மொழியின் அழுகை
---------------------------------
இது ஒரு மீள் பதிவு
கைபேசிகள்( செல் ஃபோன்கள் )புழக்கத்தில் இருப்பதும் ,
அவற்றின் உபயோகங்களும் பாதிப்புகளும் ஆராய்ந்து
அவை சாபமா வரமா என்று கேள்வி கேட்கப்பட்டு ஒரு
பதிவில் எழுதப்பட்டு இருந்தது.கணினியின் சில சேவை
களை கற்றுக்கொண்டு உபயோகிக்க முயலும்போது இந்த
கேள்வி நினைவுக்கு வந்தது. கைபேசியில் குறுஞ் செய்தி
அனுப்ப இக்கால இளைஞர்கள் உபயோகிக்கும் ஆங்கிலம்
என் போன்றோருக்கு படித்து அறிய முடியாததாய் உள்ளது.
குறுஞ் செய்தி ஏதோ அவசரத்துக்கு அனுப்பப்படுகிறது
என்பது சரியல்ல. கணினியில் சாட்டிங் போல கைபேசியில்
குறுஞ் செய்தி உபயோகப்படுத்தப் படுகிறது. நவ இந்தியப்
பிரதிநிதிகளின் கைகள் எப்போதும் குறு குறு வென்று
இருக்கும்போல் தோன்றுகிறது.

யாரோ எதையோ எழுதட்டும் ,நமக்கென்ன என்று இருந்து
விடலாம்.ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு ஒரு மொழிக்கே
உண்டாகிறது காணும்போது திகைப்பாய் இருக்கிறது.
ஆங்கில வழிக் கல்வியிலும், கான்வெண்டிலும் படிக்கும்
சிறுவர் சிறுமிகள் ,எந்த மொழியிலும் குறைந்த பட்ச
தேர்ச்சியாவது பெறுவதில்லை. தாய் மொழியும் ,பிராந்திய
மொழியும் இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும்
போது, முன்னிலையில் பயிற்றுவிக்கப்படும் ஆங்கிலத்தில்
தேர்ச்சி பெற்று இருப்பது எதிர்பார்க்கப்படுவது. ஆனால்
நாம் இப்போது பார்ப்பது ஆங்கிலமே அல்ல. இவர்களாக
ஆங்கில எழுத்துக்களை உபயோகித்து, இவர்கள் உச்சரிப்
பிற்கு ஏற்றார்போல் ஏதேதோ எழுதுகிறார்கள். குறுஞ்
செய்தியாம்..!எதையாவது சொல்லப்போனால் தலைமுறை
இடைவெளி என்கிறார்கள்,நான் என் முந்தைய பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்ததுபோல, உண்மை நிலையை
முதலில் அறிந்து கொண்டு பிறகு அதை நம் இஷ்டப்படி
திரிக்கலாம்.மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு
பிறகு அதை மெல்லக் கொல்லுங்கள்.

" al of a sden u strt 2 lyk sm 1 dat u wanna c dem evriday"
இது ஒரு சின்ன மாதிரிதான்.ஆங்கில மொழிக்கு அழ
முடிந்தால் கைபேசியிலும் கணினியிலும் குறுஞ் செய்தி
களாலும் மற்ற பிரயோகங்களாலும் அனுபவிக்கும்
சித்திர வதைகளினால் ரத்தக் கண்ணீரே சிந்தும்.
