Thursday, September 13, 2018

வினாயக சதுர்த்தி                               விநாயக சதுர்த்தி
                                ------------------------------

விநாயக சதுர்த்தி
கடந்த விநாயக சதுர்த்திகளின் போது அகவலுக்கு பொருள் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது இந்த முறை சற்று வித்தியாசமாக  தொழில் நுட்பமே தெரியாத நான்   என்பழைய டேப்புளில் இருந்து  என் மனைவி பாடியிருப்பதை என்னவெல்லாமோ செய்துபதிவாக்கி இருப்பதை இப்போது  இடுகிறேன்  திருச்சியில் இருந்த போது கர்நாடிக் சங்கீதம்கற்க விருப்பப்பட்டு பாடியதை டேப்புகளில் பதிவு செய்திருந்தேன் ஆனால் டேப் ரெகார்டர் பழுதாகிவிட அதை ரிப்பேர் செய்யமுடியவில்லை எத்தனையோ ஆண்டுகள் என் ஹாபி யாக இருந்தது வீட்டுக்கு வருகிறவர் குரலைஎல்லாம்  பதிவாக்கி விடுவேன்  எத்தனையோ ஆண்டுகள் கழித்து இருப்பவர் இல்லாதவர் குரலையெல்லாம் கேட்டு மகிழ்வதே ஒரு ஆனந்தம் டேப் ரெகார்டர் பழுதானபோது மிகவும்வருத்தமாய் இருந்தது குறிப்பிட்ட சிலகுரல்களைஎன்னவெல்லாமோ செய்து  கணினியில் ஏற்றி இருக்கிறேன்
கூடவே நான் ஓவியம் தீட்டத்துவங்கிய  புதிதில் வரைந்த பிள்ளையார் ஓவியமும் இதில் என் பேத்தி இதைப்பார்த்து கொடுத்த கமெண்ட் “பிள்ளையார் கோபமாக முறைப்பதுபொல் இருக்கிறதே” ஆரம்ப காலத்தில்  நிறையவே பிள்ளையார் ஓவியங்கள்  வரைந்ததுண்டு அவற்றில்சாண்ட் பெயிண்டிங்கும்  அடக்கம்  வீட்டில் நிறையவே பிள்ளையார் விக்கிரகங்கள் உண்டு  

பிள்ளையார் ஓவியம்

என் மகன் ஜெய்பூருக்குப் போயிருந்தான் பொதுவாக ஜெய்பூர் பற்றிய புகைப்படங்களில் இருந்து வேறுபட்ட படங்கள் இங்கே 
மிக நீண்ட மீசை உடையவர்  நீளம் 17 அடி ஒரு ரெகார்ட்
ராஜஸ்தானி மரியாதை 
ராஜஸ்தானி மாலை மரியாதை
மூடிய உணவு தட்டு 
ட்ரடிஷனல்  ராஜஸ்தானி தாலி


அவன் தங்கி இருந்த இடத்தில் உணவகம்
                             ராஜஸ்தானி இசையா 
       
படித்ததில் ரசித்தது

 ஆசிரிய தினத்தன்று ஒரு மாணவன் அவனது ஆசிரியரைக்கண்டு  “ நான் இந்நிலையில் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்றானாம்  அதற்கு அவர்
“என்னை குறைகூறாதே நானும் மிக முயன்று தோற்றுவிட்டேன் ‘ என்றாராம்
இன்னொரு மாணவனின்  சந்தேகம் “ஒரு ஆசிரியர் பல பாடங்களை  நடத்த முடியாதபோது ஒரு மாணவன்  எப்படி பல பாடங்களைக்கற்க முடியும்?”
இப்போது ஒரு சந்தேகம்
  இன்னொரு சந்தேகமா  பதிவுலகம் தாங்காது

ஔவையார்  எழுதியதாகச் சொல்லப் படும்  நல்வழியில்  ஒருபாடல்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
 சந்தேகமென்னவென்றால்  நாம் பொதுவாக அறியப்படும் ஔவையார் அகவல் எழுதியவரும்  நல்வழி எழுதியவரும் ஒருவரா  இவர்கள்காலம் எது இப்பாடலில் சங்கத்தமிழ் மூன்றும்தா  என்று கேட்பதால் நல்வழி எழுதியவர்  சங்ககாலத்தவராக இருக்க முடியாது என்று தோன்றுகிறதுபடிப்பவர்கள் பலருக்கும்  ஔவையார்களின் வித்தியாசம் தெரியுமா  எனக்குத் தெரிய வில்லை  ஔவையாரின் பெயரென்ன ஔவை என்றால் மூதாட்டி என அர்த்தம் உண்டு  தெலுங்கில் ஔவா  என்றால்  பாட்டி என்றுபொருள் உண்டு 
நல்வழிப் பாடலில் இன்னொரு பாடல்
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி
 இதன்படி நல்வழி எழுதிய  ஔவையார் காலத்தில் சாதி வேறுபாடுகளிருந்ததாகத்  தெரிகிறது 

