இதுவும் என் எழுத்துதான்
---------------------------------------------
ஒரு
வாரகாலமாக நான் ரொம்பவே பிசி. பதிவு எழுத நேரமில்லை இருந்தாலும்
தேனம்மையின் சும்மா தளம் சாட்டர்டே
போஸ்டுக்காக நான் எழுதியது அங்கு வெளியாகி
உள்ளது அதுவும் நான் எழுதியதுதானே அந்த
தலம் சென்று என்பதிவினை வாசிக்க
வேண்டுகிறேன் iஇங்கே என் எழுத்து
இது ஒரு புதுக் கதம்பம்
---------------------------------------
பதிவுகள் எழுதவே மனம் ஒழுங்குபடுவதில்லை கனமான தலைப்பில் எனக்குத் தோன்றியதை எழுதினால் பலரும் கருத்து சொல்லத் தயங்குகிறார்கள் யார்
எப்படிப் போனால் என்ன என்று எண்ணுகிறார்களோ என்னவோ எழுதாமல் இருக்கவும் முடியவில்லை/
வாசிப்பவர்களுக்கு இந்தமாதிரியும் சிந்திப்பவர்கள்
இருக்கிறார்கள் என்பது தெரியவருமே எப்படியும்
வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்கினாலும் கருத்து போய்ச் சேர்ந்து விடும் அல்லவா.
இந்தமுறை ஒரு மொக்கைப்பதிவு. இதை மொக்கை என்று ஏன் கூறுகிறேன்
என்றால் இதில் காணும் விஷயங்களும் செய்திகளும்
என்னால் கற்பனை செய்யப்பட்டதல்ல
கண்டது படித்தது போன்றவற்றில் இருந்து பகிர்கிறேன் இருந்தாலும்
என் முத்திரையும் இருக்க வேண்டும் அல்லவா அதை நான் வாசகர்களை வரவேற்பதில்
காண்பிக்கிறேன் பாருங்கள் ரசிப்பீர்கள்
ஒரு புறா காரில் அடிபட்டு விழுந்தது. ஈர மனசுடைய ஒருவன் அதை
எடுத்துப் போய் விலங்கு மருத்துவரிடம் காட்டி மருந்திட்டு காப்பாற்றினார். புறா
நன்றாகக் குணம் ஆகும் வரை பாதுகாப்பாக இருக்க ஒரு கூண்டில் அடைத்து வைத்தார்.
புறாவுக்கு அது பிடிக்கவில்லை.”காரில் என்னை இடித்தவன் செத்தா போய்விட்டான். எனக்கேன் சிறை
தண்டனை”என்று கேட்டது.
மண வாழ்வில் இன்புற்றிருக்க ஒருவரை ஒருவர்LOVE ONE ANOTHER..சரிப்பட்டு வராவிட்டால்LOVE ANOTHER ONE.இது எப்படி இருக்கு.?
An apple a day keeps the doctor away.ஆனால்An apple
a day costs Rs1000-/a monthடாக்டருக்குஅதைவிடக் குறைவாகச் செலவாகலாம் ப்ராக்டிகலாக சிந்திக்க
வேண்டும்.
”நான் கரைந்தால் விருந்தினர் வருவர்”என்று சொல்லி காகம் மகிழ்ந்தது
”விருந்தினர் வந்தால் என் கழுத்தறுத்துமகிழ்வார்கள்”என்று கோழி
சொல்லி வருந்தியது.
Two
pieces of advice for married men 1) NEVER LAUGH AT THE CHOICES OF YOUR WIFE YOU ARE ONE OF THEM 2) NEVER BE PROUD OF YOUR CHOICES YOUR WIFE IS ONE OF THEM
An amazing English sentence
I do not know where
family doctors acquired
illegibly perplexing handwriting:
nevertheless extraordinary pharmaceutical intellectuality counterbalancing indecipherability transcendentalises
intercommunications incomprehensibleness
The author of this sentence must be a vocabulary genious . –Why?
This is a sentence
where the first word is one letter long
, the second word is two letters long the third word is three letters long and so
on .The twentieth word is
twenty letters long !
பெர்செப்ஷனா உண்மையா
---------------------------------------------- வாழ்க்கையில்பல முடிவுகள் இம்மாதிரி அனுமானங்களின்பேரிலேயே எடுக்கப் படுகின்றன இவை
நல்லபடியும்இருக்கலாம் தவறாகவும்இருக்கலாம்எதையோ எழுத நான்பீடிகை போடுவது
போல் இருக்கிறதா
சரி இத்தனை பீடிகைகளும் எதற்காக.
