கனவிலிருந்து கதை
கனவுகள்
காண்கிறோம் விழித்துக் கொண்டபின் அவை மச மச என்று நினைவுக்கு வரும் அம்மாதிரியான
கனவிலிருந்து ஒரு கதைஎழுத முயற்சித்தேன்
அதுவே என் நகைச் சுவை உணர்வுக்கு ஒரு தீனி போல் ஆகிவிட்டது எனக்கு நகைசுவை
உணர்வு இல்லை யென்றுயார் சொன்னது?
ரயில்வே நிலையத்தில் டிக்கெட் முன் பதிவு
செய்யப் போன அனுபவம் இருக்கிறதா.?அங்கு மூன்றோ நான்கோ கவுண்டர்கள் இருக்கும்.
நிறைய நாற்காலிகள் போட்டிருப்பார்கள். வரிசைப்படி வந்தவர்கள் நாற்காலிகளில்
முறைப்படி அமர்ந்து கொள்ளவேண்டும் கவுண்டருக்குச் சென்று முன் பதிவு செய்து கொள்பவர்
முடித்ததும்காலியாகும் கவுண்டருக்குச் சென்று முன் பதிவு செய்யலாம். இந்த
முறைப்படி ஒரு ஆர்டராக தள்ளு முள்ளு இல்லாமல் முன் பதிவு செய்யலாம். நான் என்
மனைவி மற்றும் என் மகனுடன் ஒரு நாள் முன் பதிவு செய்யும் இடத்துக்குப் போய்
வரிசைப்படி நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம். வரிசையில் நாங்கள்தான் கடைசி. எங்கள்
முறை வந்தபோது கவுண்டரில் இருந்தவர் சற்றே ரிலாக்ஸாக இருந்தார். நானும் என்
மனைவியும் ( எங்கும் எப்போதும் என் கூட வருபவள்;) இம்முறை கூடவே என் மகனும்
.கவுண்டரில் இருப்பவர் இன்னும் யாரும் இல்லை என்று நிச்சயப் படுத்திக் கொண்டு
எங்களை சிரித்த முகத்துடன் அன்பாகப் பார்த்தார். பிறகு கேட்டாரே ஒரு கேள்வி.”உங்களுக்குத் திருமணம்
ஆகிவிட்டதா?” என்னைப் பார்த்தும் இந்தக்
கேள்வி. நான் “ஆம் ஆகிவிட்டது. இதோ இவர்தான் என் மனைவி” என்றேன்.. அவர் உடனே வாய்சிட்டுச் சிரிக்கத்
தொடங்கினார் நீங்களே சொல்லுங்கள் இதில் சிரிக்க என்ன இருக்கிறது. சற்று நேரம்
சிரித்தவர் என் மனைவியைப் பார்த்து உங்கள் திருமணம் லவ் மேரேஜா என்று கேட்டார்.
நாங்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு” ஆம் லவ் மேரேஜ்தான்” என்றோம். ஏதோ உலக அதிசயம் பார்ப்பது போல் எங்களைப் பார்த்து
விட்டு முன்னைவிட அதிகமாகக் குலுங்கிக் குலுங்கி நகைக்கத் தொடங்கினார். எனக்கோ
கோபம் பொத்துக்கொண்டு வந்தது. முன் பதிவு செய்யும் படிவங்களைப் பார்த்தோமா
டிக்கெட் கொடுத்தோமா என்றில்லாமல் வேண்டாத கேள்விகள் கேட்டு அதற்குப் பதில்
சொன்னால் விழுந்து விழுந்து சிரிக்கிறார். நான் கோபமாக எங்களுக்குத் திருமணமாகி
இதோ நிற்கிறானே இவனையும் பெற்றாயிற்று “என்றேன் அவர் ஓரளவுக்குச் சிரிப்பை
குறைத்துக் கொண்டு “இவருக்கும் திருமணம் ஆகி விட்டதா?” என்று கேட்டார். “ ஐயா, இவருக்கும் திருமணமாகி
ஒரு பெண் பிறந்து காலேஜுக்கும் போகிறாள்” என்றேன் . இதைக்கேட்டவுடன் அந்த குமாஸ்தா ஏதோ
கேட்டே இருக்காத நகைச்சுவையை கேட்டது போல் மீண்டும் ஹோ ஹோ ஹோ என்று சிரிக்க
ஆரம்பித்து விட்டார். இதற்குள் அந்தப் பதிவறையில் இருந்த வேறு சிலர் வந்து அவரை
சமாதானப் படுத்தி அப்புறப் படுத்தினர். பிறகு தெரிந்து கொண்டோம். அவருக்குத்
திருமண முடற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து ஒரு டிப்ரெஷன் மூடுக்கு அவ்வப்போது
போய் விடுவாராம்
( எனக்கு நகைச் சுவை எழுத
வராது என்னும் குறை போக்க என் கனவு சம்பவம் இதோ எழுத்தில். இந்தக் கனவை நினைவில்
கொண்டு எழுதுவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.)
