ஞாயிறு, 3 நவம்பர், 2019

முதியோரின் நினைவுகள்


                                            முதியோர்  நினைவுகள்
                                          ----------------------------------------

முன்பே நான் எழுதி இருக்கிறேன் எங்கள் வீடு ஒரு முதியோர் இல்லம் என்றும்   அதன் வாசிகள் நானும்  என்மனைவியும் என்று.  எங்களாசி வேண்டி பலரும்  வருவார்கள் ஆனாலும்  வரும்போது  கைக்குழந்தைகளைக்  கொண்டு வருவார்கள் என்வீட்டில்  வாடகைகுஇருந்தவர்  அவரதுஅவரது ஐந்து நாள்குழந்தையை என்னிடம்கொடுத்து ஆசி வேண்டினார் என்  மனைவியின்  தம்பி தன்மகள் இரட்டை குழந்தைகளை பெற்றபோது நானுமென் மனைவியும் சென்று பார்த்து வந்தோம்ஆசி வழங்கினோம் என்று சொல்லத்தேவை இல்லை  என் வீட்டில் பணி புரிபவரின்மகனும் தன் குழந்தையைஎன்வீட்டுக்கு கொண்டு வந்து  ஆசி வேண்டினான் பொதுவாக ஆசி என்றால் என்ன  எங்கள்வயதை அவர்களுக்குத் தர ஆசைதான்
என்மைத்துனன்  அவனுக்குஇரட்டைக் குழந்தைகள் பேரன் பேத்தியாக வந்தபோது  கர்ப்பரட்சகாம்பிகா  கோவில்லுக்குச்சென்று பிரார்த்தனை செய்தான் அவன் எங்களுடன்  தங்கி திருச்சியில் அவன் படிப்பை முடித்தவன்
 இப்போது 65 வயதாகிறது  அவனுக்கும் பல நினைவுகள் 
நாங்கள் ஒவ்வொரு  ஆண்டும் சிதம்பரம்  வைத்தீஸ்வரன் கோவில் திருச்சி என்றுபோய்க் கொண்டிருந்தவர்களே  இப்போது ஆயிற்று ஐந்து ஆண்டுகள் பயணப்பட்டு இருந்தால்  என்ன மைத்துனன் அனுப்பி இருந்த சில புகைப்படங்கள்நினைவுகளைக் கிளறி விட்டது   
அவன் சிறுவனாக வீட்டுக்கு தேவையான  பலபணிகளைச் செய்திருக்கிறான்  அண்மையில் திருச்சி சென்றிருந்தபோதுஅவனது நினவுகளை மீட்டெடுக்கும்விதமாகசில படங்களை அனுப்பி இருந்தான் அதனூடே என் நினைவுகளும் 
முதியோர் இல்ல வாசிகள்

 
ஆச் வேண்டி 
சமயபுரம்மராமத்து வேலைகள்
சமயபுரம் இன்னொரு வியூ 
கர்ப்ப ரட்சகாம்பிகா கோவில் 
திருவெறும்பூர் மலை 
மலை கோவில் ஒரு காட்சி 
மலைக் கோட்டை வாசல் 
அப்பாய் மளிகை  காந்தி மார்க்கெட்டில் இருக்கும் இக்கடையில் இருந்தே மளிகை சாமான்கள் வாங்குவான்  சிறு பையனான  இவன்   கால்சட்டையில் பணம் பறிபோகாமல்  இருக் க  ஊசியால்  நிஜாரில் குத்தி அனுப்புவாள்  என் மனைவி   
                                                                          கொள்ளிடம்பிரிட்ஜ்
                           கல்லணை  ஒருகாட்சி 
கரிகாலன்
அகஸ்தியர் கல்லணை 

ஒன்று சொல்ல மறந்து விட்டேனே என் மைத்துனன்  திருச்சியில் இருந்து பத்மா  காஃபி தூள் வாங்கி வந்திருந்தான் அவனது நினைவுகளில்  அதுவுமொன்று   




     


28 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. திருச்சியில் நாங்கள் பார்த்த இடங்கள் இப்போது காணும்போது மகிழ்ச்சி தருகிறது

      நீக்கு
  2. இனிய நினைவுகள்.  'முதியோர் இல்ல வாசி'களுக்கு என் நமஸ்காரங்கள்!