சில விஷயங்களை முழுவதும் தெரிந்து கொள்ள
முடிவதில்லை. தெரிந்து கொள்ளவும் முடியாது/ஆனால் எத்தனையோ நிகழ்வுகளைப்
பார்த்துதானே நல்லதுஇது தவறுஇது என்று முடிவு செய்ய வேண்டி இருக்கிறது
இப்போது நடக்கும் பாஜகவின் ஆட்சி
பற்றி எழுதத் தோன்றியது முந்தைய யுபிஎ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல நல்ல
முடிவுகள் பலவற்றையும் இவர்களே கொண்டு
வந்ததுபோல் என்ன ஒரு பித்தலாட்டம் ராஜிவ்
காந்தியின் முயற்சியால் முன்னிறுத்தப்பட்ட கணினி மூலம் எதையும் செய்யலாம் என்பதை இவர்களது
முயற்சி போல் காட்டிக் கொள்கிறார்கள்
ஆதார் கார்ட் உபயோகப்படுத்துவது குறித்து நிறையவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள்
இப்போது எந்த ஒரு பணப் பரிவர்த்தனைக்கும்
ஆதாரை முன்னிறுத்துகிறர்கள்
ஜீஎஸ்டி என்று சொல்லப்படும் கூட்ஸ்
அண்ட் செர்விஸெஸ் வரி முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டு தடுத்து
நிறுத்தப்பட்டது முதலில் அதற்கு எதிர்ப்பு
தெரிவித்ததுஅன்றைய மோடியின் ஆட்சியில் இருந்த குஜராத் அரசுதான் இன்றைக்கு
இவர்களால் கொண்டு வரப்பட்டு அமல் செய்வதாக ஒரு பிரமையை ஏற்படுத்துகிறார்கள் அன்னா
ஹஜாரேயையும் அவரதுஜன் லோக் பால் மசோதாவையும்
பலர் மறந்து விட்டிருக்கலாம் 2013ம் ஆண்டு பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
மசோதாவை இன்னும் அமல் செய்யவில்லை.
குறிப்பிட்டவர்களின் ஊழல்களைக்
கண்டுகொள்ளாமல் இருக்கும் உத்தியோ லோக்பாலின் உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிரதமர் உச்சநீதிமன்ற நீதிபதி. எதிர்கட்சித் தலைவர் மற்றும் சிலர் அடங்கிய ஒரு குழு தீர்மானிக்க வேண்டும் இப்போது அங்கீகரிக்கப்பட்ட
எதிர்கட்சித்தலைவர் இல்லை என்னும் காரணத்தால்
லோக்பால் நியமனம் செய்யப்படாமல்
இருக்கிறது அந்த லோக் பாலின் முக்கிய பணியே ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளானவரை
விசாரித்து நீதி வழங்குவதுதான் இப்போது
ஊழலில் பலரையும் குற்றம்சாட்டி சிபிஐ என்னும்
இயந்திரத்தை முடுக்கி விட்டு எல்லோர் பெயரையும் களங்கப்படுத்தும் காரியத்தை லோக்பால் மூலமே செய்ய முடியாதா இவர்கள் ஏன்
லோக்பால் நியமனத்தின் மூலம் அதை செய்யக் கூடாது / அப்போது இவர்களுக்கு ஏதுவாக
செயல்படும் பல அமைப்புக்சள் மீது இவர்களதுஎண்ணங்களை திணிக்கமுடியாது என்பதாக இருக்குமோ நீதி வழங்கும் நீதிபதிகள் மேலும் இவர்களதுமுடிவுகள்
திணிக்கப் படுகிறதோ என்னும் சந்தேகம்
எழுகிறது ஆண்டுகள் பலவும் மாதங்கள் பலவும் கிடைப்பில்போட்டிருந்த வழக்குக்கள்
இவர்கள் நினைக்கும் போது உயிர்பெறுகின்றன வழக்கு தொடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் உத்தமர்கள்
என்று சொல்ல வரவில்லை ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் டிலேய்ட்
இஸ் ஜஸ்டிஸ் டினைட் என்பது போல்
இருக்கிறது எத்தனையோ கேஸ்கள் நினைவுக்கு வந்தாலும் போதுமான விஷயங்கள் நினைவுக்கு வராததால் கோட்