  

41 comments:

 1. எங்கள் வீட்டிலும் என் மகன்கள் மழலை உட்பட, என் தந்தை, தாய், மாமனார் குரல்கள் கெஸெட்டில் வைத்திருக்கிறேன். முன்பு அதை கணினியில் சேமிக்க முடிந்தது. இப்போது அதை ஓட்ட டேப்ரெக்கார்டர் கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. அவற்றைப் பார்ப்பதும் கேட்பதும் அந்த உலகத்துக்கே கொண்டு விடும்

   Delete
 2. ஆமாம்.. முதல் படத்தில் பிள்ளையார் குறைப்பது போலதான் இருக்கிறது! மற்ற படங்களை ரசித்தேன்.

  ஜோக்ஸை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஸாரி... முறைப்பது என்று அடித்தால் முதல் சாய்ஸ் குறைப்பது என்று வருகிறது. முறைப்பது என்று படிக்கவும்!

   :)))

   Delete
  2. ஹா ஹா ஹா இது என்ன தமிழ்ச் சொல் புதுசா இருக்கே என சாக்ட் ஆகிட்டேன்ன்ன்:))

   Delete
  3. ஸ்ரீராம் சில ஏன் பல நேரங்களில் எனக்கும் எழுதும்போது பிழைகள் வந்து விடுவது உண்டு
   பிள்ளையார்குறைப்பது போல்இதுவும் ரசிக்க வைத்தது

   Delete
  4. குறை ஒன்றுமில்லை ஸ்ரீ

   Delete
  5. ஞானி ஒரு புதிய சொல் நான் தெரிந்து கொண்டேன் சாக்ட் ....!

   Delete
 3. இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி சார்

   Delete
 4. அவ்வைக் காலத்திற்கும் முந்தைய திருவள்ளுவர், "அந்தணர் என்போர் அறவோர்", என்றும் "மழித்தலும் நீட்டலும் வேண்டா" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

  ராஜஸ்தானி தாலி அழகுதான். எனக்குப் பிடிப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. சந்தேகமே வேறு வேறு ஔவையார்களீன் காலம்பற்றித்தான் அகவல் எழுதிய ஔவையாரும் நல்வழி எழுதிய ஔவையாரும் ஒருவரல்ல சங்ககால ஔவையார் திருவல்லுவர் காலத்தவர் எந்தகவல்விக்கி பீடியாவில் இருந்து அந்தண்ர் அறவோர் மற்றும்நீட்டலும் மழித்தலும் வேண்டா என்பவை வள்ளுவர் காலத்திலேயே சாடிகளிருந்தன என்பதைக் காட்டுகிறதா ஆனால் ஒரு பதிவரின் இடுகையில் இந்தஜாதி சமாச்சாரங்கள் அண்மைய காலத்தவை என்று படித்த நினைவு

   Delete
 5. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

  ReplyDelete
 6. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். வரைந்த பிள்ளையார் ஓகே, முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  ராஜஸ்தானி உணவு பார்க்க அழகு.

  ReplyDelete
  Replies
  1. பிள்ளையார் ஓவியம் முதல் முயற்சி

   Delete
 7. மீசைக்காரர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாரு ?

  ராஜஸ்தான் தாலி பலமுறை உண்டதுண்டு ஐயா.

  ReplyDelete
  Replies
  1. ராஜஸ்தான் படங்கள் எல்லாம் எனிரண்டாம்மகன் உபயம் மீசை வளர்ப்பதுபெரிய விஷயமே

   Delete
 8. அறுபது வயதிற்குள் குடும்ப கடமைகளுடன் சுற்ற வேண்டிய இடங்களை (குறைந்த பட்சம் இந்தியா முழுக்க) சுற்றி வந்து விட்டால் அடுத்து வரும் நாட்கள் அனுபவங்களை உங்களைப் போல பதிவு செய்ய சுகமாக இருக்கும். என் எண்ணமும் அதுவே.

