வெள்ளி, 17 டிசம்பர், 2010

வாசகர் பரிந்துரை.

வாசகர்   பரிந்துரை.
-----------------------------
           தமிழ்மணம்   விருதுகளுக்காக   இடுகைகள்   சமர்ப்பிக்கப்பட்டு, வாசகர்   பரிந்துரை
துவங்கியுள்ள  இந்நேரத்தில், வலைப்பூ  பதிவர்களுக்கு   என் தாழ்மையான  ஒரு   வேண்டுகோள்.  பல்லாண்டு  காலமாகப  பதிவர்களாக  இருக்கும்  எழுத்தாளர்களுக்கு , அவர்களுக்கு  என்றே  ஒரு வாசகர் வட்டம், அதுவும் ஒரு பெரிய  வட்டம் இருக்க   வாய்ப்புள்ளது. பதிவுலகில்  புதிதாகக்  கால்  பதித்திருக்கும்   என் போன்றோருக்கு  அந்த  அளவு  வாசகர் வட்டம்  அமைய  நாளாகும். புதிதாக  வந்திருக்கிறோம்  என்ற ஒரே   காரணத்துக்காக   இத்தகையோரது  பதிவுகள் நிறைய  பேரிடம்  சென்றடைவதில்லை.

           விருதுகளுக்காக  பதிவர்கள்  பரிந்துரையும்போது,  இந்தப்  பின்தங்கல்   ( Handicap )  அதிகமாகவே  உணரப்படும். எழுத்துக்களின்   தரம், எடுத்தாளும் விதம்  போன்றவை  வெளிச்சத்துக்கு  வராமலே  போக  வாய்ப்புண்டு.  மேலும்  சிறுகதைகளையும்   கவிதைகளையும்   படைப்பிலக்கியத்தில்   ஒன்று  சேர்த்திருப்பது  மேலும்  பின்னடைவுக்கு   வழி வகுக்கும் . இரண்டின்  இலக்கணங்களே  வேறு.  இருந்தாலும்  இப்போது  அது பற்றிக்  கூறுவதில்  பயனில்லை.

           இந்த  இடுகையின்  நோக்கமே, யாராலும்  படிக்கப் படாமலேயே  பின்  தள்ளப்பட  உள்ள நிலைமையை   ஓரளவு  உணர்ந்து , அதை  ஓரளவு  சரி  செய்ய பரிந்துரைக்கும்
 பதிவாளர்களுக்கு  ஒரு  வேண்டுகோள்.  பின்பற்றப்படாத   பதிவாளர்களின்  பதிவுகளையும்  படியுங்கள். .சிறந்தது  என்று  தோன்றுவதை  பரிந்துரை   செய்யுங்கள்..
நல்ல  விளைவே  உண்டாகும்  என்று  நம்புவோம்.     
----------------------------------------------------------------------------------


   

9 கருத்துகள்:

  1. பாராட்டுக்கள்..
    ஆம்.. நல்ல விளைவு உண்டாகும் என்று நம்புவோமாக!

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளைவு உண்டாகும் என்று நம்புவோமாக.

    பதிலளிநீக்கு
  3. Let us hope for the best and be prepared for the worst, Sri RNR Ramamurthi, Vaarththai, and kalanesan. Sri. Kalanesan, "remove word verification" from where sir.? I am confused.

    பதிலளிநீக்கு
  4. Let us hope for the best and be prepared for the worst,Thanks a lot Sri,ANR Ramamurthi, Vaarththai, andKalanesan, "remove the word verification" from where, Sri. Kalanesan sir.?
    I am confused.

    பதிலளிநீக்கு
  5. ப‌திவ‌ர் மாத‌வ‌ராஜ்(தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்), புதிய‌ ப‌திவாள‌ர்க‌ளுக்கு ஒரு அறிமுக‌த‌ள‌ம் அமைத்திருக்கிறார். சீனா அவ‌‌ர்க‌ளின் வ‌லைச்ச‌ர‌த்திலும் புதிய‌ப‌திவாள‌ர் ப‌ற்றிய‌ குறிப்புகள் வெளிவ‌ருகிற‌து. வாசிப்ப‌வ‌ரின் பார்வைக்கு வ‌ராம‌ல் ப‌ல நல்ல‌ ப‌டைப்புக்க‌ள் இருக்கிற‌தொன்ப‌து நிஜ‌ம்.

    பதிலளிநீக்கு
  6. திரு.வாசன் அவர்களுக்கு, வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி.பதிவர் மாதவராஜ்-க்கு நான் 29-11-2010 லேயே ஒரு மின்னஞசல் அனுப்பியிருந்தேன். (அறிமுகப்படுத்த வேண்டி).இதுவரை எந்த பதிலும் காணோம். May be he felt I donot require any intro. Thank you once again.

    பதிலளிநீக்கு
  7. கண்டிப்பாய் GMB சார்.. நான் இன்டலி தமிழ் மணத்தில் எல்லாம் சேரவில்லை அது கடல் மாதிரி இருக்கிறது. நான் சிறு ஓடை

    பதிலளிநீக்கு