செய்ய முடியவில்லை காவியுடை தரித்தவர்கள் எல்லாம் முதல் மந்திரியாகவும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களாகவும்
வெளியில் திரிகிறார்கள் நீதி மன்றம் ஏதோ சில கேஸ்களில் குற்றமற்றவர் என்று
தீர்ப்பு வழங்கினாலும் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் சிபிஐ ஏனோ சில வழக்குகளை கண்டுகொள்ளாமல்
இருக்கிறது சுரங்கத் தில்லுமுல்லுகளில் விசாரிக்கப்பட்ட ரெட்டி
சகோதரர்களுக்கு விடுதலை கிடைத்ததை
எதிர்த்து எந்த அப்பீலும் இல்லை
முந்தைய அரசின் நல்ல முடிவுகள்
பலவும் அவர்களால் கொண்டு வரப்பட்டது என்னும் காரணத்தால் செயல் படுவதில் பெரிய
சுணக்கமே இருக்கிற்து மஹாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்ப்லாய்மெண்ட் ஆக்ட் வேலை
இல்லாத அன்ஸ்கில்ட் தொழிலாளர்களுக்கு ஒரு
ஆண்டில் குறைந்தது நூறு நாட்களுக்காவது வேலை கொடுத்து அதன் மூலம் குறைந்தபட்சம்
ஒரு வருவாய்க்கு வழிசெய்யும் திட்டம் சோஷியல் செக்யூரிடி ஆக்ட் எனலாம் ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே முன்னுரிமை வழங்கப் படுவதாக ஒரு பேச்சும் இருக்கிறது இதைச் செயல் படுத்த சில சுலபமான நம்பகமான வழிமுறைகளைக்
கொண்டு வரவேண்டும் இங்கு ஊழல் பெருக வாய்ப்புகள்
இருப்பதால் இந்த எச்சரிக்கை
தகவல் அறியும் சட்டம் ரைட் டு எஜுகேஷன் போன்ற முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களும்
சரியாக செயல் படுத்தப்படாமால் திணறு கிறது
ஒரு கட்சிக்கு என்று கொள்கை
ஏதாவது இருக்க வேண்டும் அந்தக்
கொள்கையின் அடிப்படையில் செயல்பாடுகள்
இருக்க வேண்டும் இப்போது இருக்கும்
அரசுக்கு காவிமயமாக்குதலே கொள்கை போல் தெரிகிறது அதைச் செயல் படுத்த முக்கிய பதவிகளில் இவர்களின் அடிவருடிகளே நியமிக்கப் படுகின்றனர்
காங்கிரசின் முக்கிய தலைவர்களை
இவர்கள் அடாப்ட் செய்து சொந்தம் கொண்டாடுகின்றனர்எனக்கு இன்னும் ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது கடைசியாக இந்தித் திணிப்பு . அரசு
பத்திரங்களில் இந்தியில் எழுதினால் அது தெரியாத மக்களை இந்தி படிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு உத்தியே
இது
சரித்திரகாலங்கள் முதலே
தமிழ்நாடு ஆங்கிலேயர் ஆட்சி தவிர எந்த ஆதிக்கத்துக்கும் கட்டுப்படவில்லை. அசோகர் காலத்திலும் சரி அக்பர் காலத்திலும்சரி அவர்களது
ஆட்சிக்குக் கட்டுப்படவில்லை இந்திய நாட்டை ஒருங்கிணைப்பது மதம்
ஒன்றே வடக்கு முதல் தெற்குவரையும்
கிழக்கு மேற்கிலும் மதம் ஒன்றுதான்
இந்தியாவை இணைக்கிறது அதையே ஒரு கருவியாகப் பயன் படுத்தி ஹிந்து
ராஷ்ட்ரா என்றெல்லாம் பேச்சுகள் எழுகிறது
சாதாரணப்பொது மக்கள்
போராட்டங்களில் ஈடுபடுவது இல்லை நரி வலம்
ஓனால் என்ன இடம் போனால் என்ன
என்றுஇருப்பவர்கள் ஆனாலும் அவர்களின்
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா
( புள்ளி விவரங்களுடன் எழுத ஆசைதான்
ஆனால் ஒரு சாதாரணப் பிரஜையாக சில அனுமானங்களே துணை நிற்கிறது நம்மால்
தேர்ந்தெடுக்கப்படுபவர்களையே அதன்படிதானே தேர்வு செய்கிறோம் மிகவும் அதிகமான
நேரங்களில் இந்த ஹன்ச் சரியாகவே
