வியாழன், 8 ஜனவரி, 2015

ஆண்பெண் இரு பாலர் பற்றியும்.....


                              ஆண்பெண் இருபாலர் பற்றியும்......
                              ---------------------------------------------



வலை உலகில் என்னை அறிந்தவர்கள் ஒரு வேளை சில விஷயங்களை நான் சரியாகப் புரிந்து கொள்வதில்லையோ என்று நினைக்கலாம்(இது என் யூகமே).ஆனால் நான் ஆண் பெண் இருபாலரையும் திருப்தி செய்ய வேண்டாமா. ஆகவே இந்தப் பதிவில் இரு பாலருக்கும் justice செய்கிறேன் 
                     
                   பேசாமல் பெண்ணாய் பிறந்திருக்கலாம்
                   -----------------------------------

பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்.
வயதானால் வழுக்கை விழாது , நகரத்தில்
நமக்காகவே சிறப்புப் பேரூந்துகள் இயங்கும்
தினமும் முகச் சவரம் செய்ய வேண்டியதில்லை.
சட்டங்கள் நமக்காக சாய்ந்திருக்கும் ,எப்போதும்
நம் செல் பேசி செயல் பாட்டிலேயே இருக்கும்
சடங்கானால் ஊர் கூடி சீர் செய்துக் கொண்டாடுவார்கள்
நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள் , கல்யாணம்
மருதாணி ,நலங்கு ,பட்டுப்புடவை , வளைகாப்பு என
அநேக தருணங்களில் நாயகியாய் அமர்ந்திருக்கலாம்
காமக் கவிதை எழுதினால் உலகமே திடுக்கிடும்
கணவனுக்கெதிராகப் புகார் கொடுக்கலாம் -மூத்த
இலக்கியவாதி திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு நம்மை
அழைத்துப்போய் கடலைப் பார் எனக் காட்டுவார்-உனக்கு
இந்தக் காட்சி பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்  என்பார்
முகப் புத்தகத்தில் எவனையும் கவிழ்க்கலாம் -எவனாவது
ஒருவன் நமக்குத் தாஜ்மகால் கட்டுவான் -கிழவியானாலும்
ஒருவன் அருநெல்லிக்கனி தருவான். -ஒன்பதாம் வகுப்பே
படித்திருந்தாலும் கல்லூரிக்குப் பேச அழைப்பார்கள்.
மதுரையை எரிக்கலாம்-கூந்தல் வாசம் குறித்து ஐயம்
எழுப்பி ஆண்டவனையே அலைக் கழிக்கலாம்
நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்.
டென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும். -அரசு
விவகார அதிகாரியானால் பத்திரிகைகள் பின்னாலேயே
ஓடிவரும். -நம் வலைப்பூவில் நிறைய வண்டுகள் திரியும்
திடீரென்று நம் புத்தகங்கள் எஸ்கிமோ மொழியில்
பெயர்க்கப் படும்.-யார் அமைச்சராக வேண்டும் என்பதை
நாம் முடிவு செய்யலாம். - பேசாமல் நாமும்
பெண்ணாகவே பிறந்திருக்கலாம் -இல்லையா.?

(சத்தியமாக இது என் கற்பனை இல்லை. எனக்கு ஒரு மின் அஞ்சல் 
ஃபார்வேர்ட் செய்யப் பட்டிருந்தது. நான் பெற்ற இன்பம் பெறுக 
இவ்வையகம் என்னும் எண்ணத்தில் இதனைப் பதிவிடுகிறேன். )

பேசாமல் பெண்ணாய்ப் பிற்ந்து
இருக்கலாம் என்று ஒரு பதிவு இட்டிருந்தால் போதுமா.. அதன்
மறு பக்கமாக ஆண்கள் பற்றியும்  பின் ஆண், பெண் இருவர்
பற்றியும் ஆங்காங்கே கேட்டது. படித்தது என சிலவற்றை
ஒருங்கிணைத்து பதிவாய் இடுகிறேன். இதில் எதுவுமே என்
கற்பனை இல்லை.