    பதிலளிநீக்கு
  3. இரண்டு காணொளிகளும் பார்த்தேன்.  முதல் காணொளியில் நைஸாக பஸ்ஸுக்குள்ளும் எடுத்து விட்டீர்கள்!!!  இரண்டாவது காணொளியில் கல்லணையில் தண்ணீர் வழிந்தோடுவது அற்புதக்காட்சி...

    பதிலளிநீக்கு
  4. அருமையான நினைவுகள். காணொளியைக் காலையில் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. முதியோர் இல்லவாசிகள் அனைவருக்கும் பழைய நினைவுகள் தான்
    மகிழ்ச்சியைத் தரும். அதில் ஒரு ஆனந்தம் இருப்பது உண்மை தான்.
    கல்லணையில் இருந்து ஓடும் தண்ணீரை பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது. இப்போதெல்லாம் காவிரியில் தண்ணீரை பார்ப்பதே அரிதாகி விட்டது இல்லையா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன் கல்லணை நீர் நிறைந்த காலங்களில் பார்த்ததுதான்

      நீக்கு
  6. நினைவுகள் சங்கீதம் வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  7. உங்களுடைய பழைய நினைவுகள் என்னுடைய பழைய நினைவுகளை நினைவுக்கு கொண்டு வந்து விட்டன.

    பதிலளிநீக்கு
  8. இனிமையான நினைவுகள்...

    படங்கள் அனைத்தும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  9. இனிமையான நினைவுகள்.
    படங்கள் , காணொளி எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாஇடங்களையும் நினைவில் கொண்டு வர முடிந்தது

      நீக்கு
  10. பழைய நினைவுகளோடு திருச்சி, கல்லணை, சமயபுரப் படங்கள் நன்று. உங்கள் புண்ணியத்தில் கரிகால் சோழனையும், அகஸ்திய முனிவரையும் பார்த்தாயிற்று!

    மச்சினரின் இரட்டைக் குழந்தைகள், தங்கள் தங்கள் குடும்பங்களுடன் நலமாக இருக்கின்றனரா? வீட்டில் இப்போதும் திருச்சி பத்மா காபித்தூள் காப்பிதானா !

    பதிலளிநீக்கு
  11. இந்த இடங்களில் ஏதும் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை பல ஆண்டுகளுக்குப் பின் அங்கு போக முடியாவிட்டாலும் புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  12. முதியோரின் நினைவுகள் மட்டுமல்ல, ஆசிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நினைவலைகளும் பகிர்ந்த படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதானாலேயே ஆசிவழங்க தகுதியும் வந்து விடுமோ

      நீக்கு
  13. ஆசி தரும் நிலையில் இருப்பதும் ஒரு வரம் தான். வாழ்த்துகள்!

    நானும் திருச்சியில் (புனித வளவனார் கல்லூரியில் ) படித்தவன். தாங்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் என்னையும் கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி பயணிக்கவைத்துவிட்டது. படங்கள் அருமை. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  14. திருச்சிக்கு அவ்வப்பொது சென்று கொண்டிருந்தேன் இப்போது முடிவதில்லை அதனாலேயே ப்டங்கள் இட்டு திருப்தி அடைகிறேன்

    பதிலளிநீக்கு
  15. உங்கள் நினைவோட்டங்களை எவ்விதமான பிசிறும் இன்றி நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விதம் வியப்பினைத் தருகிறது ஐயா.

    பதிலளிநீக்கு
  16. நன் எழுதும்போது என்னை அறியாமல் நான் வந்து விடுகிறேன் அதுதான் காரணமோ

    பதிலளிநீக்கு