இருப்பதும் தெரிகிறது அதனால்தான்
தலைப்பே அம்மாதிரி ) ஒரு மாறுதலுக்காக என் பழைய தஞ்சாவூர் பெயிண்டிங். ஒன்று
மீண்டும் சென்னையில்
---------------------------------------- மீண்டும்சென்னையில்
சென்றமாதம்
சென்னை வந்திருந்தபோது சில
பதிவர்களைச் சேர்த்து உரையாடினேன் என் ராசிப்படி மழை பெய்யும் என்று நினைத்திருந்தேன் மழை ஏமாற்றிவிட்டது ஆனால் இந்தமுறை நல்லகத்திரிவெயில் சமயம் சென்னை பற்றிய வெப்ப பயம் அதிகமாயிருந்தது
ஆனால் இம்முறை என் ராசிப்படி
மழைபெய்து வெப்பத்தின் பாதிப்பு அவ்வளவு தெரியவில்லை
இம்மாதம் ஏழாம் தேதி பெங்களூரில் என் மனைவியின்
நண்பி ஒருவரது மகனுக்குப் பூணூல்
போட்டார்கள் பிராம்மணனாய்பிறந்தவற்கு இரு பிறப்பாம் பூணூல் போடும் முன்பு பூணூல் போட்டபின்பு அவன்
பார்ப்பனனாகிறான் பார்ப்பு என்றால்
கோழிக்குஞ்சு. கோழிக்கு இரு பிறவிகள்
முட்டையாக ஒன்று முட்டை பொரித்துக் குஞ்சானபிறகு ஒன்று. அதுபோல இருப்பதால் பூணூல்
போட்ட பிராம்மணன் பார்ப்பனன் (
பார்ப்பு அனன் ) ஆகிறான்
பூணூல் கல்யாணம்
காலை
அங்கு வருகைப் பதிவு செய்து என் இளைய மகன் வீட்டுக்கு அவனது பிறந்த நாளுக்கு
வாழ்த்து கூறச் சென்றிருந்தோம் அங்கு நாங்கள் சென்று மதிய உணவு அருந்தி அவனை
வாழ்த்தி வந்தோம் ஏழாம் தேதி
முழுவதும் அவன் பிறந்த அந்தநாளின்
நினைவாகவே இருந்தது.
பிறந்த நாள் கண்ட மகனுடன்
எட்டம் தேதி மதியம் சதாப்தியில் சென்னை சென்றோம்
ரயில் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு என்மகனும் மருமகளும் வந்திருந்தார்கள் வீடு
சேரும்போது இரவு பத்தரைக்கும் மேலாகி இருந்ததுஏசி காரில் பயணம் வெளியே வந்தால்தான்
வெப்பம் தெரிந்தது இரவு படுக்கையும் ஏசி அறையில் . ஒன்பதாம் தேதி மாலை அவன் வீட்டுக்குச் சென்றோம் பெரும்பாக்கத்தில் இருக்கிறது எனக்கு அவன் நகருக்கு வெகுதூரம் வெளியே போவது போல் தோன்றியது.நான்கு அடுக்குகள்
கொண்ட குடியிருப்பு. எல்லா வசதிகளும் இருக்கிறது எனக்கு அந்த தூரம் தான் பிரச்சனையாகத்
தோன்றியது அவனைக் கேட்டால் வேளச்சேரி வீடு வாங்கும் போது அதுவும் இதைப் போல்தான்
இருந்தது இப்போது எல்லா வசதிகளும் கொண்ட
சிறந்த குடியிருப்பாக மாறி இருக்கிறது இல்லையா என்கிறான் . இப்போதைய இளையவர்களின்
சிந்தனையே வேறு மாதிரி இருக்கிறது எழுதிக் கொண்டே போகலாம் ஆனால் யாரும் ஒரேமாதிரி
நினைப்பதில்லை. பத்தாம் தேதி அதிகாளையில் கிருகப் பிரவேசம் கணேச ஹோமம் அத்தனை காலையில் வேளச்சேரியிலிருந்து போவது
சிரமம் என்பதால் எங்களுக்கு குடீருப்பிலேயே ஏசி வசதி கொண்ட ஒரு கெஸ்ட் அறை ஏற்பாடு
செய்திருந்தான் என் இளைய மகன் ஒன்பதாம் தேதி இரவு வந்திருந்தான் அவனது மகளுக்கு கடைசி செமெஸ்டர் பரீட்சை
இருந்ததால் மற்றவர்கள் வர முடியவில்லை
எங்களுடன் என்மச்சினனும் அவன்மனைவியும்
வந்தனர்
அதிகாலையில் அண்ணா நகரில் இருக்கும் நம்பூதிரியை அழைத்து வரவேண்டி இருந்ததுநான் ஒரு புது வீடு வாங்குவதாயிருந்தால் ஒரு
நாடாவைகட் செய்து எல்லோருடனும் உள்ளே
போகவே விரும்புவேன்.