-
இது
இன்றைய நிலை கண்டு எழுந்த
மனநிலை
எனக்கு வந்த ஒரு வாட்ஸாப்பில் வந்தசெய்தி
ஆசிரியர்
கையெழுத்துப்போடக் கற்றுக் கொடுத்தார் டெக்னாலஜி கைநாட்டிடச்சொல்கிறது
அந்த ஷார்ட் மெசேஜ் படிக்கும்போது புரிகிறது. அப்புறம் என்ன? மேலும் முழுமையான வார்த்தைகள் தெரிந்தவரால்தான் இப்படிக்கு குறுக்கவும் முடியும்! எனவே தப்பில்லை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு:) :)
இந்த மீள்பதிவின் காரணமே எனக்கு வந்த ஒரு செய்திதான் உறவினர் ஒருவர் மருத்துவரிடம் சென்றிருக்கிறார் அவர் என்ன சொன்னர் என்று கேட்டிருந்தேன் அதற்குப் பதிலாக
நீக்குhe has asked me to put elbow band n hv calcium என்று பதில் வந்தது எனக்குப் புரியவில்லை அதற்கு நான் what is hv calcium என்று கேட்டேன் பதிலாக to take calcium tablet என்று வந்தது மொழியைசுருக்குவதால் வந்தவினை என் அறியாமை வெளிப்பட்டது தப்பு ரைட் சொல்லவில்லை மொழியின் அழுகையே தெரிந்தது
and have calcium. கத்துக்கத்தான் வேணும். வேறு வழி. என் பசங்ககிட்ட நான் இதனை முதலில் கேட்டுக்கொண்டேன். ஆரம்பத்துல அவங்க 'K' என்று பதில் சொல்லும்போது அது மரியாதை இல்லாத ரெஸ்பான்ஸ் என்று நினைத்தேன். தந்தி மொழின்னு வச்சுக்கோங்களேன். ஆனா அடுத்தவங்களுக்குப் புரியணும்.
நீக்குஉண்மைதான் ஐயா மேடம் என்பதே மேம் ஆகி விட்டது OK என்பது K ஆகி விட்டது.
பதிலளிநீக்குஅனுப்புபவர் கள் மொழியை நன்றாக ஆள்கிறார்கள்
நீக்குமம்மி சுருங்கி இப்ப மி ஆகிட்டுது. பிரதர் சுருங்கி ப்ரோ.. இப்படி எல்லாத்துலயும் சுருக்கம்தான். வார்த்தைகளைப்போலவே மனசும் சுருங்கிட்டுதுப்பா
நீக்குஉண்மையான மனநிலைம்மா
நீக்குஇந்த அவசர யுகத்துக்கு ஏற்றாற்போல் எழுதுகின்றனர். பலரும் புரிந்து கொள்கின்றனர். இதை விட மோசம், தமிங்கிலீஷ்!
பதிலளிநீக்குதமிழை ஆங்கில எழுத்துகளில் எழுதுவதைத்தானே குறிப்பிடுகிறீர்கள் பல பின்னூட்டங்களப்படிவந்து படிக்க நான் திணறி இருக்கிறேன்
நீக்குவேதனைதான் ஐயா
பதிலளிநீக்குவேதனை எனக்கல்ல மொழிக்குத்தான் சார்
நீக்குஇல்லை ஜிஎம்பி சார்... இவங்களுக்கெல்லாம் சரியான ஆங்கிலம் நிச்சயம் தெரியும். ஆனா குறுக்கினால் புரிந்துகொள்ளமுடியும் என்று இருக்கும்போது எதற்கு நெடிய எழுதணும் என்பது இவங்க கட்சி.
பதிலளிநீக்குஎனக்கும் எரிச்சலா ஆரம்பத்துல இருந்தது. என் பெண், 'K', 'lol', 'm' என்றெல்லாம் உபயோகப்படுத்துவாள். ஆனா இதுக்கு ஒரு முறை இருக்கு. சும்மா ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுவதுபோல் எழுதுவதில்லை. அப்புறம் நானும், 'u', 'ur' என்றெல்லாம் உபயோகப்படுத்தத் தொடங்கிவிட்டேன்.
அதனால் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். இது ஜெனெரேஷன் கேப். இதுதான் என் புரிதல்.
உங்களுக்குப் புரிந்திருக்கிறதுஸ்ரீ ராமுக்கு என்மறுமொழியில் ஒரு புரிதலின்மையைக் கூறி இருக்கிறேன்
நீக்குசிரமம் தான்.....
