Friday, November 1, 2019

பாலித் தீவிலொரு தேன்நிலவு


                              பாலித் தீவிலொரு  தே நிலவு
                               --------------------------------------------------

  திருமணம் முடிந்தபின் தேநிலவுக்குச் சென்றதுண்டா
அப்படியென்றால் …
பெரும்பாலும் திருமணத்துக்குப் பின்  தேனிலவு  செல்வது பற்றியே தெரியாது ஆனால் பார்த்தாயா உன் பேரன்  திருமணத்துக்குப்பின்  தேநிலவுக்குகோவா சென்றான் முதல் ஆண்டு நிறையும்போது மறுபடியும் சென்றான்  ஆனால் இம்முறை ஒரு அயல் நாட்டுக்கு இந்தோனேஷிய பாலித் தீவுக்கு அவ சில அரிய செய்திகளைச் சொன்னான் இந்தியாவைவிட பாலியில் இந்துமதம் அதிகம் அனுஷ்டிக்கபடுவதாகவும் அங்கு இருக்கும் இந்துக்கள்  ந்ம்மைப் போன்ற இந்துக்களை விட அதிகமாகவே இந்துக்களாக  இருக்கிறார்கள்  அவர்கள் கோவிலுக்கு நாம் செல்ல அனுமதி கிடைப்பதே கஷ்டம் என்றும்  சொன்னான்  அங்கு  இருக்கும் ஒரு வகைகாப்பி பற்றியும் சொன்னான் அவன்  சொன்னதில் இருந்து ----  பாலி  உள்ளிட்ட இந்தோனேசியாவின் பல இடங்களிலும் ஒரு புது வகை காபி தயாரிக்கப்படுகிறது. அதன் சுவை பற்றிச் சொல்வதற்கு முன்பாக அக்காபி தயாரிக்கப்படும் சுவையான (!) கதையைச் சொல்ல வேண்டும். பாலியில்லுவாக் காபிதோட்டம்  . அங்குள்ள காபி பெர்ரிகளை புனுகு பூனை வகையைச் சார்ந்த மரநாய்கள் சாப்பிட்டுவிட்டு, அவை கழிக்கிற மலத்திலிருந்து பெறப்படும் கொட்டைகளிலிருந்து தயாராவதுதான்லுவாக் காபி’.
மரநாய் தேர்ந்தெடுக்கும் காபி பெர்ரிகள் விசேஷமானவை என்றும் அவை பூனையின்

குடலுக்குள் சென்று வெளி வருவதால் அவற்றுக்கு ஒரு புதிய பதம் கிடைக்கிறது

என்றும் காபி தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். பூனையின் கழிவிலிருந்து பெறப்படும்

காபிக் கொட்டைகளை வெந்நீரில் சுத்தமாகக் கழுவி எடுத்து அவற்றின் தோலை

உரித்தெடுத்த பிறகு வாணலியில் இட்டு வதக்குகிறார்கள். பின்னர் உரலில் போட்டுப்

பொடிசெய்து காபியாக விற்பனை செய்கிறார்கள் அங்கு இள நீர்க் காய்க

 பெரிதாக இருக்கின்றன  சிலபுகைப்படங்க்சள் இன்னும் சேதிகள்  சொல்லலாம்


பாலியில் என் பேத்தி மருமகள் 
இளநீர்க்காய்கள்
போட் ரைட்
பூல்சைட் பிரேக்ஃபாஸ்ட்


நீருக்கடியில் நடை 

                                                 தங்கிய இடம் /அறை

20 comments:

 1. காபிக்கொட்டை கிடைக்கும் "மூலம்" அறிந்தபின் அதைப் பருகும் எண்ணமே வராது போலிருக்கிறது!!!!

  ReplyDelete
  Replies
  1. இதுக்காகவே அங்கு காபித் தோட்டத்தில் புனுகுப் பூனைகளை வளர்ப்பார்கள். அந்த இடங்களைக் கண்டிருக்கிறேன்.

   Delete
  2. அவை லூவாக் காப்பி என்கிறார்கள்

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. தங்குமிடம் பற்றிய காணொளி அருமை.   மிகவும் கற்பனை, மற்றும் கலைநயத்துடன் இருக்கிறியாது அந்த தங்குமிடம்.

  ReplyDelete
 4. கோவில்கள் புகைப்படங்களோ,காணொளியொ இல்லையா?

  ReplyDelete
 5. நல்ல பதிவு. பாலி தீவுகள் பற்றி நிறையப் பதிவுகள் படித்திருந்தாலும் இந்த விஷயங்கள் புதுசு.

  ReplyDelete
 6. படங்கள், தங்கும் இடம் காணொளி எல்லாம் அருமை.
  பாலிதீவில் புதுவகை காப்பி செய்முறை காப்பி பிரியர்களுக்கு முகம் சுளிக்க வைக்கும்.

  ReplyDelete
 7. பாலிக்கு எங்களையும் இலவசமாக அழைத்துச் சென்றதற்கு நன்றி.

  ReplyDelete
 8. பாலித்தீவில் இந்த காப்பி தவிர மற்ற( இது இல்லாத) காப்பியும் கிடைக்குமா...
  பாலித்தீவு பற்றி தெரிந்து கொண்டேன். தங்குமிடம் அழகாய் இருக்கிறது. ஒவ்வொரு ரூமுக்கும் தனி நீச்சல் குளமா ...?
  அப்படி என்றால் வசதி தான்.

  பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 9. பாலித் தீவு குறித்துப் பல செய்திகள் அறிந்தேன் .

  ReplyDelete
 10. கோவிலுக்கு நாம் செல்ல முடியும். அவை ஒரு சில நேரங்களில் எனக்கு கேரள கோவில்களை (தரவாட்டில் உள்ள கோவில்) நினைவுபடுத்தும். கோவிலுக்கான உடையை அணிந்திருக்கவேண்டும்.

  ReplyDelete
 11. கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்றான் என் பேரன் படமுமெடுக்க அனுமதி இல்லையாம்

  ReplyDelete
 12. அந்தக் கோப்பி நானும் அறிஞ்சிருக்கிறேன். நமக்குத் தெரியாமல் குடிக்கும் வாய்ப்பு இருக்கு, ஆனா தெரிஞ்சபின் நான் குடிக்கவே மாட்டேன்ன் இப்படியானவற்றை:)..

  அது என்ன பேத்தி மருமகள்?.. பேத்தியை மருமகளாக்கினீங்களோ?

  ReplyDelete
 13. அதை விரும்பிக் குடிப்பவருமுண்டு பேரனின் மனைவியை பேத்தி மருமகள் என்று கூற வந்தேன்

  ReplyDelete
 14. உங்களால் நாங்கள் பாலித் தீவு பற்றி அறிந்துகொண்டோம் ஐயா.

  ReplyDelete
 15. அவர்களின் தேநிலவு எனக்கு ஒரு பதிவாய் இருந்தது

  ReplyDelete