காந்தஹார் நடந்ததும் நடந்திருக்க வேண்டியதும்.
--------------------------------------------------------------------------
இன்று மாலை எதிர்பாராதவிதமாக திரு.மேஜர் ரவி இயக்கி வெளியாக இருக்கும்"காந்தஹார்" திரைப்படத்தின் முன்னோட்டம் காண அழைப்பு வந்தது. மோகன்லாலுடன் அமிதாப் பச்சனும் கவுரவ நடிகராக நடித்துள்ள படம். தீவிரவாதக்திகளாய் அடைக்கப் பட்டிருந்தவர்களை விடுவிக்கக் கோரி, கடத்தப்பட்ட விமானம் காந்தஹாரில் இறக்கப்பட்டு , இங்கிருந்த கைதிகள் மத்திய மந்திரிகளின் துணையுடன் காந்தஹாரில் சேர்க்கப்பட்டு , விமானமும் பயணிகளும் மீட்கப்பட்டது இந்திய வரலாற்றின் ஒரு கருப்புப்பக்கம்
அந்தக் கதையை மாற்றி ,கடத்தப்பட்ட விமானமும், பயணிகளும் நம் ராணுவ கமாண்டோக்களால் மீட்கப்பட்டது மாதிரி காண்பித்திருக்கும் திரைக்கதை , இப்படி அல்லவா நடந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.
ஜிஹாத் என்ற பெயரில் ஏமாந்து உயிர் துறக்கும் அப்பாவியின் கதையும் , அவன்தாயின் மனப்போராட்டமும் ஊடே கூறப்பட்டுள்ளது. .கமாண்டோக்களின் பயிற்சி தீவிரவாதிகளின் பயிற்சி மாற்றி மாற்றி காண்பிக்கப்படுகிறது. நாட்டிற்கு தன்னை அற்பணித்துவிட்ட ராணுவ வீரர்களின் நிலை அழகாக கூறப்பட்டுள்ளது
இருக்கும்போது அதிகம் மதிக்கப்படாத ராணுவ வீரனுக்கு, நாட்டின் பணியில் இறக்கும் போது கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் , இருப்பவனுக்குத் தெரியும்போது நாட்டிற்கு சேவை செய்யும் எண்ணம் உயருகிறது, என்று அழகாக கூறப்பட்டுள்ளது.
நடிப்பில் மோகன்லாலும் மேஜர் ரவியும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆங்கிலமும் இந்தியும் மலையாளமுமாக கலந்து உள்ள திரைப்படம் சப் டைடில்களுடனும், டப்பிங்கும் சேர்ந்து மெருகு சேர்க்க உள்ளதாக இயக்குனர் மேஜர் ரவி கூறினார்.
மொத்தத்தில் படம் பார்த்து வந்த பிறகு, நடந்த நிகழ்ச்சி நடைபெற்ற மாதிரி நடக்காமல் திரையில் காட்டப்பட்ட மாதிரி நடந்திருந்தால் , மிகவும் மகிழ்ச்சியாக
இருந்திருக்குமே, என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. .என்ன செய்ய .? நடந்ததை மாற்ற முடியுமா.?
------------------------------------------------------------------------------------------
காந்தஹார் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது உங்கள் பதிவு. நன்றி.
பதிலளிநீக்கு//என்ன செய்ய .? நடந்ததை மாற்ற முடியுமா.?//
பதிலளிநீக்கு:(
நெஞ்சுரம் கொண்ட தலைவர்களை இதைப் போலத் திரைப்படங்களில் தேடவேண்டியதுதானோ?
பதிலளிநீக்கு