கனவு போல் தெரியவில்லையே ஐயா
பதிலளிநீக்குஉண்மைச் சம்பவம் போல் அல்லவா தெரிகிறது
ஒரு வேளை என்னை முன்னிலைப்படுத்தி எழுதியதால் இருக்கும் வருகைக்கு நன்றி சார்
நீக்குஐயா இது அனுபவமா ?
பதிலளிநீக்குரசிக்க வைத்தது.
ஆம் கனவில்கண்ட அனுபவம் வருகைக்கு நன்றி ஜி
நீக்குஇது சொந்த அனுபவமா? அந்த ஊழியருக்கு ரொம்பத்தான் வேதனை போலிருக்கிறது.
பதிலளிநீக்குஇப்போ இருக்கும் காலத்தில் பெண் கிடைப்பதே கஷ்டம் என்று பலர் சொல்கின்றனர்.
ஒரு கனவை கதையாக்கி இருக்கிறேனென்று எழுதி இருக்கிறேனே
நீக்குகடைசியில் திருப்பம் எதிர்பார்க்கவில்லை
பதிலளிநீக்குஇது கனவில் கண்டபடி மற்றபடி என் கற்பனை ஏதுமில்லைஇதுவும் ரசிக்கப்பட்டுஇருக்கிறதே
நீக்குகனவென்றாலும் கல்யாண கனவு கண்டவரின் நிலை நிறைவேறட்டும்...
பதிலளிநீக்குகனவில் நிறைவேறலாம்
நீக்குஆச்சரியமான கனவு. ஆனால் எனக்குக் கனவெல்லாம் நினைவில் இருக்காது. எப்போதேனும் சில சமயங்களில் காலை 3 மணிக்கப்புறமா அரைத்தூக்கமும் முழிப்புமா இருக்கும்போது கனவா, நனவா என்றே புரியாத ஓர் நிலையை அனுபவிப்பேன். ஆனால் நான் தூக்கத்தில் அடிக்கடி கத்துவதால்( என் கணவர், மற்றவங்க சொல்லித் தான் தெரியும்) ஏதோ கனவு கண்டு தான் கத்துகிறாய் என்பார்கள்! ஆனால் கத்தினாலும் நான் எழுந்திருந்தது எல்லாம் இல்லை. சில சமயங்களில் கத்தல் ரொம்ப ஜாஸ்தியா இருந்தா எழுப்பி விடுவாங்க! ரொம்பக் கத்தினேன்னு சொல்வாங்க! என்ன, ஏன், எதுக்கு என்றெல்லாம் கேள்விகள் பிறக்கும்! ம்ஹூம்! ஏதும் நினைவில் இருக்காது!
பதிலளிநீக்குஇந்தக் கனவை நினைவில் கொண்டு எழுதுவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.)/ எனக்கும் கனவுகள் பெரும்பாலும் நினைவில் நிற்பதில்லை வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்குஅவரை போன்ற மனிதரை எங்கேயாவது பார்த்து இருப்பீர்களோ! அதுதான் கனவாய் வந்து விட்டது போலும்.
பதிலளிநீக்குகனவுகளுக்கு அர்த்தமோ காரணமோ உண்டா அது ஒரு 64 மில்லியன் டாலர் கேள்வி அல்லவா வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்குபாவம் அந்த ஊழியர். (கனவுதான் என்றாலும் பாவம்தானே?)
பதிலளிநீக்குகனவில் வரும்மனிதர்களுக்கும் பரிவு காட்டும்நீங்கள் ஒரு அலாதி மனிதர்
நீக்குகனவு - நினைவில் கொண்டு வந்து எழுதியதற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகனவில் வந்த அந்த மனிதர் - பாவம்.
நன்றி சார்
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குவருகக்கு நன்றி சார்
நீக்குதுளசி: பாவம் அவர் அவரது கனவு நிறைவேறவில்லை! உங்கள் கனவு கதையாய். நன்றாக இருக்கிறது சார்.
பதிலளிநீக்குகீதா: சாரி கனவு என்றாலும் பாவம் தான் அவர். ஒரு வேளை இப்படிக் கல்யாணம் ஆகாதவர் எவரேனும் உங்கள் மனதில் பதிந்திருக்கலாம் அது கனவாய்...
முடிவு எதிர்பார்க்கவில்லை அழகான கதை உங்கள் கனவில்!
கனவே கதையாகி இருக்கிறதுஎதிர்பார்த்து வருவதா கனவு
நீக்கு