரங்கே ,மாதம் மும்மாரி மழை பொழிகிறதா,
என்றே முழங்குகிறான். கைகட்டி, வாய் பொத்தி
பதிலளிக்கப்(?) பலபேர் சூழ அழகாக
ஆட்சி செய்து மகிழ்கிறான் கனவில்
ஆட்சி செய்து மகிழ்கிறான் கனவில்
உஷ்........!.தொந்தரவு செய்யாதீர்கள் இவனை.
கண்மூடித்
துயிலும் போதாவது இவனை
அண்டி
நிற்கும் அவலங்கள் சற்றே மறையட்டுமே,
காதலியின்
கடைக்கண் பார்வை கண்டு விண்ணேறி
நிலவைப் பிடிக்கின்றான் அவள் மகிழக் காண முறுவல்
பூக்கின்றான் மனம் மகிழ்கின்றான்.
எண்ணாமலேயே துணிய முடிந்த கனவுலகில்
நன்றாகவே இவன் மிதக்கின்றான் –
உஷ் .........! தொந்தரவு செய்யாதீர்கள்.இவனைஎண்ணாமலேயே துணிய முடிந்த கனவுலகில்
நன்றாகவே இவன் மிதக்கின்றான் –
உறங்குகையில் மட்டும்
இவனே ராஜா, இவனே மந்திரி,
இதனால் யாருக்கென்ன நட்டம்.
இவனே ராஜா, இவனே மந்திரி,
இதனால் யாருக்கென்ன நட்டம்.
யாரையுமே
என்றுமே,
எதற்கும் ஏவ இயலாதவன்தானே-பாவம்
உஷ்.........! தொந்தரவு செய்யாதீர்கள் இவனை.
==============================================.
எதற்கும் ஏவ இயலாதவன்தானே-பாவம்
உஷ்.........! தொந்தரவு செய்யாதீர்கள் இவனை.
==============================================.
.
சிறந்த பதிவு..
பதிலளிநீக்குமனம் நெகிழ்கின்றது ஐயா!..
பதிலளிநீக்குஅருமை ஐயா ஒவ்வொரு வரிகளையும் நிறுத்தி, நிறுத்தி, ரசித்து, ரசித்து, அனுபவித்து படித்து கடந்தேன் ஐயா
குறிப்பு - ஐயா இரண்டு பாரக்கள் ஒரே மாதிரி வந்து இருக்கிறது கவனிக்க வேண்டுமென்பதற்காக குறிப்பிட்டேன் தவறெனில் மன்னிக்க... கில்லர்ஜி
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
எந்த இரண்டு பாராக்கள் என்று சொன்னால் திருத்த ஏதுவாயிருக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
ஒரு சாதாரணனின் உறக்கம் நெகிழ வைக்கிறது என்பதை பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். வருகைக்கு நன்றி ஐயா
நல்ல கவிதை. ரசித்தேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம் ஐயா 5 பாராக்களில் 2வதும், 4வதும் 75 சதவீதம் ஒன்றாக இருப்பதை சொன்னேன் ஐயா,
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
எழுதும் flow வில் ஒரே மாதிரி அமைந்து விட்டது. பொறுத்துக் கொள்ள வேண்டும். சுட்டியதற்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
ஓரளவு சரிசெதிருக்கிறேன். இப்போதாவது சரியா. சொல்லுங்கள்ப்ளீஸ்.
மீண்டும் மீண்டும் ரசித்து வாசித்தோம் சார்! அருமையான வரிகள் ஒவ்வொன்றும்!
பதிலளிநீக்குசார் 2, 4 வதில் //எண்ணாமலேயே துணிய முடிந்த கனவுலகில்
நன்றாகவே இவன் மிதக்கின்றான் ரிப்பீட் ஆகின்றதே! அப்படி எண்ணித்தான் கொடுத்திருக்கின்றீர்களா சார்?! இந்த இரண்டிலும் இந்த வரிகளுக்கு மேலே உள்ள வரிகளும் அர்த்தத்தில் ஒன்றாக இருப்பதாகத் தெரிகின்றது சார்!
அதையும் ரசித்தோம் என்பது வேறு!
ரசித்தேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகூடுதல் ஸூப்பர் ஐயா எனது வார்த்தைக்கும் மதிப்பளித்தமைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு"சாமானியன் வாழ்க்கைப் பயணத்தில்
கனவுகளில் மகிழ்ந்து முறுவல் செய்கிறான் "
உஷ்.......! தொந்தரவு செய்யாதீர்கள்.
சாமானியனின் கனவு மெய்ப் பட வேண்டும்
என்ற எனது வேண்டுதலை தெரிவித்து விடுங்கள்
அய்யா!