இந்த கணேஅ ஹோமம் கூட நம்பூதிரிகள்
செய்வதற்கும் நம் பக்கத்து ஐயர்கள்
செய்வதற்கும் வித்தியாசம் தெரிகிறது மாலை அஸ்தமித்த பின் பகவதி சேவை என்னும் ஒரு பூஜை. விவரமாக எழுதுதற்குப் பதில் புகைப்படங்கள்
பேசட்டுமே
என்மகன் குடிபோகும் குடியிருப்பின் ஒரு தோற்றம்
இன்னொரு தோற்றம்
கழுகுப் பார்வையில் குடியிருப்பு (மாடல்)
கார் பார்கிங்
பூஜை அறையில்
குழலூதும் கண்ணன்
கணபதி ஹோமம்
வீட்டு பால்கனியில் இருந்து ஒரு தோற்றம்
பால் காய்ச்சல் சரளைக் கற்களை இரைத்த மாதிரியான சுவர் n
காலை உணவு
ஒரு வித்தியாசமான வாஷ் பேசின்
பகவதி சேவை
மாலையில் ஒரு தோற்றம்
வீட்டுக்குள் போகும் ஒரு காணொளி
பால் காய்ச்சல் ஒரு காணொளி
பிள்ளைகள் விளையாடவும் நீச்சல் அடிக்கவும்( ஒரு காணொளி ) அன்று மாலை என் நண்பனும் மனைவியின் மாமனும் ஆகியவரின் பிள்ளையின் வீட்டுக்கு போரூர் சென்றோம் பதினேழு மாடிக்கட்டிடத்தில் பதினைந்தாவது தளத்தில் இருந்தது ப்ரெஸ்டிஜ் நிறுவனத்தார் கட்டியது எல்லாமே பரந்துவிரிந்து இருக்கிறது மாலை நேரமாகிவிட்டதால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை எல்லாமே பாஷ்தான்
அண்மையில் ஒரு திருமணத்துக்கு சென்னை
சென்றிருந்தோம் திருமணங்களில்தான் பலநாள்
காணாத உறவுகளைக் காண முடிகிறதுஇப்போதெல்லாம் திரு மண வைபவத்தின் போது அதைக் கொண்டு
நடத்தும் புரோகிதர்கள் லெக்சர் கொடுப்பதைக் காண்கிறேன் இந்தத் திருமணத்திலும் புரோகிதர் திருமணம் பற்றி ஒரு பிரசங்கமே நடத்தி
விட்டார் அதை சிறிது காணொளியில்
காணலாம் என்ன வெல்லாமோ சடங்குகள்
பலவற்றிலும் காம்ப்ரமைஸ் செய்கிறோம் மணப்
பெண்ணின் தலையில் நுகத்தடி வைத்து சில மந்திரங்கள் சொல்லப் படுகின்றன சென்னை போன்ற
பெரு நகரில் நுகத்தடிக்குப் பதில் கட்டிலின் கால் ஒன்று உபயோகிக்கப்பட்டது காசி யாத்திரை முடிந்து மணமக்கள்
வரும்போது மலர்களைப்பரப்பி அதன் மேல் வெல்கம் என்று மலர்களாலேயே அமைத்து அதன் மேல் மண மக்களை நடந்து வரச்ச்செய்தனர் இதை பலமாக எதிர்த்து
புரோகிதர் பிரசங்கம் செய்தார்
**********************
ஒவ்வொரு முறையும் சென்னை செல்லும் போது அங்கு ஒரு மழையாவது பெய்யும் ஆனால் இம்முறை ஒரு