  ReplyDelete
  Replies
  1. நான் சுற்ற்யதுஎல்லாம் பணிக்காலத்திலும் ஓய்வு பெற்ற பின்னும் அவற்றைநினைவு படுத்தி எழுடுவ்து இப்போதுதான் இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குச் சென்றது இல்லை வட கிழக்குப்பகுதிகளும்காணாத இடம்தான்

   Delete
 9. ஔவையார் மொத்தம் மூன்று பேர்கள் என்பார்கள். விநாயகர் அகவல் பாடிய அவ்வையார் வேறு, கம்பனின் சமகால அவ்வையார் வேறு, இவரை கம்பர் ஒரு முறை அவமானப்படுத்த, அவரை நோக்கி, "எட்டேகால் லட்சணமே, எமன் ஏறும் வாகனமே .." என்று தொடங்கும் பாடலை எழுதியவர். (தமிழில் எட்டாம் எண்ணை குறிக்க 'அ' என்னும் எழுத்தை பயன் படுத்துவார்கள், 'வ' என்னும் எழுத்து கால் என்னும் எண்ணிக்கையை குறிக்க பயன்படும்.எனவே எட்டேகால் லட்சணமே என்றால் அவ லட்சணமே என்று பொருள்). பாரியின் தோழியாக விளங்கிய ஔவையார் வேறு. என்பார்கள். இவர் அப்போதே மரபு மீறிய புதுமைப் பெண். இவருக்கு கள் அருந்தும் பழக்கம் இருந்தது என்றும் கூறுவார்கள்.

  சுகி சிவம் அவர்கள் ஒரு முறை 'காண மயிலாட கண்டிருந்த வான்கோழி.. பாடலை எழுதியது சங்க கால ஔவையார் கிடையாது, ஏனென்றால் சங்க காலத்தில் இந்தியாவில் வான்கோழிகளே கிடையாது என்று கூறி, அந்த பாடலில் அவ்வை செய்திருக்கும் தவறை சுட்டிக் காட்டியிருந்தார்.

  ReplyDelete
  Replies
  1. ஆனால் நம்மில் பெரும்பாலோருக்கு ஒரே ஔவையார்தான்

   Delete
 10. ஔவையார் மூன்று என்று சொல்வார்கள், அதியமான் காலத்து ஒளவையார், ஆத்திசூடி பாடிய ஒளவையார், விநாயகர் அகவல் எழுதிய ஒளவையார் என்று சொல்வார்கள்.

  ReplyDelete
 11. விக்கி பீடியா ஆறு காலத்து ஔவையார்கள் பற்றி கூறுகிறது இதன்படி அகவலெழுதிய ஔவையார் வேறு நல் வழி எழுதிய ஔவையார் வேறு என்று தெரிகிறது

  ReplyDelete
 12. உங்கள் பிள்ளையார் ஓவியம் அருமை.
  மகன் அனுப்பிய படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. என்பிள்ளையார் ஓவியம் என் முதல் முயற்சி

   Delete
 13. நானும் இன்று டேப் ரெகார்டரில் பதிவு செய்து வைத்த பழைய பாடல்களை கேட்டேன் அதை அலைபேசியில் ஏற்றி வலை ஏற்ற முயற்சி செய்தேன் ஏறமாட்டேன் என்று அடம் பிடித்து விட்டது.
  யார் பாடியது பாடல்? நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. என்மனைவியின் குரல்தான் அதுஅவளை ஒரு சங்கீதக் காரியாக்க நினைத்தேன் விஜயவாடாவுக்கு மாற்றல் வந்து அந்த ஆசை கெட்டு விட்டது

   Delete
 14. உங்கள் மனைவிதான் பாடுகிறார்களா?
  அவர்கள் தெரிந்தார்கள். காணொளியில்.

  ReplyDelete
  Replies
  1. டேப் ரெகார்டரில் ஓடவிட்டு அதையே காணொளி யாக்கினேன்

   Delete
 15. ஔவையார் எத்தனை பேராக இருந்தால் என்ன?..

  நமக்கு நல்லவழி காட்டியிருக்கின்றார்கள்...
  ஏற்றுக் கொள்வதெனில் பூரணமாக ஏற்றுக் கொள்ளல் இனிது...

  ஔவையார் கள் குடித்தாரா... கறி, மீன் தின்றாரா!?..
  அப்படியும் இருந்து விட்டுப் போகட்டுமே...

