தமிழ் குறித்த என் கருத்துகள்
-----------------------------------------------
எனறு திரு யாழ்பாவாணன் ஒரு பின்னூட்டம் எழுதி இருந்தார் நான் அதற்கு மறு மொழியாக மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html சுட்டிக்கும் சென்று படித்தேன் தமிழே உலகின் முதல் மொழி என்று ஆதாரத்துடன் சொல்லும் வலிமை என்னிடம் இல்லை. இருந்தாலும் தமிழ் மொழி குறித்த சில எண்ணங்கள் இருக்கிறது. அதைப் பதிவிடுகிறேன் படித்துப் பார்த்து அது உங்கள் வெளியீட்டில் வரக் கூடியதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் சில செய்திகளைப் பதிவிலோ பின்னூட்டத்திலோ பதிய இயல வில்லை. உங்கள் முகவரி இருந்தால் பகிர நலமாயிருக்கும் ஆட்சேபணை இல்லை என்றால் தெரிவிக்கவும் நன்றி என்று எழுதி இருந்தேன் அது தொடர்பாக விளைந்ததே இப்பதிவு
தமிழும்
தாய் மொழியும்
கட்டுரை எழுதத்
துவங்குமுன் மனதில் பல்வேறு எண்ணங்கள் ஓடுகின்றன . முதலில் தமிழ்நாட்டில்
பிறந்தவர்கள் அல்லது இருப்பவர்கள் தமிழர்களா? தாய் தந்தை இருவருமே வீட்டில் தமிழ்
பேசுபவர்களாக இருந்தால் மட்டும் தமிழர்களா? தாய் மொழி என்பதன் பொருளே சரியாகப்
புரிந்து கொள்ளப் படுகிறதா?. நான் ஒரு வலைப்பூ பதிவாளன் ஒரு முறை என்
பேரனிடம் எனக்கு எழுத சரியான பதிவு கிடைக்கவில்லை என்றேன் அவன் உடனே நான்
எழுதித்தருகிறேன் என்று கூறி ஆங்கிலத்தில் அக்பரும் பீர்பாலும் என்ற தலைப்பில் ஒரு கதை
எழுதிக் கொடுத்தான் அதற்குப்
பின்னூட்டமாகசிலர் அவனுக்குத் தாய் மொழி கற்பிக்கும் படிக் கூறினர். எனக்கும் அவன்
தாய் மொழியில் எழுதுவது விருப்பம்தான் ஆனால் அவனது தாய் மொழி எது என்னும் கேள்விக்கு
சரியாகப் பதில் கிடைக்கவில்லைஅதைச் சற்று விலாவாரியாக விளக்கினால்தான் புரிந்து
கொள்ள முடியும் என் பேரப்பிள்ளைகளைப்
பள்ளியில் சேர்க்கும் போது அவர்களது தாய் மொழி
மலையாளம் என்று எழுதிக்
கொடுத்திருந்தனர் என் மகன்களிடம் கேட்ட போது அவர்களது தாய்பேசும் மொழி மலையாளம்தானே
ஆகவே மலையாளம் என்று கொடுத்ததாகக்
கூறினார்கள்அதாவது தாய்பேசும் மொழி தாய் மொழி என்று புரிந்து
கொண்டிருந்தனர்சந்தேகத்துக்கு இடமில்லாமல் என் தாய் மொழி தமிழ்/நான்
ஒரு மலையாளப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாலும் வீட்டில் பேசும் மொழி தமிழே
இருந்தது. என் மகன்கள் வளர்ந்து திருமணம் செய்து கொண்டது மலையாளப் பெண்களையே.
ஆனால் இவர்கள் தமிழிலும் அவர்கள் மலையாளத்திலும் பேசுவார்கள் அவர்களுக்குக்
குழந்தைகள் பிறந்ததும் வீட்டில் இரு மொழி புழக்கம் இருந்தது. பேரக் குழந்தைகள்
தந்தையிடம் தமிழிலும் தாயிடம் மலையாளத்திலும் பேசுவது பார்ப்போருக்குப் புதிதாய்
இருந்தது. என் பிள்ளைகள் துவக்கத்தில் தமிழ் படித்து வந்தனர். ஆனால் என் பணி
மாற்றம் காரணமாக
இந்தி படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது தமிழில் கஷ்டப் பட்டுப்
படிக்க முடிந்தாலும் தேர்ச்சி பெற முடியவில்லை. என் பேரக் குழந்தைகள் இரு
மொழியிலும் நன்கு பேசக் கற்றாலும் எழுதப் படிக்க என்பது ஆங்கிலம் ஆகி விட்டது
நான் பேரக் குழந்தைகள் கட்டாயம் தமிழ் எழுதப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்த
முடியாது. அப்படிச்செய்தால் ஒரு வேளை மொழி வெறியன் என்னும் பெயர் வரலாம் என்
மகன்கள் தமிழ் ஆங்கிலம் மலையாளம் ஹிந்தி கன்னடம் தெலுங்கு என்று பல மொழிகளில்
சரளமாகப் பேசுவார்கள். என் பிள்ளைகளாவது தமிழைப் படிக்கவும் பேசவும்
கற்றிருக்கிறார்கள். ஆனால் என் பேரப் பிள்ளைகள் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழிகளையே கற்கிறார்கள்.
எனக்குப் பல முறை சந்தேகம் வருவதுண்டு. தாய்மொழி என்பது வ்ளரும்போது பழகும் மொழி
என்றால் என் பேரக் குழந்தைகளின் தாய் மொழி ஏது. நிச்சயம் தாய் பேசும் மொழி என்று
எடுத்துக் கொள்ள முடியவில்லை. இணையத்திலும் அகராதியிலும் அப்படிச் சொல்லவில்லை
என்
நிலையாவது பரவாயில்லை
தமிழ்நாட்டில்
வசிப்பவர்கள் தமிழர்களா? கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னடியர்களா? . தமிழர்களின் வாழ்வில் தமிழுக்குக் கொடுக்கப்படும்
முக்கியத்துவம் என்ன. தமிழே வீட்டில் பேசும் மொழியாக இருத்தல் அவசியம் சில
நாட்களுக்கு முன் ஒரு காணொளி கண்டேன் அமெரிக்காவில் வசிக்கும் மகன்
வீட்டுக்குசெல்லும் தந்தை பேரனுடன் தமிழில் பேச அவனோ தமிழ் புரிந்தாலும் தமிழ்
பேசுவதில்லை. தமிழ் வாழ வேண்டுமானால் தமிழன்
வீட்டில் அது பேசும் மொழியாக இருத்தல் அவசியம்
ஆனால் அங்கும் விதி விலக்குகள் இருக்கும் பொதுவாக வெளியில் புழங்கும் இடங்களில்
வேற்று மொழி பேசுவோர் வீட்டில் தமிழில்அல்லது
தாய் மொழியில் பேச சிரமம் உண்டு
தமிழும்
இருக்கும் நிலைப்பாடும்
---------------------------------------------------------------------
தமிழன்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும்
நிலைப்பாட்டைக் கையாண்டால் வாழ்வோட்டத்தில் பின் தங்கி விடுவான் முதலில் தமிழ்
மொழிப்பற்று உடையவர்கள்தமிழில் தேர்ச்சி பெற்றவர்களா?
எந்த
மொழி படிப்பவர்கள் ஆனாலும் அந்த மொழியின் மீது நேசம் வேண்டும்அதில் நன்கு தேர்ச்சி
பெற வேண்டும்ஆளுமை வேண்டும்
ஓரளவுக்குத்
தமிழ் படிக்கவோ பேசவோ செய்ய முடிந்தவர்கள் நிறைய வாசிக்க வேண்டும் வாசிக்க வாசிக்க
மொழியின் மீதான ஆளுமை கூடும்மொழியின் மீது ஒரு பற்று ஏற்படும்
பற்றில்லாமல் எதையும் செய்ய முடியாது
தமிழை
வளர்க்கிறோம் என்று சொல்பவர்கள் சிந்திக்க வேண்டும்
தமிழை வளர்க்க என்ன செய்கிறார்கள் தமிழை யாரும் வளர்க்க வேண்டியதில்லை. சங்ககாலத்
தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் ஏதாவது ஒற்றுமை
இருக்கிறதா.? இன்றைய தமிழ் அதுவாக இவால்வ்
ஆகி இருக்கிறது. சொல்லப் போனால் தமிழின் தோற்றம் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது
எனக்கு
அடிக்கடி ஒரு சந்தேகம் எழும் கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கும்முன் தோன்றிய குடி
தமிழ்க்குடி என்றும் தமிழின் பெருமை குறித்தும்பலர் பேசுவதும் ஒரு வகையில் ஏற்றம்
கொடுக்கப் பேசும் வார்த்தைகளோ? தமிழ் மொழி இவால்வ் ஆகும் என்றேன்
அன்றைய எழுத்துருவுக்கும் இன்றைய எழுத்துருவுக்கும் அநேக வேறுபாடுகள் இருக்கின்றன.
அச்சுத்தொழில் வந்தே சில நூற்றாண்டுகளே ஆகி இருக்கும் நிலையில் அன்றைய
இலக்கியங்கள் கல்வெட்டுக்கள் மூலமும்
அரித்துப் போக வாய்ப்பிருக்கும் ஓலைச் சுவடிகள்
மூலமுமே தெரிய வந்திருக்கும்
அல்லது வாய்வழிமூலமே தெரிய வாய்ப்பிருக்கும் இருந்தாலும் அவற்றை
மீட்டெடுக்கும் பணியில் ஈடுபாடு கொண்டிருந்த உவே சாமிநாதையர் போன்றோரின் முயற்சியே
தமிழ் பற்றி நாம் இந்த அளவுக்குத் தெரிய வைத்திருக்கிறது. ஆங்கிலம் எப்படித்
தன்னுள் பலமொழி வார்த்தைகளைசெரித்துக் கொண்டிருக்கிறதோ அதே போல் தமிழும்
உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ் வளர நல்ல
வழி போல் தோன்றினாலும் அப்படி இருப்பவர்கள் ஞானமும் மனதும் பரந்திருக்காது.
தமிழ் வளர எல்லைகள் விதிக்கக் கூடாது
தமிழ்
எழுத்துக்களில் வளர்ச்சி என்பதுபோல் கொம்பு போட்ட “ல” ள ண போன்ற எழுத்துக்கள் போய்
லை ளை ணை என்ற எழுத்துக்கள்வந்து விட்டன எல்லா ஆங்கில வார்த்தைகளுக்கும் தமிழ் இணை
தேடுவது சரியல்ல தமிழ் தன்னுள் பிற மொழி வார்த்தைகளை (“absorb”) ஏற்றுக் கொள்ள
வேண்டும் பண்டைக் காலத்தில் தமிழ் இருந்தது போல்
இப்போதும் இருக்க நினைப்பது சரியல்ல. அதற்காக நாம் பண்டைக் காலத்தில் இருந்த தமிழை
உதாசீனப்படுத்தவும் கூடாதுமரபு இலக்கணங்களோடு கூடிய கவிதைகளுக்கு என்றும் மதிப்பு
இருக்கும் ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது தமிழ் வளர்ச்சிக்கு
ஊறு விளைவிக்கும் புதுக்கவிதையும் வேண்டும் மரபுக்கவிதையும் அறிந்திருத்தல்
கூடுதல் நலம் சங்ககால இலக்கியங்களைத் தமிழ்தான் என்றாலும் வழிகாட்டியோ உரையோ
இன்றிப் படிக்க முடிவதில்லை ஆகவே சாதாரணன்
தமிழ் அறிந்தவன் என்று சொல்லிக் கொள்வதே கடினம் பண்டித
மொழியிலிருந்த தமிழை பாமரனும்
புரிந்து கொள்ளும் முயற்சியில் பாரதி இறங்கினான்
ஆனால் என்ன பரிதாபம் அவனது எழுத்துக்களையே சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் பலரும்
பாரதியே மெல்லத் தமிழினிச் சாகும்
என்று கூறி விட்டதாகத் தவறாக வியாக்கியானம்
செய்கிறார்கள் நான் சொல்ல வருவது என்னவென்றால் தமிழில் வாசிப்பதையும் தவறாகப்
புரிந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது
கம்பனையும்
வள்ளுவனையும் பாரதியையும் பாரதி
தாசனையும் மேற்கோள் காட்டும் நாம் மேற்கோளையும் தாண்டி சற்று ஊன்றி படித்தல்
அவசியம்
இப்போது வாய்ப்புகள் மிகவும் அதிகரித்து
வருகிறதுகணினி உலகில் இந்த உலகமே நம் கைக்குள் அடங்கி இருக்கிறது என்ன ஒரு விஷயம்
என்றால்நாம்
தேடவேண்டும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று விவிலியத்தில் கூறி இருப்பதை சற்றே
மாற்றி தேடுங்கள் கிடைக்கும் என்னும் நிலை வந்திருக்கிறது ஆக நாம் தேட வேண்டியது
என்ன என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும்
இந்தத்
தேடலுக்கு துணை போகும் வழியில் தமிழிலேயே அந்த வசதியும் வந்து விட்டது
இதுவரை வந்தது போதாது தமிழ் ஆர்வலர்கள்பிற மொழிகளில் இருக்கும் நல்ல விஷயங்களை
கணினியில் தமிழில் ஏற்றவேண்டும் எட்டு திசையும்
சென்று பொருள் குவிப்போரில் தமிழர்களின் எண்ணிக்கையும் சற்றுக் கூடுதலாகவே
இருக்கிறது ஆங்கிலம் தவிர கணினி பயன் பாட்டில் தமிழும் கணிசமாக முன்னேறியே
இருக்கிறது
எனக்கு
இன்னொரு யோசனையும் தோன்றுகிறது பண்டையத் தமிழ் எவ்வாறெல்லாம் முன்னேறிஇருந்தது
என்பதைக் கல்வெட்டுகளிலிருந்தும் பழைய சுவடிகளில்
இருந்தும் அறிகிறோம் .அவற்றை கூடியமட்டும் மைக்ரொ ஃபில்மில் எடுத்து அவற்றைக்
கணினியில் காட்ட வேண்டும் தமிழ் வளர்ந்த விதம் அல்லது தற்போதைய நிலையை அடைந்த
விதம் தேடினால் கிடைக்க வேண்டும்
மதம்
மொழி இனம் போன்றவை மிகவும் சென்சிடிவானவை.தமிழே எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி
இன்னும் வாழும் மொழி என்று பெருமை பேசப்படும் போது ஏதோ ஒரு உணர்ச்சியால் கட்டுண்டு
வேற்று மொழிப் பக்கமே போகாமல் இருந்தால் நஷ்டம் நமக்குத்தான் சென்றிடுவீர் எட்டு
திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு
சேர்ப்பீர் என்றான் பாரதி/ இன்று கணினியின் பயன் பாட்டினால் எட்டுதிக்கும்
செல்லத் தேவையில்லை. இருந்த இடத்திலிருந்தே அந்தப் பணியைச்
செய்யலாம்
இன்னொரு விஷயம் தமிழ்ப் பத்திரிக்கைகளும்
ஊடகங்களும் ஒரு கணிப்பின் படி தமிழ் தெரிந்தவர் ஆங்கிலமும் படித்தவர் தமிழில்
பத்திரிக்கை வாசிப்பது குறைவே. என்ன காரணம் என்று
சிந்தித்துப் பார்த்தால் ஆங்கிலம் படித்த தமிழ் அறிந்தவர்கள்
தமிழ்ப் பத்திரிக்கைகள் நிறைவான செய்திகளை விட்டு விட்டு கொலை கொள்ளை என்பது போன்ற
சென்சேஷனல் செய்திகளிலேயே அதிகம் கவனம் செலுத்துவதாக எண்ணுகின்றனர் தமிழ்ப்
பத்திரிக்கைகளுக்கு அரசியல் சினிமா போன்றவையே பலம் நல்ல பத்திரிக்கைகள் வாசிப்பவர்
குறைவால் காணாமல் போய் விடுகின்றன. செய்தித் தாள்களும் பத்திரிக்கைகளும் நல்ல
தமிழ் வளர்க்க எந்த முயற்சியும் செய்வதில்லை விதி விலக்குகாக ஏதாவது இருக்கலாம்
ஊடகங்கள் சரியாகச் செயல்பட்டால் நல்ல தமிழ்ப்பணி செய்ய முடியும் எடுத்துக்காட்டாக
பாரதியின் பாடல்களும் இன்னும் பிற பழம் பாடல்களும்
திரைப்படங்கள் மூலமே பலராலும் அறியப் பட்டிருக்கிறது
சரி.
இப்போதுதலைப்பிற்கு வருவோம் தமிழ் மொழியே உலகின் முதல் மொழி என்று பறை சாற்றுவதால் என்ன லாபம் எந்த மொழி பேசுபவர் ஆனாலும்
அவர்கள் அந்த மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன? என்ற நிலைப்பாடே சரியாக
இருக்கும் அதை அதிகரிக்க என்ன என்ன செய்யலாம்
என்றே இருக்க வேண்டும் . நான்
அறிந்தவரை ஒரே மாநிலத்தில் வசிக்கும் எவரும் அவரது தாய் மொழி எதுவானாலும்
அந்த மாநில மொழியைக் கற்க வேண்டும்
துரதிர்ஷ்டவசமாக ஒரே மாநிலத்தில் வசிக்க முடியாதவர்கள் அவர்களது தாய் மொழியை
கட்டாயம் கற்க வேண்டும் அதற்கான வசதியை அரசு
செய்து தரவேண்டும் முக்கியமாக ஏதோ சூழ்நிலை காரணமாக
அவர்களது மொழியைப் பள்ளியில் பயில முடியாதவர்கள்
வீட்டிலாவது அதைக் கற்பிக்க அவர்களது பெற்றோர் முயற்சிக்க வேண்டும் முதலில் தாய்
மொழி பற்றிய சந்தேகங்கள் சிறார் மனதில் இருக்கக் கூடாது வீட்டில் அனைவரும்
அவர்களது தாய் மொழியிலேயே பேச வேண்டும் நான் கூறி இருந்த எக்ஸெப்ஷனல் கேஸஸ்
தவிர.மற்றபடி நான் மேலே குறிப்பிட்டுள்ள
அநேக விஷயங்கள் எல்லா மாநில மொழி பேசுபவருக்கும் பொருந்தும் மொழியை அதன் படி
இவால்வ் செய்ய விட வேண்டும் அவர்களது
தினந்தோரும் செய்யும் செயல் பாடுகளில் அவரவர் தாய் மொழியே முதலிடம்
பிடிக்கவேண்டும் மொழிப்பற்றை வளர்க்க வேண்டும் ஆனால் மொழி வெறியைக் கண்டிக்க
வேண்டும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் மொழியின்
மேம்பாட்டுக்காக இருக்க வேண்டும் சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கத்தைக்
கொண்டுவரவேண்டும் வாசிப்பது சுவாசிப்பது போல் இருக்கவேண்டும் கூடியவரை அவரவர்
மொழியையே பயன் பாட்டில் கொண்டு வர வேண்டும்
பள்ளிகளில்
அந்தந்த மாநிலமொழியிலேயே பாடங்கள் போதிக்கப் படவேண்டும் ஆங்கிலம் துணைப்பாடமாக
இருக்கவேண்டும் வேற்று மாநிலத்தவர்கள் பயில அவர்கள் மொழியில் கற்பிக்க பள்ளிகள்
துவங்க எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது;
தமிழ்
மொழி கற்பிக்கப்படும் போது மொழியின் வளமை பழமை தெரிய வரும் பாடங்கள் பாட
புத்தகங்களில் இருக்கவேண்டும் பொதுவாக ஆங்கிலப்
பயிற்று மொழிப் பள்ளிக்கூடங்கள் திறம்பட
நிர்வகிக்கப் படுகின்றன. தமிழில் படிப்பவர்கள் தங்களைக் குறைத்து மதிப்பிட்டுக்
கொள்கின்றனர்.இந்த வேறுபாடு அகல அனைத்துப் பள்ளிகளிலும்
ஒரேமாதிரி பாடத் திட்டங்கள் இருக்கவேண்டும் அவரவர் மொழியில் படிப்பது.
பயிற்றுவிப்பது புரிதலுக்கு நல்ல வித்தாகும்
அடிப்படைக்
கல்வி நிச்சயம்தாய் மொழிப்பயிற்று கல்வியாக இருக்கவேண்டும்
தமிழனுக்குத் தமிழில் இருக்கவேண்டும் பட்டப் படிப்பு
வேண்டுமானால் ஆங்கிலத்தில் இருக்கலாம்மறைந்த பெருந்தலைவர் திரு
அப்துல் கலாம் தமிழ்ப் பயிற்று மொழியில் படித்தவர். தமிழ் வழிக் கல்வியில்
படித்தவர் தரம் தாழ்ந்திருக்கும் என்னும் எண்ணம்
மாற வேண்டும் தமிழில் வாசிக்கும் பழக்கம் வேண்டும் பிற மொழிகளில் இருக்கும்
நயங்களையும் நேசிக்கக் கற்கவேண்டும் கணினிப் பயன் பாட்டை அதிகம் அறிதல் அவசியம்
உலகே நம் தேடலில் தான் இருக்கிறது ஊடகங்களும் பத்திரிக்கைகளும் மொழிப்பற்றை
வளர்க்கும் விதத்தில் செயல் படுவது அவசியம் மொத்தத்தில் தமிழில் பற்றுஅவசியம் வெறி
கூடாது.
என் வலைத்தளம் திறக்காமல் என் கை ஒடிந்த மாதிரி இருந்தது நண்பர் தனபாலனுக்கு இரண்டு மூன்று அஞ்சல்கள் அனுப்பி விட்டேன் நண்பர் வெங்கட நாகராஜ் அவர்களுக்கு என் தளம் திறப்பதாக எழுதி இருந்தார் (பூவையின் எண்ணங்கள் பதிவின் ஒரு பின்னூ ட்டத்தில் நான் என்ன ப்ரௌசர் உபயோகப் படுத்துகிறேன் என்றும் கேட்டிருந்தார் நான் மொஜில்லாவைத்தான் சாதாரணமாக உபயோகி க்கிறேன் கூகிள் க்ரோமில் போனால் பதிவு திறக்கிறதுநண்பர் டிடி க்கு அனாவசிய தொந்தரவு கொடுத்து விட்டேன் அவர் மன்னிப்பாராக திரு நாகராஜுக்கு நன்றி
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html