பதிலளிநீக்குசில நேரங்களில் வெகு சிரமம்
நீக்குபேரன், பேத்திகளிடம் சுருகெழுத்தை கற்றுக் கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குநிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது இக் கால குழந்தைகளிடம்.
கற்றுக் கொள்வது இருக்கட்டும்மொழி அழும்சத்தம்கேட்கவில்லையா
நீக்குசுருக்கெழுத்து
பதிலளிநீக்குபல நேரங்களில் புரிவதில்லையே பிறர் புரியாமல் இருப்பது நல்லதா மொழியின் சிதைவு என்றே படுகிறது
நீக்குஉண்மைதான், புரியாதபோது ஆங்கிலத்தைத் தப்பாகப் பாவிக்கிறார்களே எனக் கோபம் வரும்தான் ஆனா என்ன பண்ணுவது இதெல்லாம் நாகரீக வளர்ச்சி அண்ட் நேரத்தை மிச்சம் செய்கிறார்களாம்.. இங்கு ஆங்கிலேயர்கள் இப்படித்தான் மெசேஜ் அனுப்புகிறார்கள்.. போகப் போக பழகிவிடும்..
பதிலளிநீக்குஅதுவும் ஒரு வித short form தானே.. I will என்பதை I'll என எழுதுவோம் தானே. அப்படித்தான் இந்த சொற்களையும் பாடமாக்கி எடுக்க வேண்டி இருக்கு.
மொழி தெரியாதவர்களே சிதைக்கிறார்கள் என்றுதோன்றுகிறது இது ஒர் ஃபாஷன்போல் ஆகி விட்டது
நீக்குதுளசி: இது இப்போது சகஜமாகிவிட்டது சார். மொபைலில் என்றால் பரவாயில்லை. நான் ஆசிரியனாக இருப்பதால் (தற்போது கல்லூரியில் வேலை செய்கிறேன்) தேர்விலும் எழுதுவதை என்னவென்று சொல்ல? எனக்கும் முதலில் புரியவில்லை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் தேர்வில் எழுதுவதை இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் கண்டித்து வருகின்றன.
பதிலளிநீக்குகீதா: இப்போதைய தலைமுறையினரின் வழி சார். இதைப் பற்றி ஊடகத்திலும் கூட கட்டுரை வந்த நினைவு. நானும் துளசியின் கருத்தை வழி மொழிகிறேன். மெசேஜ் என்றால் பரவாயில்லை. ஆங்கிலத் தேர்விலும் என்றால் கஷ்டம்...
ஏன் கண்டிக்க வேண்டும் சரியாக இல்லாததால்தானே எனக்கு மொழி பற்றிய அறியாமையே காரணம் என்றுதோன்று கிறதுஎன் ஆதங்கமெல்லாம் மொழி சிதைக்கப் படுவதால் தான்
நீக்குயதார்த்தத்தை உங்கள் பாணியில் கூறிய விதம் அருமை ஐயா. தொடர்ந்து தட்டச்சு செய்வதால் கையெழுத்துப்பழக்கம் விடுபட்டுப் போய்விடுமோ என்று அவ்வப்போது எழுதி வருகிறேன். அதைப் பார்த்த ஒரு நண்பர் என்ன சின்ன பிள்ளை போல எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றார். அவரைப் போன்றவர்களுக்கு பதில் எதுவும் கூறாமல் தலையாட்டிக்கொண்டே தொடர்ந்து எழுதி வருகிறேன் ஐயா.
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் கையால் எழுதினால் அவை என் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை
பதிலளிநீக்குசில அலுவலகங்களில் - குறிப்பாக தனியார் அலுவலகங்களில் கூட இந்த மாதிரி எழுதுவது வழக்கத்திற்கு வந்து விட்டது!
பதிலளிநீக்குமொழியே எண்ணப் பரிமாற்றத்துக்குத்தான் எல்லோருக்கும் புரிய வேண்டும் மெலு இப்படி எழுதுவது மொழியின் மீது ஆளுமை இல்லாததைக் காட்டுகிறதோ
நீக்கு