சிறு தூறல் கூட விழவில்லை
***********************.
சென்னையில் சென்றிருந்த நாட்களில் மகனின் புது இல்லத்தைக் காண அவனுடன் சென்றது தவிர
எங்குமே போக வில்லை, முடியவில்லை வயதாவதன் தாக்கம் நன்கு தெரிந்தது
*************************************
புஸ்தகா டிஜிடல் மீடியா மூலம் எனதுமூன்று நூல்களை
மின்னூலாக்கி இருக்கிறேன் சிறு
கதைகளின் தொகுப்பாக ஒரு நூலும் நினைவில் நீ என்னும் பெயரில் ஒரு நாவலும் பல நேரங்களில் எழுதி இருந்த கவிதைகளைத்
தொகுத்து ஒரு நூலாகவும் வெளி இட்டிருக்கிறார்கள் நான் எழுதி இருப்பதை எல்லாம்
சேமிக்க மின்னூல்கள் உதவும் என்றே தோன்றுகிறது புஸ்தகா பத்மநாபனை சந்தித்து
இன்னும் சில படைப்புகளை நூலாக்க வேண்டும் என்றுநினைக்கிறேன் இதற்கு முன் மின்னூலாக செய்த முயற்சிகள் வீணானதற்குப்
பிறகு இப்போது அவை வெளியானதில்
மகிழ்ச்சியே
*********************************
சில சிறு கதை போட்டிகள் பற்றிய அறிவிப்புகள் வந்திருக்கின்றன. போட்டிக்காக எழுத மனம்
வரவில்லை. மேலும்எழுதியவை வருமா வராதா
என்று காத்திருப்பதில் எனக்கு உடன்பாடுஇல்லை நான் எழுதுவதை எழுதியவாறே
வெளியிட்டுக் கொள்ள எனது வலைப் பூ இருக்கும் போது பிற இடங்களுக்கு எழுதி அனுப்பி
அவை வெளிவராமலே போக வாய்ப்புகள் அதிகம்அதை மாற்ற முடியுமா தெரிய வில்லை. என்னதான் எழுதினாலும்சில எண்ணங்களையும் கருத்துகளையும்எழுத்தில் வராமல் தவிர்க்க முடிவதில்லை
**********************************
சென்னையில் பதிவர் சந்திப்பின் போது நான் ஏதாவதுதலைப்பில் டிஸ்கஸ் செய்ய
விரும்புகிறேனா என்று ஜீவி அவர்கள்
கேட்டார்கள் சந்திப்பதே சொற்ப நேரம் அதில் நான் எதையாவது கூற அதைப் பிறரால் ஏற்க முடியாததர்ம சங்கட நிலை
உருவாவதை தவிர்க்கவே விரும்பினேன் யார்
யார் என்ன பேசுகிறார்கள் என்றுகவனித்துக் கணிப்பதே போதும் என்று நினைக்கிறேன் அவரவர்கள் பற்றிய செய்திகள் ஒன்றோ இரண்டோ
வந்தது மேலும் மேலும் சந்திக்க முடிந்தால் இன்னும் வெளிப்படையாக பகிர முடியலாம்
புஸ்தகா
மூலமும் எழுத்துகளிலும் சந்தித்துக்
கொள்ளலாம் என்று ஜீவி ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார் ஆனால் பலரும்
எழுத்தில் தங்களை வெளிப்படுத்திக்
கொள்வதில்லை என்றே தோன்றுகிறது
********************************
எதை எழுதத் துவங்கினாலும் அதுபற்றி நான் ஏற்கனவே எழுதி இருப்பதே முன் வருகிறது ஆகவே தான் சிற்சில மாற்றங்களுடன் எழுதும் போது
அவை முன்பே படித்ததுபோல் சிலருக்குத் தோன்றுகிறது ஆகவே இனி நான் எழுதி
இருந்தவற்றையே மீள்பதிவுகள் ஆக்கலாம்
என்று தோன்றுகிறது ஒரு சிலர்
படித்திருக்கலாம் ஆனால் இப்போது என் வாசகர் வட்டம்தான் விரிந்து விட்டதே
********************************
இன்னும்
ஒரு சென்னை விசிட் இருக்கிறது மேமாதம் பத்தாம் தேதி என்
மகன்பெரும்பாக்கத்தில் வாங்கி இருக்கும்