ஆண்கள் சங்கட மற்றவர்கள்.
அவர்களது பெயர்கள் மாறுவதில்லை.(திருமணத்துக்கு முன் பின்)
அவர்கள் கர்ப்பம் தரிப்பதில்லை.
வெள்ளைச் சட்டை அணிந்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்சலாம்.எந்த
சட்டையும் அணியாமலும் நீர் பாய்ச்சலாம்.
பேசும்போது யாரும் அவர்கள் மார்பைப் முறைப்பதில்லை.
தொலை பேசியில் 30 செகண்டுகளில் பேசி முடிப்பார்கள்.
ஐந்து நாள் விடுமுறைக்கு ஒரு சிறு கைப்பெட்டிபோதும்.
எந்த நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நண்பர்களாகத்
தொடர்வார்கள்.
இரண்டு மூன்று ஜோடி காலணிகளே அவர்களுக்கு அதிகம்.
அவர்கள் அணியும் ஆடையில் சுருக்கம் தெரிவதில்லை.
அவர்களது முகத்தின் நிறம் அசலானது.
ஆண்டு முழுவதும், ஏன் ஆயுள் முழுவதும் ஒரெ ஹேர் ஸ்டைல்.
முகத்திலும் கழுத்திலும் முடி நீக்கினால் போதும்.
கால்கள் எப்படி இருந்தாலும் அரை நிஜாரில் அலையலாம்.
நகம் வெட்ட ஒரு பேனாக்கத்தி போதும்.
பண்டிகைக்கு முதல் நாள் பத்து பேருக்கு அரை மணியில்
உடைகள் வாங்குவார்கள்.

                    
இரு பக்கம்.
                                                     

ஆண்களும் பெண்களும்.
---------------------
ஆண் சிநேகிதர்கள் உரையாடும் போது செல்லப் பெயர்களில்
அழைத்துக் கொள்வார்கள். ( மச்சி, மோட்டு, சோடாபுட்டி )

பெண் சிநேகிதிகளுடன் உரையாடும்போது அவர்களது
பெயர்களிலேயே அழைக்கப் படுவார்கள். (காமினி,ரூபா, சந்தியா )

நான்கு ஆண்கள் வெளியில் சாப்பிடப் போனால் மொத்த பில்
ரூ.200-/ க்கு ஆளுக்கு ரூ.100-/ கொடுத்து பாக்கி பற்றிக் கவலைப்
பட மாட்டார்கள்.

நான்கு பெண்கள் வெளியில் சாப்பிடப்போனால் கால்குலேட்டரில்
கணக்குப் பார்ப் பார்கள்

ஆண் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுத்தாலும் தேவைப்
பட்டதை மட்டும் வாங்குவான்.

பெண் இரண்டுக்கு ஒன்று கொடுத்து தேவைப் படாததை
தள்ளுபடியில் வாங்குவாள்.

ஆண் குளியலறையில் டூத் ப்ரஷ்,பேஸ்ட், ரேசர், ஷேவிங் க்ரீம்,
சோப், டவல் ஆகியவை இருக்கும்.

பெண் குளியலறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள்
இருக்கும். அதில் ஆணுக்கு அநேக பொருளின் பெயர் கூடத்
தெரியாது.

ஒரு வாக்கு வாதத்தில் பெண்ணின் பேச்சே கடைசி. அதன் பின்
ஆண் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னுமொரு வாக்கு
வாதத்தின் துவக்கம்.

ஆண் திருமணம் ஆகும் வரை எதிர்காலம் பற்றிக் கவலைப்
படுவதில்லை.

பெண் திருமண்ம் ஆகும் வரைதான் எதிர்காலம் பற்றிக்
கவலைப் படுவாள்.

பெண் மாறமாட்டாள் என்று நினைத்து ஆண் மணக்கிறான்.
ஆனால் பெண் மாறிவிடுகிறாள்.

ஆண் மாறுவான் என்று நினைத்து பெண் மணக்கிறாள். ஆனால்
அவன் மாறுவதில்லை.


பெண் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பிரத்தியேக உடை அணிவாள்

ஆண் திருமணம் சாவு இதற்கு மட்டும் பிரத்தியேகமாய்
உடை அணிவான்.

ஆண் தூங்கி எழும்போது அழகாய்த் தெரிவான்.

பெண் தூங்கி எழும்போது அழகைத் தொலைத்திருப்பாள்.

பெண்களுக்கு குழந்தைகள் பற்றி எல்லாமே தெரியும்.

ஆண்களுக்கு குழந்தைகள் வீட்டில் உலவும் சிறு உருவங்கள்.

(
ஒரு திருமணமான ஆண் அவனுடைய தவறுகளை மறக்க
 
வேண்டும். இருவரும் அதை நினைத்திருப்பதில் யாருக்கும்
எந்த பலனும் இல்லை. ).  

.


   










26 கருத்துகள்:


  1. அருமை ஐயா எல்லாமே ஆழந்து அலசி எழுதியிருக்கிறார் அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுகள்.

    நிச்சயமாக இது ஒரே நாளில் எழுதியிருக்க முடியாது மின்னஞ்சலை பகிர்ந்த தங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  2. @ கில்லர்ஜி
    முதல் வருகைக்கு நன்றி. பேசாமல் பெண்ணாய்ப் பிறந்திருக்கலாம் என்பது மட்டுமே மின் அஞ்சல். மீதி உள்ளவை நான் அங்கும் இங்கும் படித்ததும் கேட்டதும். ரசித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ரசிக்க முடிகிறது.

    உடைகள் விஷயத்தில் பெண்களுக்கு இருக்கும் எண்ணிறந்த வகைகள் ஆண்களுக்கு இருக்காது!!!

