Sunday, January 10, 2016

தெய்வத்தின் குரல்


                                தெய்வத்தின் குரல்
                                 -----------------------------
காஞ்சி பரமாச்சாரியாரின் சொற்பொழிவுகளை  தெய்வத்தின் குரல் என்று பதிவிட்டிருப்பதை அண்மையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது வழக்கம் போல் இதை வாசகர்களிடம் பகிரலாம் என்று எண்ணம் ஆனால் அது மிக நீஈஈஈஈண்ட தொடர். கீதைப்பதிவை விட நீளமாகலாம்  வாசகர்களிடம் ஒரு  sustained  interest  இருக்குமா தெரியவில்லை. மேலும் அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் பலவற்றோடு நான் ஒத்துப் போகிறேனா என்பதும் கேள்வி. இது என்  ஏரியா அல்ல.  இருந்தாலும் எல்லாதரப்பு நியாயங்களையும்  அறிந்து கொள்ள  இது பயன் படலாம்  என் பதிவுகளை வாசிப்போரில் பலரும் ஆத்திகப் பெருமக்கள் இதை வரவேற்கலாம்  பதிவில் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்துப் பெரியவர் சொல்லும் வாதங்களும் இருக்கும்  இதில் என் பணி இருப்பதை இருப்பதுமாதிரியே காப்பி பேஸ்ட் செய்து பதிவிடுவதுதான்  இதில் கூறப்பட்டிருக்கும் எல்லா செய்திகளும் தெய்வத்தின் குரல் என்னும்  தொகுப்பில் உள்ளது நான் எல்லாவற்றையும் அப்படியே பதிவிடலாம் . இல்லையெனில் தேர்ந்தெடுத்த சில பகுதிகளை வெளியிடலாம் இப்பதிவின் பின்னூட்டத்தில் கூறப் போகும் எண்ணங்களின் பேரில் நடக்கலாம் என்று எண்ணுகிறேன்  கருத்துக்களை வெளிப்படையாகக் கூறுங்கள் நண்பர்களே
மொத்தம் ஏழு பகுதிகள் ஒவ்வொரு பகுதியிலும்  விஸ்தாரமாகக் கூறப்பட்டிருக்கும்கருத்துக்கள் பலரும் அங்கும் இங்குமாகப் படித்திருக்கலாம் உங்கள் பின்னூட்டம் பொறுத்து என் பதிவு அமையும்  நன்றி
முதல் பகுதியில் மங்களாரம்பம் என்று துவங்கிஅத்வைதம் மதம் வைதிக மதம் பொதுவான தர்மங்கள், சமூக விஷயங்கள், பண்பாடு கர்ம மார்க்கம் ,பக்தி , தேவதா மூர்த்திகள்அவதாரபுருஷர்கள்,முடிய மங்களார்த்தி என்று போகிறது ஒவ்வொரு தலைப்பிலும் விஸ்தாரமாகச் செய்திகள் சொல்லிப் போகிறார்  இதேபோல் ஏழு பகுதிகள் . என் பணி உள்ளதை உள்ளபடியே பதிவிடுவதுதான் . இருந்தாலும் இப்பகுதிகள் என்னுள்ளும் சில சலனங்களை ஏற்படுத்தும்  அல்லவா. ? ஏறத் தாழ எல்லா பின்னூட்டங்களும் முடிந்தபின்   என் மனதில் பட்டதைக் கடைசியாகப் பின்னூட்டமாக எழுதத் திட்டம் என்ன வாசகர்களே நான்  ரெடி  நீங்க ரெடியா






40 comments:

  1. //என்ன வாசகர்களே நான் ரெடி நீங்க ரெடியா//

    இதுதான் மிகவும் இக்கட்டான கேள்வி. இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆம் என்றும் சொல்ல முடியாது.

    ReplyDelete
  2. //அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் பலவற்றோடு நான் ஒத்துப் போகிறேனா என்பதும் கேள்வி. //

    ஒத்துப்போகாவிட்டால் என்ன?.. 'தெய்வத்தின் குரல்' புத்தகத்தில் சொல்லியிருப்பதைத் தானே குறிப்பிட்டிருக்கிறேன். என் கருத்து என்று எதுவும் குறிப்பிடவில்லையே என்று சொல்லி விட்டால் போயிற்று.

    ReplyDelete
  3. //இதில் என் பணி இருப்பதை இருப்பதுமாதிரியே காப்பி பேஸ்ட் செய்து பதிவிடுவதுதான் //

    இதிலும் ஒரு செளகரியம். மாற்றுக் கருத்து பின்னூட்டங்களில் சொன்னவர்கள் கருத்து. என் கருத்து என்று எதுவும் சொல்லவில்லையே என்று சொல்லி விடலாம்.

    ReplyDelete
  4. என்னைப் பொறுத்து எனக்கு இது தேவை இல்லை. என்னிடம் புத்தகமும் உள்ளது. மொபைலில் மின் நூலாகவும் உள்ளது.

    ReplyDelete
  5. //என்னுள்ளும் சில சலனங்களை ஏற்படுத்தும் அல்லவா. //

    ஏற்படுவதாயிருந்தால் ஏழு பகுதிகளையும் தவம் போல தனித்து வாசித்து முடிக்கும் பொழுதே ஏற்பட்டிருக்க வேண்டும். பின்னூட்டங்கள் மூலம் 'சலனம்'ஏற்படுவதாக இருந்தால், அது பின்னூட்டங்களின் influence ஆகவே ஆகிப்போகும். காஞ்சிப் பெரியவரின் எழுத்துக்கும் உங்கள் 'சலன'த்திற்கும் சம்பந்தமில்லாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.

    இந்த மாதிரி விஷயங்களில் படிக்கும் ஆர்வம் இருந்து படித்து முடித்த பிறகு பலருக்கும் இந்த மாதிரி விஷயங்கள் போய்ச் சேர வேண்டுமே என்று மனதார விரும்பினால் தான் பதிவிடுதலில் ஒரு நியாயம் இருக்கும். ஆதரித்தும் எதிர்த்தும் வரும் பின்னூட்டங்களுக்கு பதிலளித்து நீங்களும் உங்கள் உள்வாங்கலை மற்றவர்களுக்கு விளக்குகிற மாதிரி வாய்ப்பேற்படும். இல்லையென்றால் வரும் பின்னூட்டங்களுக்கு கருத்துச் சொல்ல முடியாமல் 'தேமே'னென்று பார்த்துக் கொண்டிருக்கவே இயலும். அல்லது டெம்பிளேட்' பதில் மாதிரி ஒவ்வொருத்தருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

    ReplyDelete
  6. ஒரு 'கலந்துரையாடலுக்காக' அல்லது ஒரு 'பொது உரையாடலுக்காக' என்று இந்த மாதிரி விவாதங்களுக்கு ஆட்படுகிற பதிவுகளை ஆரம்பித்து வைப்பதில் எந்த சிரமமும் இருக்காது. ஆனால் பதிவிடும் விஷயங்களை விவாதிக்க உங்களுக்கும் அதுபற்றிய விஷயங்களில் ஆர்வம் இருக்க வேண்டும் என்பது தான் அடிப்படை தேவையாகிப் போகிறது. 'இது என் ஏரியா அல்ல' என்று வேறு கைவிரிக்கிறீர்கள். அதான் யோசனையாக இருக்கிறது.

    ReplyDelete
  7. ஐயா

    நான் தங்களுடைய பதிவுகளைப் படிப்பது உண்டு. ஆனால் பின்னூட்டம் இடுவதில்லை.

    தெய்வத்தின் குரல் பற்றி பதிவு எழுத பின்னூட்டங்களை கேட்கிறீர்கள். என்னுடைய அபிப்பிராயம்.

    பதிவு என்பது சொந்த முயற்சியில் சொந்தக் கருத்துக்களைக் கூறுவதே. பதிவுக்கு முழுப் பொறுப்பு பதிவு எழுதியரையே சாரும். அதற்கு வரும் மறுப்புகளும் ஆட்சேபங்களும் பதிவு எழுதியரையே சுட்டும்.

    தெய்வத்தின் குரல் புத்தகமாகவும் மின் நூலாகவும் இலவச மின் நூலாகவும் கிடைக்கிறது. விரும்புவர்கள் தானாகப் படிக்கலாம்.அதனால் அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து வெளியிட வேண்டிய அவசியமில்லை. பாஷ்யம் அல்லது உரை எழுதினால் தான் புரியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு கடினமான ஒன்றும் இல்லை.

    மேலும் அதில் உள்ள வர்ணாசிரமக் கருத்துக்கள் சில பலருக்கும் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இருக்காது. அதனால் கிடைக்கும் வசவுகளைத் தாங்கள் ஏற்க வேண்டி வரும்.

    என்னுடைய கிண்டிலில் தெய்வத்தின் குரல் இறக்கம் செய்து அவ்வப்போது படிப்பது உண்டு. ஒரு ரயில் பயணத்தின் போது அடுத்து உள்ளவரிடம் அதைப் படிக்கக் கொடுத்தேன். அவர் ஒரு மாத்வா பிராமணர். பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டவர். அவர் அத்வதைத்தை மறுப்பவர். துவைதத்தை விளக்க ஆரம்பித்து விட்டார்.

    இது போன்று பலரும் பல விவாதங்களை மறு மொழியாக பின்னூட்டம் இடலாம்.

    ஆக நீங்கள் எழுவதற்கு நீங்கள் முழுப் பொறுப்பு ஏற்காத வரை பதிவு என்பது பதிவாகாது. விளம்பரம் மட்டும் தான்.

    --
    Jayakumar

    ReplyDelete
  8. ஐயா சிறிய சிறிய பாகமாக விளக்க உரையுடன் கொடுத்தால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்குமே ஐயா.

    ReplyDelete
  9. எனக்கு வேண்டாம்!

    ReplyDelete
  10. அதில் உள்ள கருத்துகளில் இன்றைய வாழ்விற்கு பொருந்தாத கருத்துகளை பதிவு செய்யுங்கள். அதில் உள்ள பல அறிவியலுக்கு ஒத்து வரும் கருத்துகளை சொல்லுங்கள். அது இனிவரும் மக்களுக்கு பயன் தரும். குறிப்பிட்ட சிலர் நலனுக்கான கருத்துகள் அதில் இருக்கலாம். அதை அப்படியே வழி மொழிந்து எழுத பல்லோர் இருப்பார். பொருந்தாதை எழுத துணிவு உடைய அறிவு திறன் மிக்க பெரியோர் மிக சிலரே. அவரும் எழுதுவதில்லை. ஆக அறிவிற்கு பொருந்தாமல் வருகிறதோ அதை சுட்டினால் கூட போதுமானதாக இருக்கும். படிக்கும் மக்கள் சீர் தூக்கி பார்த்து அவரவர் திறனுக்கேற்ப முடிவு செய்யட்டும்.

    ReplyDelete
  11. என்னிடம் புத்தகங்கள் இருப்பதோடு அல்லாமல் தேவைப்பட்டால் இணையத்திலும் சென்று படிக்க முடிகிறது. ஆகவே இது எனக்குத் தேவை இல்லை என்றே எண்ணுகிறேன். அதில் உள்ள பல கருத்துக்களையும் நான் பல பதிவுகளில் எடுத்துக் கூறியும் இருக்கிறேன்.

    ReplyDelete
  12. தங்களின் அனுபவங்கள்
    தாங்கள் கூற விரும்பும் செய்திகளைப்
    பகிரலாமே ஐயா

    ReplyDelete
  13. தங்களின் அனுபவங்கள் பலருக்கும் பாடமாகவும் இருக்கக் கூடும் ஐயா... கவனியுங்கள்...

    ReplyDelete
  14. ஐயா! திரு ஜெயக்குமார் அவர்களின் கருத்தே என்னுடையதும்.

    ReplyDelete
  15. பதிவிடலாம். பல தரப்பு விவாதங்கள் படிக்க சுவையாக இருக்கும்

    ReplyDelete
  16. `என் பணி இருப்பதை இருப்பது மாதிரியே காபி-பேஸ்ட் செய்து பதிவிடுவதுதான்` என்கிறீர்கள். காபி-பேஸ்ட் என்பது ஒரு 'பணி'யா? அதற்கு பின்னூட்டம் வேறு
    தேவையா ?

    ReplyDelete
  17. என்ன சொல்வதுன்னு தெரில. அவ்வப்போது படித்திருக்கிறேன்.

    புத்தாண்டு வாழ்த்துகள் பாலா சார்.

    ReplyDelete
  18. அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய " இந்து மதம் எங்கே போகிறது" வையும் படித்துத் தொலைத்ததால், அதில் சங்காராச்சாரியால் தமிழில் பேசினால் தலைக்கூத்துவாராம் எனும் செய்தியையும் படித்த போது, அவர் தமிழ்ப் பற்றை ஆங்காங்கே வாசித்த போது, பல விடயங்கள் உங்களைப் போல்"அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் பலவற்றோடு நான் ஒத்துப் போகிறேனா என்பதும் கேள்வி. // அதனாலும் , ஒளி வட்டம் ஒன்றை உருவாக்கி விட்டதால் "பல பேனைப் பெருமாளாக்கும் " வகையென்பது தெளிவானதாலும். அவர் எண்ணம் சிந்தனை மறையும் வரை ஒரே ஒரு வர்ணம், குலம், சாதி சார்ந்தேயும், அவர்கள் முன்னேற்றம் சார்ந்தேயும் இருந்தது தெளிவானதால், மறந்தே விட்டேன்.
    அத்துடன் நான் இலங்கையன், அங்கு இவர்களை மதிப்பதில்லை, ஏன்? யாரெனக்கூடப் பல சைவசமயப் பற்றுள்ளவர்களுக்குத் தெரியாது. கோவில்களில் இவர்கள் படங்கள் கிடையாது. இலங்கை அந்தணர்களையும் இவர்கள் மடங்கள் மதிப்பதில்லை அதனால் இலங்கையில் அந்தணரும் இவர்களைத் தூக்கிப்பிடிப்பதில்லை, என்பது வேறு கதை. ஏதோ 95 வயதுக்கு மேல் வாழ்ந்துள்ளார். அவர்களால் பயனடைந்த கூட்டம் புத்தகம் போட்டு விற்கிறார்கள்.
    இனியும் நிச்சயம் அதைப் படிக்கும் ஆவல் இல்லை.

    ReplyDelete
  19. ஆரம்பியுங்கள் ஐயா. காத்திருக்கிறோம் படிப்பதற்கு.

    ReplyDelete

  20. @ டாக்டர் கந்தசாமி
    பின்னூட்டத்திலும் ஐயாவின் டச். வருகைக்கு நன்றி

    ReplyDelete

  21. @ ஜீவி
    ///அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் பலவற்றோடு நான் ஒத்துப் போகிறேனா என்பதும் கேள்வி. //ஒத்துப் போகிறேனோ இல்லையோ அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் பலரையும் சென்றடையலாமே என்பதுதான் நோக்கம் தப்பித்துக் கொள்ள அல்ல வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  22. @ ஜீவி
    மாற்றுக்கருத்து பின்னூட்டங்களில் சொன்னவர்களின் கருத்து என் கருத்துஎன்று ஏதும் சொல்லப்படவில்லையே என்று சொல்லி விடலாம் / பதிவைச் சரியாகப் படித்தீர்கள் என்றால் எல்லாப் பின்னூட்டங்களுக்குப் பின் என் கருத்து என்று இருந்தால் சொல்லுவேன் என்று எழுதி இருப்பதைக் கவனிக்கவில்லையா மேலும் யார் சொன்னது ஆனாலும் அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் என்றும் இல்லையே

    ReplyDelete

  23. @ ஸ்ரீராம்
    தெளிவான பதிலுக்கு நன்றி

    ReplyDelete

  24. @ஜீவி
    சலனங்கள் என்றாலேயே எதிர்மறை என்று அர்த்தம் இல்லையே. நான் அறியாததும் புரிந்து கொள்ளாததும் இருப்பதாலேயே பதிவில் வெளியிட விரும்பினேன்/இந்த மாதிரி விஷயங்களில் படிக்கும் ஆர்வம் இருந்து படித்து முடித்த பிறகு பலருக்கும் இந்த மாதிரி விஷயங்கள் போய்ச் சேர வேண்டுமே என்று மனதார விரும்பினால் தான் பதிவிடுதலில் ஒரு நியாயம் இருக்கும். ஆதரித்தும் எதிர்த்தும் வரும் பின்னூட்டங்களுக்கு பதிலளித்து நீங்களும் உங்கள் உள்வாங்கலை மற்றவர்களுக்கு விளக்குக்கிற மாதிரி வாய்ப்பேற்படும் /அம்மாதிரி இருக்காது என்று முன்னரே முடிவு செய்து விட்டீர்களா?

    ReplyDelete

  25. @ ஜீவி
    இது என் ஏரியா அல்ல என்று சொல்லும்போது இது பற்றிய முழு விவரமும் என்னிடம் இல்லை என்றுதான் பொருள். அதல்தான் காப்பி பேஸ்ட் செய்கிறேன் முன் கூட்டியே சில கருத்துக்களுக்கு வந்து விட்டீர்கள் அதை மாற்றுவதும் என் நோக்கம் அல்ல. என் தரப்பு விஷயங்களையே நான் சொல்ல முடியும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  26. @jk22384
    என் பதிவுகளைப் படிப்பதாகக் கூறியுள்ளதற்கு நன்றி ஆனால் நானே எழுதிய எந்தப் பதிவுக்கும் பின்னூட்டம் நீங்கள் எழுதிப் படித்ததாக நினைவில்லை. நானே எழுதாத பதிவுக்குப் பின்னூட்டம் கோருவது நியாயமில்லை என்னும் தொனி தெரிகிறது. இடு ஒரு நூலைப்பலரும் சேர்ந்து விமரிசிப்பதுபோல் இருக்கலாம் நானும் கடைசியில் என் கருத்தைக் கூறுவேன் என்பதையும் கவனிக்க வேண்டுகிறேன் பலர் இதைப் படித்திருக்கலாம் பலருக்கும் அந்த வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம் அவர்களும் படித்துக் கருத்துக் கூறலாமே என்றுதான் நினைத்தேன் வருகைக்கும் முதலாக இடும் பின்னூட்டத்துக்கும் நன்றி

    ReplyDelete

  27. @ கில்லர்ஜி
    விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. எளிமையான மொழியில் தான் தெய்வத்தின் குரல் இருக்கிறது வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  28. @ புலவர் இராமாநுசம்
    கருத்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  29. @ssk tpj
    /அதில் உள்ள கருத்துகளில் இன்றைய வாழ்விற்கு பொருந்தாத கருத்துகளை பதிவு செய்யுங்கள். அதில் உள்ள பல அறிவியலுக்கு ஒத்து வரும் கருத்துகளை சொல்லுங்கள்./ அதை நான் தீர்மானிக்கும் அளவு எனக்கு அனுபவம் இல்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  30. @கீதா சாம்பசிவம்
    உங்கள் கருத்துக்கு நன்றி மேம்

    ReplyDelete

  31. @ கரந்தை ஜெயக் குமார்
    பதிவிடும் போது அதைச் செய்யலாம் என்று இருந்தேன் ஆனால் அதற்கே வரவேற்பு இருக்காதோ என்று தோன்றுகிறது வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  32. @ திண்டுக்கல் தனபாலன்
    நான் படித்தைப் பகிர விரும்பிக் கருத்துக் கேட்கிறேன் ஆனால் அது நான் எழுதியதாக இல்லாதவரை உரசிப்பார்க்க பலரும் தயங்குகின்றனர் வருகைக்கு நன்றி டிடி

    ReplyDelete

  33. @வே நடனசபாபதி
    திரு ஜெயக்குமாருக்குக் கொடுத்த மறு மொழியே தங்களுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  34. @ ஷக்திப்பிரபா
    எழுத்து என்னுடையதாக இல்லாத பட்சம் விவாதிக்கவே பலரும் தயங்குவது தெரிகிறது. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  35. @ஏகாந்தன்
    ஒருவரது நூலை நீங்கள் விமரிசித்துப் பதிவு இடுகிறீர்கள் நான் தெய்வத்தின் குரலை பலரும் விமரிசிக்க ஏதுவாகப் பதிவிட விரும்புகிறேன் பின்னூட்டம் மூலம் நூல் பற்றிய கருத்துப் பரிமாறல் இருக்கலாம் அல்லவா

    ReplyDelete

  36. @ தேனம்மை லக்ஷ்மணன்
    வாழ்த்துக்கு நன்றி மேம் அவ்வப்போது படித்ததை முழுமையாகப் படிக்குமொரு வாய்ப்பாக இருக்கும் அல்லவா

    ReplyDelete

  37. @ தியாகராஜா கந்தையா
    முதல் வருகைக்கு நன்றி ஐயா. நான் எந்த ஒரு விஷயத்தையும்காய்தல் உவத்தல் இல்லாமல் அணுக வேண்டும் என்றுவிரும்புபவன் என் கருத்து முக்கியம் அல்ல. அதில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களோடு நான் ஒத்துப் போகிறேனா என்பதும் முக்கியமல்ல.அதைப் படித்துப்பின் பொதுவான விமரிசனக் கருத்தை வெளியிடலாம் முதலிலேயே இது இப்படித்தான்என்றுஎந்தக் கருத்தையும் உருவாக்கிக் கொண்டு படிப்பதில் எனக்கு உடன் பாடில்லை.

    ReplyDelete

  38. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  39. ஐயா
    சுருங்கச் சொன்னால் தெய்வத்தின் குரல் பற்றி உங்கள் தளத்தில் பதிவுகளின் மூலமாக ஒரு பட்டிமன்றம் நடத்தப் போகிறீர்கள். கடைசியில் சாலமன் பாப்பையா போன்று உங்கள் தீர்ப்பை கூறுவீர்கள்.அவ்வளவுதானே?
    --
    Jayakumar

    ReplyDelete
  40. @ jk22384
    பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு எனக்கு விஷய ஞானம் இல்லை/ பலருக்கும் தெரிந்த அல்லது தெரியாத செய்திகள் பதிவில் இருக்க வாய்ப்புண்டு/ நான் பெற்ற இன்பம் யாவரும் பெறலாமே என்னும் நோக்கம்தான் மீள் வருகைக்கு நன்றி

    ReplyDelete