மூன்றுபடுக்கையறை கொண்ட வீட்டுக்கு புதுமனை புகு விழா வைத்திருக்கிறான்
டிக்கட்டுகள் கிடைப்பதே சிரமமாய்
இருக்கிறது போதாத குறைக்கு கத்திரிவெயிலின்
உக்கிரமான பகுதி அந்த நாட்கள்
இப்போதெல்லாம் விசித்திரமான எண்ணங்கள் மனதை
அரிக்கிறது எல்லோருடனும் பகிரவும் முடியவில்லை. அவற்றைக் கதையாக்கி என்
ஆதங்கங்களை தீர்த்துக் கொள்ளலாம்
என்றுநினைக்கிறேன்
********************************
இந்த முறை எங்கள் வீட்டு மாமரத்தில் காய்கள் மிகவும் குறைவு
காய்த்தவையையும் பக்கத்து வீடு
புதிதாய் கட்டுவதில் இருக்கும் வேலையாட்கள் மாடியேறி வந்து பறித்துக் கொண்டு
போகிறார்கள்
***************************************
எங்கள் வீட்டு வெற்றிலைக் கொடி பற்றி எழுதி
இருக்கிறேன் அது மாமரத்தைப் பற்றி கொண்டு மேலேறி இருக்கிறது வெற்றிலை கேட்டு வருபவர்கள் அதிகரித்து
விட்டார்கள் வெற்றிலையை சும்மா கொடுக்கக்
கூடாது என்கிறாள் மனைவி. ஒப்புக்காவது ஏதாவது காசு வாங்கிக் கொள்கிறாள் ஆனால்
பூஜைக்கு என்று கேட்பவர்களுக்கு
தாராளமாய்க் கொடுக்கிறாள் இங்கெல்லாம் வெற்றிலை ஒரு இலை ஒரு ரூபாயாம்
********************************************************************* வருடத்துக்கு ஒரு செடியில் ஒரு பூமட்டுமே மலரும் எங்கள் வீட்டு ஃபுட்பால் லில்லியைப் பற்றி முன்பே பகிர்ந்திருக்கிறே,ன் இந்த ஆண்டும் மலர்ந்து பட்டுப்போகும் செடிகளில் ஒன்றி லிருந்து ஒரு பூ மலருகிறது ஆச்சரியம்தான் மலர்ந்த பூ சுமார் ஒரு வார காலம் இருக்கும் பிறகு செடிய்ம் பட்டுப்போய்விடும் ஆனால் மே மாதம் வந்தால் செடியும்வரும் பூவும் மலரும் அப்போது கிடைக்கும் மகிழ்ச்சி சொல்லித்தெரியாதது
********************************
மெழுகுவர்த்தியின் ஒளியில் கடவுள் பிரத்தியட்சமாவதைக் கண்டு மகிழுங்கள் இனி ஒரு வாரகாலம் வலைப்பக்கம் வர முடியாதுஎன்று நினைக்கிறேன் மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுகிறேன்
எண்ணத் தறியில் எட்டு மணி நேரங்கள் -------------------------------------------------------------------------
இந்தப் பதிவை நான் வலையுலகில் இருந்த
ஆரம்பநாட்களில் எழுதியதுஒரு தொழிலாளியின்எண்ண ஓட்டங்களைப் பகிர்வது போல் எழுதி இருந்தேன்
அதுவே என் எண்ணங்கள் சிலவற்றையும் கடத்த
உதவியாய் இருந்தது ஆரம்ப காலத்தில் நான் பணியில் இருந்தபோது பலரது எண்ண ஓட்டங்கள்
இருந்த நிலையை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்இந்த முன்னுரைஇதைப் படித்தவர்கள்ஒருவேளை ஏற்கனவே படித்தது என்று
கூறினாலும்எழுதி இருக்கும் செய்திகள்
இப்போதும்ரெலெவெண்டாக இருப்பதுபோல்
இருக்கிறது ஆகவே இதை மீள்
பதிவாக்குகிறேன்
என்னுடையஆங்கிலப்பதிவான RANDOM THOUGHTS
IN EIGHT HOURS -ஐ தமிழில்மொழிமாற்றம்செய்துஎழுதியது.ஆங்கிலப்பதிவினைப் படிக்க இங்கே சொடுக்கவும் இன்னும் இங்கே