திங்கள், 3 செப்டம்பர், 2018

கண்ணனைக் காண வாரீர்



                                                     கண்ணனைக் காண வாரீர்
                                                     ---------------------------------------------
கண்ணனை காண வாரீர்

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி இன்றா நேற்றா  ஏதோ காரணங்களுக்காக இரு நாட்களிலும்  கொண்டாடப்படும்  நாள். வெகு துல்லியமாக கிருஷ்ணனின் பிறப்பும் ஆயுசும் பற்றி ஒரு பதிவில் குறிப்பு காணப்பட்டது கண்டு ஆச்சரியாமாக இருந்தது that is besides the point
என்னால் நேற்று  பதிவிட முடியவில்லை  இருந்தால் என்ன கண்ணன் பற்றி இன்று எழுதலாமே பதிவு கண்ணன் குறித்ததாக இருக்க வேண்டும்  ஏற்கனவே கிருஷ்ணாயணம்  என்று கண்ணன் பற்றி எழுதி இருக்கிறேன் சுட்டியை க்லிக்கி பார்க்கலாம் அவனதுகேசாதி பாதவர்ணனையும் பார்க்கலாம்    அவன்வாழ்வில் நிகழ்த்தியதாகக் கூறப்படும்சில சம்பவக் கோர்வையும் எழுதக்கூடியதுதானே கண்ணனுக்கு இன்னொருபெயர் மாயன்  ஆகவே மாயைபற்றி எழுதலாம்தானே  மேலும் ஒரு விளம்பரமாக நான்  வரைந்திருந்த சில ஓவியங்களும் இடம்பெறலாமே என்று தோன்றியது         
   
பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வாயில்
சிறிதே மண் காண எண்ணிய தாய் யசோதை
மண்ணுடன் விண்ணும் நீரும் நிலமும் அண்ட அகிலமும்
கண்டே மயங்கியது மாயையின் மயக்கத்தால் அன்றோ.

மாயை தயை கொண்டு ஆயர் குலச் சிறார்களையும்
கன்றுகளையும் காணாமல் போக்கினான் நான்முகன் பிரமன்
பரம்பொருளே இடைச் சிறுவராய் கன்றுகளாய் உருவெடுத்து
எங்கும் நீக்கமற நிறைந்து நின்றதும் மாயையின் செயலன்றோ.

முன்னவன் தன் மாயையை விலக்க, மறைத்த தனைத்தும்
மறையாமல் நிற்க , பிரமனே நாரணனின் கணக்கிலா
உருவம் கண்டு அவனும் மாயையில் மூழ்கி
விளக்கம் பெற்றதும் மாயையின் செயலன்றோ

செருக்களத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் சக்கரம்
கொண்டு ஆதவனை மறைத்து பூவுலகினை இருட்டாக்க
தலை தப்பியது என எண்ணி ஜயத்ரதன் தலை காட்ட
சக்கரம் மீட்டு இருள் விலக்கி அவன் தலை கொய்ய
கண்ணன் நிகழ்த்தியதும் மாயையின் செயலன்றோ/.

இல்லாதது இருப்பதுபோல் தோன்றுவதும் இருப்பது
இல்லாதது எனத் தோன்றுவதும் மாயையின்
விளைவு எனப் பொருள் புரிதல் தவறாமோ.
உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானோ
நிரந்தரம் என்பது ஏதுமில்லை,நிகழ்வுகளில் நிச்சயமில்லை.
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை
மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்

மனத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்

உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்

தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்

பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 

ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்

 ஏற்றமும் தாழ்வும் நிரந்தரமல்ல யாரும் யாராகவும் ஆகலாம்
உணர்ந்து கொண்டால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்




 காளிங்க நர்த்தனம்  காணொளி 


ராதா கிருஷ்ணன்   அடியே கை வண்ணம் 

வெண்ணை உண்ணும்கிருஷ்ணன் 

ராதா கிருஷ்ணன்   கண்ணாடி ஓவியம்  n


வெண்ணை தின்னும் கண்ணன்  இன்னொரு படம் 
கீதா உபதேசம்  சிற்பம்  பெங்களூர் கோவில் ஒன்றில் 

கீதா உபதேசம் கொண்டப்பள்ளி பொம்மை என் வீட்டில் 



32 கருத்துகள்:

  1. ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். உங்கள் கைவண்ண ஓவியங்களை அடிக்கடி உங்கள் வலைத்தளத்தில் காணும் வாய்ப்பினை தருவதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அது நான் எழுதி இருந்தபடி ஒரு விளம்பரம் என்று எடுத்துக் கொள்ளலாம் மாயை பற்றிக்கருத்து சொல்லலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாயை பற்றி என்ன சொல்வது. இருந்தும் இல்லாதது போல, புரிந்தும் புரியாதது போல, தெளிந்தும் தெளியாதது போல ஒரு சூன்யமான சிந்தனை.