  கள்ளையும் கறியையும் அவைகளாக எண்ணி உண்ணவில்லை எனில் - கிடைக்கும் நன்மை அளப்பரியது...

  கான மயிலாட - பாடல் இடைச்செருகலாக கூட இருக்கலாம்...

  பிறர் சொல்வதையெல்லாம்
  அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...

  ராஜஸ்தான் படங்கள் கவர்கின்றன..

  வாழ்க நலம்...

  ReplyDelete
  Replies
  1. //ஔவையார் கள் குடித்தாரா... கறி, மீன் தின்றாரா!?..
   அப்படியும் இருந்து விட்டுப் போகட்டுமே...//
   போகட்டுமே, எனக்கு அதைப் பற்றி ஒன்றும் இல்லை. நமக்கு வேண்டியது அவருடைய பாடல்கள்தான். மூன்று அவ்வையார்களுக்கும் வித்தியாசம் காட்ட இதைச் சொன்னேன்.

   //கான மயிலாட - பாடல் இடைச்செருகலாக கூட இருக்கலாம்...//
   இருக்கலாம். எது ஒரிஜனல், எது இடைச்செருகல் என்பதை அறியவேண்டுமென்றால் நாம் ஔவையார் பாடல்களை தீவிரமாக படித்திருக்க வேண்டும்.

   Delete
  2. துரை செல்வராஜு அம்மாதிரி indifferent ஆக இருக்க முடியவில்லையே எதையும் தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கிறதே

   Delete
 16. பிள்ளையார் ஓவியம்பற்றி பேத்தி சொன்னதை எனக்கும் சொன்னீர்கள் நான் அங்கு வந்திருந்தபோது!

  //..இதன்படி நல்வழி எழுதிய ஔவையார் காலத்தில் சாதி வேறுபாடுகளிருந்ததாகத் தெரிகிறது //

  ஔவையார் காலத்தில் இருந்தது.
  அவர் பாட்டியின் காலத்திலும் இருந்தது.
  இப்போதும் இருக்கிறது.
  இனியும் இருக்கும் !

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு நல்ல நினைவு சாதி வேறுபாடுகள் நம் ரத்தத்தில் ஊறியது அகற்று வது சிரமம்தான்

   Delete
 17. அருமை
  ராஜஸ்தான் படங்கள் அழகு

  ReplyDelete
  Replies
  1. ராஜஸ்தான் என்றதும் நினைவுக்கு வருவது கோட்டை கொத்தளங்கள்தான் ஒரு மாறுதலுக்கு கிடைத்த படங்களைப் பதிவிட்டேன்

   Delete
 18. ராஜஸ்தானி உணவு வகைகள் நன்றாகவே இருக்கும். நிறையச் சாப்பிட்டாச்சு. முக்கியமாய் இனிப்பு வகைகள்! ராஜஸ்தானியரை அடிச்சுக்க முடியாது! இந்த மீசையோடு உங்க பையர் இருக்கும் படம், (2வது பையர் இல்லையோ) ஏற்கெனவே பார்த்த நினைவு. உங்க பிள்ளையார் கோபத்துடன் தான் பார்க்கிறார். கொழுக்கட்டை கொடுக்க ஏன் இத்தனை யோசனை என்று கேட்கிறாரோ என்னமோ!

  ReplyDelete
  Replies
  1. என் இரண்டாம் மகன்தான் எங்களை உங்கள் வீட்டுக்குக் கூட்டி வந்தது எனக்கெல்லாமொரு முறை பார்த்தால் நினைவிலிருப்பதில்லை

   Delete
 19. ராஜஸ்தான் படங்கள் சிறப்பு. அவர்களது உணவு நன்றாகவே இருக்கும்.

  கேசட்டுகளில் பதிவு செய்திருந்ததை கேட்பது சுகம். ஆனால் இப்போது யாரிடமும் இந்த கேசட் ப்ளேயர்கள் இல்லை.... என்னிடம் இருந்த பல பாடல் கேசட்டுகளை சில நாட்கள் முன்னர் தான் கழித்துக் கட்டினேன்.

  ReplyDelete
  Replies
  1. இந்த உணவின் விலை ரூ 1720+ வரிகளாம் இந்த மரியாதை அந்த ரெஸ்டாரெண்ட் செல்வோருக்கு உண்டாம் வருகைகு நன்றி சார்

   Delete