உஷ்.......! தொந்தரவு செய்யாமல்?
நன்றியுடன்,
புதுவை வேலு
"சாமானியன் வாழ்க்கைப் பயணத்தில்
பதிலளிநீக்குகனவுகளில் மகிழ்ந்து முறுவல் செய்கிறான் "
உஷ்.......! தொந்தரவு செய்யாதீர்கள்.
சாமானியனின் கனவு மெய்ப் பட வேண்டும்
என்ற எனது வேண்டுதலை தெரிவித்து விடுங்கள்
அய்யா!
உஷ்.......! தொந்தரவு செய்யாமல்?
நன்றியுடன்,
புதுவை வேலு
டாஸ்மாக் போதையில் மிதக்காமல் ,கனவு போதையில் மிதக்கும் இவன் போற்றப்பட வேண்டியவனே :)
பதிலளிநீக்குத ம +1
உறக்கம் மனிதனுக்கு கிடைத்த பெருங்கொடை. அதை கருப்பொருளாக்கி கவிதை புனைந்தமைக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவரிகளை ஊன்றிப் படித்தேன். மிகவும் நெருடலாக இருந்தது. ஏதோ ஒரு நிலையில் To be or not to be that is the question என்ற வசனமும் நினைவிற்கு வந்தது.அதில் தூக்கம் கிட்டத்தட்ட ஒரு மரணம் என்ற நிலையில் ஒரு வரி காணப்படும்.
பதிலளிநீக்குஇனி உங்களைத் தொந்தரவு செய்யவே மாட்டேன் -(இம்மாதம் பெங்களூர் வரும்போதும் கூட-) provided நீங்கள் தொடர்ந்து இம்மாதிரி சுவையான கவிதைகளை எழுதுவதாக இருந்தால்! -இராய செல்லப்பா
பதிலளிநீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
வருகை- த்ந்து கவிதையை ரசித்ததற்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
ஊன்றிப் படித்து ரசித்ததற்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
வருகைதந்து ரசித்ததற்கு நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
தவறென்று தெரிந்தவுடன் திருத்திக்கொள்ள தயக்கம் ஏதுமில்லை ஜீ
பதிலளிநீக்கு@ யாதவன் நம்பி
சாமானியனின் கனவு மெய்ப்பட வேண்டுவதற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
மிகவும் சரி ஜி.
பதிலளிநீக்கு@ வே நடன சபாபதி
வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
நெருடல் எங்கே என்று கூறி இருக்கலாமே. to be or not to be நம்கையில் இல்லையே. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ செல்லப்பா யக்ஞசாமி
கவிதைகள் ஏதோ மூடில் எழுதும் போது ’சில சமயம்’ நன்றாக வந்து விடுவதுண்டு. நன்றாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எழுதும் போது ஐடியாக்கள் மக்கர் செய்யும். பெங்களூரு வருகிறீர்களா.? எப்போது, எவ்வளவு நாட்கள்.? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் வருகைக்கு நன்றிசார்.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி டிடி.
உழைப்பாளிக்குப் பெருமை சேர்க்கும் கவிதை
பதிலளிநீக்குவித்தியாசமான் கவிதைக் கரு. புதிய நடையாக தெரிகிறது. மிக சிறப்பாக இருக்கிறது
பதிலளிநீக்குஉங்கள் கவிதையில் ஆங்கிலக் கவிதைகளின் தாக்கம் தெரிவது போல் எனக்குத் தோன்றுகிறது.
பதிலளிநீக்கு@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
நானே உழைப்பாளியாயிருந்து முன்னுக்கு வந்தவன் ஆதலால் என்னை அறியாமல் உழைப்பாளிக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் பதிவு அமைந்திருக்கலாம். வருகைக்கு நன்றி உமேஷ்
பதிலளிநீக்கு@ டி.என் முரளிதரன்
ஆங்கிலக் கவிதைகளின் பக்கமே போகாதவன் நான்வித்தியாசமாக எழுத முயல்வதன் காரணமாக இருக்கலாம். வருகைக்கு நன்றி முரளி. என் இந்தப் பதிவும் நான் இணைக்காமலேயே தமிழ் மணத்தில் இணைக்கப் பட்டிருக்கிறது
முன்னர் வந்தபோது இந்தப் பதிவு இல்லை என்றே செய்தி வந்தது. பின்னர் நீங்கள் தகவல் கொடுத்தபோது நான் ஊரில் இல்லை. சென்னை சென்றிருந்தேன். நேற்றிரவு தான் ஶ்ரீரங்கம் திரும்பினோம். நல்லதொரு கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி மேடம்.