    பதிலளிநீக்கு
  4. ஜி எம் பி சார்,

    கலக்கல் போஸ்ட். மேல வேற என்னத்த சொல்ல?

    பதிலளிநீக்கு
  5. உளவியல் ரீதியான அருமையான சிந்தனைப் பகிர்வு. அனைத்துக் கருத்துக்களையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் அளவில் எழுதியுள்ள தங்களின் ஆர்வத்திற்கு நன்றி. நாங்களும் பல கற்றுக்கொண்டோம், இப்பதிவின் மூலம்.

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை#ஆண் மாறுவான் என்று நினைத்து பெண் மணக்கிறாள். ஆனால்
    அவன் மாறுவதில்லை.#இது நூறுக்கு இருநூறு சத உண்மை :)

    பதிலளிநீக்கு
  7. என்ன சார், வரவர இளமை ரொம்பத்தான் திரும்பிவிட்டது உங்களுக்கு? பெண்களைப் பற்றி நிறைய எழுதுகிறீர்கள்? அல்லது பெண்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றியே எழுதுகிறீர்கள்? மாமிக்கு இதெல்லாம் தெரியுமா?...

    பதிலளிநீக்கு
  8. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
  9. //ஒரு திருமணமான ஆண் அவனுடைய தவறுகளை மறக்க
    வேண்டும். இருவரும் அதை நினைத்திருப்பதில் யாருக்கும்
    எந்த பலனும் இல்லை.//

    இது இரு பாலருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  10. @ ஸ்ரீராம்
    /ரசிக்க முடிகிறது/ அந்த நம்பிக்கையில்தானே பதிவிடுகிறேன். வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  11. @ காரிகன்
    வருகைதந்து ரசித்ததற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  12. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகை தந்து ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  13. @ பகவான் ஜி
    வாருங்கள் ஜி. நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளவேண்டும். பாருங்கள் பெண்பதிவர்களின் கருத்துக்களையே காணோம்.

    பதிலளிநீக்கு

  14. @ செல்லப்பா யக்ஞசாமி
    புரியாத புதிர் பெண் என்பவள். தெரிந்ததைப் நகைச்சுவையாகப் பகிர்கிறேன். என்னைப் பற்றி மாமிக்கு நன்றாகவே தெரியும். வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  15. @ யாழ்பாவாணன்
    வருகைக்கு நன்றி .படித்துப் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு

  16. @ வே.நடனசபாபதி
    நீங்கள் சொன்னால் சரியாய்த்தானிருக்கும். வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  17. @ கரந்தை ஜெயக்குமார்
    ரசனைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  18. @ திண்டுக்கல் தனபாலன்.
    அசத்துவது பெண் வாசகர்களுக்குப் பிடிக்கவில்லை போலும். வருகைக்கு நன்றிடிடி.

    பதிலளிநீக்கு
  19. ஆழ்ந்து படிக்கவேண்டிய பதிவு. புதுபுதுக் கருத்துகள் மின்னுகின்றன.

    பதிலளிநீக்கு

  20. @ டாக்டர் கந்தசாமி
    அனுபவப் பட்டவர்களின் கருத்துக்கள், புதிதாய் எப்படி இருக்க முடியும்.?வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  21. நல்ல அலசல்! சார். அதுவும் இரு பக்கமும் சார்ந்த மனோதத்துவப்படி..உடைகள், அலங்கார விஷயத்தில் பெண்கள் ஆண்களை விஞ்சி விடுவார்கள்.

    தவறுகள் என்பது இரு பாலாருகும் பொருந்துமே. ஏன் ஆன் மட்டும் மறக்க வேண்டும்? பெண்ணும் மறக்கத்தானே வேண்டும். நல்ல கட்டுரை சார்!

    பதிலளிநீக்கு
  22. மாறும் ஆண்களும், மாற்றும் பெண்களும் உண்டே. எல்லோருமே ஒரு கட்டத்தில் மாறி விடுகின்றனர். இப்போதெல்லாம் ஆண்களுக்கும் அழகுசாதனப் பொருட்கள், பல்வேறு விதமான உடைகள் என இருக்கின்றன. பெண்ணுக்குச் சற்றும் சளைத்தவரில்லை ஆண்களும்! :)

    பதிலளிநீக்கு

  23. @ துளசிதரன்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். பெண்களின் தவறுகளை ஆண் மறந்து விடுவான். ஆனால் பெண்கள் ஆணின் தவறை மறப்பதில்லை என்பதே பலரதும் அனுபவம்.

    பதிலளிநீக்கு

  24. @ கீதா சாம்பசிவம் பெண்ணுக்குச் சற்றும் சளைத்தவனில்லை என்று ஆண்காட்டிக் கொள்ள முனைகிறான் என்பதே சரியாய் இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு