திங்கள், 11 நவம்பர், 2019

பிறந்த நாள் மற்றும் மணநாள்


                                             பிறந்த நாள்  மற்றும்  மண நாள்
                                                 -----------------------------------------------

 ஆண்டொன்று போக அகவை ஒன்று கூட
இன்றுறங்கி நாளை எழுவேனா என்றறியாமலேயே
சேர்த்துவிட்டேன் எட்டு பத்துடன்   ஒராண்டும்
ஆசை எனும் அரவமே அனைத்து வினைகளுக்கும்
ஆதி காரணம் என்றறிந்தும் பாசவலையில் கட்டுண்டு
காலம் கழிந்து விட்டது.. அன்பால் கட்டுவதும்
அன்பினால் கட்டப் படுவதும் இன்பம்தான்
மறுப்பதற்கில்லை, மறப்பதற்கில்லை. .புவியில்
வந்துதித்த நாளே இல்லத் துணையுடன் சேர
தேர்ந்தெடுத்த நாளும் எனும்போது கூடுகிறது
மகிழ்ச்சி குறையில்லாப் பொலிவுடன்.

அல்லல்கள் பலவற்றோடு அனுபவங்கள்
கற்றுத் தந்த பாடங்கள் அசைபோட்டு உணரும்போது
இன்னுமொரு வாழ்வு அமையுமானால் , கேள்வி எழுகிறது,
இதையே தேர்ந்தெடுப்பேனா என்று. .நிச்சயமாய் இதையே
தேர்ந்தெடுப்பேன், என்னில் இருந்த சில குறைகள் நீக்க
எனக்கொரு வாய்ப்பு அது நல்குமல்லவா.?


குறைவற்ற வாழ்வுதனை நிறைவாக வாழ்ந்து விட்டேன்.
இனி எனக்கொரு குறையிலை நான் தயார் யாரும்
அறியாத அண்டப் பேரண்ட வெளிக்குள் ஒளியிலோ இருளிலோ
நான் நுழைய, இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..! 

பிள்ளைகளின்   வாழ்த்து
இந்த பிறந்த நாள் முதியோர் இல்லம் வெறிச்சோடி இருக்குகிறது இருந்தாலும்  பழைய நா ட்களைச் சற்றே  புரட்டிப் பார்த்து மகிழ்ச்சி அடைவது தவறில்லையே   இந்த ஆண்டு கேக் செய்யவும் மனசில்லை எனது 75 ம் பிறந்த நாளில் என்நூல் வழ்வின் விளிம்பில்  வெளியாகஎன்மக்கள் குறியாய் இருந்து அதையே என்பிறந்தநாள்பரிசாக அளித்ததும் நினைவுக்கு வருகிறது ஒரு ஆண்டு பிறந்த நாள்வாழ்த்துக்காக  என் மக்கள் பிரயத்டனம் எடுத்ததும் நினைவுக்கு வருகிறது   இனி நினைவிலாடும்   சில நிகழ்வுகள்  புகைப்பட உலா ?
திருமண வைபவம்



இந்த பிறந்ததேதி  ஒரு யுனிக் ஒன்று நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான்   இவ்வாறு வரும்
11- 11 - 11 நவம்பரில்பிறந்த  புகழ் பெற்றவர்களின்  பட்டியல்  ஜவஹர்லால் நேரு  இந்திரா காந்தி   ஜீஎம்பால சுப்பிர மணியம்





சஷ்டியப்த பூர்த்தி திருக்கடையூரில்























43 கருத்துகள்:

  1. இருவருக்கும் நமஸ்காரங்கள். 

    உங்களுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 

    உங்கள் இருவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிட்ட பத்து நிமிடங்களுக்குள் பின்னூட்டம் மனம்மகிழ்கிறது ஸ்ரீ நன்றி

      நீக்கு
  2. //இருப்பினும் அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
    வலைத்தளம் இருக்குமா, தெரியவில்லையே..! //

    ஹா...   ஹா...  ஹா...   