      நீக்கு
    2. நம்மில் பலரும் மாயயின் பிடியில்தான் இருக்கிறோம்அதையேமனத்தின் மயக்கமே மாயை என்றறிவோம் என்றுஎழுதி இருக்கிறேன்

      நீக்கு
  3. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் ஐயா.

    காணொளி கண்டேன் ஓவியங்கள் ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாயைப் பற்றிய கவிதைதானே ஏன் என்றால் சுட்டிக்குச் சென்றால் அங்கு கேசாதி பாதம்வர்ணிப்பும் இருக்கும் நன்றிஜி

      நீக்கு
  4. ஓவியத்தையும் கவிதையையும் மறுபடி ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்போது என்னிடம் அந்தக்ளாஸ் ஓவியம் தவிர வேறு ஏதுமில்லை அன்பளிப்பாக கொடுக்கப் பட்டு விட்டது

      நீக்கு
  5. ஓவியம் அருமை. ! மிக அருமையாக தொகுத்து இருக்கீங்க பாலா சார். கொண்டபள்ளி பொம்மை அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணன் பற்றி எழுதினால் ரெபெடிஷனாகவே வருகிறதுஒரு தகவல் இந்த கொண்டப்பள்ளி பொம்மைகள்மிகவும் லேசானது ஃபெதெர்லைக்

      நீக்கு
  6. கொண்டபள்ளி பொம்மை அழகு.
    கவிதை,ஓவியங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  7. ருக்மிணி, சத்யபாமையுடன் கண்ணன் படம் நீங்க வரைஞ்சது இப்போத் தான் பார்க்கிறேன். மற்றப்படங்கள் ஏற்கெனவே பார்த்துட்டேன். எல்லாம் அருமை! நீங்க தான் கிருஷ்ணன் பிறப்பு, பிள்ளையார் சதுர்த்தி, போன்ற பண்டிகைகளுக்கு நிவேதனமாக பக்ஷணம் எல்லாம் செய்யறதை ஏத்துக்க மாட்டீங்களே! அதனால் செய்யலையா? :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரைந்த ஓவியங்களில் பெரும்பானமை அன்பளிப்பாகப்போய் விட்டது இப்போதுநானே நினைத்தாலும் அவற்றைப்பார்க்க முடியாது பக்ஷணம் எப்போதுவேண்டுமானாலும் செய்து உண்ணலாமேவருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  8. பொம்மைகள் அனைத்தும் அழகு. எங்க வீட்டில் இந்த பண்டிகை கிடையாதுப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பண்டிகை கிடையாதென்றால் சீடை முறுக்கு எல்லாம் செய்யவாய்ப்பும் குறையுமே

      நீக்கு
  9. என்றோ வரைந்தது இப்போதெல்லாம் முடிவதில்லை வருகையும் பாராட்டும் மகிழ்ச்சி தருகிறது சார்

    பதிலளிநீக்கு
  10. மனம் அள்ளும் ஓவியங்கள் வாழ்த்துக்கள் ஐயா..

    இங்க bangalore ல கண்ணாடி ஓவியத்தின் ..கண்ணாடி எங்கு கிடைக்கும் சிவாஜி நகர் ல தேடினேன் கிடைக்கலை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பெங்களூரா உங்கள் பக்கத்தில் முகவரி தேடினேன் கிடைக்கவில்லை படங்கள் ஃப்ரேம் செய்யும் கடைகளில் கேட்டுப்பாருங்கள் கிடைக்கும் க்ளாஸ் பெயிண்டிங் செய்ய 2 மி மீ கனமுள்ள கண்ணாடியே சிறந்தது ட்ராஸ் செய்யும் பொது பரலாகஸெரர் தவிர்க்கவும் நான் ஜலஹள்ளி ஐயப்பன் கோவில் அருகே இருக்கிறேன் தொடர்பு கொள்ள என்மெயில் முகவரி என்பக்கத்தில் இருக்கிறது

      நீக்கு
    2. பொதுவாக நான் திருச்சி யில் இருந்து வாங்கி வந்துவிடுவேன்...அவை PRINTED கண்ணாடிகள் ..அதனால் trace செய்யும் வேலை இல்லை..

      உங்கள் gmail முகவரியை தேடினேன் ..எனக்கு இங்கு தெரியவில்லை..

      எனது முகவரி anuradha.pk@gmail.com..



      நீக்கு
  11. கண்ணனைக் கொண்டுவந்துவிட்டீர்கள் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணன் கதையும் கேசாதி பாதவர்ணிப்பும் சுட்டியில் இருக்கிறது

      நீக்கு
  12. ஓவியங்கள் வெகு அழகு.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. ருக்மிணி & சத்யபாமாவோடு இருக்கும் க்ருஷ்ணனை, ராதா க்ருஷ்ணன்னு போட்டுட்டீங்க !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதா கிருஷ்ணர் கண்ணாடி ஓவியம் ஏதோ நினைவில் இன்னொரு தஞ்சை ஓவிய படத்தையும் ராதா கிருஷ்ணர் என்று எழுதிவிட்டேன் போல நன்றாக சமாளித்தேனா

      நீக்கு