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வாரிசுகள் உங்கள்மேல் குறைவில்லாத அன்பும் பெருமதிப்பும் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.   வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று என் மூத்த மகன் அவனில்லாவிட்டாலும் ஒரு பூங்கொத்தும் ஒரு கேக்கும் அனுப்பி இருந்தான்

      நீக்கு
  4. இருவருக்கும் என் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி தருகிறது

      நீக்கு
  5. மனமார்ந்த நல் வாழ்த்துகள், நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
  6. மனமார்ந்த வாழ்த்துகள். நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி தருகிறது

      நீக்கு
  7. நாமறிந்த பதிவர்களில் கந்தசாமி ஐயாவிற்குப் பின் தாங்கள் தான்  மூத்தவர். பதிவுலகில் யுதிஸ்டிரராய் இருப்பவர். தங்களுடைய ஆசிகள் எல்லோரையும் சென்றடையட்டும். வாழ்த்துகள். Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கந்தசாமி ஐயாவுக்கும் மூத்தவர் சொ,ஞானசம்பந்தம் அவர்கள் நான் சிறுவன் வழ்த்துகளுக்கு நன்றி ஜெகே சார்

      நீக்கு
  8. சிறப்புப் பிறந்த நாள் கொண்ட உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. உங்கள் ஆசிகள் எங்களை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ள உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல் எண்ணங்கள் என்றும் உண்டு வருகைக்கு நன்றிசார்

      நீக்கு
  9. பிறந்த மற்றும் மண நாள் வாழ்த்துகள் .வாழ்க வளமுடன் நீடூழி

    பதிலளிநீக்கு
  10. இந்த பிறந்ததேதி  ஒரு யுனிக் ஒன்று நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான்   இவ்வாறு வரும்
    11- 11 - 11 நவம்பரில்பிறந்த  புகழ் பெற்றவர்களின்  பட்டியல்  ஜவஹர்லால் நேரு  இந்திரா காந்தி   ஜீஎம்பால சுப்பிர மணியம் //

    அப்போ நீங்களும் நேரு குடும்பத்தில் ஒருவர் தான்;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரு குடும்பத்தவன் அல்ல ஆனால் புகழ் பெற்றவந்தான்

      நீக்கு
  11. இனிய பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துக்கள் ஜிஎம்பி சார் ..உங்கள் இருவரையும் பார்க்க மனதுக்கு சந்தோஷமாக இருக்கு .

    பதிலளிநீக்கு
  12. மண நாளுக்கு தங்களுக்கும் தங்கள் இல்லத்தரசிக்கும் அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்!
    பிறந்த நாளுக்கு நல்வாழ்த்துக்களும் இனிய வணக்கங்களும்!!
    வாரிசுகளிடமிருந்து இப்படிஒரு வாழ்த்தும் அரவணைப்பும் கிடைக்க நல்லதொரு கொடுப்பினை வேண்டும். அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. மேம்மேலும் தங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க மறுபடியும் இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகளுக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  14. உங்களுக்கும், உங்களது இல்லத்தரசியாருக்கும் இனிய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைத் தெரிந்தவர்கள் வாழ்த்தும்போது மகிழ்ச்சி அளிக்கிறது

      நீக்கு
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும், மணநாள் வாழ்த்துக்களும்.
    இன்னும் பல காலம் நலமோடு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. நாளொறு பெயருடன் வலம் வந்து வாழ்த்துகிற உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. //அனுபவங்கள் பகிர எனக்கங்கொரு
    வலைத்தளம் இருக்குமா.. //

    அனுபவங்கள் பகிர
    ஆங்கோர் வலைத்தளம் இருப்பின்
    அங்கமையும் நண்பர்களோடு
    அளவளாவோம்
    ஆசை ஆசையாய்..

    பதிலளிநீக்கு
  18. வலைத்தளத்தில் நண்பர்களுடன் அளவளாவல் நடக்கிறதா வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  19. இருவருக்கும் வணக்கங்கள், வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
    மண நாள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    மன்னிக்கவும் தாமதமான வாழ்த்து. இரண்டு மூன்று நாளாக வலைபக்கம் வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவுக்கு நானும் அழைப்பு விடுவிக்க வில்லை உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது

      நீக்கு
  20. அன்பின் வணக்கங்களுடன்
    நலம் வாழ வேண்டிக் கொள்கிறேன்....

    பதிலளிநீக்கு
  21. அன்பின் வணக்கங்களுடன்
    நலம் வாழ வேண்டிக் கொள்கிறேன்....

    பதிலளிநீக்கு
  22. தாமதமான பிறந்த நாள் மற்றும் மண நாள் வாழ்த்துக்கள். வணக்கங்களும்.//குறைவற்ற வாழ்வுதனை நிறைவாக வாழ்ந்து விட்டேன்.இனி எனக்கொரு குறையிலை நான் தயார் யாரும்அறியாத அண்டப் பேரண்ட வெளிக்குள் ஒளியிலோ இருளிலோநான் நுழைய,// வெகு சிலரால்தான் இப்படி கூற முடியும். வயது ஏற ஏற, பற்றும், பாசமும் அதிகரிக்கும்.  

    பதிலளிநீக்கு
  23. பற்றும் பாசமும் அதிகரிப்பதால் உண்மை நிலை மாறாதே

    பதிலளிநீக்கு